SS கமலாம்பிகை ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கமலாம்பிகை ஸ்தோத்திரம்
கமலாம்பிகை ஸ்தோத்திரம்
கமலாம்பிகை ஸ்தோத்திரம்

நாராயண தீர்த்தரின் சீடரால் துதிக்கப்பட்டது.

1. பந்தூகத் யுதிமிந்து பிம்ப வதனாம்
ப்ருந்தா ரகைர்வந்தி தாம்
மந்தா ராதி ஸமர்சிதாம் மது மதீம்
மந்த ஸ்மிதாம் ஸுந்தரீம்
பந்தச் சேதன காரிணீம் த்ரிநயனாம்
போகா பவர்க ப்ரதாம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

பொருள் : செம்பருத்திப் பூ போல் பிரகாசிப்பவள், சந்திரபிம்பம் போன்ற முகம் உடையவள், தேவர்களால் வணங்கப்படுபவள், மந்தாரம் முதலிய மலர்களால் பூஜிக்கப்படுபவள், ஆனந்தத்தை அளிப்பவள், புன்சிரிப்பு மிக்கவள், பேரழகி, கர்மபந்தத்தைப் போக்குபவள், முக்கண்ணாள், இந்த உலகில் எல்லா சுகங்களையும் தந்து, மோக்ஷத்தை அளிப்பவள், விரும்பியதை அளிப்பவள், அப்படிப்பட்ட மங்களத்தை அருளும் கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

2. ஸ்ரீகாமேச்வர பீட மத்ய நிலயாம்
ஸ்ரீராஜராஜேச்வரீம்
ஸ்ரீவாணீ பரிஸேவிதாங்க ரியுகளாம்
ஸ்ரீமத்க்ருபாஸாக ராம்
சோகாபத்பய மோசினீம் ஸுகவிதா
நந்தைக ஸந்தாயினீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

பொருள் : காமகோடி பீடத்தின் நடுவில் அமர்ந்தவள், ராஜராஜர்களின் தலைவி, மகாலட்சுமி, சரஸ்வதி இவர்களால் துதிகக்ப்பட்ட தாமரைத் திருவடிகளை உடையவள், பெருஞ்செல்வத்தைத் தரும் கருணைக்கடல், கவலை, பயம், ஆபத்துக்களைப் போக்குபவள், நல்ல புலமையைத் தந்து ஆனந்த நிலையை அளிப்பவள், விரும்பியதை அளிப்பவளும், மங்களத்தை அருளுபவளுமான கமலாம்பிகையை வணங்குகின்றேன்.

3. மாயா மோஹவினாசினீம்
முனிக ணைராராதி தாம் தன்மயீம்
ச்ரேய: ஸஞ்சய தாயினீம் குணமயீம்
வாய்வாதி பூதாம் ஸதாம்
ப்ராத: கால ஸமானசோப மகுடாம்
ஸாமாதி வேதை ஸ்துதாம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

பொருள் : மாயையால் உண்டாகும் அஞ்ஞானத்தைப் போக்குபவள், முனிவர்களால் துதிக்கப்பட்டு பிரம்மஸ்வரூபமாக விளங்குபவள், பலவித நன்மைகளை அளிப்பவள், நல்ல குணங்களை உடையவள், சாதுக்களின் இதயத்தில் ஆகாச வடிவில் உள்ளவள், அதிகாலை சூரியனுக்கு நிகரான சிவந்த அழகுடைய கிரீடத்தை உடையவள், சாம வேதம் முதலான வேதங்களால் துதிக்கப்பட்டவளாகிய கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

4. பாலாம் பக்தஜனௌக சித்தநிலயாம்
பாலேந்து சூடாம்ப ராம்
ஸாலோக்யாதி சதுர்விதார்த பலதாம்
நீலோத்பலாக்ஷீமஜாம்
காலாரி ப்ரிய நாயிகாம் கலிமல
ப்ரத வம்ஸினீம் கௌலினீம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

பொருள் : சிறுமி வடிவினள், பக்தர்களின் இதயத்தில் இருப்பவள், சந்திரக் கலையைத் தரித்தவள், பரபிரம்மஸ்வரூபிணி. ஸாலோகம், ஸாமீபம், ஸாரூபம், ஸாயுஜ்யம் முதலிய புருஷார்த்தங்களைக் கொடுப்பவள். கருங்குவளை மலர்களை ஒத்த கண்களை உடையவள், பிறப்பற்றவள், காலனைக் காலால் உதைத்த பரமசிவனின் மனைவி, கலியால் ஏற்படும் பாவங்களைப் போக்கி, விரும்பியதை அளிப்பவளுமான மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

5. ஆனந்தாம்ருத ஸிந்து மத்ய நிலயாம்
அக்ஞான மூலாபஹாம்
க்ஞானானந்த விவர்தினீம் விஜயதாம்
மீனேக்ஷணாம் மோஹினீம்
க்ஞானானந்த பராம் கணேச ஜனனீம்
கந்தர்வ ஸம்பூஜிதாம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

பொருள் : ஆனந்தக் கடலின் நடுவில் இருப்பவள், அஞ்ஞானத்தின் காரணத்தைப் போக்கி, ஞானமும், ஆனந்தமும் அளிப்பவள், வெற்றியை நல்குபவள், மீன் போன்ற கண்களை உடையவள், மோகிக்கச் செய்பவள், மகாகணபதியின் தாய், கந்தர்வர்களால் பூஜிக்கப்பட்டவள், விரும்பியவற்றை அளிப்பவள், அப்படிப்பட்ட மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

6. ஷட் சக்ரோபரி நாதபிந்து நிலயாம்
ஸர்வேச்வரீம் ஸர்வகாம்
ஷட் சாஸ்த்ராகம வேத வேதி தகுணாம்
ஷட்கோண ஸம்வாஸினீம்
ஷட்காலேன ஸமர்ச்சிதாத்ம விபவாம்
ஷட்வர்க ஸம்சேதினீம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

பொருள் : அறுகோண சக்கரத்தின் மீது நாத பிந்துவில் இருப்பவள், அனைவருக்கும் ஈஸ்வரி, எங்கும் இருப்பவள், ஆறு சாஸ்திரங்கள், நான்கு வேதங்கள் - ஆகமங்களால் அறியப்பட்ட குணங்களை உடையவள், ஆறு காலங்களிலும் பூஜிக்கப்பட்டவள், காம-குரோத-லோப-மோக-மத-மாத்ஸர்யம் எனும் ஆறு பகைவர்களை அழிப்பவள், விரும்பியவற்றை அளிக்கும் மங்களகரமான அந்த கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

7. யோகா னந்த கரீம் ஜகத்ஸுககரீம்
யோகீந்த்ர சித்தாலயாம்
ஏகாமீச ஸுகப்ரதாம் த்விஜநுதாம்
ஏகாந்த ஸஞ்சாரிணீம்
வாகீசாம், விதி, விஷ்ணு, சம்பு, வரதாம்
விச்வேச்வரீம் வைணிகீம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

பொருள் : தியான யோகத்தால் ஏற்படும் ஆனந்தத்தை அளிப்பவள், உலகிற்குச் சுகத்தை அளிப்பவள், யோகிகளின் மனதைக் கோவிலாகக் கொண்டவள், அத்விதீயாக இருப்பவள், பரமசிவனுக்குச் சுகத்தை அளிப்பவள், பிரளய காலத்தில் தனித்து நிற்பவள், வாக்கிற்கு ஈஸ்வரி. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு வரங்களை அளிப்பவள், உலகிற்கெல்லாம் தலைவி, வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவள், விரும்பியதை அருளும் மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் வணங்குகிறேன்.

8. போதானந்த மயீம் புதைரபி நுதாம்
மோத ப்ரதா மம்பி காம்
ஸ்ரீமத் வேத புரீச தாஸவினுதாம்
ஹ்ரீங்கார ஸந்தாலயாம்
பேதாபேத விவர்ஜிதாம் பஹுவிதாம்
வேதாந்த சூடாமணீம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

பொருள் : ஞானானந்த ஸ்வரூபிணி, சான்றோர்களால் துதிக்கப்பட்டவள், சந்தோஷத்தை அளிப்பவள், அம்பிகை, வேதபுரீச தாசரால் துதிக்கப்பட்டவள், ஹ்ரீம், ஹ்ரீம் என்ற பீஜ மந்திரத்தைக் கோவிலாகக் கொண்டவள், வேறுபட்டது - வேறுபடாதது என்ற இரண்டற்றவள், பலவித வடிவினள், வேதாந்தங்களுக்கு மணிமகுடமாக இருப்பவள் விரும்பியதை அளிக்கும் மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் நான் வணங்குகிறேன்.

9. இத்தம் ஸ்ரீகமலாம்பி காப்ரியகரம்
ஸ்தோத்ரம் படேத் யஸ்ஸதா
புத்ர ஸ்ரீப்ரத மஷ்டஸித்தி பலதம்
சிந்தா வினாசாஸ்பதம்
ஏதி ப்ரஹ்மபதம் நிஜம் நிருபமம்
நிஷ்கல்மஷம் நிஷ்களம்
யோகீந்த்ரை ரபி துர்லபம்
புனரயம் சிந்தா வினாசம் பரம்.

பொருள் : குழந்தைச் செல்வம் மற்றும் எல்லாச் செல்வங்களையும், எட்டு சித்திகளின் பயனையும் அளித்து கவலைகளைப் போக்கும் கமலாம்பிகைக்குப் பிரியமான இந்த ஸ்தோத்திரத்தை யார் படிக்கிறார்களோ அவர்கள், இணையற்ற உருவமற்ற களங்கமற்ற, சிறந்த யோகிகளுக்கும் எட்டாத மேலான பிரம்மபதத்தை அடைவார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar