பகவான் சத்ய சாய் பாபா நூற்றாண்டு பிறந்தநாள் விழா: 45 ஆண்டுகால நினைவுகளை மீட்டெடுத்த ‘ஹிருதய வந்தனா’



பகிர்க copied

பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவன மாணவர்கள் சார்பில் ‘ஹிருதய வந்தனா’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.


பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழாவையொட்டி நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் 130-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இசைக் கலைஞர்களாகப் பங்கேற்று, தங்களது இசை காணிக்கையை பகவானின் திருப்பாதங்களில் சமர்ப்பித்தனர். கடந்த 45 ஆண்டுகளில் மாணவர்களால் இயற்றப்பட்ட ஒன்பது சிறப்புப் பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன. பகவானின் பிறந்தநாள் விழாக்கள், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக உருவாக்கப்பட்ட பாடல்கள் மீண்டும் இசைக்கப்பட்டன.


நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய 24 × 12 அடி பிரம்மாண்ட ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் பகவான் சத்ய சாய் பாபாவுக்கும் அவரது மாணவருக்கும் இடையிலான அன்பு, நம்பிக்கை, வழிகாட்டுதல் மற்றும் தெய்வீகப் பாசம் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. பகவானின் ஒரு பார்வை மனக்கவலைகளைப் போக்கும், ஒரு ஸ்பரிசம் ஆன்மாவை உயர்த்தும், ஒரு வார்த்தை வாழ்க்கைக்கே வழிகாட்டும் என்ற மூன்று உயரிய கருத்துகளை இந்த ஓவியம் உணர்த்தியது. ஒன்பது பாடல்களும் பழைய மாணவர்களின் நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்தன. பகவானின் முன்னிலையில் பாடிய அனுபவங்களையும், அவரது அன்பான ஊக்கத்தையும் நினைவுகூர்ந்து பலரும் நெகிழ்ச்சியடைந்தனர்.


கல்வியாளராக மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான மாணவர்களின் அன்புத் தந்தையாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த சத்ய சாய் பாபாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த இசை நிகழ்ச்சி அமைந்தது. 24 அடி பிரம்மாண்ட ஓவியம், ஒன்பது காலத்தால் அழியாத பாடல்கள், 130-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் என அனைத்தும் ஒன்றிணைந்து பகவானுக்கு அன்பும் நன்றியும் சமர்ப்பிக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வாக ‘ஹிருதய வந்தனா’ அமைந்தது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்