ஏப்ரல் 25,2017
ராமானுஜர் அழகர் கோயிலில் ஆண்டாளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார். பின் நித்ய கைங்கரியங்கள் தொடர்ந்து நடத்திவர ராமானுஜ மடம் ஒன்றை உருவாக்கினார். பிறகு அங்கிருந்து மதுரை சென்று கூடலழகரை வணங்கி வாழ்த்தினார். அப்போது அங்கிருந்த புலவர்களுடன் வாதிட்டு வென்றார். அதன்பின் திருமோகூர், திருதங்கால் ஆகிய இடங்களில் உள்ள பெருமாளை சேவித்து திருவில்லிபுத்தூர் சென்றடைந்தார். திருவில்லிபுத்தூர் கோயிலுக்குள் புகும்போது ஆண்டாள் நாச்சியார் தன் நேர்த்திக் கடனை திருமாலிருஞ்சோலையில் தன் சார்பாக நிறைவேற்றியதால் தாமே நேரில் வந்து ஸ்ரீராமானுஜரை ‘வாரும் என் அண்ணனே’ என்று தன் மூத்த சகோதரராக விளித்ததாக கூறப்படுகிறது. அங்கு ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் தாய்வீட்டு சீதனம் சமர்ப்பித்து வாழ்த்தி வணங்கினார்.