மே 03,2017
ராமானுஜர் தீட்சை பெற்ற தலம்: ஸ்ரீரங்கத்தில் சேவை செய்து வந்த ஆளவந்தாரின் சீடர் பெரியநம்பி, ராமானுஜருக்கு தீட்சை கொடுப்பதற்காக காஞ்சிபுரம் சென்றார். இவ்வேளையில் ராமானுஜர் அவரிடம் தீட்சை பெறுவதற்காக ஸ்ரீரங்கம் கிளம்பினார். இருவரும் இத்தலத்தில் சந்தித்துக் கொண்டனர். பெரியநம்பி ராமானுஜருக்கு ஆச்சார்யாராக இருந்து இத்தலத்திலேயே பஞ்ச சம்ஸ்காரம் என்னும் தீட்சை செய்து வைத்தார். இந்த வைபவம் ஆவணி மாத வளர்பிறை பஞ்சமியன்று இக்கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில் நடக்கும்.
.. மேலும் தகவலுக்கு கிளிக் செய்யவும்