மேற்கு வங்கத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கங்காசாகர் மேளாவை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பக்தர்களின் வசதி, தங்குமிடம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து மாநிலத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கையில், மேற்கு வங்கத்திற்குள் நுழைவது முதல் கங்காசாகரில் புனித நீராடி மீண்டும் சொந்த ஊர் திரும்புவது வரை பக்தர்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைந்த முறையில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் போக்குவரத்து, தங்குமிடம், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் மேம்படுத்தப்பட உள்ளன இவ்வாறு தெரிவித்தனர்.