பழநி முருகன் கோயிலில் இணை கமிஷனர் பொறுப்பேற்பு



பகிர்க copied

பழநி; பழநி முருகன் கோயில் இணை கமிஷனராக ஹரிஹரன் பொறுப்பேற்றார். முழு கூடுதல் பொறுப்பு வகித்த துணை கமிஷனர் வெங்கடேஷ் பொறுப்புகளை ஒப்படைத்தார்.


பழநி முருகன் கோயில் தலைமை நிர்வாகியாக இணை கமிஷனர் பதவி உள்ளது. 2026 ஜூலை மாதம் வரை கோயில் இணை கமிஷனராக செயல்பட்ட மாரிமுத்து, கூடுதல் ஆணையராக பதவி உயர்வு பெற்று சென்னை ஹிந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். ஜூலை 13 முதல் கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், முழு கூடுதல் பொறுப்பு இணை கமிஷனராக பணியாற்றினார். இந்நிலையில் ஹிந்து சமய அறநிலைத்துறை உத்தரவின் படி மதுரை அழகர் கோவிலில் இணை கமிஷனராக செயல்பட்ட ஹரிஹரன் பழநி முருகன் கோயில் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். நியமன உத்தரவின் படி இன்று (நவ.5) இணை கமிஷனர் ஹரிஹரனிடம் முழு கூடுதல் பொறுப்பு வகித்த துணை ஆணையர் வெங்கடேஷ் பொறுப்புகளை ஒப்படைத்தார். அதன் பின் பழநி கோயில் இணை கமிஷனர் ஆக ஹரிஹரன் பொறுப்பேற்றார். முன்னதாக பழநி, திருஆவினன்குடி, பழநி முருகன் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். புதிய இணை கமிஷனருக்கு கோயில் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்