திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு



பகிர்க copied

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு மகா அபிஷேகம், அலங்காரம், 5:30 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 6:00 மணிக்கு, பக்தர்களின் ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க, வீரட்டானேஸ்வரர், நந்திகேஸ்வர பெருமானுக்கு ஒருசேர சோடசோபவுபச்சார தீபாரதனை நடந்தது. பிரதோஷ நாயகர் எழுந்தருளி, தீபாரதனை, பக்தர்களின் சிவபுராணம் முழங்க பிரதோஷ நாயகர் உள்பிரகாரத்தில் வலம் வந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, கொடி மரத்திற்கு அருகே அருள்பாலிக்கும் நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர், விபூதி உட்பட 16 வகையான விசேஷ பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்