SS அம்மன் பாடல்கள்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அம்மன் பாடல்கள்!
அம்மன் பாடல்கள்!
அம்மன் பாடல்கள்!

சரஸ்வதி துதி

தேவி ஜெகன்மாதா ஜெய ஜெய தேவி ஜெகன்மாதா
தேவி ஜெகன்மாதா ஜெய தேவி ஜெகன்மாதா
பொன்னிளம் காலையிலே மென் பூமணம்
பொங்கும் நன் நேரத்திலே பல
வண்ணப் பறவைகளும் பொற் ஜோதியை
வாழ்த்திடும் போதினிலே நான்
என்னை மறந்திருந்தேன் இயற்கையின்
இன்பத்தி லாழ்ந்திருந்தேன் எழில்
அன்னத்தில் ஏறி வந்தாள் ஸரஸ்வதி
ஆனந்த ரூபிணியே (தேவி ஜெகன்மாதா)

சக்தி வளர்ந்து விட்டால் மனதில்
பற்றொன்றிருந்திடுமோ ஆத்ம
சக்தி உணர்ந்து விட்டால் அகத்தே
தாழ்வு தலைப் படுமோ மோக்ஷ
சித்தி கொடுத்தாலும் கோடிகோடி
ஜன்மம் எடுத்தாலும் இந்த
உத்தமர் கூட்டத்திலே பாடும் வரம்
ஒன்று வேண்டும் அம்மா (தேவி ஜெகன்மாதா)

சன்னதியோ ஜகமாம் ஏற்றும் தீபம்
சந்திர சூரியராம் வாயு
மண்ணிய சாமரமாம் வயங்கிய
வானமும் விமானமும் ஆடும் இன்னறு
நீர்க் கடலாம் சராசரம்
யாவும் நிவேதனமாம் எங்கும்
புன்னகை செய்பவளே எக்காலமும்
போற்றும் வரம் தருவாய் (தேவி ஜெகன்மாதா)

சரஸ்வதி துதி

தாயே சரஸ்வதி சங்கரியே முன்னடவாய்
என் தாயே கலைவாணி யோகவல்லி நாயகியே
வாணி சரஸ்வதியே என்வாக்கில் குடியிருந்து
என் நாவில் குடியிருந்து நல்லோசை தாரும்மா

கமலா சனத்தாளே காரடி பெற்றவளே
என் குரலிற் குடியிருந்து கொஞ்சடி பெற்றவளே
என் நாவு தவறாமல் நல்லோசை தாரும்மா
மாரியம்மன் தன் கதையை மனமகிழ்ந்து நான் பாட

சரியாக என்னாவில் தங்கிகுடியிரு அம்மா
கண்ணனூர் மாரிமுத்தே கைதொழுது நான் பாட
பின்னமில்லாமல் பிறகிருந்து காருமம்மா

ஆதி பராசக்தி துதி

அகணித தாரா கணங்களின் நடுவே
ஆதிபராசக்தி ஆடுகின்றாள்
சகலசரா சரத்தும் தங்க சிலம்பொலிக்க
ஜெகதீஸ்வரியவள் ஆடுகின்றாள் (அகணித தாரா)

அயன் என வருவாள் அனைத்தையும் படைப்பாள்
ஹரிஎன அழைப்பாள் அரண்என அழிப்பாள்
அழிவில் இருந்தும் ஜீவன் பிறந்திடச் செய்பவளாம்
அகிலாண்டேஸ்வரி ஆடுகின்றாள் (அகணித தாரா)

அகிலம் முழுவதும் உள்ள ஆருயிரினங்களும்
ஆழப் பெருங்கடலில் வாழுயிரினங்களும்
அன்றன்றுணவு கொள்ள அத்தனைக்கும் தந்தருளி
அன்னபூர்ணேஸ்வரி ஆடுகின்றாள்   (அகணித தாரா)

கனக கமலம் தன்னில் கனிந்த சிவப் பொருளைக்
கலந்து பேரின்பம் காட்டும் கனல் வடிவானவளாம்
நானற்ற நல்லோர்க்கெல்லாம் நானிதோ என்று தோன்றும்
ஞான பரமேஸ்வரி ஆடுகின்றாள் (அகணித தாரா)

இதயவீணை எழும் இன்னிசை அவளே
இருளை அகற்றும் தீப ஜோதியும் அவளே
நாற்பத்து மூன்று கோண நாகமணி மண்டபத்தில்
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ஆடுகின்றாள்   (அகணித தாரா)

அழைக்கும்முன் வருவாள் அடைக்கலம் அளிப்பாள்
அன்பினுக் காட்படுவாள் ஆனந்த கல்யாணிஅவள்
அருட்கவி மாலைபாடும் அகத்தியன் அகத்திலே
அமுத சுந்தரேஸ்வரி ஆடுகின்றாள்
ஆனந்த நாடகம் ஆடுகின்றாள்
அகஸ்திய ஸித்தேஸ்வரி ஆடுகின்றாள்   (அகணித தாரா)

பராசக்தி பாடல்

அன்பே சிவமாய் அமர்வாள் நம்மை அன்னை பராசக்தி
ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் ஆதிபராசக்தி
இப்புவி இன்பம் வேண்டாம் என்பாள் அன்னை பராசக்தி
ஈடில்லா காட்சி அளிப்பாள் அன்னை பராசக்தி

உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை பராசக்தி
ஊக்கம் இருந்தால் போதும் என்பாள் அன்னை பராசக்தி
எங்கும் நிறைந்த ஜோதியாய் நிற்பாள் அன்னை பராசக்தி
ஏகாட்சரமாய் அவனியில் வந்தாள் ஆதிபராசக்தி

ஐங்கரநாதனை ஆதியில் தந்தால் அன்னை பராசக்தி
ஒட்டியான பீடத்தில் அமர்வாள் ஆதிபராசக்தி
ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி
ஒளவை எனவே அவனியில் வந்தாள் ஆதிபராசக்தி

ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி
ஓம் என்றாலே தேடியும் வருவாள் அன்னை பராசக்தி
ஓம் என்றாலே ஆடியும் வருவாள் அன்னை பராசக்தி
ஓம் என்றாலே பாடியும் வருவாள் ஆதிபராசக்தி

ஓம் என்றாலே உருவாய் வருவாள் அன்னை பராசக்தி
ஓம் என்றாலே குருவாய் வருவாள் ஆதிபராசக்தி
அன்னை பராசக்தி ஜெய ஆதி பராசக்தி
அன்னை ஆதிபராசக்தி ஜெய ஆதிபராசக்தி

துர்க்கை துதி

ஞாயிற்றுக்கிழமை நாள்தோறும் மங்கையர் யாவரும் கூடிடுவோம்
எலுமிச்சை தீபத்தை ஏற்றிடுவோம் மகிழ்ச்சியுடன் பூஜை செய்திடுவோம்
நாம் இனிமையுடன் வரம் கேட்டிடுவோம் (ஞாயிற்றுக்கிழமை)

பலப்பல மலர்களை பறித்திடுவோம்
பலப்பல பூஜைகளை செய்திடுவோம்
பலப்பல வரங்களை கேட்டிடுவோம்
ஏகாம்பர துர்க்கையை துதித்திடுவோம்
சுந்தர வதனி மீனாட்சி சுகுண மனோகரி காமாட்சி
விஜயம் தருவாள் விசாலாட்சி
வீணையை மீட்டுவாள் சரஸ்வதி (ஞாயிற்றுக்கிழமை)

ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்
லலிதாம்பிகையே நமஸ்காரம்
துர்க்கா லக்ஷ்மியே நமஸ்காரம்
புவனேஸ் வரியே நமஸ்காரம்
அன்னபூர்ணேஸ்வரியே நமஸ்காரம்
காமேஸ்வரியே நமஸ்காரம்
பக்தியுடனே உன்னை நாடி வந்தோம் நாங்கள்
பண்புடனே உன்னைப் பார்க்க வந்தோம்      (ஞாயிற்றுக்கிழமை)

வருவாய் வருவாய் நீயம்மா
தருவாய் தருவாய் சுகம் தருவாய்
அம்மா நீ எம்மை கை விடாமல்
ஆசிகள் கூறி அனுப்புவாயே
ஏகாம்பரேஸ்வரி என்றும் நீயே
ஏழை என்னை ஏற்றுக்கொள்வாய்
என்றும் உன்னை மறவேனே என்னை
ஏகாந்த முடனே ஏற்றுக்கொள்வாய்
அம்மா தாயே சரணமம்மா
அன்பால் என்னை அணைத்துக் கொள்வாய்
ஆதிபராசக்தி நீயம்மா
அருளைக் கொடுத்து காப்பாய் (ஞாயிற்றுக்கிழமை)

துர்க்கை பாடல்

துர்க்கா தேவியை துதிப்போமே நாமே
துன்பமெல்லாம் துடைத்திடுவாள் அம்மா தாயே துர்க்கா தேவி (துர்க்கா)

ராகுகால பூஜை நீ ஏற்றுக் கொள்வாயே
நாங்கள் ரம்மியமாய் கேட்டவரம் தந்திடுவாயே
ஆனந்தமாய் அபிஷேகம் கண்டுகளித்தோமே
எங்கள் குறைகளெல்லாம் சீக்கிரமே தீர்த்திடுவாயே துர்க்கா தேவி (துர்க்கா)

எத்தனைத்தான் அவதாரம் எடுத்தாலும் அம்மா
அத்தனையும் கண்டுகளிக்க கண் கொடுத்தாயே
அன்புடனே நாங்கள் செய்யும் பூஜையும் தாயே நீ
மறவாமல் ஏற்கவேண்டும் ஆதிஜோதியே துர்க்கா தேவி (துர்க்கா)

துர்க்கை என்று துதிப்பவரை துணை கொள்வாயே
என்றும் என் அருகில் இருந்து நீயும் ஆதரிப்பாயே
உன்புகழை நான் என்றும் மறவேன்தாயே
உன் நாமம்என்றென்றும் பாடிடுவோமே துர்க்கா தேவி (துர்க்கா)

காமாட்சி அம்மன் பாடல்

அன்பான காமாட்சி அம்மா
கலை அமைந்த காஞ்சியிலே உன் அரசாங்கமா
அங்குசப் பாசம் கரும்புவில் தீங்கனை
அடையாளமா? அம்மா (அன்பான)

மண்ணும் விண்ணும் படைத்தவள் நீயே
இங்கு மணலில் சிவலிங்கம் நீ அமைத்தாயே
மாமர நிழலில் ஓங்கி நின்றாயே மனம் போல்
சிவனிடம் மனம் கலந்தாயே (அன்பான)

அழகு ஆணவம் அலைமகள் துறந்தாள்
தன் வடிவை இழந்து நின் வாசலில் வந்தாள்
குழந்தை உள்ளம் கொண்டவள் நீயே
உன் குங்குமத்தால் இங்கு இரக்கனித்தாயே  (அன்பான)

சிவரஞ்சனி பாடல்

பூரணி யோக மஹேஸ்வரி தாயே
புவனேஸ்வரி கதி நீயே அம்மா (பூரணி)

நாரணி ஜீவத் தாரணியே
சிவ நாயகியே மோக்ஷதாயகியே (பூரணி)

அரணருளாகவே ஐந்தொழில் புரிந்திடும்
ஆதிபராசக்தி நீயே அம்மா
வரதாயகி சித்தகௌரி மனோன்மணி
வாசாமா கோசரி நீயே அம்மா
ஜெய மங்களம், சுப மங்களம் (பூரணி)

மதுரை மீனாட்சி அம்மன் ஸ்துதி

அம்மா மதுரை மீனாக்ஷி
அருள்வாய் காஞ்சி காமாட்சி
அன்பாய் எனையே ஆதரித்து
அல்லல் களைந்தே காப்பாற்று

அன்னை தேவி பராசக்தி
என்னை படைத்தது உன்சக்தி
வாழ்வைத் தந்து வளம் தந்து
வாழ்க்கைக் கடலின் கரையேற்று

தில்லை சிதம்பரம் பத்தினியே
நெல்லையில் வாழும் பத்தினியே
திருவடி மலரினைத் தொழுதிடுவேன்
திருவருள் புரிந்தெனைக் காப்பாற்று

ஓங்காரப் பொருள் நீதானே
உலகம் என்பதும் நீதானே
காணும் இயற்கைக் காட்சிகளும்
காற்றும் மழையும் நீதானே
அம்மா தாயே உனைவேண்டி
அழுதிடும் என்னைத் தாலாட்டி
அன்புடன் ஞானப் பாலூட்டி
அகத்தின் இருளைப் போக்கிடுவாய்

உள்ளக் கோயில் உன்கோயில்
உயிரும் மூச்சும் உன் வடிவம்
பேச்சும் செயலும் உன்செயலே
பெருகட்டும் உன் பேரருளே

மீனாட்சி அம்மன் பாட்டு

மரகதவல்லி மீனாட்சி மதுரை நகரில் வாழுகின்றாள்
கடைகண் அருளும் காமாட்சி காஞ்சியிலே வாழுகின்றாள்
அகிலாண்ட நாயகியாய் அன்னை விசாலாட்சியானவள்
காசி விஸ்வநாதருடன் ஆட்சியுமே புரிகின்றாள். (மரகதவள்ளி)

இமயமலை சிகரத்திலே உமையவளும் வாழுகின்றாள்
பெண்மையின் வடிவினிலே உலகமெல்லாம் வாழுகின்றாள்
கருணையுள்ள கற்பகமாய் மயிலையிலே வாழுகின்றாள்
கபாலிநாதன் துணையுடனே காட்சியுமே தருகின்றாள்
கயிலையிலே வாழுகின்றாள் கற்பகமாய் வாழுகின்றாள்  (மரகதவள்ளி)
 
குங்கும அர்ச்சனை

குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்
கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம்
சந்தனத்தால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம்

சந்தனத்தால் அலங்காரம் செய்தவர்க்கு அம்பாள்
சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம்
தேனால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
திவ்ய தரிசனம் கொடுப்பவளாம்

பாலால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
பலஜன்ம பாவத்தை போக்கு பவளாம்
கனியால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
கண்முன்னே வந்து நிற்பவளாம்

மனதால் எப்போதும் நினைப்பவர்க்கு அம்பாள்
மாங்கல்ய பாக்யம் கொடுப்பவளாம்
மும்முறை வலம் வந்து தொழுபவர்க்கு அம்பாள்
முன்நின்று காத்தருள் புரிபவளாம்

அடிமேல் அடிவைத்து அவளை வலம் வந்தால்
அஷ்ட சம்பத்தும் கொடுப்பவளாம்
கற்பூர ஜோதியை காண்பவர்க்கு அம்பாள்
கைமேல் பலன்களை கொடுப்பவளாம்

தீராத வினைகளை தீர்ப்பவளாம் தேவி
திருவடி சரணம் சரணம் அம்மா
பவபய ஹாரிணி அம்பா பவானியே
துக்க நிவாரிணி துர்க்கே ஜெய ஜெய
காலவி நாசினி காளி ஜெய ஜெய
சக்தி ஸ்வரூபிணி மாதா ஜெய ஜெய - துர்க்கா

தேவி கன்யாகுமரி பாடல்

தேவி கன்னியாகுமரி பராசக்தியே கன்னியாகுமரி
தாவி வருகுதம்மா என்நெஞ்சம் உன்தாளினை நாடுதம்மா
ஞானமெல்லாம் ஈன்றும் கன்னியென்ற ஞாயம் உரைக்குதம்மா
ஞாயிறு திங்களெல்லாம் நின்திருஞான ஒளியின் பொறி
பார்க்க வந்த என்னை தேவி நீ பக்கத்தில் வா என்று
பார்த்த பார்வையிலே என்மனம் பாகாய் உருகியதம்மா
நீலக்கடலோரம் கன்னித்தாய் நின்னைக் கண்ட பின்னர்
நானாவித உலகில் என் கண்கள் நின்னையே நாடுதம்மா
பார்க்கும் இடம்தோறும் நின்முக புன்சிரிப்புள்ளதம்மா
யார்க்கினி அஞ்சவேண்டும் உலகில் எல்லாம் உனதுமயம்
தேகம் புனிதமாக தேவியே உன்னைத் தேடி அலைந்தேன்
மோகத்தை ஊட்டிவிட்டாய் இனி அகம்பாவம் துலைந்ததம்மா
கானத்தால் ஆனப்பெற்ற என் ஜீவன் கசடற்ற தாயிற்றம்மா
மரணம் எனக்கில்லை என்றே மனம் மகிழ்ந்தே குதிக்குதம்மா
துர்க்குணம் என்ற மாயா உலகை தூயதாய் காணவைத்தாய்
நிர்குணம் ஆக்கிவிட்டாய் என்றென்றும் நீயாக இருப்பாய்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஆனந்த சக்திமயே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் அன்னையே அன்பு கன்யாகுமரி 

திருவிளக்கு பஜனை

திருவிளக்கே திருவிளக்கே
தேவி பராசக்தி திருவிளக்கே
தேவியின் வடிவே திருவிளக்கே
தேவியே உனக்கு நமஸ்காரம்

இருளை அகற்றும் திருவிளக்கே
இன்பம் அளிக்கும் திருவிளக்கே
எங்கும் ஒளிதரும் திருவிளக்கே
லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்

மங்கள ஜோதியாம்  திருவிளக்கே
மாலையில் ஒளி தரும் திருவிளக்கே
காலையில் ஒளிதரும் திருவிளக்கே
சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்

திருமகள் வடிவே  திருவிளக்கே
தேவரும் பணியும் திருவிளக்கே
தெள்ளிய ஜோதியே திருவிளக்கே
சாரதே உனக்கு நமஸ்காரம்

அஷ்டலக்ஷ்மி வடிவே திருவிளக்கே
ஆனந்த நர்த்தினி திருவிளக்கே
ஆலய பூஷணி திருவிளக்கே
ஆதிபராசக்தி நமஸ்காரம்

பாக்கிய லக்ஷ்மியாம் திருவிளக்கே
பக்தியை அளித்திடும் திருவிளக்கே
பதவியைத் தந்திடும் திருவிளக்கே
பவானி உனக்கு நமஸ்காரம்

ஜெகமெல்லாம் விளங்கும் திருவிளக்கே
ஜெகதீஸ்வரி வடிவே திருவிளக்கே
அழகை அளிக்கும்  திருவிளக்கே
அம்மா உனக்கு நமஸ்காரம்

சௌந்தர்ய ரூபிணி திருவிளக்கே
சந்தான பலம்தரும் திருவிளக்கே
சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே
சக்தியே உனக்கு நமஸ்காரம்
ராஜ ராஜேஸ்வரிக்கு நமஸ்காரம்

தையல் நாயகி பாடல்

தையல் நாயகி அம்மா தையல் நாயகி என்றும்
தாயாக இருப்பவளே தையல் நாயகி
ஊர் உலகம் காப்பவளே தையல் நாயகி
உன்பாதம் சரணடைந்தேன் தையல் நாயகி

குங்குமத்தில் ஒளிவீசும் தையல் நாயகி
குமரனுக்கே தாயுமானாய் தையல் நாயகி
வைத்தியத்தின் சிகரமாய் தையல் நாயகி
வைத்திய நாதனுக்கே துணையுமானாய் தையல் நாயகி

மணமுடிக்க கேட்டுக் கொண்டால் தையல் நாயகி
மங்களமாய் முடித்து வைப்பாள் தையல் நாயகி
மழலைச் செல்வம் வேண்டுமென்றால் தையல் நாயகி
மகிழ்ச்சியுடன் தந்திடுவாள் தையல் நாயகி

அம்மா என்றே உனை அழைத்தால் தையல் நாயகி
ஆறுதலே பிறக்குதம்மா தையல் நாயகி
தாயே என்று உனை அழைத்தால் தையல் நாயகி
நோய் நொடிகள் நீங்குதம்மா தையல் நாயகி

அம்மா என்றே உனை அழைத்தால் தையல் நாயகி
அடிபணிந்தேன் உந்தன் பிள்ளை தையல் நாயகி
என்னகுறை எனக்கினிமேல் தையல் நாயகி
எனக்கு துணை நீ யிருக்க தையல் நாயகி

தையல் நாயகி அம்மா தையல் நாயகி
தாயாக இருப்பவளே தையல் நாயகி
ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்

வாமஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி
மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி
ஏம ஜோதி வியோம ஜோதி யேறு ஜோதி வீறு ஜோதி
ஆதி ஜோதி யேக ஜோதி யேக ஜோதி யேக ஜோதி
ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே
வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே

ராஜேஸ்வரி பாடல்

1. ஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி
சின்மயமானந்த சிவ மனோகரி
சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள் எங்கள்
சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள்

2. அலைமகள் கலைமகள் கீதம் பாட
நந்திகேஸ்வரரும் தாளம் போட
அரம்பை ஊர்வசியும் நர்த்தனமாட
அந்தணர் நான் மறை வேதங்கள்ஓத
தேவி ராஜ ராஜேஸ்வரி கொலு இருந்தாள்  (ஸ்ரீசக்)

3. சிம்ம வாகனத்தில் வீற்றிருக்க
செங்கரத்தில் கரும்பும் வில்லும் தாங்கி இருக்க
ரத்ன மாலைகளும் பளபளக்கநவரத்ன
சிம்மாசனத்தில் கொலு இருந்தாள்  (ஸ்ரீசக்)

4. திருமால் சிவனும் நான் முகனும்
ஆறுமுகனுடன் கணபதியும்
தும்புறு நாரதர் உடன் கூட
முப்பத்து முக்கோடி தேவர் வணங்க
தேவி ராஜ ராஜேஸ்வரி கொலுவிருந்தாள்   (ஸ்ரீசக்)

அம்பாள் பாடல்

அறம்பல புரிந்த காமாக்ஷி
அருளை அளிப்பாய் மீனாக்ஷி
ஆடலில் வல்ல கருமாரி
ஆனந்த தாண்டவ சுகுமாரி

இருமையும் காத்திடும் கருமாரி
இடர்களை களைவாய் திரிசூலி
ஈசனிடத்தில் அமர்ந்தவளே
ஈடில்லா காந்தி உற்றவளே

உலமனைத்தையும் ஈன்றவளே
உயிர்களை எல்லாம் காப்பவளே
ஊக்கமும் உணவும் கொடுப்பவளே
திருவேற்காட்டில் அமர்ந்தவளே

எங்கும் நிறைந்த பரம்பொருளே
என்மனதிலுறை கருமாரி
ஏழு எழுத்துதனில் இடம் கொண்டாய்
ஏகப் பொருளாய் காட்சி தந்தாய்
ஐங்கரன்தன்னை ஈன்றவளே
ஐந்தெழுத்தான சிவசக்தி
ஒளியா வெளியாய் உயர்ந்தவளே
ஒளி வேளின் கீழ் அமர்ந்தவளே
ஓம்எனும் எழுத்தில் நீ அமர்ந்தாய்
ஓம் நமசிவாய பரம்பொருளே
ஒளவியற்ற அடியாரை அன்பாய் காக்கும்
ஜய ஜய சக்தி கருமாரி
சிவ சிவ சக்தி கருமாரி

ராஜ ராஜேஸ்வரி ஸ்தோத்திரம்

1. ஸ்ரீ சக்ர வாஸி நி ஸ்ரீ தேவி நமஸ்தே
சிவகாமசுந்தரி ஸ்ரீ தேவி நமஸ்தே
ஸ்ரீ கிருஷ்ண ஸோதரி ஸ்ரீ தேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீ தேவி நமஸ்தே

2. பத்மதளலோசனி ஸ்ரீதேவி நமஸ்தே
பக்தபரிபாலினி ஸ்ரீதேவி நமஸ்தே
பர்வத வர்த்தினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

3. கருணாவிலாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே
காத்யாயினி கௌரி ஸ்ரீதேவி நமஸ்தே
கதம்பவன வாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

4. சக்தி பரமேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
சம்புண மோஹினி ஸ்ரீதேவி நமஸ்தே
சங்கரி மஹேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

5. அன்னபூர்ணேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
அகிலாண்ட நாயகி ஸ்ரீதேவி நமஸ்தே
அபயப்ரதாயினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

6. ஸத்யஸ்வரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸத்குருரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
தர்மஸ்வரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

7. அகண்ட பரிபூரணி ஸ்ரீதேவி நமஸ்தே
ஆதிபராசக்தி ஸ்ரீதேவி நமஸ்தே
அகில பரிபாலிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

8. அனாதரக்ஷகி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸெளபாக்கிய தாயினி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸந்தான பலப்ரதே ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

9. பாஹி புவனேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸ்ரீ வித்யா ரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
சக்தி ஸ்ரீ சாரதே ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

புஷ்பாஞ்சலி

1. ரோஜாப்பூ கொண்டு வந்தே எங்கள்
ராஜேஸ்வரியே பூஜை செய்தால்
தேசாதி தேசம் மெச்சும் ஒரு
ராஜாப்போல வாழச் செய்வாள்

2. முல்லைப்பூ கொண்டு வந்தே எங்கள்
மோகனாங்கியை பூஜை செய்தால்
இல்லை என்று சொல்லாமலே அவள்
அள்ளி அள்ளி அளித்திடுவாள்

3. மருக்கொழுந்து கொண்டு வந்தே எங்கள்
மனோன் மணியை பூஜை செய்தால்
திருக்கோலம் கொண்டு அங்கே
அவள் தினந்தோறும் வந்திடுவாள்

4. ஜாதிப்பூ கொண்டு வந்தே எங்கள்
ஜோதி அவளை பூஜை செய்தால்
ஓதி உணரா வித்தையெல்லாம் தந்து
மேதை என்றாக்கி விடுவாள்

5. மகிழம்பூ கொண்டு வந்தே எங்கள்
மாதங்கியை பூஜை செய்தால்
மணமாகாத கன்னியர்க்கு திருமணம்
அவள் நடத்தி வைப்பாள்.

6. தாழம்பூ கொண்டு வந்தே எங்கள்
தாட்சாயணியை பூஜை செய்தால்
வாழாப் பெண்ணை நாதனுடன் அவள்
சேர்த்து வாழவைப்பாள்

7. பத்ரம் பல கொண்டு வந்தே எங்கள்
பகவதியை பூஜை செய்தால்
சித்திரைப் போல உள்ளவர்க்கு அவள்
புத்ர பாக்கியம் செய்திடுவாள்

8. தாமரைப்பூ கொண்டு வந்தே எங்கள்
ஷியாமளியை பூஜை செய்தால்
தாமதம் செய்யாமலே அவள்
தாலிப் பிச்சை தந்திடுவாள்

9. மல்லிகைப்பூ கொண்டு வந்தே எங்கள்
மஹேஸ்வரியை பூஜை செய்தால்
பில்லி சூன்யம் ஏவல் எல்லாம்
அவள் பின்னாலே ஓடச்செய்வாள்

10. செண்பகப்பூ கொண்டு வந்தே எங்கள்
அம்பிகையை பூஜை செய்தால்
ஜென்மாந்திர பாவமெல்லாம் அவள்
தீர்த்து விளக்கி ஓட்டிடுவாள்

11. பாரிஜாதம் கொண்டு வந்தே எங்கள்
பார்வதியை பூஜை செய்தால்
பால ரூபம் கொண்டுமே நம்
பாவமெல்லாம் போக்கிடுவாள்

12. அரளிப்பூ கொண்டு வந்தே எங்கள்
அபிராமியை பூஜை செய்தால்
அளவில்லாத செல்வத்தை அவள்
அகமகிழ தந்திடுவாள்

13. செம்பரத்தை கொண்டு வந்தே எங்கள்
சண்டிகையை பூஜை செய்தால்
தந்திரமாய் நம் கனவில் வந்து
அவள் அந்தரங்கம் சொல்லிடுவாள்

14. மாதுளம்பூ கொண்டு வந்தே எங்கள்
மாதாவை பூஜை செய்தால்
மங்கள வாழ்வு தந்து அவள்
மனமகிழச் செய்திடுவாள்

15. மருதாணிப்பூ கொண்டு வந்தே எங்கள்
மீனாட்சியை பூஜை செய்தால்
மாறாத மனத்துடன் பக்தி
பாடல்கள் பாடச் செய்வாள்

16. பத்திரிப்பூ கொண்டு வந்தே எங்கள்
திரௌபதியை பூஜை செய்தால்
அருள்கூர்ந்து நம்முள்ளே அவள்
அனுக்ரஹம் செய்திடுவாள்

17. நீலாம்பரம் கொண்டு வந்தே எங்கள்
நீலாயதாட்சியை பூஜை செய்தால்
நித்யானந்தம் கொண்டுமே உலகில்
நித்யவாசம் செய்திடுவாள்

18. மனோரஞ்சிதம் கொண்டு வந்தே எங்கள்
மாலினியை பூஜை செய்தால்
சுகமான ஸுகந்தமுடன் அவள்
அவள் மனம் போல வீசச் செய்வாள்

19. சம்பங்கிப்பூ கொண்டு வந்தே எங்கள்
சர்வேஸ்வரியை பூஜை செய்தால்
சகல சௌபாக்கியம் தந்து அவள்
சஞ்சலத்தை நீக்கிடுவாள்

20. சாமந்திப்பூ கொண்டு வந்தே எங்கள்
சங்கரியை பூஜை செய்தால்
சத்தியமாய் வாழ்வினிலே அவள்
சந்தோஷத்தை அளித்திடுவாள்

21. தும்பைப்பூ கொண்டு வந்தே எங்கள்
துர்க்கையை பூஜை செய்தால்
தரித்திரத்தை துரத்தி அவள்
தனதான்யம் பொழிந்திடுவாள்

22. மந்தாரப்பூ கொண்டு வந்தே எங்கள்
லலிதாம்பிகையே பூஜை செய்தால்
பந்த பாசம் ஆசை நீக்கி அவள்
வந்தனங்கள் செய்திடுவாள்

23. வெட்டி வேர் கொண்டு வந்தே எங்கள்
புவனேஸ்வரியை பூஜை செய்தால்
மட்டில்லாத மகிழ்ச்சியுடன் அவள்
கட்டாயமாய் கிட்டிடுவாள்

24. கதிர்ப்பச்சை கொண்டு வந்தே எங்கள்
காமாட்சியை பூஜை செய்தால்
கடைக்கண்ணால் கடாட்சிக்க ஜன்மம்
கடைத்தேற செய்திடுவாள்

25. கருமாரி சாம்பல் பெற்றால்
கண்ட பிணி ஓடிவிடும்
இடைஞ்சல்கள் மாறி இன்பம்
இல்லத்தை நாடிவரும்

வைஷ்ணவி துதி

வருவாய் வருவாய் வைஷ்ணவியே
வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே
அனுதினம் வருவாய் வைஷ்ணவியே
அனுக்கிரகம் செய்வாய் வைஷ்ணவியே
சரணமடைந்தோம் வைஷ்ணவியே
சௌபாக்ய மருள்வாய் வைஷ்ணவியே
வரமளித்தருள்வாய் வைஷ்ணவியே
வணக்கம் தாயே வந்தருள்வாய்
பாடிப்பணிந்தோம் வைஷ்ணவியே
பாசமுடன் வா வைஷ்ணவியே நாங்கள்
கூடித் துதிக்கின்றோம் வைஷ்ணவியே
குறைகளைத் தீர்ப்பாய் வைஷ்ணவியே
திருமுல்லை வாயிலைத் தேடிவந்தோம் உன்
திருச்சன்னதி முன் கூடி நின்றோம் உன்
திருப்புகழ் தன்னைப் பாடுகின்றோம் உன்
திருவடி நாடி பணிகின்றோம்

அராளகேசி ஊஞ்சல் பாட்டு

அருளோடு பொருள் தந்து ஆதரிக்கும் அம்மா
அழகான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா (லாலி)

இருள் நீக்கி ஒளிதந்து எமைகாக்கும் அம்மா
இனிதான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா (லாலி)

அவமாயை அகற்றும்நல அம்பிகையே நீதான்
அழகான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா (லாலி)

நவ இரவில் நாங்கள் கண்டுகளித்திடவே அம்மா
நவரத்ன பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா (லாலி)

நாமகளாய் முதல் மூன்று நாளிரவில் வந்து
நற்கல்விகலை யெல்லாம் நல்கிடுவாய் அம்மா (லாலி)

இடைமூன்று நாளிரவில் இலக்குமியாய் வந்து
இகபோக செல்வங்களை எமக்களிப்பாய் அம்மா (லாலி)

வெற்றி தரும் செல்வியாய் வீரசுகுமாரியாய்
கடைமூன்று இரவினிலே காட்சி தரும் அம்மா (லாலி)

ஒருபாதி சிவனாக மறுபாதி உமையாக
சிவகாமி தேவி பொன்னூஞ்சல் ஆடு (லாலி)

விண்ணோரும் மண்ணோரும் விரும்பி உனைத்துதிக்க
வண்ணமலர் பொன்னூஞ்சல் வந்தாடு அம்மா (லாலி)

பாரிஜாதம் மணக்க பவளக்கொடி ஊஞ்சலிலே
பார்வதியே பாலாம்பா பாங்குடனே ஆடு (லாலி)

நம்புமடியார்கள் வினை நாளும் தீர்ப்பவளே
செம்பவளக்கொடி ஊஞ்சல் தனிலாடு அம்மா (லாலி)

அருட்பெருஞ்ஜோதியே அராளகேசி உமையே
ரத்னகிரீசருடன் பொன்னூஞ்சல் ஆடு (லாலி)

தேவி ஹாரத்தி பாட்டு

ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்
ஜெகமெங்கும் அமைதியை தா. (ஓம் ஸ்ரீ)

திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க
தேவை யெல்லாம் அடைய அம்மா
பக்தி பெருகிட பாடி
உருகிட பணிப்பாய் அன்பில் எமை      (ஓம் ஸ்ரீ)

இரண்டுகள் போக மூன்றுகள் கலக்க
ஈஸ்வரி வரம் அருள்வாய்
கரங்குவித்தோமினி காலை விடோமம்மா
கருணையுடன் அணைப்பாய் (ஓம் ஸ்ரீ)

காசினில் எங்கும் வேற்றுமை போக கருத்தினில்
அன்பருள்வாய்
தேஜசுடன் வாழ காட்டி காட்சி
தேவி அடைக்கலமே அம்மா (ஓம் ஸ்ரீ)

நமஸ்காரம் இருவினை கரத்தினில் ஞான
நல்லொளி தீபம் வைத்து அம்மா நமஸ்காரம்
செய்து ஹாரத்தி எடுத்தோம் ஞாலத்துக்கு அமைதியை தா.

ஓம் கணபதி சிவ ஷண்முக நாதா
ஓம் த்ரிகுண தீ தா க்ருஷ்ணா
ஓம் த்ரிகுண தீ தா ஓம் ஸ்ரீ
ராம மஹாதேவ சம்போ
ஓம் ஜய ஜகத் ஜனனி

ராஜராஜேஸ்வரி ஸ்துதி

ஸ்ரீ சக்ர நாயகி ஸ்ரீ புவனேஸ்வரி
ராஜராஜேஸ்வரி பால யமாம்
வாராஹி வைஷ்ணவி வாரிஜ லோசணி
ராஜராஜேஸ்வரி பாலயமாம்

ஸ்ரீ ராம சோதரி ஸ்ரீஜகன்நாயகி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்
சங்கரி சாம்பவி சந்த்ர கலாதரி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்

மதுரை மீனாக்ஷி மரகதவல்லி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்
காஞ்சி காமாக்ஷி காசி விசாலாக்ஷி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்

அராளகேசி அபிராம சுந்தரி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்
அன்னபூர்ணேஸ்வரி அகிலாண்ட நாயகி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்

நித்ய கல்யாணி நிர்மல சுந்தரி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்
தீனதயாபரி திரிபுரசுந்தரி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்

பாபவிமோசனி பர்வத வர்த்தினி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்
கற்பகவல்லி கௌரி மனோஹரி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்

சிவமனோஹரி சிவகாம சுந்தரி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்
லாவண்ய சுந்தரி லலிதா மஹேஸ்வரி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்

சாந்த ஸ்வரூபிணி சாரதா தேவி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்
சங்கர நாயகி சியாமள சுந்தரி
ராஜராஜேஸ்வரி பாலய மாம்

அபிராமி ஸ்துதி

அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாள் அன்னை அபிராமி
ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் அன்னை அபிராமி

இப்புவி இன்பம் எல்லாம் தருவாள் அன்னை அபிராமி
ஈடில்லாத சாட்சியாய் இருப்பாள் அன்னை அபிராமி

உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை அபிராமி
ஊக்கமிருந்தால் போதுமே என்பாள் அன்னை அபிராமி

எங்கும் நிறைந்த ஜோதியாய் இருபாள் அன்னை அபிராமி
ஏகாக்ஷரமாய் எங்கும் இருப்பாள் அன்னை அபிராமி

ஐங்கரநாதனை ஆதியில் தந்தாள் அன்னை பராசக்தி
ஒட்டியான பீடத்தில் அமர்வாள் அன்னை காமாக்ஷி

ஓம் ஓம் என்றால் ஓடியே வருவாள் அன்னை பராசக்தி
ஓம் ஓம் என்றால் ஆடியே வருவாள் அன்னை அபிராமி

அராளகேசி ஸ்துதி

அம்ப பரமேஸ்வரி அகிலாண்ட நாயகி
அராளகேசி பாஹிமாம்
அன்னபூர்ணேஸ்வரி அம்புஜவாஸினி
ஆனந்தவல்லி பாஹிமாம்

சந்த்ரகலாதரி சியாமளரூபிணி
சாரதாதேவி பாஹிமாம்
சாந்தஸ்வரூபிணி சங்கரமோஹிணி
சாமுண்டேஸ்வரி பாஹிமாம்

மாதவஸோதரி மஞ்சுளபாஷினி
மரகதவல்லி பாஹிமாம்
மந்த்ரஸ்வரூபிணி மங்களதாயினி
மதுரை மீனாக்ஷி பாஹிமாம்

பர்வத வர்த்தினி பரமகல்யாணி
பஞ்சதசாக்ஷரி பாஹிமாம்
பங்கஜலோசனி பாபவிமோசனி
ஸ்ரீ புவனேஸ்வரி பாஹிமாம்

கஞ்சுகதாரிணி கௌரி மனோகரி
கற்பகவல்லி பாஹிமாம்
காசிவிசாலாட்சி காமிததாயினி
காஞ்சி காமாட்சி பாஹிமாம்

நதஜனபாலினி நி மலமனோன்மணி
நீலநிரஞ்ஜனி பாஹிமாம்
நித்யகல்யாணி நிர்மல ரூபிணி
நீலாயதாட்சி பாஹிமாம்

தீனதயாபரி தர்மஸம்வர்த்தினி
திரிபுர சுந்தரி பாஹிமாம்
ஹ்ரீம்காரரூபிணி ஈசமனோகரி
தேவி பவானி பாஹிமாம்

லயமனமோஹினி லாவண்ய சுந்தரி
லலிதாமஹேஸ் வரிபாஹிமாம்
லகாரரூபிணி லலிதாங்க மோஹினி
ராஜராஜேஸ்வரி பாஹிமாம்
அராளகேசி பாஹிமாம்

துர்க்கா தேவி சரணம்

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி)

பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே   (ஜெய ஜெய தேவி)

சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா.....
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்
அவளே அங்கையர்க்கண்ணியும் அவளே
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
கனக துர்க்கா தேவி சரணம்
கனக துர்க்கா தேவி சரணம்

ஜெய துர்க்கா ஸ்துதி

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
மங்கள சண்டிகை ஸ்லோகம் இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும் (ரக்க்ஷ ரக்க்ஷ)

படைப்பவள் அவளே காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி அபயம்
என்று அவளை சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி ஜெய ஜெய
சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள்
அம்பிகை பைரவி சிவ சிவ சங்கரி
சக்தி மஹேஸ்வரி திருவருள் தருவாள் தேவி   (ரக்க்ஷ ரக்க்ஷ)

கருணையில் ககை கண்ணணின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்
அருள்மழை பொழிவாள் நாளும்
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை øருபவள்     (ரக்க்ஷ ரக்க்ஷ)

ராகு கால துர்க்கா அஷ்ட்டகம்

வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உலகை யீன்றவள் துர்க்கா உமையு மானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை யானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

செம்மையானவள் துர்க்கா செபமு மானவள்
அம்மையானவள் அன்புத் தந்தை யானவள்
இம்மையானவள் துர்க்கா இன்ப மானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உயிருமாவனள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் துர்க்கா எந்தன் உடமை யானவள்
பயிரு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னும் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையு மானவள் இன்பத்தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

குருவுமானவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவு மானவள் துர்க்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

(தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே என்ற நாமம் வரும்போது விரதம் இருப்பவர்கள் நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது.)

தீபாரதனை பாட்டு

தீபாராதனையில் உந்தன் திருமுகம் விளங்குதம்மா
தினம் தினம் உனையே தொழுபவர்க்கெல்லாம்
திருவருள பெருகுதம்மா அம்மா
திருவருள் பெருகுதம்மா (தீபாராதனை)

பாலும் பழமும் பன்னீரும் பஞ்சாமிர்தமாய் அபிஷேகம்
பார்த்தவர் நெஞ்சம் பரவசமாகும்
பக்தர்கள் கூட்டம் பெருகி வரும்
பலவித நன்மைகள் கூடி வரும்
உந்தன் ஆலய வாசலிலே இங்கு
வாத்திய ஒலியும் கேட்குதம்மா
ராகு காலமது வந்ததம்மா உன்னைப்
பாடி பணிவோம் நாங்களம்மா (தீபாராதனை)

மஞ்சளினாலே அலங்காரம் இங்கு
பக்தர்கள் அனைவரையும் கவருதம்மாயும்
துர்க்கையம்மா உன்னை வேண்டிக்கொண்டாலே
காரியம் யாவையும் சித்தி செய்வாயே      (தீபாராதனை)

ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே நமோவயம்
வைஸ்ரவணாய குர்மஹே ஸமேகா மாகம்மா மகாமய மஹ்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவணோததாது
குபேராய வைஸ்ரவணாய் மஹா ராஜயதே நமோ நம
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்தஸாதிகே
ஸரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

தேச முத்துமாரி துதி

1. தேடியுனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரி கேடதனை
நீக்கிடுவாய், கேட்ட வரந் தருவாய்

2. பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெலாங் களைவாய்
கோடி நலஞ்செய்திடுவாய், குறைகளெலாந் தீர்ப்பாய்

3. எப்பொழுதுங் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி
ஒப்பியுன தேவல்செய்வேன், உனதருளால் வாழ்வேன்

4. சக்தியென்று நாமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி பக்தியுடன்
போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும்.

5. ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும் யாதனுந்
தொழில் புரிவோம் யாது மவள் தொழிலாம்

6. துன்பமே இயற்கையென்னும் சொல்லைமறந் திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம், யாவு மவள் தருவாள்

7. நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத்தீர்ப்ப
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்

ஓம் பராசக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி

கணபதி ராயன் அவனிருகாலைப் பிடித்திடுவோம்
குணமுயர்ந்திடவெ விடுதலை கூடி மகிழ்ந்திடவே  (ஓம்)
சொல்லுக் கடங்காவே பராசக்தி சூரத் தனங்களெல்லாம்
வல்லமை தந்திடுவாய் பராசக்தி வாழியென்றே துதிப்போம் (ஓம்)

வெற்றி வடிவேலன் அவனுடைய வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்  (ஓம்)
தாமரை பூவினிலே சுருதியை தனியிருந் துரைப்பாள்
பூமணிப் தாளினையே கண்ணிலொற்றிப் புண்ணிய மெய் திடுவோம்  (ஓம்)

பாம்புத் தலைமேலே நடஞ்செய்யும் பாதத்தினைப் புகழ்வோம்
மாம்பழ வாயினிலே குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம்
செல்வத்திருமகளைத் திடங்கொண்டு சிந்தனை செய்திடுவோம்
செல்வ மெல்லாமந் தருவாள் நமதொளி திக்கனைத்தும் பரவும்  (ஓம்)

சக்கர நாயகி

1. ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்மாஸ னேச்வரி
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேச்வரி ஸ்ரீ

2. ஆகமவேத கலாமய ரூபிணி
அகிலசராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேச்வரி ராஜராஜேச்வரி

3. பலவிதமாயுனைப் பாடவும் ஆடவும்
பாடிக்கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்
உலகமுழுதும் என தகமுறக் காணவும்
ஒருநிலை தருவாய் காஞ்சிக் காமேச்வரி

4. உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முனனூழ்க் கொடுமையை நீங்கச் செய்த
நித்ய கல்யாணி பவானி பத்மேச்வரி (ஸ்ரீ சக்கர)

5. துன்பப்புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்த முன்மாயம் நீக்கி பிறந்த பயனைத்தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கரலம் நீயே அம்மா அகிலாண்டேச்வரி

அம்மா பாடல்

1. அருணகிரண மணிகோடிகள் ஒளிசெய
அமுத மதுமலர் அரியணை மீதினில்
அகிலம் முழுதும் கொலுவீற்றிருந்தருள் தரும்
ஆதிதேவியே அம்மா நான்
அடிமை அல்லவோ அம்மா எனை
ஆள வா வா அம்மா

2. கருணையிறன் அருளை என்னென்பேன் இந்தக்
கடையவனுக்கும் அருள் செய்தாய்
அருகிலிருந்து துணை தரும் மலைமகளே   (ஆதி)

3. துன்பம் மிகுந்து வந்தபோதும் மனம்
சோர்ந்து மதிமயங்க மாட்டேன்
அன்பர் துனையும் நினதருளும் இங்கில்லையோ (ஆதி)

4. தகிக்கும் கொடுமைபல தாங்கி நான்
தனித்துப் பிரிந்த தவப் பெருமை
தரணி முழுது மொரு காலம் நன்கறியும்  (ஆதி)

5. சக்தி விளங்கும் அருள்வாக்கும் மகா
சாந்தி விளங்கும் அருள் நோக்கும்
பக்திபுரியும் அருள் வாழ்க்கையும் தருவாய்  (ஆதி)

துர்க்கை துதி

உன்னை பூஜிக்க வரம்தா பொன்மலர் கொண்டு
உன்னை பூஜிக்க வரம் தா
பாரத கண்டமதில் பிரபல்யமாய் விளங்கும்
தீராபிணி கவலை தீர்த்து வைக்கும் ஈஸ்வரி  (உன்னை)

தங்கப் பலகை போட்டு தகுந்த கோலமிட்டு
கங்கா ஜலம் கொணர்ந்து தங்க கலசம் வைத்து
மங்காத தீபம் ஏற்றி எங்கிலும் தோரணம் கட்டி
சிங்கார மண்டபத்தில் வந்துதித்தாய் வரலட்சுமி  (உன்னை)

பாலும் பஞ்சாமிர்தமும் அஸ்தோகமும் சொரிந்து
பட்டு பீதாம்பரமும் கட்டி அலங்கரித்து மட்டிலா
மாணிக்கமும் மாசிலா நவரத்னமும் மங்கள துரிதமுடன்
எங்கிலும் விளங்கி வரும்  (உன்னை)

மல்லிகை முல்லை ரோஜா மணமுள்ள சம்பங்கி
வெட்டி வேரும் கொணர்ந்து கட்டின மாலை சூட்டி
பல பக்ஷம் வைத்து கற்பூர தாம்பூலம் ஏற்றி
முத்தாரத்தி எடுத்து குந்தனவராளி பாடி  (உன்னை)

உன்னை பெட்டி நிறைய பூ கொணர்ந்து பூஜிப்பேனம்மா
மல்லிகை முல்லை மருவுடன் ரோஜா மகிழம்பூ பாதரியும்
அல்லி அரளி கதிர் பச்சை தவளமுடன் அழகுள்ள

இஷ்டமுடனே பல புஷ்பங்கள் கொணர்ந்து
நான் அஷ்டோத்திரம் சொல்வேன் ஒரு கஷ்டமும்
வராது காப்பதுன் கடமை கருணா சாகரியே
ஸாஹரியே சுபஹரியே கிருபாஹரியே நரஹரியே (உன்னை)
சம்பங்கி ரோஜா சரோஜிதமலரால் ஸகஸ் ரார்ச்சனை செய்வேன்
வாணி சரஸ்வதி வந்தெம்மை ஆதரி வாசாம கோசரியே
ஈஸ்வரியே, ஜகதீஸ்வரியே, திரிபுவனேஸ்வரியே ராஜ்ஸ்வரியே (உன்னை)
பக்ஷ்க்ஷமதாகவே பரிமள பொடியினால் லட்சார்ச்சனை செய்வேன்
ரக்ஷ்ய சம்பத்தை அணுதினம் தந்து நீ ஆதரித் தருளுவாயே
ஏகாக்ஷரியே, கிருபாகரியே, பஞ்சாட்சரியே ஜடாக்ஷரியே  (உன்னை)

சரஸ்வதி பாடல்

கலைவாணி நின் கருணை தேன் மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலையாவும் தந்தருள்வாய் கலைமாமணி  (கலை)

மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானகரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லயபாவஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதாவுன் வீணையில் எழும் நாதம்   (கலை)

வீணையில் எழும் நாதம் தேவி உன்சுப்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன்சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்
வேண்டினேன் உன்னைப்பாட தருவாய் சங்கீதம்

லக்ஷ்மி திருவிளக்கு பாடல்

ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி
பஞ்சுதிரி போட்டு பசு நெய்தனை ஊற்றி
குங்குமத்தில் பொட்டிட்டு கோல மஞ்சள் தானுமிட்டு
பூமாலை சூடி வைத்து பூஜிப்போம் உன்னைத் திருமகளே
திருவிளக்கை ஏற்றி வைப்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலு இருக்க வருக
அலைமகளே வருக ஐஸ்வரியம் தருக  (திருவிளக்)

வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம்
நெற்றியிலே திரு சூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மீகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம்
அஸ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் ÷க்ஷமமயம்  (அலை)

மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஒரு வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலெட்சுமி திருநாமம்
சங்குசக்கரதாரி நமஸ்காரம் சகலவரம் தருவாய் நமஸ்காரம்
பத்ம பீஷ தேவி நமஸ்காரம் பக்தர் தம்மை காப்பாய் நமஸ்காரம்

கருமாரியம்மன் பாடல்

ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ எங்கள் தேவி முகம்
அந்தஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
மங்கையர் எல்லாம் போற்றி வணங்கும் மங்கல செல்வம்
அதை குங்குமத்தாலே அள்ளி கொடுக்கும்
கலியுக தெய்வம்  (ஆயிரம்)

ஆனி மறைந்து ஆடி பிறந்ததும்
கண் மலரும் கருமாரியம்மனின்
அருள் மழையாலே கண் குளிரும்
முன்னை வினைகளை ஓடிட செய்யும் அன்னையின் தீர்ப்பு
அவள் முத்துக்கரங்களில்
சூட்டி மகிழ்வோம் சந்தன காப்பு  (ஆயிரம்)

நதியாய் பாயும் பன்னீராலே அபி÷க்ஷகம் - தினம்
நாற்பது கோடி நறும் மலராலே அலங்காரம்
தங்கரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்
அவள் தரிசனம் கண்டு துதிப்பவர்க்கெல்லாம்
நலம்சேரும் கலியுக தெய்வம்  (ஆயிரம்)

அம்மன் பாடல்கள்

ஓம் எனும் மந்திரத்தில் உட்பொருளே
ஒன்பது கோணத்தில் உதிப்பவளே
சோமனை சூரியனை சுடர்விழி இரண்டாக
பூமியகத் தாமரையில் பதித்தவளே
சர்ப்பத்திலே துயிலும் சாரங்கன் சோதரி
சர்ப்பத்தையே அணியும் சங்கரன் நாயகி சர்ப்ப ஸ்வரூபிணி
சர்ப்ப ஸ்வரூபமாய் சமைத்திடும் கௌமாரி
சர்வமும் நீயே சங்கரி மகமாயி  (ஓம்)

அமுதப்ரவாகம் நின் அரவிந்தலோசனம்
அட்சயபாத்திரம் உன் அருள் பொங்கும் நேத்திரம்
நவரத்ன தீபம் திவ்ய சொரூபம்
பாதாதி கேசம் பூர்ணப்ரகாசம்
அந்தரிசுந்தரி ஆனந்த பைரவி மாலினிசூலினி மோகினியே
தேவிஜனனி பாவவிமோசினி நிர்மல நீலி மாதாங்கினியே
கங்கை கொண்டான் பிறைத்திங்கள் கொண்டான் உடல்
பங்கு கொண்டாடிடும் மங்கலமே
கற்றறிவாளரின் நாவிலும் நெஞ்சிலும்
நாத்தன மாடிடும் சித்திரமே
மூலமும் முடிவும் மூவரும் அறியாக்
காலத்தில் தோன்றிய கற்பகமே
முத்தொழில் வித்தகர் சித்தமும் நித்தமுன்
தத்துவமறியா அற்புதமே.

சமயபுரத்தாளே

ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்
நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையாள்
சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே
சமயபுரத்தைவிட்டு சடுதியிலே வாருமம்மா
மாயி மகமாயி மணி மந்திரகேசரியே
ஆயி உமையானவளே ஆஸ்தான மாரிமுத்தே
சிலம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நதியிலே - உன்
உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலே - உன்
பம்பை பிறந்ததம்மா பளிங்கு மாமண்டபத்தில்
பரிகாசம் செய்தவரை பதைபதைக்க வச்சிடுவே
பரிகாரம் கேட்டுவிட்டா பக்கத்துணை நீ இருப்பே
மேனாட்டு பிள்ளையிடம் நீ போட்ட முத்திரையை
நீ பார்த்து ஆத்திவச்சா நாள் பார்த்து பூஜை செய்வான்  (மாயி)

குழந்தை வருந்துவது கோவிலுக்கு கேக்கலையோ
மைந்தன் வருந்துவது மாளிகைக்கு கேக்கலையோ
ஏழைக் குழந்தையம்மா எடுத்தோர்க்கு பாலனம்மா
தாளை பணிந்து விட்டான் தயவுடனே பாருமம்மா
கத்திபோல் வேப்பிலையாம் காளியம்மன் மருத்துவமாம்
ஈட்டிப்போல் வேப்பிலையாம் ஈஸ்வரியின் அருமருந்தாம்
வேப்பிலையின் உள்ளிருக்கும் வித்தைகளை யாரறிவார்
ஆயா மனமிறங்குஎன் அம்மையே இறங்கு
என் அன்னையே நீ இறங்கு

ஸ்ரீதேவி நமஸ்காரம்

தேவர்கள் ஆபத்தை விலக்கிக் கொள்ள அம்பாளை துதித்து ப்ரதிதினம் நமஸ்காரம் செய்து வந்தால் மனதாலும் வாக்கினாலும் சரீரத்தினாலும் செய்கின்ற பாபங்களைப் போக்கி மங்களத்தைக் கொடுக்கும்.

1. நமோ தேவியே மஹாதேவ்யை சிவாயை ஸததம் நம:
நம: ப்ரக்ருத்யை பத்ராயை நியதா: ப்ரணதாஸ்ம தாம்:

2. யா தேவீ ஸர்வபூதேஷு விஷ்ணு மாயேதி சப்திதா!

3. நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
யாதேவீ ஸர்வபூதேஷு சேதனே த்யபி தீயதே! நமஸ்தஸ்யை

4. யாதேவீ ஸர்வபூதேஷு புத்தி ரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

5. யாதேவீ ஸர்வபூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

6. யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

7. யாதேவீ ஸர்வபூதேஷு ச்சாயாரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

8. யாதேவீ ஸர்வபூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

9. யாதேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

10. யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷõந்திரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

11. யாதேவீ ஸர்வபூதேஷு ஜாதிரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

12. யாதேவீ ஸர்வபூதேஷு லஜ்ஜாரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

13. யாதேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

14. யாதேவீ ஸர்வபூதேஷு ச்ரத்தாரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

15. யாதேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

16. யாதேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

17. யாதேவீ ஸர்வபூதேஷு வ்ருத்திரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

18. யாதேவீ ஸர்வபூதேஷு ஸம்ருதிரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

19. யாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

20. யாதேவீ ஸர்வபூதேஷு துஷ்டிரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

21. யாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

22. யாதேவீ ஸர்வபூதேஷு ஸர்வரூபேண ஸம்ஸ்திதா! நமஸ்தஸ்யை

இந்திரியாணா மதிஷ்டாத்ரீ பூதானுஞ் சாகிலேஷுயா!
பூ தேஷு ஸதகம் தஸ்யை வ்யாப்த்யை தேவ்யை நமோ நம: !!
சிதிருபேண யா க்ருஸ்னமேதத் வ்யாப்ய ஸ்தியாஜகத்!!
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
ஸ்துதா ஸுரை: பூர்வமபீஷ்ட ஸம்ச்ரயாந் ததா ஸுரேந்தரணே தினேஷுஸேவித !
கரோதுஸாந: சுபஹே துரீச்வரி சுபாநி பத்ராண்யபிஹந்து சாபத:

ஸ்ரீ ஜெகதம்மா - சரணம்

1. சரணம் சரணம் ஜெகதம்பா
சரணம் தருவாள் ஓம்காரி
சோற்றாணிக் கரையில் வந்திடுவாள் - அவள்
சொல்லிடும் குறைகளை தீர்த்துடுவாள்    (சரணம்)

2. கருத்தினில் வந்திடும் கருமாரி - அவள்
காருண்ய வடிவான சிவகாமி
காஞ்சியில் வாழ்ந்திடும் காமாக்ஷி - அவள்
கெஞ்சியதும் இங்கே வந்திடுவாள்   (சரணம்)

3. மதுரையில் வாழ்ந்திடும் மீனாக்ஷீ - அவள்
மதியினில் நிறைந்திடும் சிவசக்தி
மாதவன் சோதரி என்பவளாம் - அவள்
மனக்குறை எல்லாம் தீர்த்திடுவாள்   (சரணம்)

4. அழியா சக்தியை கொண்டவளாம் - அவள்
அழகின் வடிவாய் இருப்பவளாம்
அங்கையற்கண்ணி என்பவளாம் - அவள்
அழைத்ததும் இரங்கி வந்திடுவாள்  (சரணம்)

5. சிங்காரரூபம் கொண்டவளாம் - அவள்
சீர்காழி திரிபுர சுந்தரியாம்
சீராகவே இங்கு வந்திடுவாள் - அவள்
சீராட்டுதனில் தினம் மகிழ்ந்திடுவாள்   (சரணம்)

6. திருக்கடையூரில் அபிராமி - அவள்
திருமால் அழகன் சோதரியாம்
திருவேற்காட்டில் கருமாரி - அவள்
திருஉள்ளம் இரங்கி வந்திடுவாள்.   (சரணம்)

7. சமரசகுணத்தை கொண்டவளாம் - அவள்
சமத்துவ நீதியை சொல்பவளாம்
சமயபுரத்து மகமாயி - அவள்
தக்க சமயத்தில் வந்திடுவாள்    (சரணம்)

8. வசந்த நகரில் கோலம் கொண்டாள் - அவள்
அராளகேசி என்ற நாமம் கொண்டாள்
வந்தனை செய்வோர் மனதில் எல்லாம் - அவள்
வந்தருள் என்றும் தந்திடுவாள்  (சரணம்)

9. அலைமகள் வடிவில் இருப்பவளாம் - அவள்
கலைமகள் உருவை கொண்டவளாம்
மலைமகள் என்றும் இமையவளாம் - அவள்
திருமகளாய் என்றும் இருப்பவளாம்  (சரணம்)

10. தேவி மகாத்மியம் சொல்பவர்க்கு - அந்த
தெய்வங்கள் அனைத்தும் வரம் தருமாம்
தேவி ராஜேஸ்வரி ஆவாள் - அவள்
தெய்வீக சக்தியை யார் அறிவார்   (சரணம்)

11. குங்குமம் மகிமையை தந்தவளாம் - அவள்
கங்கண பூக்ஷித ரஞ்சினியாம்
மங்கள கௌரி என்பவளாம் - அவள்
மங்காத ஒளியாய் இருந்திடுவாள்  (சரணம்)

ஸ்ரீ மீனாட்சி அம்மன் துதி

மரகதவல்லி மீனாட்சி மதுரை நகரில் வாழுகின்றாள்
கடைக்கண் அருளும் காமாட்சி காஞ்சியிலே வாழுகின்றாள்
அகிலாண்ட நாயகியாய் அன்னை விசாலாட்சியவள்
காசி விஸ்வநாதருடன் ஆட்சியுமே புரிகின்றாள்

இமயமலை சிகரத்திலே உமையவளும் வாழுகின்றாள்
பெண்மையின் வடிவினிலே உலகமெல்லாம் வாழுகின்றாள்
கருணையுள்ள கற்பகமாய் மயிலையிலே வாழுகின்றாள்
கபாலிநாதன் துணையுடனே காட்சியுமே தருகின்றாள்
கயிலையிலே வாழுகின்றாள் கற்பகமாய் வாழுகின்றாள்

அம்மன் பாடல்

அழகிய மதுரையில் மீனாட்சி
அகிலம்போற்றும் அன்னை அரசாட்சி
நான்மாடக் கூடலிலே அருளாட்சி
தேன்மொழி தேவியின் தேனாட்சி அந்த   (அ)

சங்கம் முழங்கிடும் நகரிலே
சங்கரி மீனாளின் கருணையிலே
மீன்கொடி பறக்கும் மதுரையிலே
வான்புகழ் கொண்டாள் தாயவளே அந்த  (அ)

அன்பர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பாள்
ஆதிசிவன் அருகில் அமர்ந்திருப்பாள்
வைரமணி மகுடம் அணிந்திருப்பாள்
கருணையுடன் நம்மை காத்து நிற்பாள் அந்த  (அ)

முத்து பவளம் மரகத மாணிக்கம்
பொன் ஆபரணம் பூண்டாள்
சக்தி மனோகரி சந்தர கலாதரி
தென் மதுராபுரி ஆண்டாள்
சித்திரை மாதம் தேவி மீனாட்சி
சொக்க நாதரை மணந்தாள்
பக்தர்கள் மனமும் பரவசம் பொங்கிட
அற்புத லீலைகள் புரிந்தாள் அந்த   (அ)

துர்க்கை பாடல்

பவனி வருகிறாள் துர்க்காதேவி பவனி வருகிறாள்
புவனம் புகழ் சிங்கம் மீதில் பவனி வருகிறாள்
துர்க்கா தேவி பவனி வருகிறாள்   (பவனி)

பாரினிலே அழகு துர்க்கா தேவி பவனி வருகிறாள் இங்கே
பக்தர்கள் குறையைத் தீர்க்க பவனி வருகிறாள்
பம்பை உடுக்கை முழங்கிடவே பவனி வருகிறாள்
செய்த பாவங்களை போக்கிடவே பவனி வருகிறாள்  (பவனி)

வேதியர்கள் சபை நடுவே பவனி வருகிறாள்
வேதங்களின் தலைவியாக பவனி வருகிறாள்
வேதனை போக்கிடவே பவனி வருகிறாள்
ஒற்றுமையாய் வாழவைக்கவே பவனி வருகிறாள் நம்மை  (பவனி)

எலுமிச்சை மாலையோடு பவனி வருகிறாள்
இரு கரங்களில் ஆசி கூறி பவனி வருகிறாள்
சாந்த நாயகியாய் பவனி வருகிறாள்
நல்ல நன்மை செய்ய துர்க்கா தேவி பவனி வருகிறாள்  (பவனி)

மஞ்சள் முக அழகோடு பவனி வருகிறாள் நல்ல
மல்லிகைப்பூ மணத்தினிலே பவனி வருகிறாள்
மங்களங்கள் நல்கிடவே பவனி வருகிறாள் இங்கு
குங்குமத்தில் அருள்கொடுத்து பவனி வருகிறாள்  (பவனி)

ஸ்ரீதுர்க்கையம்மன் பாடல்

துர்க்கா தேவியை துதியுங்கள் பல
துதிகள் பாடி மகிழுங்கள்
துர்க்கையின் நாமம் தேனாய் இனிக்கும்
விந்தையை பாடி மகிழுங்கள்  (துர்)

காக்கும் கரங்கள் பதினெட்டு அவள்
கருணையின் வடிவம் நவசக்தி
படைத்தல் காத்தல் அருளல் எனவே
காட்டும் துர்க்கையின் திருக்கோயில்  (துர்)

பாயும் நதிகள் அவளேயாம்
பரந்த நதிகள் அவளேயாம்
விண்ணும் மண்ணும் அவளேயாம்
விரிந்த அண்டங்கள் அவளேயாம்  (துர்)

அழியா உண்மையும் துர்க்கையம்மா
அறிவும் ஒளியும் துர்க்கையம்மா
ஆனந்த நிலையும் துர்க்கையம்மா நாம்
அடைந்திடும் பொருளும் துர்க்கையம்மா  (துர்)

ஸ்ரீதுர்க்கை கவசம்
(சஷ்டி கவச மெட்டில் பாடவும்)

ஜயதுர்கா என்றுனை நான்பாட ஜயமருள்வாயே ஜயதுர்கா

கதிரவன் ஒளியே கண்மணி வருக
ஜககண ஜககண தேவியே வருக
திமிதிமி திமிதிமி துர்கா வருக
பறையொளி சாற்றி பண்மணி வருக

ஜல் ஜல் என தண்டை ஒலி முழங்க
கல கல எனவே கைவளை குலுங்க
பிரம்பொலி சாற்றி ப்ரம்மானி வருக
மாய ரூபிணி சாமுண்டி வருக

வரமது அருளும் வனமாலி நீயே
தண்டக மண்டல குண்டல தாரிணி
சாமுண்டேஸ்வரி துர்க்கா தேவி
ஸ்ரீ சக்ர ஸ்வரூபிணி பீதாம்பரியே

என்னை ஆளும் அன்னை இருக்க
என்னிடர் நீங்கி தன் மயமாக்கி
சின்மயானந்த முத்திரைகாட்டி
ஜெகமதை காக்கும் கருணை விழியும்

தயையின் நோக்கும் கருணாம்ரூதமும்
பாசாங்குசமும் கரும்பும் வில்லும்
என் சித்தத்துள்ளே சிவமயமாய் நின்று
நான் என்ற அகந்தை கர்வமொழிந்து

அம்பிவில் கொண்டு துன்பம் துடைத்தாள்
அன்புருவில் என்னை கலந்திட செய்தாள்
எத்தனை தொல்லை எத்தனை அல்லல்
என்பிணி எல்லாம் எடுத்து விழுங்கி

தீமையகற்றும் தீமிதி வந்தாள்
பில்லி சூனியம் பெரும் பகை ஏவல்
எல்லாம் எரித்து நீறது ஆகும்
வல்லமை உள்ள வலிய பிடாரி

இருளன் காட்டேரி இத்துன்ப சேனையும்
துர்க்கா தேவியின் பெயரைக் கேட்டால்
துன்பங்கள் யாவும் தூரத்தில் ஓடும்
போட்டி பொறாமை பொடிப் பொடியாகும்

பொற்க் கொடி துர்கா லஷ்மியை கண்டால்
இழிவுகள் நீங்கி செல்வம் ஓங்கும்
ஓம் என்று ஒலிக்கும் பிரணவஸ்வரூபிணி
ஓங்காரத் தொனி உமையவள் வந்தாள்

தன்னை அடுத்தவர் துன்பம் அகற்றி
என்னை எடுத்தாட் கொண்டவள் அன்னை
தஞ்சமென்றோரை காப்பவள் துர்கா
அன்னை இருக்க எனக்கினி பயமேன்

என்னிகரில்லை அன்னையே எல்லாம்
புவனம் முழுவதும் புவனேஸ்வரியாள்
மலைபோல இடர்கள் பொடிப் பொடியாக்கி
மங்கையர் மணமதை முடிப்பவள் துர்கா

மணமலர் சூட்டி மகிழ்வாள் துர்கா
துர்கா பகவதி என்று நினைத்தால்
துஷ்டரை அடியுடன் வேறறுத்திடுவாள்
மலைபோல் துயர்கள் பனிபோல நீங்கும்

விதியும் விலகும் நிதியும் அளிப்பாள்
மதியும் அவளே காஞ்சி காமாக்ஷி
சூலினி மாலினி கபாலினி மாயே
கேசவ ஸோதரி துர்கா மாயே

சும்ப நிசும்பினி துர்காமாயே
மகிக்ஷ சம்ஹாரினி துர்காமாயே
வரப்ரசாதினி வைகுண்டேஸ்வரி
மாதவ ஸோதரி மங்களாம்பிகையே

எனையாட்கொண்டு எனை ஆதரிப்பாயே
உன்னையே நம்பி வாழ்வேனம்மா
ஓம் சக்தி துர்க்கையம்மா ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்.

ஸ்ரீ காமாக்ஷி ஸ்துதி

ராகம் : கரகரப்பிரியா  தாளம் : ஆதி
பல்லவி

நினைத்தாலும் அழைத்தாலும் வரவேண்டுமே
எந்தன் மனைவாழும் காமாக்ஷி மகராசி தாயே

அநுபல்லவி

கனைத்திடும் கன்றுக்கும் கனிந்திடும் பசும்போலே
வினையினால் வென்றிடும் எளியனைக் காத்திட

சரணம்

சங்கரனின் உடலில் பாதி கொண்டாயே
சதுர்மறை வேதமே ஓதி வந்தாயே (ச)
பொங்கிடும் அமுதென பெருகி வந்தாயே
பொன்மணி கண்மணி காஞ்சி நீ தாயே

புவனேஸ்வரி அம்மன் பாடல்கள்

நவராத்திரி நாயகியே புவனேஸ்வரி
வந்து நலம் கோடி அருள்வாயே பரமேஸ்வரி  (நவ)

பஞ்சமென்று வருவோர்க்கு தர்பசம் வர்தனி
தடையாவும் வெல்வதிலே மகிஸாஸுரவர்தினி  (நவ)

உலமெனும் கோவில் ஓர் பூஜை மண்டபம் அது
ஓயாமல் ஒலிக்கும் உந்தன் வேத மந்திரம்
ஒரு கோடி தீபம் கொண்ட அலங்காரம்
உன் திருப்பாதம் சரணடைந்தால் நலம் சேரும்  (நவ)

பதினெட்டு கரங்கள் உந்தன் பரிவாரமே
ஒரு பகை என்றால் தாவிவந்து துணையாகுமே
மாயங்கள் யாவும் உந்தன் அவதாரமே
எங்கள் மாங்கல்யம் காப்பது உன் திரிசூலமே  (நவ)

முத்துமணி வடமும் வைரமணிக் கரமும்
நித்தம் நித்தம் தரும் ஸ்ரீதேவி
கண்கள் ஆயிரமும் கையில் ஆயுதமும்
ஏந்தியே தாயே ஓங்காரி  (நவ)

சங்கு சக்கரமுடன் சிங்கவாகனத்தில்
வெற்றி பவனி வரும் ஜெயதேவி
உந்தன் திருவடியே நெஞ்சில் பதிப்பவர்க்கு
எந்தன் துணையிருக்கும் திரிசூலி  (நவ)

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஸ்துதி

திருவானைக் கோயிலிலே
திகழ் ஜம்பு கேஸ்வராரின்

உருவத்தில் தோன்றியவள் குயிலே
உயர் அகிலாண்டமணி

எங்கும் நிறைந்த வடி - எழில் மிகும் ஜோதியடி
பங்குனித் திங்களிலே குயிலே பஞ்ச பிரகாரத்தில்

பவனியே வருவாளடி பக்தரைக் காப்பாளடி
அவனியின் தெய்வமடி குயிலே அகிலாண்ட தேவி

மூக்குத்திக் கற்களிலே மூவுலகம் தோன்றுமடி
நாக்கினின் மதுரத்திலே குயிலே ஞானமினிக்குமடி

நாடெங்கும் புகழ் மணக்கும் ஞாயிறின் பேரொளியே
தாடங்க காட்சியிலே குயிலே தாரணி சொக்குமடி

குங்கும பொட்டழகி குறு நகை முகத்தழகி
பொங்கிடும் மங்களமே குயிலே பொன்னகிலாண்டமடி

நாக மரத்தடியில் நாட்டியம் ஆடுபவள்
சாகா வரந்தருவாள் குயிலே சாதுர்ய சக்தி சிவை

என்னுள்ளக் கோயிலே இருந்தருள் புரிந்திடுவாள்
மின்னலிடை யுடையாள் குயிலே மிருது அகிலாண்ட வல்லியே

விபூதி பிரகாரத்தில் முழங்கிடவே
சுபாட்சி செலுத்துபவள் குயிலே நாயகியே

ஊஞ்சல்

கண்ணூஞ்சல் ஆடியிருந்தார் காஞ்சன மாலை
மன மகிழந்திருந்தாள்
பொன்னுஞ்சலில் பூரித்து
பூஷணங்கள் தரித்து
ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து (கண்ணூஞ்சல்)

உத்தமி பெத்த குமாரி நித்யம்
ஸர்வஅலங்காரி பக்தர்கள்
பாப ஸம் ஹாரி பத்ம மிக ஓய்யாரி  (கண்ணூஞ்சல்)

அசைந்து சங்கிலியாட இசைந்து ஊர்வசி பாட
உகந்து தாளங்கள் போட
மீனாக்ஷி பிரியாழ் மகிழ (கண்ணூஞ்சல்)

மங்களம்

அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக் கனந்த கோடி மங்களம்
என்னுள்ளே விளங்கும் எங்கள் ஈஸ்வரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சபைக்கு மங்களம்
நாமகீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெலாம் விளங்கவும்
ஞானதீபம் ஏற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்க என்று சந்ததம் கொண்டாடுவோம் (அன்னை)
சங்கரி சங்கரன் தேவி மனோஹரி
சந்த்ர கலாதரி அம்பிகையே
எங்கும் நிறைந்த உன் இணையடியை
தொழும் பேர் எனக்கே அருள் பைரவியே
மரகத ச்யாமள ரூபிணியே
மஹிஷாஸுர பார்வதியே
பரமேச்வரி ஜகதாம்பிகையே
மங்களமே தந்து எங்களைக் காத்திட
மனமுவந்தே உடன் வருவாயே
ஐங்கரனைப் பெற்ற அன்னையே
உன்னையே நம்பிடும் எம்மையே காப்பாயே.
பிருந்தாவனமும் மெட்டு

மங்கள ஹரத்தி பாடல்

1. மங்கையர் யாவரும் கூடியே பாடி
மங்கள ஹாரத்தி எடுத்திடுவோம்
பல விதமலர்களை சூட்டியே மகிழ்ந்து
பட்க்ஷணை நைவேத்யம் செய்திடுவோம்  (மங்கையர்)

2. தாபநிவாரணி பாப நிவாரணி
துக்கநிவாரணி ஜெய தேவி துர்க்கா
மஹிசாசுரனை வதைத்த மர்த்தினி
மஹா சக்திக்கும் மங்களமே  (மங்கையர்)

3. செந்தாமரை மலர் உறை ஸ்ரீ தேவி
செல்வங்கள் யாவையும் தந்தருள்வாள்
அஷ்ட்ட வக்ஷ்மியே அலங்கார தேவியே
அன்னையே உமக்கு மங்களமே  (மங்கையர்)

4. ஸ்ரீ துர்க்கா தேவிக்கு ஸ்ரீ சக்கரநாயகிக்கு
சிம்ம வாஹிணி ஸ்ரீ ராஜேஸ்வரிக்கு
கலைகளின் ராணி வாணி சரஸ்வதிக்கு
ஜெய மங்களம் நித்ய சுபமங்களம்
ஜெய மங்களம் நித்ய சுபமங்களம்  (மங்கையர்)

அம்மன் பாடல்கள்

தேவி உன்மகிமை...

தேவி உன்மகிமை தன்னை புகழ்ந்திட எந்தனாலாகுமோ - அம்மா (தேவி)
பூலோகம் புகழும் பூலோக கைலாசம் ஆலவாய் அதனில் லீலைகள் செய்திடும்  (தேவி)
சித்திரைத் திங்களில் சிறப்புற்று விளங்கும் சிங்காரக் கல்யாண வைபவமும்
வைகாசித் திங்களில் வசந்த மண்டபத்தில் ஈசருடன் ஆதி நேசமதமாகவே (தேவி)

ஆனித் திங்களில் ஆடிய ஊஞ்சலும்
ஆடித் திங்களில் கணக தண்டிகையும்
ஆவணித் திங்களில் ஆலாஸ்ய நாதருடன்
வந்தியின் பிட்டுக்கு உவந்து மண் சுமந்ததும் (தேவி)

புரட்டாசித் திங்களில் புண்ணிய நவராத்திரி
கொலு வீற்றிருக்கும் அழகும்
ஐப்பசித் திங்களில் அடிக்கும் கோலாட்டமும்
கார்த்திகைத் திங்களில் லக்ஷ தீபழகும்  (தேவி)

மார்கழித் திங்களில் பூசத் தெப்பத்தின் அழகும்
மாசித் திங்களில் மண்டல உற்சவமும்
பங்குனித் திங்களில் வெள்ளியம்பலமும்  (தேவி)


தேவி... நீயே துணை

தேவி.... நீயே துணை
தென் மதுரை வாழ் மீனலோசினி (தேவி)

தேவாதி தேவன் சுந்தரேசன்
நித்தம் கவர் புவன சுந்தரி அம்பா  (தேவி)

மலையத்துவசன் மாதவமே
காஞ்சன மாலை புதல்வி மகாராணி

அலைமகள் கலைமகள் பணிகீர்வாணி
அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த  (தேவி)


கையில் கிளி.... (கிளிகண்ணி மெட்டு)

1. கையில் கிளி கொண்டவளே,
கண் அழகு மிக்கவளே - கடைக்கண்ணால்
பார்த்தருள்வாய், மீனாக்ஷி
கருணை மழை பொழிவாய்  (கை)

2. மெய்யும் மரகதம் போலே,
மிக்க ஒளி கொண்டவளே,
பையப் பைய நடந்து வந்து - மீனாக்ஷி
பத மலர் காட்சி தருவாய் (மீனாக்ஷி)  (கை)

3. பச்சைக் கிளி கையில் ஏந்தி,
இச்சகத்தை ஆள வந்தாய்,
பச்சைக் கிளியாக என்னை - உன் கையில் ஏந்தி
பக்குவமாய் வார்த்தை சொல்வாய் (மீனாக்ஷி) (கை)

4. வீணையைக் கையில் ஏந்தி,
வேத மொழி பாட வைத்தாய்,
வீணையாய் என்னை உந்தன் கையில் ஏந்தி
வேணமட்டும் பாட அருள்வாய் (மீனாக்ஷி) (கை)


ஓம் சக்தி கொல்லூரில் தவமிருக்கும்...

ஓம் சக்தி ஓம் சக்தி (3 தடவை)

கொல்லூரில் தவமிருக்கும் மூகாம்பிகே
எங்கள் குறைகளைப் போக்கிடுவாய் மூகாம்பிகே

நல்லறிவு வழங்கிடுவாய் மூகாம்பிகே எங்கள்
ஞான ஒளிபெருக்கிடுவாய் மூகாம்பிகே  (ஓம்)

மாங்காட்டில் தவமிருக்கும் காமாட்சியே
எங்கள் மாசுகளை அகற்றிடுவாய் காமாட்சியே

ஓங்காரம் முழங்கிடுவோம் காமாட்சியே உடன்
ஓடியே நீ வந்திடுவாய் காமாட்சியே  (ஓம்)
புகழ் சூழும் ஆனைக்கா ஈஸ்வரியே
எம்மை புனிதராக்கும் அகிலாண்டேஸ்வரியே

ஆக மோங்கு காந்திமதி நெல்லையிலே
உன்அருள் தவத்தால் சுடர் பெறுவோம் பாரினிலே (ஓம்)

முக்கடலில் தவமிருக்கும் தமிழ்குமரியே எங்கள்
மோனநிலை வளர்த்திடுவாய் தமிழ்குமரியே (ஓம்)
எக்கணமும் ஈசனுடன் உனைக் காணவே
அம்மா இன்னருளை பாய்ச்சிடுவாய் தமிழ்குமரியே (ஓம்)

மருவத்தூரில் தவமிருக்கும் ஆதி சக்தி (எங்கள்)
மனங்களிலே வாழ்ந்திடுவாய் ஆதிசக்தியே
கருவமிதை விலக்கி விட்டோம் ஆதிசக்தியே
உன்கருணை மழை பொழிந்திடுவாய் ஆதிசக்தியே (ஓம்)

மாமதுரை ஆட்சி செய்யும் மீனாக்ஷியே
எங்கள் மாங்கல்யம் காத்திடுவாய் மீனாக்ஷியே
ஓம் என்னும் ஒலியில் இருக்கும் மீனாக்ஷியே
இந்த உலக மக்களை வாழவைப்பாய் மீனாக்ஷியே
ஓம் சக்தி ஓம் சக்தி (ஓம்)


ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்....

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி  - (ஓம் சக்தி)

சொல்லுக் கடங்காவே - பராசக்தி
சூரத்தனங்க ளெல்லாம்
வல்லமை தந்திடுவாள் - பராசக்தி
வாழியென்றே துதிப்போம்  - (ஓம் சக்தி)

வெற்றி வடிவேலன் - அவனுடைய
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ - பகையே !
துள்ளி வருகுது வேல். - (ஓம் சக்தி)

தாமரைப் பூவினிலே - சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே - கண்ணிலொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்.  - (ஓம் சக்தி)


ராஜேஸ்வரி அம்மா...

ராஜேஸ்வரி அம்மா பரமேஸ்வரி
புவனேஸ்வரி அம்மா ஜெகதீஸ்வரி

ஸ்ரீ சக்ர பீடத்தில் ராஜேஸ்வரி
சிவசக்தி ரூபத்தில் பரமேஸ்வரி

ஓம் சக்தி ஓம் சக்தி புவனேஸ்வரி
உலகாளும் மகாசக்தி ஜகதீஸ்வரி

அருளாலும் நெஞ்சங்கள் சிம்மாசனம்
அறுபத்து நான்குகலை வெண்சாமரம்

ஒரு நான்கு வேதங்கள் சங்கீர்த்தனம்
ஓங்கார நாதன் அம்மா உன் தாண்டவம்  (அம்மா)

பூவுக்கும் பொட்டுக்கும் துணையானவள்
பொன் மஞ்சள் குங்குமத்தில் நிலையானவள்

சேவிக்கும் பெண்களுக்குத் தாயானவள்
திரு மாங்கல்யம் என்னும் வாழ்வானவள்

குளம் போல நெய்யூற்றி விளக்கேற்றுவோம்
கும்பத்தில் பீடத்தில் குடியேற்றுவோம்

வளம்யாவும் தரவேண்டி மலர் தூவுவோம்
மகாராணி நீயென்று கலியாடுவோம்

தீபத்தில் குடி கொண்ட ராஜேஸ்வரி
திலகத்தில் முகம் காட்டும் ராஜேஸ்வரி

ஆபத்தில் ஓடி வரும் ராஜேஸ்வரி
அருள் செய்ய வேண்டும் அம்மா  (ராஜேஸ்வரி)


கண்ணூஞ்சல் ஆடியிருந்தார்....

கண்ணூஞ்சல் ஆடியிருந்தார் - காஞ்சன மாலை
மன மகிழ்ந்திருந்தாள்
பொன்னூஞ்சலில் பூரித்து பூஷணங்கள் தரித்து
ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து  (கண்ணூஞ்சல்)

உத்தமி பெத்த குமாரி - நித்யம்
ஸர்வலங்காரி பக்தர்கள்
பாப ஸம் ஹாரி பத்ம மிக ஒய்யாரி  (கண்ணூஞ்சல்)

அசைந்து சங்கிலியாட - இசைந்து ஊர்வசி பாட
உகந்து தாளங்கள் போட
மீனாக்ஷி பிரியாழ் மகிழ  (கண்ணூஞ்சல்)

நவராத்திரி கொலுவிருந்து
பல்லவி

நவராத்திரி கொலுவிருந்து நல்வரங்கள் தந்தருளும்
புவனேஸ்வரி தாயே புகழ்ந்துணையே பாடவந்தேன் (நவ)

அநுபல்லவி

அநுபல்லவி

அவனியிலே வந்துதித்த அபிராம வல்லியே
சிவனோடு காட்சி தரும் சிவகாம சுந்தரியே

சரணம்

கல்வியைத் தந்தருளும் கலைமகளாய் வடிவெடுத்தாய்
செல்வத்தைத் தந்தருளும் திருமகளாய் அவதரித்தாய்

வீரத்தைத் தந்தருளும் மலைமகளாய் உருவெடுத்தாய்
கருமாரி, மகமாயி, திரிசூலி வணங்குகின்றேன்

மங்கையர்க்கு மாங்கல்ய பாக்கியமும் தந்தருள்வாய்
குங்குமமும் பூவும் தந்து குலமகளாய் வாழவைப்பாய்

தங்கரதம் ஏறிவந்து தரிசனமும் தந்தருள்வாய்
ஆனந்த வல்லியே அனுதினமும் வணங்குகின்றேன்

அங்கயர்க்கண்ணியே மெய்மறந்து வணங்குகின்றேன்
அம்மா (மீனாக்ஷி தேவியே)  (நவராத்திரி)


பாக்கியதா லக்ஷ்மி...

பாக்கியதா லக்ஷ்மி பாரம்மா நம்மம்மா நிசௌ
பாக்கியதா லக்ஷ்மி பாரம்மா

1. கெஜ்ஜெய காலு கிலுகிலு யெனுத
ஹெஜ ஜெயம்யாலே ஹெஜ்ஜெய நிக்குத
ஜஜ்ஜன ஸாது பூஜய வேளகெ
மஜ்ஜிக யொயகிண பெண்ணேயந்த  (பா)

2. கனக வருஷ்டி கரவுத பாரே
மன காயனெய ஸித்தி ஸிதோரே
தினகர கோடி தேஜவு ஹொளெயுத
ஜனகராயன குமாரி பாரே  (பா)

3. ஸக்கரெ துப்பவ காலி ஹிஹசிஸி
ஸுக்கா வாரத பூஜய வேளே கே
அக்கரயுள்ள அளகிரிராயன
சொக்க புரந்தர விட்டலனபிரியப் (பா)


ஸ்ரீ லக்ஷ்மி உன்னை...

ஸ்ரீ லக்ஷ்மி உன்னை நம்பினேன் - சந்ததம்

அனுபல்லவி

கோலக்ஷ்மி குணலக்ஷ்மி கொடுக்கும் தனலக்ஷ்மி
வரலக்ஷ்மி வித்யாலக்ஷ்மி வாக்கில் வளரும் லக்ஷ்மி

1. ஸ்ரீ லக்ஷ்மி ஜயலக்ஷ்மி தேஜோர்மய லக்ஷ்மி
ஸ்ரீ ராமர் மனம் மகிழும் தேவி சீதா லக்ஷ்மி
அசுரனை வதைத்த ஸ்ரீ வாணி துர்கா லக்ஷ்மி
ஆதி தேவரும் தொழும் ஆனந்த தீப லக்ஷ்மி

2. சத்ய தர்மமாய் விளங்கும் ஸ்ரீ ஸ்ரீனிவாஸ லக்ஷ்மி
மாதவன் மனம் மகிழும் ஸ்ரீ தேவி மகாலக்ஷ்மி
தேவாதி தேவர் போற்றும் தாயே ஸ்ரீ கஜ லக்ஷ்மி
பூவுலகெல்லாம் ஆளும் தேவி ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி


ஜனனீ - ஜனனீ....

ஜனனீ - ஜனனீ ஜகம் நீ - அகம் நீ
ஜெகத் காரணீ நீ - பரிபூரணி நீ

குழு ஜனனீ ஜனனீ - ஜகம்நீ அகம் நீ
ஒரு மான் மடவும் சிறு பூந்திரையும்
ஜடை வார் குழலும் பிடை வாகனமும்

குழு ஜடைவார் குழலும் பிடை வாகனமும்
குழு கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இடபக்கத்திலே

குழு நின்ற நாயகியே இடபக்கத்திலே
ஜெகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ (ஜெகன்)

குழு ஜனனீ - ஜனனீ - ஜகம் நீ - அகம் நீ
ஜெகத் காரணீ நீ - பரிபூரணி நீ
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

குழு சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்டயோகங்களும் நவயாகங்களும்
தொழும் பூங்கழலே மலைமா மகளே

குழு தொழும் பூங்கழலே மலைமா மகளே
கலைமா மகள் நீ - கலைமா மகள் நீ

குழு ஜனனீ - ஜனனீ - ஜனனீ
சொர்ண ரோகையுடன் சுயமாகி வந்த
லிங்க ரூபணியே மூகாம்பிகையே

குழு லிங்கரூபணியே மூகாம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்

குழு பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடம் நீ ஆ...ஆ...ஆ சர்வ மோட்சமும் நீ..
குழு ஜனனீ... ஜனனீ.... ஜனனீ


மாணிக்க விணையே....

மாணிக்க வீணையே மரகதப் பதுமையே
வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே
மாதுளஞ் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலிலே அரியாசனத்திலே
அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சினிலே ஓம் எனும் எழுத்திலே
பிரணவம் தந்த காளி
யார் தருவார் இந்த அரியாசனம் - புவி
யரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் அம்மா  (யார்)

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
தேர்ந்த பொருள் எடுத்துச் சொல்லாதவன் தனக்கு (யார்)

கறுத்த நின் கூந்தலுக்கு கவிவேண்டுமா? உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா
சிங்கார கைக்கு அபிநயம் தான் வேண்டுமா


நீலக்கடல் வோரத்திலே...

நீலக்கடல் வோரத்தில்
நிலம்கொண்டு செல்லாமல்
காலமெல்லாம் - காவல் செய்யும்
கன்னித் தெய்வம் குமரியம்மா

கோரஸ் ஏலேலோ - ஏலேலோ -

வண்ணக் கடல் மூன்று உன்னை வலம் வந்து வணங்குதம்மா
கன்னித் தமிழ் மூன்று உன்னை காவியம் பாடுதம்மா (நீலக்)

கோரஸ் ஏலேலோ - ஏலேலோ

செங்கதிரும் சந்திரனும் சேர்ந்து வந்து விழிப்பதெல்லாம்
மங்கை உந்தன் முகத்திலம்மா மாணிக்கக் காட்சியம்மா

கோரஸ் ஏலேலோ - ஏலேலோ

தேசத்தின் எல்லையம்மா தேடி வந்த செல்வமம்மா
தேவியே கன்னியம்மா தென்குமரி தெய்வமம்மா

கோரஸ் ஏலேஏலோ - ஏலேலோ....


மாமதுரை நகரினிலே...

மாமதுரை நகரினிலே மலயதுவச மன்னனுக்கு
திருமகளாய் அவதரித்தாய் தாலேலோ - அவன்
மார்பினிலும் தோளினிலும் மங்காத அன்புடனும்
மாண்புடனே வளர்ந்து வந்தாய் தாலேலோ  (மா)

திருக்கைலாய மலையினிலே நல்ல நேரத்திலே
ஈசனது பார்வை பட்டாய் தாலேலோ
அந்த பார்வையினால் உன்னுடை குறையனைத்தும் நீங்கி
அந்த மன்னவனின் கரம் பிடித்தாய் தாலேலோ  (மா)

மூன்று கடல் சூழ்ந்திருக்கும் தென் குமரிக்கரையினிலே
முக்கண்ணனை மணம் புரிய காத்திருந்தாயே - ஒரு
மாயச் சேவல் கூவியதால் மன்னனவன் திரும்பிச் செல்ல
கன்னியென நின்று விட்டாய் தாலேலோ  (மா)

தக்ஷணுக்கு மகளாக தங்கமே நீ அவதரித்தாய்
பக்ஷமுடன் பரமனுக்கு பத்தினியானாய் - அந்த
நீசன் செய்த தவறினாலே ஈசனது சாபம் பெற்று
பார்வதியாய் அவதரித்தாய் தாலேலோ.  (மா)


வெள்ளைக் கமலத்திலே...

வெள்ளைக் கமலத்திலே - அவள்
வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசை தான் - நன்கு
கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள்
கள்ளைக் கடலமுதை நிகர்
கண்டதோர் பூந்தமிழ் கவி சொல்லவே
பிள்ளைப் பருவத்திலே - எனைப்
பேணவந்தாளருள் பூண வந்தாள்
சொற்பரு நயமறிவார் - இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்
விற்பனத் தமிழ்ப் புலவோர் அந்த
மேலவர் நாவெனும் மலர்ப் பதத்தாள்
வாணியைச் சரண் புகுந்தேன் - அருள்
வாக்களிப்பாள் எனத் திடமிகுந்தேன்
பேணிய பெருந்தவத்தாள் நிலம்
பெயரளவும் பெயர் பெயரா தாள்.


துர்க்கையம்மா...

துர்க்கையம்மா எங்கள் துர்க்கையம்மா
துன்பங்கள் நீக்கிடும் துர்க்கையம்மா
தாயென அவளை துதிப்பவர்க்கு
தாயாய் இருந்து அரவணைப்பாள்  (துர்)

தஞ்சம் என்று அபயம் புகுந்தால்
அஞ்சேல் என்று காப்பவளாம்
சத்தியம் காக்கும் உத்தமியாம் எங்கள்
சத்திய நாயகி துர்க்கையம்மா  (துர்)

பால் அபிஷேகம் செய்தாலே - நாம்
பல்லாண்டு வாழ அருள் புரிவாள்
தயிர் அபிஷேகம் செய்த பேருக்கு
சந்தான பாக்கியம் தந்திடுவாள் (துர்)

தேனபிஷேகம் ஏற்று கொண்டு
தேன் குரல் இனிமை வழங்கிடுவாள்
பஞ்சாமிர்த அபிஷேகத்தால்
பல வித செல்வங்கள் பொழிந்திடுவாள் (துர்)

அன்னம் எல்லாம் ஒன்றாய் திரண்டு
அன்னையை அணைப்பது ஆனந்தம்
எலுமிச்சை கனியினால் மாலைகள் சூடிய
ஏற்றமிகும் தோற்றம் ஆனந்தம்

ஆனந்தம் பரமானந்தம்
அன்னையின் தரிசனம் ஆனந்தம்.


அன்னையே வருக...
(மெட்டு : பிருந்தாவனமும்)

அன்னையே வருக அமுதே வருக
பொன்னே வருக பொலிவாய் வருக
அம்பிகையே உன் அழகுடன் வருக
நம்பின பேருக்கு நாயகி வருக

எங்கும் நிறைந்தொளிர் இறைவீ வருக
பொங்கும் அருள்மொழி புங்கவி வருக
சங்கரி வருக சாம்பவி வருக
மங்களமே தர மாண்பாய் வருக

திவ்விய மாயவன் தேவீ வருக
செவ்விய ஒளிதர சீருடன் வருக
குசுமாம்கையாம் குணமலை வருக
வசுமுதலோர் தொழும் வாசவி வருக

எங்கள் பராபரி ஈஸ்வரி வருக
தங்கிடும் இன்பம் தருவோய் வருக
கலைமகளே நீ சடுதியில் வருக
மலைமகளே நீ மகிழ்வுடன் வருக

நிலைமகளே நீ நேர்த்தியாய் வருக
அலர்மகளே நீ அன்புடன் வருக
எங்குல மணியே எழிலுடன் வருக
எண்ணில் நலம் தரும் இன்பமே வருக  (அன்)


பொங்கிடும் அழகி.... (மங்கள ரூபிணி மெட்டு)

பொங்கிடும் அழகி புன்னகை எழிலி
பொற்பினில் வளர் மகளே
தங்கிடும் ஒளியே சங்கரன் மனையே
சபையினில் தலைமகளே

எங்களின் தாயே எழில் மிகு மாயே
எருதிவர் மலைமகளே
தங்கமே அருளே தவமிகு கனியே
தலைமணி சௌந்தர்ய நாயகியே

அயிசுக காரிணி சண்முக பாலினி
சாந்தி விவாசினி சாந்தகரே
புரகர பார்கவ தேவிமீனாக்ஷி
பங்கஜ வாசினி பரமாந்தமுதே

பசுபதி பாலினி பவ மோக்ஷனி
பக்த விமோசனி ஈஸ்வரியே
அனைத்து மொழியின் ஆதியும் நீயே
அறிவும் ஞானமும் அருளிடுவாயே

என்னை என்றும் எழில் பெற செய்வோய்
எனதுயிர் நீயம்மா
அம்பிகை தாயே ஆட்கொள்ளும் தேவி
ஆசிகள் அளிப்பாயே

உருவங்கள் பல நீ ஏற்றிருந்தாலும்
உண்மையில் நீ ஒன்றே
துதித்திடும் எந்தன் துன்பத்தை தீர்ப்பாய்
துர்க்காம்பிகை அம்மா


நாளெல்லாம் நல்ல...

நாளெல்லாம் நல்ல நாள்
துர்க்கையின் திருப்புகழ் பாடும் நாள்
நாவினிக்க மனமினிக்க
நாயகி உந்தனை பாடும் நாள்

மனதில் உன்னை நினைத்துத் தொழும்
வழியெல்லாம் அறிவிப்பாய்
வஞ்சக நெஞ்செண்ணத்தை
வேருடனே களைத்திடுவாய்

வினைப்பகையை வெல்லும் நெறி
தெளிவாக்கி தந்திடுவாய்
வேதம் முதலான ஆயகலை
ஓதிடவே அருள் புரிவாய்

உனக்கினிய அடியவரின்
உறவு தன்னை தந்திடுவாய்
உன்கருணைப் பெறுவதற்கோர்
உறுதியெல்லாம் தந்திடுவாய்

வனக்குறவர் உறவு கொண்ட
மலைமகளே துர்க்கையம்மா
மேன்மையெல்லாம் பெற்றிடவே
துர்க்கையம்மா அருளிடுவாய்  (நா)


தாயே அருள்....
(கண்ணா கருமை நிறக்கண்ணா மெட்டு)

தாயே அருள் துர்க்கையான தாயே
உன்னை பாடாத நாளில்லையே
உண்மை வடிவம் நீயே தீப ஒளியும் நீயே
எம்மை கண்போல காப்பாய் நீயே  (தாயே)

அன்பார்ந்த முகம் காட்டி அமர்ந்தாயம்மா
அருளும் பொருளும் தருவாயம்மா
திரிபுவனம் ஆளுகின்ற தேவியம்மா
திவ்ய ஸ்வரூபமும் நீயே அம்மா  (தாயே)

பாம்பாக உருவெடுத்து வந்தாயம்மா - எனக்கு
பக்க துணையாய் இருந்து காப்பாயம்மா
திருவேற்காட்டில் கருமாரியம்மா
திருவருள் புரியும் தேவியம்மா


உடமை சீர் கொடுத்த கும்மி
(நொண்டிச் சிந்து மெட்டு)

1. கா கா ரி க ரி ஸ ஸா - ஸா ஸா ஸஸ -
சா யக் கு ருச் சி க ளாம் - மீ னா க்ஷிக்கு -
ஸரி கா ரி கா ரி ஸ ஸரி ஸரி
ச ய னக்க மிச் சு க ளா ... ம்
சந்திர குலத்தரசி - மீனாக்ஷிக்கு
சாந்திக்குச் சீரெடுத்தாள்....

2. பனாரிஸ் பட்டுக்களாம் - மீனாக்ஷிக்கு
பச்சை சுருட்டுக்களாம்
பாண்டிய ரிடபாரி - மீனாக்ஷிக்கு
வேண்டிய சீர் கொடுத்தாள் -

3. பொன்னால் ஸரிகைகளாம் - மீனாக்ஷிக்கு
புதுமை ரவிக்கைகளாம் -
புண்ணிய வதிமகிழ்ந்து - மீனாக்ஷிக்கு
பூரித்துமே கொடுத்தாள் -

4. ச்ருங்கார பீலிகளாம் - மீனாக்ஷிக்கு
தங்கநாற் காலிகளாம் -
சீமையெல்லாம் ஜயித்த - மீனாக்ஷிக்கு
ஸ்ரீதனமாய் கொடுத்தாள் -

5. வெள்ளி பெட்டிகளாம் - மீனாக்ஷிக்கு
விசித்ர மெட்டிகளாம் -
விவேககுண ஸம்பன்னி - மீனாக்ஷிக்கு
வெகுவிதமாய் கொடுத்தாள் -

6. முத்துக் கொண்டைகளாம் - மீனாக்ஷிக்கு
ரத்ந தண்டைகளாம் -
மோஹநா அவதார - மீனாக்ஷிக்கு
முச்சீர் வைத்துக் கொடுத்தாள் -

7. தங்கத் தோடாவாம் - மீனாக்ஷிக்கு
திங்கப் பேடாவாம் -
தாயார் மன - மகிழ்ந்து - மீனாக்ஷிக்கு
தானே ரொம்பக் கொடுத்தாள் -

8. காப்புக் கொலுஸுகளாம் - மீனாக்ஷிக்கு
செகப்பு தினுஸு களாம் -
ச்ருங்காரமாகவே - மீனாக்ஷிக்கு
செய்துரொம்பக் கொடுத்தாள் -

9. அற்புத வங்கிகளாம் - மீனாக்ஷிக்கு
ஆயிரம் பாங்கிகளாம் -
அன்னை மனம் மகிழ்ந்து - மீனாக்ஷிக்கு
உன்னித மாய்க் கொடுத்தாள் -

10. காரை கண்டிகளாம் - மீனாக்ஷிக்கு
ஏறப்பொன் வண்டிகளாம் -
காஞ்சன மாலையப்போ - மீனாக்ஷிக்கு
கணிச மாகக் கொடுத்தாள் -

11. நக்ஷத்ர மாலைகளாம் - மீனாக்ஷிக்கு
நவரத்ந ஓலைகளாம் -
நாகரீ - கமாக - மீனாக்ஷிக்கு
நாலாவிதம் கொடுத்தாள் -

12. வைர முருகுகளாம் - மீனாக்ஷிக்கு
வாளித் திருகுகளாம் -
வ்யாபாரியிடத்தில் - மீனாக்ஷிக்கு
வாங்கிரொம் பக்கொடுத்தாள் -

13. ஸூரத்து முத்துக்களாம் - மீனாக்ஷிக்கு
சுழித்த நத்துக்களாம் -
சூரஸேனன் ஸுதநி - மீனாக்ஷிக்கு
ஸொந்தமா - கக் கொடுத்தாள் -

14. அத்தர்பூ செண்டுகளாம் - மீனாக்ஷிக்கு
மெத்தைகள் திண்டுகளாம் -
சுற்றிகந் தம் வீச - மீனாக்ஷிக்கு
நித்யநித்யம் கொடுத்தாள் -

15. மாணிக்க புல்லாக்காம் - மீனாக்ஷிக்கு
ஆனிப்பொன் பல்லக்காம் -
மீனாக்ஷி ப்ரியாள் மகிழ - மீனாக்ஷிக்கு
மேலின்னமும் கொடுத்தாள்.


கும்மியடிப் பெண்கள் கும்மியடி...

கும்மியடிப் பெண்கள் கும்மியடி - இரு
கைவளை குலுங்கவே கும்மியடி

நம்மை யாளும் மாரியம்மனை
நாடி கும்மி கொட்டுங்கடி - பதம்
பாடி கும்மி அடியுங்கடி  கும்மியடி

ஒன்றாகி நூறாகி ஒவ்வொன்றும் தானாகி
ஊர்காக்கும் எங்கள் மாரி
தொண்டர்க்கு தாயாகி தூயோர்க்கு வாழ்வாகும்
உன்பாதம் போற்றி போற்றி  கும்மியடி

முன்னுக்கும் பின்னுக்கும் முதலாகி முடிவாகி
முகம்காட்டும் அன்பு மாரி
அன்புக்கும் தாய்மைக்கும் அடையாளம் நானென்னும்
அருளாட்சி போற்றி போற்றி  கும்மியடி

நெடுந்தில்லை நகரத்தின் மாகாளி நீயாகி
நடமிட்ட அழகு மாரி
நிலையான கலைவாழ இயலோடு இசை வாழ
நின்பாதம் போற்றி போற்றி  கும்மியடி

அறிந்தார்க்கு உறவாகி அறியார்க்கும் துணையாகும்
திருமயத்தின் முத்துமாரி
நெறிவாழ அறம்வாழ நிலம்வாழ குலம்வாழ
அருள் மேன்மை போற்றி போற்றி கும்மியடி

ஓம்சக்தியே ஓங்காரியே
மாகாளியே திரிசூலியே  கும்மியடி

அம்பைமா நகர்தன்னில் உச்சிமா காளி என
அமைந்தாளும் ஆற்றல் மாரி
இன்பங்கள் எல்லாமும் எல்லோர்க்கும் தரவந்த
எழிற்பாதம் போற்றி போற்றி  கும்மியடி

செங்கையாம் தலம் தன்னில் அங்காளம் மன்என்று
சிறப்போடு விளங்கும் மாரி
மங்கையர்தம் நிலவாழ்வில் மங்களங்கள் தரவந்த
மகமாயி போற்றி போற்றி கும்மியடி

அருள்சார்ந்த பரமக்குடி முத்தாலம் மன்என்று
அழகாக தோன்றும் மாரி
கருவான நாள்தொட்டு உயிர்வாழ அருள்கின்ற
கவின் பாதம் போற்றி போற்றி கும்மியடி

வில்லிவாக் கம்தன்னில் தாந்தோணித் தாயாக
வீறுபெறத் துலங்கும் மாரி
நல்லார்கள் நெஞ்சத்தில் எந்நாளும் வாழ்கின்ற
பெருந்தன்மை போற்றி போற்றி கும்மியடி
ஓம்சக்தியே ஓங்காரியே
மாகாளியே திரிசூலியே  கும்மியடி

வக்கரையில் காளிஎன உருவாகி அன்பர்பிணி
வந்தவுடன் தீர்க்கும் மாரி
முக்காலும் நன்மைதர எக்காலும் காத்திருக்கும்
நற்பாதம் போற்றி போற்றி கும்மியடி

தலையான சென்னையில் காளிகாம் பாள்என்று
பெயர்கொண்ட எல்லை மாரி
உலகோடு உயிர்யாவும் படைத்தேபின் காக்கின்ற
பெருந்தேவி போற்றி போற்றி கும்மியடி

புவனகிரித் தலம்தன்னில் பூங்கால னத்தம்மன்
வடிவாகி காக்கும் மாரி
உவமைக்கு வேறில்லை அருளுக்கு உன் நிகரில்லை
உயர்பாதம் போற்றி போற்றி கும்மியடி

திண்ணனூர் மண்ணில்பி டாரிஎன் றேவந்து
திருக்காட்சி அருளும் மாரி
மண்ணுருக பொன்னுருக மாற்றார்க்கும் நெஞ்சுருக்கம்
அன்பு மனம் போற்றி போற்றி
ஓம்சக்தியே ஓங்காரியே
மாகாளியே திரிசூலியே  கும்மியடி

திருமேவும் உறையூரின் வெஃகாளி வடிவாகி
வளம்கோடி பொழியும் மாரி
இருநான்கு திசையாள தடைபோடும் தாயேநின்
இணைப்பாதம் போற்றி போற்றி கும்மியடி

பாகோடு எனும் ஊரில் ஸ்ரீ தேவி வடிவாகிப்
பரிந்தெம்மைப் பார்க்கும் மாரி
பகையாகி நின்றார்க்கும் மன்னிப்பைத் தருகின்ற
பண்பாடு போற்றி போற்றி

ஈரோட்டில் நீபெரிய மாரிஎன எமைஆண்டு
இணைந்தோங்கும் சின்ன மாரி
ஆறோடும் நீராக ஊர்செழிக்க நடக்கின்ற
அருட்பாதம் போற்றி போற்றி கும்மியடி

ஆம்பூரின் திருக்கோவில் காளிகாம் பாள்என்று
அமைந்திட்ட அமுத மாரி
அலைவாணி மலைவாணி கலைவாணி எனமாறும்
வடிவங்கள் போற்றி போற்றி
ஓம்சக்தியே ஓங்காரியே
மாகாளியே திரிசூலியே  கும்மியடி

வினை தீர்க்கும் பதியாகும் பலஊருக்கு நடுவாகும்
விழுப்புரத்தின் முத்து மாரி
குணமாகும் ஓரெட்டும் நெறிகாண உலவிவரும்
மணிப்பாதம் போற்றி போற்றி கும்மியடி

பட்டணத்து பட்டாளம் எல்லைஅம் மன்என்று
எட்டுத்திசை ஆளும் மாரி
வெட்டுகின்ற இடி, மின்னல், புயல், மலையும் தென்றலும்உன்
விளைவாகும் போற்றி போற்றி கும்மியடி

கொல்லங்கோட் டைதனில் மாகாளி நீயாகி
குலம் காக்க கனிந்த மாரி
அல்லல்கள் தீர்த்தாண்டு நன்மைக்கு துணை நிற்கும்
அணிப்பாதம் போற்றி போற்றி கும்மியடி

பல்லடத்துப் பொங்காளி அம்மன்என அன்பர்களின்
காணிக்கை ஏற்கும் மாரி
பசுமைக்கு நிலம்ஏங்க பருவத்தின் ஊற்றாகும்
அருள் நெஞ்சம் போற்றி போற்றி
ஓம்சக்தியே ஓங்காரியே
மாகாளியே திரிசூலியே  கும்மியடி

ஆமாத்தூர் நகர்வட்டப் பாறையம் மன்என்று
அணிகொண்ட அன்னை மாரி
அறத்தோடு பொருள், இன்பம், வீடுதனைப் பரிசாக்கும்
புகழ்ப்பாதம் போற்றி போற்றி கும்மியடி

மணச்ச நல் லூர்தன்னில் அங்காளம் மன்என்று
மலர்கின்ற காவல் மாரி
அனைத்துலகும் நெறி நிற்க அனைத்துயிரும் தாம்செழிக்க
அருள்வெள்ளம் போற்றி போற்றி கும்மியடி

கொங்குமணித் திருநாட்டில் கோவைநகர் ஆலயத்தில்
கொலுவிருக்கும் தண்டு மாரி
சங்கெடுத்த மாயவனின் தங்கைஎன விளங்கும்நின்
மலர்ப்பாதம் போற்றி போற்றி கும்மியடி

அழகு மேல் மருவத்தூர் ஆதிப ராசக்தி
வடிவான தெய்வ மாரி
அணிமணிகள் மின்னிவர மணிமுடியும் நின்னொளிரும்
திருக்காட்சி போற்றி போற்றி
ஓம்சக்தியே ஓங்காரியே
மாகாளியே திரிசூலியே  கும்மியடி

அவனியாபுரம் தன்னில் காளிஎன உருக்காட்டி
அரசாட்சி நடத்தும் மாரி
ஆன்மீகமும் நல்லறமும் தான்தழைக்க நிழலாகும்
சீர்ப்பாதம் போற்றி போற்றி கும்மியடி

காஞ்சிபுர முதூரில் கடுக்காளி எனவந்து
கலைகண்ட நல்ல மாரி
கண்காக்கும் இமைபோல் மண்காக்கும் சிலையான
திருமேனி போற்றி போற்றி கும்மியடி

மலைசூழும் சேலத்தில் நடுவாக இடம் கொண்ட
மலைததேவி கோட்டை மாரி
படியேறி வந்தார்க்கு கடலாக வளம் சேர்க்கும்
பொற்பாதம் போற்றி போற்றி கும்மியடி

நஞ்சையுடன் புஞ்சைநிலம் நன்றாக விளைகின்ற
நாடாகும் தஞ்சை மாரி
அஞ்சேல்என் றேஎம்மைக் கண்பார்க்க மண்வந்த
திருத்தோற்றம் போற்றி போற்றி
ஓம்சக்தியே ஓங்காரியே
மாகாளியே திரிசூலியே  கும்மியடி

வேலூரில் ஸ்ரீ கனக துர்க்கைஎனப் பகைமுடிக்க
வீடுபெறும் வீர மாரி
பாலாற்று நீராக ஊற்றாக உயிர்புரக்கும்
திருப்பாதம் போற்றி போற்றி கும்மியடி

நாள்தோறும் நல்லாரின் துயர்நீக்கும் கடன்ஏற்று
காப்பாற்றும் வெற்றி மாரி
வாளோடு படைக்கலங்கள் தோளேந்தி வருகின்ற
வல்லமையும் போற்றி போற்றி கும்மியடி

தணந்தார்க்கும் பணிந்தார்க்கும் துணையாகி அருள்செய்யத்
தலம்கண்ட தேவி மாரி
தவறாமல் எளியோர்க்கு உறவாகி வாழ்வுதரும்
தாய்ப்பாதம் போற்றி போற்றி கும்மியடி

ஓம்கார ஒலியாக உயிருக்குள் மூச்சாக
உறைகின்ற சக்தி மாரி
நீர், நெருப்பு, காற்று வெளி, நிலம் யாவும் நீயாகும்
ஓம்சக்தி போற்றி போற்றி
ஓம்சக்தியே ஓங்காரியே
மாகாளியே திரிசூலியே  கும்மியடி


பவனி வருகிறாள் முத்துமாரி...

பவனி வருகிறாள் முத்துமாரி பவனி வருகிறாள்
அகிலமெல்லாம் நகர் சுற்றி பவனி வருகிறாள்
அழகாக நம் ஊர் மக்கள் மனதில் பவனிவருகிறாள்
அவனி புகழ் சிங்கம் மீது பவனி வருகிறாள்

அகில லோக மெல்லாம் பவனி வருகிறாள்
பாண்டி மன்னன் மகள் மீனாக்ஷி பவனி வருகிறாள்
பரவசமாய் கொலுவிருந்து பவனி வருகிறாள்
காஞ்சி காமாட்சி பவனி வருகிறாள்
களங்கமற்ற மக்களோடு பவனி வருகிறாள்

காசி விசாலாட்சி பவனி வருகிறாள்
கைலை மலையனோடு பவனி வருகிறாள்
சண்டிகையாய் சூலிகையாய் பவனி வருகிறாள்
சங்கரனின் நாயகியாய் பவனி வருகிறாள்

கருமாரி காமாட்சி பவனி வருகிறாள்
கடவூரில் அபிராமி பவனி வருகிறாள்
கண்ணாபுரம் மாரியம்மா பவனி வருகிறாள்
கங்கையென்னும் தேவதையாய் பவனி வருகிறாள்

வடக்கிருக்கும் மாரியம்மா பவனி வருகிறாள்
வங்கத்துக் காளியம்மா பவனி வருகிறாள்
தஞ்சை முத்துமாரியம்மா பவனி வருகிறாள்
தர்மத்தைக் காப்பதற்கு பவனி வருகிறாள்


மஞ்சள் குங்குமத்தின்....

மஞ்சள் குங்குமத்தின் மலைமகளே
எங்கள் குறைதீர்த்து நலம் காக்க வாமகளே
வான் பாடும் குயிலினக் கூட்டங்களே - எங்கள்
மதுசூதனன் தங்கை புகழ் பாடுங்களே

கார்மேகக் கூட்டங்கொண்ட வானங்களே - எங்கள்
பராசக்தி மெய்யழகைப் பாடுங்களே
தெவிட்டாத தேன் சொரியும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீதேவி அன்னை புகழ் பாடுங்களே

மலையரசன் மடியில் தவிழ்கின்றவள் - ஒரு
குடையின் கீழ் மானிலத்தை ஆள்கின்றவள்
காசி நகரத்தில் உறைகின்றவள் - அந்தக்
காஞ்சியில் தன் மகிமை காட்டுவித்தவள்

பாஞ்சாலியாக வந்து பாரில் உதித்தவள் - அன்று
பாண்டவர் போர் தொடுக்க கூந்தல் விரித்தாள்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பத்தினியானாள் - நாம்
படிப்பதற்கு பாகவத பாடம் கொடுத்தாள்

சூரனை சம்காரித்து குறை தீர்த்தவள்
சுப்ரமணியனுக்கு வேல் கொடுத்தவள்
ஆதிசிவன் பாதியாய் ஆட்டுவிப்பவள்
அன்னை பராசக்தியைப் பாடுங்களே

மீனாக்ஷியாக வந்து அவதரித்தாள் - மீன்
கொடியோடு வடமதுரை ஆண்டு வந்தவள்
சொக்கர் மீனாக்ஷியாக அருள்கின்றவள் - எங்கள்
சொந்தமுள்ள அபிராமியைப் பாடுங்களே

நினைப்பவர் உள்ளங்களில் நிற்கின்றவள் - நீதி
தர்மத்தைக் கற்று தருகின்றவள்
ஆனைமுகன் அன்னையாக ஆட்டுவிப்பவள் - அந்த
ஆதிபராசக்தி புகழ் பாடுங்களே

குத்து விளக்கில் ஒளிர்கின்றவள்
குலமகள் குறைகளைத் தீர்க்கின்றவள்
கோமகளாக வந்து அருள்கின்றவள் - எங்கள்
கோமதியாள் புகழைப் பாடுங்களே

மாந்தர் குறை தீர்க்க மண்ணில் வந்தவள் - அந்தக்
கயிலை மலையானின் பாரியானவள்
தென்குமரியாக வந்துதித்தவள் - எங்கள்
திருப்பதியான் தங்கை புகழ் பாடுங்களே.


அழகியே மயிலே அபிராமி...

அழகியே மயிலே அபிராமி
அஞ்சுக மொழியே அபிராமி

1. ஆதி கடவூர் அபிராமி
ஆனந்த வடிவே அபிராமி
இன்னமுதம் நீ அபிராமி
ஈசனின் கொடியே அபிராமி
உன் பதம் சரணம் அபிராமி
ஊழ்வினை அழிப்பாய் அபிராமி

2. என்மனம் அறிவாய் அபிராமி
ஏன் பயம் என்பாய் அபிராமி
ஐந்தெழுத்தாளே அபிராமி
ஒன்பது மணியே அபிராமி
ஓங்கார பெருமாளே அபிராமி
ஒளஷதம் நீயே அபிராமி
அம்புலி காட்டியே அபிராமி


கருணை உருவமே....

1. கருணை உருவமே கலைகளின் வடிவமே
சரணம் உன்பாதம் தாயே
காளியே நீலியே பார்வதி தேவியே
கண்மலர் நீலியே பார்வதி தேவியே

2. சரவணன் அன்னையே சுந்தரர் துணைவி
காஞ்சி தரும் காமாட்சியே
சௌந்தர்ய வல்லியே சாமுண்டி ஈஸ்வரி
தமிழ் மதுரை மீனாட்சியே
ஏழுமய வாணியின் திருவடியில் வீழ்ந்ததும்
இருளெல்லாம் பறந்தோடுதே
என்றென்றும் நெஞ்சினிலே நின்றாடும்
மயிலாக இருக்கின்ற திரிசூலியே
ஒரு முறை அம்மா என்று உரைத்தாலும் போதுமே
ஓடி வந்து அருள்வாயே, கருமாரி பகவதியே
சமயபுரம், மகமாயி கற்பகாம்பிகை சக்தியே (கரு)


மூன்று குதிரையாம்....

மூன்று குதிரையாம் முத்தத்திலே - அங்கு
முனியப்ப சாமியாம் தேருமேலே
தேருமேலே வார முனியப்பசாமிக்கு
தேச மெங்கும் கும்மி பாடுங்கம்மா

நாலு குதிரையாம் முத்தத்திலே - அங்கு
நாகப்ப சாமியாம் தேரு மேலே
தேரு மேலே வரும் நாகப்பாசாமிக்கு
தேச மெங்கும் கும்மி பாடுங்கம்மா

ஐந்து குதிரையாம் முத்தத்திலே - அங்கு
ஐயப்ப சாமியாம் தேருமேலே
தேருமேலே வார ஐயப்ப சாமிக்கு
தேச மெங்கும் கும்மி பாடுங்கம்மா

ஆறு குதிரையாம் முத்தத்திலே - அங்கு
ஆறு முகசாமியாம் தேருமேலே
தேருமேலே வார ஏழுமலைசாமிக்கு
தேச மெங்கும் கும்மி பாடுங்கம்மா

எட்டுக் குதிரையாம் முத்தத்திலே - அங்கு
சக்தி தேவியாம் தேருமேலே
தேருமேலே வார சக்தி தேவிக்கு
தேச மெங்கும் கும்மி பாடுங்கம்மா

ஒன்பது குதிரையாம் முத்தத்திலே - அங்கு
மாரி தேவியாம் தேருமேலே
தேரு மேலே வார மாரிதேவிக்கு
தேச மெங்கும் கும்மி பாடுங்கம்மா

பத்துக் குதிரையாம் முத்தத்திலே - அங்கு
பராசக்தி யம்மா தேருமேலே
தேருமேலே வார பராசக்திக்கு
தேச மெங்கும் கும்மி பாடுங்கம்மா

பாவை படர்ந்ததைப் பாருங்கம்மா
பாவை பத்திப் படர்ந்ததைப் பாருங்கம்மா
பாவைப் பழம்போல முத்துமாரிக்கு
பல்லு வரிசையைப் பாருங்கம்மா

கோவை படர்ந்ததைப் பாருங்கம்மா
கோவைக் கொடி படர்ந்ததைப் பாருங்கம்மா
கோவைப் பழம்போல முத்துமாரிக்கு
கொண்டை வரிசையை பாருங்கம்மா

சுரை படர்ந்ததைப் பாருங்கம்மா
சுரை சுற்றிப் படர்ந்ததைப் பாருங்கம்மா
சுரைக்கும் கீழே முத்துமாரிக்கு
சூது விளையாட்டைப் பாருங்கம்மா

கத்தரி பூத்ததைப் பாருங்கம்மா
கத்தரி அல்லது பூத்ததைப் பாருங்கம்மா
கத்தரி கீழே முத்துமாரிக்கு
காசு விளையாட்டைப் பாருங்கம்மா

முல்லை பூத்ததைப் பாருங்கம்மா
முல்லை முகந்து பூத்ததைப் பாருங்கம்மா
முல்லைக்கும் கீழே முத்துமாரிக்கு
முத்து விளையாட்டைப் பாருங்கம்மா

ஆனை வாரதைப் பாருங்கம்மா
ஆனை அசைந்து வாரதைப் பாருங்கம்மா
ஆனை மேலே வார முத்துமாரிக்கு
அம்பு விளையாட்டைப் பாருங்கம்மா

குதிரை வாரதைப் பாருங்கம்மா
குதிரை குலுங்கி வாரதைப் பாருங்கம்மா
குதிரைமேலே வார முத்துமாரிக்கு
கொலுசு மின்னலைப் பாருங்கம்மா

ஒட்டகம் வாரதைப் பாருங்கம்மா
ஒட்டகம் ஒசந்து வாரதைப் பாருங்கம்மா
ஒட்டகம் மேலேவார முத்துமாரிக்கு
ஒற்றுமையாய் கும்மி பாடுங்கம்மா

சின்ன கிண்ணத்திலே தீர்த்தமாடி
வண்டி சிங்காரத் தோப்பிலே வந்திறங்கி
தங்கி இருக்கிற முத்துமாரிக்கு
தங்கக் குஞ்சம்போட்டு வீசுங்கம்மா

வெள்ளி மலையிலே வேட்டையாடி - அந்த
வேங்கைப் புலிகளை சங்கரித்து
வேர்த்து வாராளாம் நம்ம மாரிக்கு
வெள்ளிக் குஞ்சம் போட்டு வீசுங்கம்மா

கையிலே மலையிலே வேட்டையாடி அந்த
கரடி புலிகளை சங்கரித்து
களைத்து வாராளாம் நம்ம மாரிக்கு
கனகக் குஞ்சம் போட்டு வீசுங்கம்மா

அழகர் மலையிலே வேட்டையாடி - அந்த
ஆங்காரப் புலியை சங்கரித்து
அசந்து வாராளாம் நம்ம மாரிக்கு
அழகுக் குஞ்சம் போட்டு வீசுங்கம்மா

மஞ்சி மலையிலே வேட்டையாடி - அந்த
மதயானைக் கூட்டத்தை சங்கரித்து
மயங்கி வாராளாம் நம்ம மாரிக்கு
மயிலுக் குஞ்சம் போட்டு வீசுங்கம்மா

நாக மலையிலே வேட்டையாடி
நந்தவனத்திலே வந்திறங்கி
வேர்த்து வந்த முத்துமாரிக்கு
வெள்ளிக் குஞ்சம்போட்டு வீசுங்கம்மா

தங்க முக்காலி மேலிருந்து
தண்ணீர் விட்டு தலைமுழுகையிலே
தண்ணீர் பொறுக்காத முத்துமாரிக்கு
தங்கக் குஞ்சம்போட்டு வீசுங்கம்மா

வெள்ளி முக்காலி மேலிருந்து
வென்னீர் வைத்துத் தலை முழுகையிலே
வென்னீர் பொறுக்காத முத்துமாரிக்கு
வெள்ளிக் குஞ்சம்போட்டு வீசுங்கம்மா

வங்கிக் கொடிபோல முத்துமாரிக்கு
வைரக் கல்லாலே மூக்குத்தியால்
கொண்டை பெருத்தவள் முத்துமாரிக்கு
கொண்டைத் திருகுகள் பச்சைக்கல்லாம்

பார்த்தாலும் சிறுநந்தவனத்தில் தாயே
பூத்தாலும் கூடை மல்லிகைப்பூ
கொண்டை பெருத்தவள் முத்துமாரிக்கு
கொண்டு வந்தேன் கூடை மல்லிகப்பூ

மஞ்ச சேலையாம் மாராப்பாம் தாயின்
மடி நிறைந்ததாம் மல்லிகைப்பூ
கொண்டை பெருத்தவள் முத்துமாரிக்கு
கொண்டு வந்தேன் கூடை மல்லிகப்பூ

பட்ட மரத்திலே தொட்டில் கட்டி
சிறு பாலகனைப் போட்டு சீராட்டி
பட்ட மரமெல்லாம் பால் மரமாகவே
பத்தினியானவள் முத்துமாரி

பாதசர மம்மா பாதசரம்
பத்தினி யாளுட பாதசரம்
இருட்டு நாட்டுக்கு இட்டு நடந்தாலும்
எங்கும் துலங்குமாம் பாதசரம்

தேங்காய் உடைக்கவே தண்ணீர் தெளிக்கவே
தெப்பம் இரண்டு தத்தளிக்கவே
மதுரை மீனாக்ஷி நாயக்கர் தங்கச்சி
தேரோடு வருவாளாம் தெப்பம் பார்க்க

பூக்காத மரம் பூத்துச் சொரியுமாம்
முத்துமாரி இருக்கும் சன்னதியில்
பெருமையுள்ள முத்துமாரிக்கு
பூவாலே திரு மண்டபமாம்

நந்த வனத்திலே நாலு கிளி
நாகரிகமான பச்சைக் கிளி
கொண்டை பெருத்தவ முத்துமாரிக்கு
கோதி முடிக்குமாம் ரெண்டு கிளி

கானமயில் குயில் ஆடுதடி
கிளி காட்டுப்புறா விளையாடுதடி
மன்மத யானைகள் கூடுதடி நமது
மங்களமான ஊரின் புகழ் மேவுதடி

சர்க்கரை தேங்காய் பழம் வாங்கி - மாரி
சன்னதி முன்பாக தான் படைத்து
முக்குருணி பிள்ளையாரை வேண்டி
முழங்கி கும்மிகள் பாடுங்கம்மா

தங்க ரதத்தில் மயிலாட இங்கு
சந்தன வாடைகள் தான் போட
வலது காலை முன்னே வைத்து
வணங்கி கும்மிகள் பாடுங்கம்மா

மேகங்கள் கூடி மழை பொழியும் - இந்த
மேதினி யெங்கும் செழித்தோங்கும்
நாகரீகமான பெண்டுக ளெல்லோரும்
நயந்து கும்மிகள் பாடுங்கம்மா


சீலசுந்தர யோகத்திலே....

சீலசுந்தர யோகத்திலே மிக
சீர்தமிழ் நாதமே ஓங்குதடி - மூலக் குண்டலியின்
வேகக்கனல் உந்தன்மூக்குத்தி கற்களில் ஜொலிக்குதடி

நெற்றியில் விபூதி பூச்சழகும் பல நிற
ஒளியுள்ள பொட்டழகும் வெற்றி சேர் குலத்தின்
மினுமினுப்பும் மிக வியப்புடன் புகழவே தோன்றுதடி

முத்துடன் மோகன ருத்ராட்சம் மன
மோகன தாடங்க சங்கிலியும் உத்தம பவழ
தாலியுமே - பல ஒய்யார சரங்களாய் காணுதடி

மாமதி முகமெல்லாம் ஜிலுஜிலுக்க திரு
மாட்சிசேர் மாட்டலும் தோடுகளும் ஓம்
வடிவினிலே அட்டிகையும் ஒளி ஓங்கிடும்
ஒட்டியாண சிலையடி

ரத்தின கிரீடங்கள் மின்னுதடி - சுப
ரம்யம் ததும்பியே பொங்குதடி
சித்திர மயமான செவிகளிலே இரு
செவ்விய குண்டலம் ஆடுதடி

பட்டாடைக் கட்டிய இடுப்பழகும் - அதில்
பதிந்து கொஞ்சிடும் மணியழகும் - கட்டான
தேகத்தின் காந்தியையும் காணக் கண்களும்
கோடியே வேணுமடி

மஞ்சள் குங்குமம் சந்தனத்தேன் - மன
மகிமை சேர் வளையமும் கங்கணமும்
தஞ்சமென்றோரைக் காக்குமடி - சுபம்
தன்னருள் அகிலாண்ட தேவியடி

திருவானைக் கோயிலில் ஜோதியடி - எட்டுத்
திக்கெல்லாம் சுடர் வீசும் தீநீயடி
மருவிடும் சிவஜம்பு நாயகியே - இந்த
மானிலம் காத்தருள் மாமணியே

அழகு திருவானைக் கோயிலிலே - வளர்
அகிலாண்ட நாயகி பேரொளியே  -வழுவாமல்
வணங்கிட அருள் தருவாய் - தமிழ்
வல் வளையாபதி தெய்வமடி


ஸ்ரீ லட்சுமியே எங்கள்....

ஸ்ரீ லட்சுமியே எங்கள் இஷ்ட லக்ஷ்மியே
அஷ்டலக்ஷ்மியே மகாவிஷ்ணு லக்ஷ்மியே
சகல சக்தி தந்திடுவாள் வீரலக்ஷ்மி - அம்மா
சர்வதுக்கம் தீர்த்திடுவாள் சுபலக்ஷ்மி  (ஸ்ரீ)

வீரமான வெற்றி தரும் விஜயலக்ஷ்மி - அம்மா
தானியங்கள் விருத்தி செய்யும் தான்யலக்ஷ்மி (ஸ்ரீ)

விஷ்ணு மார்பில் அமர்ந்திருக்கும் மகாலக்ஷ்மி - அம்மா
கேட்கும் வரங்கள் தந்திடுவாள் வரலக்ஷ்மி (ஸ்ரீ)

செல்வம் பல தந்திடுவாள் சீதாலக்ஷ்மி
சித்தி புத்தி தந்திடுவாள் சீதாலக்ஷ்மி (ஸ்ரீ)

பிள்ளை பேறைக் கொடுத்திடுவாள் சந்தானலக்ஷ்மி
சர்வலோகம் காத்திடுவாள் ஜோதி லக்ஷ்மி (ஸ்ரீ)

இதயத்தில் குடியிருக்கும் ராஜலக்ஷ்மி
இருளைபோக்கி அருளை பொழியும் தீபலக்ஷ்மி (ஸ்ரீ)


அருளோடு பொருள் தந்து...

அருளோடு பொருள் தந்து ஆதரிக்கும் அம்மா
அழகான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா (லாலி)

இருள்நீக்கி ஒளிந்து எமைக் காக்கும் அம்மா
இனிதான பொன்னூஞ்சல் தனிலோடு அம்மா (லாலி)

அவமாயை அகற்றும் நல் அம்பிகையே நீதான்
அழகான பொன்னூஞ்சல் அடிடுவாய் அம்மா (லாலி)

நவ இரவில் நாங்கள் கண்டு களித்திடவே அம்மா
நவரத்ன பொன்னூஞ்சல் அடிடுவாய் அம்மா (லாலி)

நாமகளாய் முதல் மூன்று நாளிரவில் வந்து
நற்கல்விகளை யெல்லாம் நல்கிடுவாய் அம்மா (லாலி)

இடை மூன்று நாளிரவில் இலக்குமியாய் வந்து
இகபோக செல்வங்களை எமக்களிப்பாய் அம்மா (லாலி)

வெற்றிதரும் செல்வியாய் வீரசுகுமாரியாய்
கடை மூன்று இரவினிலே காட்சி தரும் அம்மா (லாலி)

ஒருபாதி சிவனாக மறுபாதி உமையாக
சிவகாமிதேவி நீ பொன்னூஞ்சல் ஆடு (லாலி)

விண்ணோரும் மண்ணோரும் விரும்பி உனை துதிக்க
வண்ணமலர் பொன்னூஞ்சல் வந்தாடு அம்மா (லாலி)

பாரிஜாதம் மணக்க பவளக்கொடி ஊஞ்சலிலே
பார்வதியே பாலாம்பா பாங்குட னேஆடு (லாலி)

நம்பு மடியார்கள் வினை நாளும் தீர்ப்பவளே
செம்பவளக்கொடி ஊஞ்சல் தனிலாடு அம்மா (லாலி)

அருட்பெருஞ்ஜோதியே அராளகேசி உமையே
ரத்னகிரீஸருடன் பொன்னூஞ்சல் ஆடு  (லாலி)


வேத வேத ரூபிணி....

1. வேத வேத ரூபிணி வேதன் பாடு மாமணி
நாதமான கீதமும் நாடுகின்ற நல்மணி
மாதவத்தின் சக்தி நீ மாறன்பாடு மாலினி
ஜோதி ஜோதியான நீ சுவர்ண காமாட்சி நீ

2. மங்களத்தின் நங்கையே மதியணிந்த மங்கையே
பொங்குகின்ற கங்கையே பொன்னியான மங்கையே
எங்குமுள்ள சங்கை தீர எண்ணுகின்ற மங்கையே
ஜோதி ஜோதியான நீ சுவர்ண காமாட்சி நீ

3. இன்பமான வாழ்வொளி இனிய ஞானப்பேரொளி
அன்பு ஆன உள்ளொளி உலகில் ஞானப்பேரொளி
துன்ப போக்கும் தூயயொளி துரிய ஞானப்பேரொளி
ஜோதி ஜோதியான நீ சுவர்ண காமாட்சி நீ

4. காலை மாலை இரவும் நீ காஞ்சி தந்த வாழ்வு நீ
வேலை வென்ற விழியவள் வேண்டி வந்த வாழ்வுநீ
சோலைதந்த மலரும் நீ சோக மற்ற வாழ்வும் நீ
ஜோதி ஜோதியான நீ சுவர்ண காமாட்சி நீ

5. கரும்பு வில்லு மேந்தினாள் கவலை தீர்க்க ஆடினாள்
விரும்புகின்ற மொழியினாள் விண்ணையாளும் விழியினாள்
பருவமாகி முகிலுமாகிப் பயிருமான விழியினாள்
ஜோதி ஜோதியான நீ சுவர்ண காமாட்சி நீ

6. தஞ்சை வந்த தாயவள்தகைமை தன்னைப்பாடுவாள்
பஞ்ச மற்ற வாழ்வொடு பண்புமிக்க மகவொடு
மஞ்சளோடு திலகமும் மனமிகுந்த மலரொடும்
விஞ்சுகின்ற புகழொடும் விண்ணும் மண்ணும் ஆளுவாள் (வேத)


வாழ்வு ஆனவள் துர்க்கா...

வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
உலகை யீன்றவள் துர்க்கா உமையு மானவள்
உண்மை யானவள் எந்தன் உயிரை காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை யானவள்
நிலவில் நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
செம்மை யானவள் துர்க்கா செபமுமானவள்
அம்மை யானவள் அன்புத் தங்கை யானவள்
இம்மை யானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மை யானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
உயிரு மானவள் துர்க்கா உடலு மானவள்
உலக மானவள் எந்தன் உடமையானவள்
பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையு மானவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபயவீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவு மானவள் துர்க்கா திருசூலி யமானவள்
திரு நீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னை தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே


காட்சி தந்து எனை ஆட்சி செய்தாய்...

காட்சி தந்து என்னை ஆட்சி செய்தாய் அம்மா
கல்யாணியே கற்பகமே அற்புத  (காட்சி)

மாட்சி எல்லாம் வாழ்வில் சேர்ந்திட கனிவுடன்
மன்றிலே நின்றாடும் அம்பல வாணருடன் (காட்சி)

அங்கம் ஒரு பாகமாய் அமைந்த என்தாயே
ஆனந்த மாமலையில் தேன்மதுர கனியே (காட்சி)

மங்கல குங்குமத்தில் மகிழ்ந்திடும் அம்மையே
மரகத மயிலுருவ தேவியே - தவத்திரு (காட்சி)


வருவாய் தையல்நாயகியே... திங்கள்

திங்கள் முகத்துப் பெண்ணரசி
திருவருள் நல்கும் கண்ணரசி !
தங்கக் குணத்து வைத்தீசன்
தாரம் ஆன பொன்னரசி !
பொங்கும் அன்பால் வரம்கொடுத்தே
புகழை வளர்க்கும் மாதரசி !
மங்கலம் தரவே எம்மில்லாம்
வருவாய் தையல்நாயகியே !

பாடிப் பணியும் பக்தர்களின்
பாவம்போக்கும் கலையரசி !
கோடிப் புண்ணியம் தந்திடவே
குமரனைப் பெற்ற மலையரசி !
ஓடிப்பிடித்து விளையாடும்
உள்ளம் வாழும் அலையரசி !
வாடிடும் எனது துயர்போக்க
வருவாய் தையல்நாயகியே !

தீரா வினையைத் தீர்த்திடவே
திரச்சாத் துருண்டை வைத்துள்ள
ஆரா அமுதே ! வைத்தீசன்
அருகில் இருக்கும் மாமணியே !
சீராய்ச் சிறப்பாய் நான் வாழத்
தினமும் வெற்றிகள் வந்தடையக்
காரார் குழலி உனைத்துதித்தேன் !
கனியே தையல் நாயகியே !

சித்தா மிர்தக் குளம்வைத்தாய்
திருநீ றென்னும் மருந்தளித்தாய் !
பக்தர் குரலைக்கேட்டவுடன்
பறந்துவந் துதவி செய்திடுவாய் !
சக்தி எனும்பெயர் பெற்றவளே
சங்கடம் தீர்க்கக் கற்றவளே !
மற்றவர் போற்றும் வாழ்வமைக்க
வருவாய் தையல்நாயகி !

கங்கை உடனொரு மங்கையையும்
காற்றைக் குடிக்கும் பாம்பினையும்
திங்கள் முடியில் சுமர்ந்தவனின்
திருவுடல் பாதி பெற்றவளே !
அங்கையற் கன்னியுன் னருளாலே
அத்தனை பெருமையும் நான்பெறவே
மங்கல நாயகி எம்மில்லம்
வருவாய் தையல் நாயகியே !

இச்சை அனைத்தும் தீர்ப்பவளே
இனிமைகள் வாழ்வில் சேர்ப்பவளே !
மிச்சத் துன்பங்கள் இல்லாமல்
விரட்டும்சக்தி படைத்தவளே !
அச்சம் தீர்க்கும் ஆரணங்களே
ஆற்றலில் நீயும் நூரணங்கே
உச்சம் பெற்றே நான்வாழ
உரைப்பாய் தையல் நாயகியே !

சந்திர சூரிய இயக்கத்தை
தவறாது அளிக்கும் தாயவளே !
கந்தனைச் செல்வக் குமரேசக்
கடவுள் ஆக்கிப் பார்த்தவளே !
சிந்தனை வளத்தைக் கொடுப்பவளே
சினத்தை வாழ்வில் தடுப்பவளே !
வந்தனை செய்தேன் எம்மில்லம்
வருவாய் தையல் நாயகியே !

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
எனக்குத் தாயாய் இருப்பவளே
எத்தனைப் பிழை நான்செய்தாலும்
இனிதாய் எண்ணிப் பொறுப்பவளே !
முத்துக் குமரனின் முத்தத்தில்
முல்லைப் பூப்போல் சிறப்பவளே
வற்றாச் செல்வம் வழங்கிடவே
வருவாய் தையல்நாயகியே !

மாலைகள் தேடிவருவோருக்கு
மணங்கள் நீயும் முடித்திடுவாய் !
வேலைகள் இல்லாக் காளையர்க்கு
வேலைவாய்ப்பைக் கொடுத்திடுவாய் !
நூலைப்பிடித்து வழிபட்டால்
நொடியில் துயரை அழித்திடுவாய் !
தாலிப் பலனும் நிலைக்க அருள்
தருவாய் தையல் நாயகியே !

வைத்தீஸ் வரனின் மணையாளாய்
வாழ்ந்திடும் பக்தரின் துணையானாய் !
துய்த்திடும் இன்பம் நிலைத்திடவே
தூயவள் கட்டும் அணையானாய் !
கைத்தலம் பற்றிய கணவருடன்
கனிவாய் வைத்தியம் செய்பவளே !
மெய்தவத் தாலே உனைத்துதித்தேன் !
வருவாய் தையல் நாயகியே !


கனியமுதே கருணைக்கடலே....

கனியமுதே கருணைக்கடலே துணை நீயே
சுந்தரேசர் மகிழும் மயிலே
கதம்பவனக் குயிலே மாதவர் போற்றும் எழிலே
பதமலர் தனைப் பணிந்தோம் அங்கயற்கண்ணியே
கொண்டை முடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
அஞ்சு மொழி உமையாள் வீற்றிருந்தாய்... அந்த
அழகிய மாநகர் மதுரையிலே மதுரையிலே மதுரையிலே
அண்டர்களும் கொண்டாட எழில் மதுராபுரியை
ஆண்டுவரும் அன்னை மீன் விழியாள்
கண்டுருகும் அன்பரைத்தன் கொண்டை விழிகளினாலே
கண்ணென காத்து நின்றாள் கருணையைப் பொழிவாள்
அழகிய மாநகர் மதுரையிலே மதுரையிலே மதுரையிலே
வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
மாணிக்கத் தேரினில் மரகதப் பாவை வந்தாள்
வைரமுடி மின்னிட மரகதப் பாவை வந்தாள்
வானவர் பூமாரி பொழிந்திடவே... தேவ
கானமும் ஒலித்திட தேவி வந்தாள்
மீனாட்சி வந்தாள் அந்த அழகிய
மாநகர் மதுரையிலே மதுரையிலே மதுரையிலே
தேன்மலர் சோலையாம் கதம்பவனம் அங்கு
வானளாவும் தங்ககோபுரம் எங்கும் காணும்
தேன் தமிழ் பாவலரின் தேவார கானம்
ஆனந்த வெள்ளம்பெருகும் மீனாட்சி ஸந்நிதானம் அந்த
அழகிய மாநகர் மதுரையிலே மதுரையிலே மதுரையிலே (கொண்டை)


மாணிக்க மூக்குத்தி....

மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு
மதுரையில் முகூர்த்தநாள் !
காணிக்கையாய்க் கொண்ட சோமசுந்தரர்
கண்களுக்கும் முகூர்த்தநாள் ! (மாணி)

ஆனிப்பொன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டாடிய
ஆனியிலே முகூர்த்தநாள்
ஆவணி வீதியிலே மாப்பிள்ளை பெண்ணுடன்
ஊர்வலம் போகும் முகூர்த்தநாள் - முகூர்த்தநாள் (மாணி)

நாணத்தில் மேனி நடுங்கிடும் வண்ணம்
நலங்கு வைக்கும் முகூர்த்த நாள் !
தான் தின்ற கனியில் பாதியைக் கொடுத்துச்
சாப்பிடச் சொல்லும் முகூர்த்த நாள்
தோழியர் கூடிச் சீர்முறைப் பாடித்
தூங்க வைக்கும் முகூர்த்த நாள்


மஞ்சள் குங்குமம் நிறைந்த...

மஞ்சள் குங்குமம் நிறைந்த மதிமுகம்
எங்கள் தாயின் முகமே
பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திடும்
தங்கத்தாயின் முகம்
கருமாரி அம்மனின் கருணை முகம்
தண்ணொளி வீசிடும் தயவினைக் காட்டிடும்
விண்ணவர் போற்றிடும் அன்னை முகம்
மண்ணினை அளந்த கண்ணனின் தங்கை
கண்ணென நம்மை காக்கும் முகம்
கருமாரி அம்மனின் கருணை முகம்
அருள்மாரி வழங்கிடும் அன்பு முகம்
திருவிளக்கின் ஒளியினிலே திகழும் தேவிமுகம்
இருள் நீக்க ஒளியாம் வேர்க்காட்டில் வாழும் முகம்
தஞ்சமென்று வந்தவர்க்கு தயங்காமல் அருளும் முகம்
கருமாரி அம்மனின் கருணை முகம்
அருள்மாரி வழங்கிடும் அன்பு முகம்
பம்பை உடுக்கை மேளம் ஒலித்தால்
மயங்கி ஓடும் மாரிமுகம்
நம்பி வருவோரின் வினைகளை தீர்த்து
என்றும் ஒளிசிந்தும் தேவி முகம்


கருமாரி உன் பதமே...

கருமாரி உன் பதமே எமையாளும் தினம் தினமே
சரண் புகுந்தோம் உன்னிடமே உருகாதோ உன் மனமே
வேர்க்காடு கோபுரமே வாழவைக்கும் திருத்தலமே
வேதனைகள் யாவையும் ஏற்று ஆளும் திருக்கரமே
காணவரும் கண்களுக்கு காட்சிதரும்உன் முகமே
காலமெல்லாம் வணங்குவதே நான் கேட்கும் ஒருவரமே (கரு)
பூங்கரம் கோடி வந்து புகழ்பாடி ஆடுதம்மா
பொற்பாதம் பார்த்ததுமே ஒளி வந்து சேருதம்மா
திரிசூலம் கண்டதுமே வினையாவும் ஓடுதம்மா
தேவியுந்தன் தரிசனத்தால் தெய்வசுகம் பெருகுதம்மா (கரு)
கார்மேக வடிவெடுத்து மழையாக பொழிகின்றாய்
கருணையெனும் மலர்தொடுத்து இசையாக நிற்கின்றாய்
பாரெங்கும் உன்நாமம் பாடிடவே துணையிருப்பாய்
மகமாயி உன்புகழில் நிலையான நிழல் கொடுப்பாய் (கரு)


ஆதிசிவன் தாள் பணிந்து...

ஆதிசிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே - எங்கள்
ஆதிசக்தி நாயகியின் துணை பெறுவோமே
வேதங்கள் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீரும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே - அவன்
அடியார்க்கும் அன்பருக்கும் தொண்டுசெய்வோமே (ஆதி)
நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதமல்லவா - அந்த
நாதத்திற்கே பெருமை தந்த ஜீவனல்லவா
பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தையல்லவா - அதை
பிள்ளைத் தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா (ஆதி)


நவராத்திரி சுபராத்திரி...

நவராத்திரி சுபராத்திரி நவராத்திரி சுபராத்திரி
அலைமகளும் கலைமகளும் கொலுவிருக்கும் ராத்திரி
கவிஞர் நெஞ்சில் கற்பனைகள் கூறுவதும் ராத்திரி
கலைஞரெல்லாம் அரங்கத்திலே சேருவதும் ராத்திரி
நாள் முடிந்து தொடங்குமிடம் நடு ராத்திரி இளம்
மங்கையர்கள் போற்றுவதும் நவராத்திரி நவராத்திரி (நவ)
தூக்கமில்லா மனிதரையும் தூங்க வைக்கும் ராத்திரி
சுழன்றுவரும் பூமிக்கெல்லாம் அமைதி தரும் ராத்திரி


தேவி மீனாக்ஷி....

தேவி மீனாக்ஷி தீனஜன ரக்ஷகி
தேஹிமே முதம் மாம்பாஹி - பார்வதி  (தேவி)

ஸேவித பக்த போஷணி நாரணி
கோவிந்த ரூபிணி குருபர ஜனனீ  (தேவி)

ராகா சசிமுகி ராஜீவ லோசனி
ராஜாதிராஜ - ராஜேஸ்வரி - கௌரி
ஸ்ரீ காந்தஸோதரி - ஸ்ரீ ஸுந்தரேச்வரி
ஏகாக்ஷர மந்த்ர ஓங்காரி - கௌமாரி  (தேவி)

பாலெந்து மௌளி பாக்யானுகூலே
பாண்டியராஜ குமாரி பரமக்ருபாகரி
ஹாலாஸ்ய ÷க்ஷத்ரா தீச்வரி சங்கரி
மூலாதார குண்டலி லீலா விக்ரஹரூபி (தேவி)

சர்வா சாபரி பூரக சக்ர
ஸ்வாமினி குப்த யோகினி குண்டலினி
சர்வசித்திப்ரத ஸ்ரீ சக்ரஸ்வாமினி
அதிரகஸ்ய யோகினி - ஹரி ஹரரூபிணி (தேவி)


மங்கையர் ஒன்றாய்...

மங்கையர் ஒன்றாய் கூடியே நாங்கள் துளசியை பூஜிக்க
ப்ருந்தாவனமே சென்றிட்டோம்
சுற்றிலும் பன்னீர் தெளித்திட்டோம்
பச்சை மரகத வர்ணத்தால்
பலவித கோலங்கள் வரைந்திட்டோம்
வாழை கமுகு சரக்கொன்னை மாவிலை
தோரணம் கட்டிவைத்தோம்
சந்தன குங்கும திலகமிட்டோம்
சம்பங்கி ஜாதி மாலை இட்டோம்
குத்துவிளக்கினை ஏற்றி வைத்தோம்
கௌரியின் பாதம் பணிய
பலவித கனிகள் பக்ஷ்ணமும் தூப தீப நைவேத்யம்
மணமுள்ள மலர்களை பூஜித்தே
மகாலக்ஷ்மி உந்தன் அடி பணிந்தோம்
துந்துபி நாதம் கொட்டிடவே மங்கள மேளம்முழங்கிடவே
வேதியர் வேதம் ஓதிடவே சிரத்தையாய்
பூஜை முடித்திட்டோம்

க்ஷீரசாகரம் தனில் உதித்தவளே
ஸ்ரீவிஷ்ணு மார்பில் அமர்ந்தவளே
எங்கும் மங்களம் பொங்கிடவே
மங்கள கீதம் பாடிடுவோம்

முன் செய்த தவப் பயனாலே
முன்னூற்றி அறுபது நோன்புகளில்
முக்கியமான ஏகாதசி நோன்பினை
விக்னமில்லாமல் முடித்திட்டோம்

மாத மும்மாரி பெய்திடவும் நாடும் நகரம் தழைத்திடவும்
எங்கள் குலமும் உயர்ந்திடவும்
மங்கள துளசி வரம் அருள்வாய்
என் மன சஞ்சலம் தீர்ப்பாயே
மாங்கல்ய வரமதை தருவாயே

சுற்றியே ப்ரதக்ஷணம் செய்வோமே
சுந்தர வதனி நின்பதமே
பரிகசிக்காமல் கேட்டவர்கள் பக்தியுடனே பாடியவர்
சீரும் சிறப்புடன் வாழ்ந்திடவே
பரம கல்யாணி வரம் அருள்வாய்

மங்களமே ஜெய மங்களமே
ஸ்ரீகிருஷ்ண துளசிக்கு மங்களமே
மங்களமே சுபமங்களமே ஸ்ரீராம துளசிக்கு மங்களமே


செந்தாமரை மலரினிலே....
(மாதவி பொன்மயிலாள் மெட்டு)

செந்தாமரை மலரினிலே வீற்றிருப்பாள் - தேவி
திரு நாரணன் திருமார்பில் உறைந்திருப்பாள்
கருணை மழைப் பொழியும் கார்முகிலாள்
நம் கவலைகள் தீர்த்தருளும் தாயானாள்  (செந்தாமரை)

வானில் வரும் மதிபோல் வதனம் கொண்டாள்
எழில் வடிவுடையாள் அருள் தந்திடுவாள்(2)

ஆபரணம் அணிந்த ஒளிக் கதிரானாள்
அலைகடல் வாசனவன் துணையானாள்
வீரம் மிகுந்த அபயக் கரங்களிலே
பொற்குடம்தாங்கியே பொன்மழையானாள் (செந்தாமரை)

வெள்ளையானைகள் இருபுறமும் நீராட்ட
மணி மகுடம் கொண்டாள் குரு நகைசெய்தாள்
மாணிக்கமும் மாசிலா நவரத்னமும்
நல்ல மல்லிகை முல்லை ரோஜா மணம் கமழ
வெட்டிவேரும் கட்டின மாலை சூடி
பட்டுப் பீதாம்பரத்துடன் அழகாக  (செந்தாமரை)


ஸ்ரீ சக்ர நாயகி துதி...

ஸ்ரீ சக்ர ராஜஸிம்மாஸனேச்வரி
ஸ்ரீ லலிதாம் பிகையே புவனேச்வரி (ஸ்ரீசக்ர)

1. ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோஹரி
ஞான வித்யேச்வரி ராஜராஜேச்வரி  (ஸ்ரீசக்ர)

2. பலவிதமாயுனைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடவும் அன்பர் பதமலர் சூடவும்
உலக முழுவதும் என தகமுறக் காணவும்
ஒருநிலை தருவாய் காஞ்சிக் காமேச்வரி  (ஸ்ரீசக்ர)

3. உழன்று திரிந்த என்னை
உத்தமனாக்கி வைத்தாய் - உயரிய
பெரியோருடன் ஒன்றிடக் கூட்டிவைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க்
கொடுமையை நீங்கச் செய்த
நித்ய கல்யாணி பவானி பத்மேச்வரி (ஸ்ரீசக்ர)

4. துன்பப் புடத்திலிட்டு தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயம் நீக்கி
பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன்
ஆடலைக் காணச் செய்தாய் - அடைக்கலம்
நீயே அம்மா அகிலாண்டேச்வரி (ஸ்ரீசக்ர)


மாணிக்க வீணை யேந்தும்...

மாணிக்க வீணை யேந்தும் மாதேவி கலைவாணி
தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாட வந்தோம் - அம்மா
பாட வந்தோம் அம்மா பாடவந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ நலம் தருவே நீ - அம்மா (மாணிக்க)
நா மணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூ மணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க)
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள்
உள்ளக் கோவிலிலே உறைந்துநிற்பாய்
கள்ள மில்லாமல் தொழும் அன்பருக்கே - என்றும்
அள்ளி அறிவை தரும் அன்னையும்நீ
வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாஹதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தருவே நீ
நான்முகன் நாயகி மோகன ரூபிணி
நான் மரை போற்றும் தேவி நீ
வானவரமுதே தேனருள் சிந்தும் ராக மனோகரி கல்யாணி
அருள்வாய் நீ இசை தரவா நீ இங்கு வருவாய் நீ
நலம் தருவே நீ அம்மா  (மாணிக்க)


தாமரைப்பூவில்....

தாமரைப்பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே... செந்  (தாமரை
சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பாதம் எந்நாளும் தஞ்சமே திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே.. செந் (தாமரை
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே
உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே (தாமரை


ஆதிபரமேஸ்வரியின் ஆலயமே...

ஆதிபரமேஸ்வரியின் ஆலயமே வேர்க்காடு
அன்னையவள் திருப்புகழை தினம்தினம் நீபாடு (ஆதி)
குங்குமத்தில் கோவில்கொண்டு தெய்வமாய் குடியிருப்பாள்
மங்கையர்க்கு திலகமிட்டு அன்னையாய் துணையிருப்பாய்
மங்கலமே வடிவெடுத்து மாதரசி வீற்றிருப்பாள்
மங்காத நிலவாக என்னாளும் ஒளிகொடுப்பாள் - (ஆதி)
அன்னையிடம் நாகம் வந்து பக்தியுடன் குடை பிடிக்கும்
அபிஷேகம் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கும்
நம்பிவரும் எல்லோர்க்கும் நல்லதொரு வழிபிறக்கும்
நாயகி திருவருளே பொன்னான வாழ்வளிக்கும் (ஆதி)
வேர்க்காடு திருத்தலமே வந்தவர்க்கு புகழ்கொடுக்கும்
வெற்றிதரும் திருச்சாம்பல்கொண்டவர்க்கு பலன் கிடைக்கும்
கருமாரி திருப்பதமே வேண்டி வந்தால் வரம் கொடுக்கும்
கற்பூரஜோதியிலே என்னாளும் அருள் கிடைக்கும் (ஆதி


மங்களம் அருள்வாய்...

மங்களம் அருள்வாய் மதுரைக்கு அரசி
அங்கையற் கண்ணி அருள் மீனாட்சி
அண்டங்கள் அனைத்தும் அம்மையின் ஆட்சி (மங்)

திங்களைச் சூடிய சிவனுக்கு துணைவி
செல்வி மீனாட்சி செந்தமிழ்ப் பாவை
திருமணக் கோலம் திகழ்ந்திடும் பூவை  (மங்)

சங்கத் தமிழ் போல தனித்தவள் சக்தி
தமிழின் சுவை போல் இனிப்பவள் சக்தி
குங்குமம் தருபவள் குலமகள் சக்தி
கும்பிட்டு நினைப்பதைக் கொடுப்பவள் சக்தி (மங்)

தாமரை போன்ற தலைநகர் நடுவே
தாமரைக் குளத்தைச் சார்ந்தவள் சக்தி
மாமதுரைக் கொரு மாபெரும் சக்தி
மாநிலம் எங்கெனும் ஓம் சக்தி  (மங்)


மதுரை அரசாளும் மீனாக்ஷி...
 
மதுரை அரசாளும் மீனாக்ஷி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
தில்லையிலே அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி  (மதுரை)

அன்னை அவளில்லாமல் ஏது கதி
திரிபுர சுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கயிலையிலே
வரந்தரும் கற்பகமாம் மயிலையிலே
வஞ்சமிலா நெஞ்சில் வாழ்பவளே (மதுரை)

திருவேற்காட்டினிலே கருமாரி
தென்புதுவை நகரினிலே முத்துமாரி
சமய புரந்தன்னிலே மகமாயி
சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி - சகல (சௌ)


கற்பகமே உனையன்றி...

கற்பகமே உனையன்றி துணையாரம்மா - நீயே
கதி எனப்போற்றும் எனை கண்பாரம்மா - அம்மா (கற்)

அற்புதம் எல்லாம் நிகழ்த்தும் அருள்திறம் உடையவளே
ஆனந்த வாழ்வு தன்னை அன்பர்க்கு அளிப்பவளே (கற்)

அலைகடல் ஓரத்திலே அமைந்த மயிலையிலே
கலைவடிவாய் திகழும் நின் திருக்கோயிலிலே
சிலை வடிவாய் நின்று உலகேழும் காப்பவளே
செம்பவளமேனி வண்ணன் மகிழும் உமையவளே (கற்)


சங்கம் முழங்கும் திருமதுரை...

சங்கம் முழங்கும் திருமதுரை நகர் வளரும்
இங்கிதம் பொங்கவரும் எழில் பெறும் மீனாட்சி  (சங்)
எங்கும் புகழ் விளங்க இனிய தமிழ் துலங்க
தங்க வளமுடனே தனியாட்சி செய்தாள்
பாண்டிய மன்னர்கள் பணிந்து வணங்கிடவே
பைந்தமிழ் புலவர்கள் பரவி மகிழ்ந்திடவே
வேண்டிய அன்பர்கள் வினைகள் விலகிடவே
விந்தை புரிந்து பல வேடிக்கையும் செய்தாய்  (சங்)


மணியே மணியின் ஒளியே....

மணியே மணியின் ஒளியே
ஒளிரும் அணிபுனைந்த அணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்கு பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெற விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

சொல்லடி அபிராமி... வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ பதில்
சொல்லடி அபிராமி நில்லடி முன்னாலே
முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி
படைத்ததெல்லாம் உந்தன் செயலல்லவோ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ இந்த
சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ

வாராயோ ஒரு பதில் கூறாயோ
நிலவென வாராயோ அருள் மழை தாராயோ
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
நடுவில் நின்றாடும் வடிவழகே
கொடிகளாட முடிகளாட
குடைபடை எழுந்தாட வரும் கலையழகே
பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம்
பேரிகை கொட்டிவர மத்தளமும் சத்தமிட (வாராயோ)

செங்கையில்வண்டு கலின் கலின் என்று
ஜெயம் ஜெயம் என்றாட ! - இடை
சங்கீத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட இரு
கொங்கை கொடும் பகை வென்றனயென்று
குழைந்து குழைந்தாட மலர்
பங்கயமே உன்னைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ

காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்
கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு
காட்சியை தருகின்றாள் வாழிய மகன் இவன் வாழிய
என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்!
வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் ! என் அம்மை தெரிகின்றாள்


அம்பிகையே... ஈஸ்வரியே....

அம்பிகையே.... ஈஸ்வரியே எமை
ஆளவந்த கோவில் கொண்ட குங்குமக்காரி
ஓங்காரியே வேப்பிலைக்காரி - ஒரு
உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி
வேலையிலே மனசு வைச்சோம் முத்துமாரி
வெற்றிகொடி நாட்டுகிறோம் முத்துமாரி
ஆலமரம் போலிருக்கும் எங்கள் கூட்டம் - எம்மை
ஆதரிச்சு வாழ்த்துமடி முத்துமாரி (அம்)

ஏழைகளை ஏச்சதில்லே முத்துமாரி - நாங்க
ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி
வாழவிட்டு வாழுகிறோம் முத்துமாரி - இனி
வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி
சிவகாமி உமையவளே முத்துமாரி - உன்
செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துக்கூறி இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி  (அம்)


உலகத்து நாயகியே....

உலகத்து நாயகியே - எங்கள் முத்துமாரியம்மா
எனஉன் பாதம் சரண் அடைந்தோம் - எங்கள் முத்துமாரியம்மா
கலகத்தரக்கர் பலர் - எங்கள் முத்துமாரியம்மா
கருத்தினுள்ளே - புகுந்து விட்டார் - எங்கள் முத்துமாரியம்மா (உலகத்து)
பலகற்றும் பலகேட்டும் - எங்கள் முத்துமாரியம்மா
பயனேதும் இல்லையடி - எங்கள் முத்துமாரியம்மா
நிலை ஒன்றும் காணவில்லை - எங்கள் முத்துமாரியம்மா
நின்பாதம் சரண் அடைந்தோம் - எங்கள் முத்துமாரியம்மா (உலகத்து)
துணி வெளுக்க மண்ணுண்டு - எங்கள் முத்துமாரியம்மா
தோல் வெளுக்க சாம்பலுண்டு - எங்கள் முத்துமாரியம்மா
மணி வெளுக்க சாணையுண்டு - எங்கள் முத்துமாரியம்மா
மனம் வெளுக்க வழியில்லை - எங்கள் முத்துமாரியம்மா (உலகத்து)
பிணிகளுக்கு மாற்றமுண்டு - எங்கள் முத்துமாரியம்மா
பேதமைக்கு மாற்றமில்லை -எங்கள் முத்துமாரியம்மா
அணிகளுக்கோ ரெல்லை யில்லாய் - எங்கள் முத்துமாரியம்மா
அடைக்கல மென்றுனை புகுந்தோம் - எங்கள் முத்துமாரியம்மா (உலகத்து)


கற்பகவல்லி நின் பொற்பதங்கள்....

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதியருள்வாய் அம்மா தேவி (கற்பகவல்லி)

பற்பலரும் போற்றும் பதி மயிலா புரியில்
சிற்பம்நிறைந்த உயர் சிங்காரக்கோயில் கொண்ட (கற்பக

நீஇந்த வேளை தன்னில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌனம் அம்மா? ஏழையெனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா (கற்பகவல்லி

எல்லோர்க்கும் இன்பங்கள் எல்லாம் விரும்பி என்றும்
நல்லாசி தந்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல்புரியும் நல்ல
உல்லாசியே உமா உனை நம்பினேன் அம்மா (கற்பக)

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகேஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்வரி தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா  (கற்பக)

அஞ்சன மையிடும் அம்பிகையே எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன்னை நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா (கற்பக)


பவள மேனியும் பளபளக்க...

பல்லவி

பவள மேனியும் பளபளக்க அந்தப்
பங்கஜ முகந்தன்னில் குங்குமம் ஜொலிக்க
பக்தர்கள் உன்னையே பணிந்து நிற்க
பரிவுடன் எங்களை நீ காத்து நிற்க
புவனேஸ்வரி - தாயே - புவனேஸ்வரி

அனுபல்லவி

பவளச் செவ்வாய்தனிலே திருவாய் மலர்ந்து பக்தி
பாடல்கள் பாடிட எமக்கருள் புரிந்து
பரவசமுடன் கேட்டு ஆதரவும் தந்து
வரங்கள் கொடுப்பாய் மனமும் கனிந்து
புவனேஸ்வரி - தாயே - புவனேஸ்வரி
மாணிக்க நவரத்ன மணிமாலை மின்னிட
மரகத மணிமகுடம் முடிதனில் ஒளிவீசிட
சாமந்தி மந்தார கஸ்தூரி மல்லி ரோஜா
தாமரை மகிழம்பூ மலர்கள் உன்னை அலங்கரிக்க
புவனேஸ்வரி - தாயே - புவனேஸ்வரி


அங்காளம்மாள் எங்கள்....

அங்காளம்மாள் எங்கள் செங்காளம்மா (அங்)
மங்களம் பொங்க மனதினில் வந்திடும் 
மாரியம்மா கருமாரியம்மா
சிங்காரி ஒய்யாரி செம்பவளக்கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி
மஞ்சளிலே நீராடி நெஞ்சினிலே உறவாடி
தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி (அங்)

நரகத்தில் நீயமர்ந்து காட்சி தரும் அலங்காரம்
நாயகியே உன்னைக் கண்டால் நாவில் வரும் ஓங்காரம்
பாசமெனும் மலரெடுத்து ஆசையுடன் மாலை தொடுத்து
நேசமுடன் சூட்ட வந்தோம் மாசில்லாத மாரியம்மா (அங்)

தென்பொதிகை சந்தனம் எடுத்து
மஞ்சளுடன் குங்குமம் சேர்த்து
பன்னீரால் அபிஷேகம் செய்ய வந்தோம் மாரியம்மா
அன்னையாக நீயிருந்து அருளெனும் பாலைத் தந்து
இன்பமுடன் வாழ வைப்பாய் ஈஸ்வரியே மாரியம்மா (அங்)


அம்பிகையே கொண்டாடுவோம்....

அம்பிகையே கொண்டாடுவோம்
கருமாரி அம்பிகையை கொண்டாடுவோம்  (கருமாரி)

ஆலய திருநீரை அணிந்திடுவோம்
அந்த ஆயிரம் கரத்தாளைக் கொண்டாடுவோம் (கருமாரி)

சந்தனத்தை பூசி வரும் மாங்காட்டு நீலியம்மா
குங்குமத்தை அள்ளித்தந்து குறிசொல்வாள் சூலியம்மா
புன்னை நல்லூர் மாரியம்மா புகழைப் பாடுவோம்
அங்கு பூங்கலசம் எடுத்து வந்து பொங்கல் போடுவோம் (அங்கு)

தில்லையாடும் காளியம்மா காளியம்மா
தில்லையாடும் காளியம்மா எல்லை தாங்கும் தேவியம்மா
கரும்பு வில்லைத் தாங்கும் என்னைக் காக்கும் மாரியம்மா
எங்கள் அன்பு மாரியம்மா தேவியம்மா


ஆடும் கரகம் எடுத்து...

ஆடும் கரகம் எடுத்து ஆடி வருவோம்
அம்பிகையே உன் புகழை பாடி வருவோம்
ஆடியில் பூஜை வைத்து அடி பணிவோம்
ஆலயத்தின் வாசலிலே கூடி மகிழ்வோம்  (ஆடும்)

பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
பூலோகம் மாரி உனக்கு மாலையிடுவோம்
தங்க கரகம் எடுத்து ஆடிவருவோம்
பத்ரகாளி உனக்கு பொங்கலிடுவோம்  (ஆடும்)

சமயபுரம் சக்தி உன்னை போற்றி வருவோம்
சந்தன கரகம் எடுத்து ஆடி வருவோம்
வேதபுரம் தேவி உன்னை தேடி வருவோம்
வேப்பிலை கரகம் எடுத்து வணங்கிடுவோம் (ஆடும்)

வெள்ளி கரகம் எடுத்து ஆடி வருவோம் எங்க
கண்ணபுரம் சூலி உந்தன் அருள் பெறுவோம்

நார்த்த மலை அன்னை உனை நாடி வருவோம் - நல்ல
நன்மை யெல்லாம் கூடி வர நலம் பெறுவோம்


கருணை உள்ளம் கொண்டவளே...

கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா - உன்
கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் அருள் மாரியம்மா
அருள் மாரியம்மா - அம்மா  (கருணை)

கரகம் எடுத்து ஆடி வந்தோம்
காணிக்கை செலுத்த நாடி வந்தோம்
கரங்கள் குவித்து பாடி வந்தோம்
வரங்கள் குறித்து தேடி வந்தோம் - அம்மா (கருணை)

குத்து விளக்கைப் போற்றி நின்றோம்
எங்கள் குலவிளக்கைப் போற்றி நின்றோம்  (எங்கள்)

முத்துமாரி உனை பணிந்தோம்
பக்தி கொண்டோம் பலனடைந்தோம் அம்மா (கருணை)

அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் - அம்மா
அம்மா எங்களுக்கு கருணை தந்தாய்
புன்னகை முகம் கொண்டவளே
பொன்மலர் பாதம் தந்தவளே - அம்மா (கருணை)


செல்லாத்தா செல்ல...

செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருளோடு நில்லாத்தா
பொன்னாத்தா உன்னைக் காணாட்டா - இந்த
கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா  (செல்)

தென்னை மரத்தோப்பினிலே தேங்காய பறிச்சிக்கிட்டு (தென்)
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா - நீ (தேடி)
இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு (நீ)
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல
வழிதனையே காட்டிவிடு மாரியாத்தா
பசும்பாலை கறந்துகிட்டு கறந்த பாலை எடுத்துகிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி நீ பாம்பாக மாறி அதை
பாங்காக குடித்துவிட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா - எங்கள் (ஆதிசக்தி)


தாயே கருமாரி எங்கள்...

தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி துணை நீயே மகமாயி  (தேவி
ஆயிரம் கண்கள் உடையவளே ஆலயத்தின் தலைமகளே
கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய் காலமெல்லாம்
காத்தருள்வாய் காத்தருள் புரிவாய்
அன்னை உந்தன் சன்னதியில் அனைவரும் ஒன்றாய்
கூடிடுவோம் கூடிடுவோம்
அம்மா உந்தன் பொன்னடியில் அனுதினமும்
சரணடைவோம் சரணடைவோம்
சிங்கமுக வாகனத்தில் சிங்கார மாரியம்மா
வந்துவரம் தந்திடுவாய் எங்கள் குலதெய்வம் அம்மா (தாயே)


முத்துமாரி அம்மனுக்கு...

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்
முகத்தழகைக் காணவரும் ஒருநாளாம்
சித்திரைப் பூமாலையில் தோரணமாம் அவள்
சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்  (முத்து)

பாலோடு பன்னீரும் அபிஷேகமாம் - அவள்
பொன்மேனி மலர்களிலே அலங்காரமாம்
மங்கலக் குங்குமத்தில் திலகமாம் - அவள்
மஞ்சள் நிற ஆடைகட்டி வந்திடுவாளாம் (முத்து)

திரிசூலம் கொண்ட திரிசூலியாம் அவள்
திக்கெட்டும் காத்துவரும் காளியம்மனாம்
கற்பூரச் சுடரினிலே சிரித்திடுவாளாம் - அவள்
தீராத நோயெல்லாம் தீர்த்திடுவாளாம்  (முத்து)

சர்க்கரையில் பொங்கலிட மகிழ்ந்திடுவாளாம்
விளக்கேற்றி வணங்கிடவே வரம் தருவாளாம்
முழங்கி வரும் முரசங்களைக் கேட்டிடுவாளாம்
முன்னின்றே நல்லருளைத் தந்திடுவாளாம் (முத்து)


செவப்பு சேலைகட்டிகிட்டு....

செவப்பு சேலைகட்டிகிட்டு வேப்பிலையும் எடுத்துக்கிட்டு
வேற்காட்டு கருமாரி ஆடிவந்தாளாம் - அவள்
விருப்புடனே தொழுபவரின் வினைகளையே ஓடவைத்து
பொறுப்புடனே நம்மைக் காக்க ஆடிவந்தாளாம்
மாரியம்மா கருமாரியம்மா (செவப்பு)

சிறப்புடனே பவனி வந்து சிந்தையிலே குடிபுகுந்து
கருணை உள்ளம் கொண்டு நம்மைக் காக்க வந்தாளாம்
அவள் மரகதத்தில் திலகமிட்டு மரிக்கொழுந்து மலரெடுத்து
சிரத்தினிலே சூடிக்கொண்டு பவனி வந்தாளாம் (செவப்பு)

உன் வேப்பிலையும் திருநீரும் வேண்டியதைத் தந்திடுமே அம்மா
காப்பது உன் திரிசூலம் கவலையும் தீருமே அம்மா
மாபெரும் பக்தர்கள் கூட்டம் உன்சன்னதியில் அம்மா
ஆபத்தில் உதவிட உன் ஆயிரம் கைகள் எங்களை அணைத்திடுமே அம்மா

தொட்டியங்குளம் தன்னில் வாழும் எங்கள் மகமாயி
மட்டில்லாத பாசம் கொண்ட எங்க மகமாயி
சட்டியிலே நெருப்பெடுத்து சதிராடும் மாரி
கட்டிக் காக்கும் அன்னை போல காத்திடுவாள் மாரி (செவப்பு)


வேற்காட்டில் வீற்றிருக்கும்...

வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி
நாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரி
நீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாறி
ஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறி
கருநாகமாக மாறி கருமாரி சுகுமாரி மகமாயி

கற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரி
அற்புதமாய் உலகினையே ஆட்சி செய்யும் மாரி
கருணை உள்ளம் கொண்டவளே கண்ணான மாரி
பொற்காலம் வழங்கிடுவாய் பொன்னாக மாறி  (வேற்)

கரக ஆட்டம் ஆடிவந்தோம் கருமாரி
மனம் உருகிடவே பாடி வந்தோம் முத்துமாரி
பம்பை உடுக்கை முழங்கிடவே ஆடி வரும் மாரி
உன்னை கும்பிடவே ஓடிவந்தோம் அம்பிகையே மாரி (வேற்)

வேற்காடு வாழ்ந்திருக்கும்

வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்
வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள்
பாற்கடலாய் அவள் கருணை பெருகிடவே செய்திடுவாள்
பக்தர்களை கண்ணிமைபோல் எப்போதும் காத்திடுவாள்

தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் தெய்வமவள்
போராடும் பாவங்களை பறந்தோடச் செய்பவளாம்
திருச்சாம்பல் அணிந்தோரை திடமுடனே காப்பவளாம்
திருமாலின் சோதரியாம் கருநாக ரூபிணியாம்

எங்கும் நிறைந்தவளாம் ஏகாந்த ரூபிணியாம்
மங்களமாய் வாழ்வளிக்கும் மணிகண்டன் தாயவளாம்
சங்கரன் முதல் நாரணனும் பணிந்திடும் பரதேவதையாம்
பங்கஜம் முகம் கொண்டவளாம் பரமசிவன் நாயகியாம்

குங்குமம் மங்கல மங்கையர்...

குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
மதுரை மீனாட்சி குங்குமம்
திங்கள் முகத்தில் செம்பவளம் என
திகழும் மங்கலக் குங்குமம்
தேவி காமாட்சி திருமுகத் தாமரை
காக்கும் மங்கலக் குங்குமம்  (குங்கும)

காசி விசாலாட்சி கருணை முகத்தில்
கலங்கரை காட்டும் குங்குமம்
கண்ணகியோடு மதுரை நகரில்
கனளாய் எழுந்த குங்குமம்  (குங்கும)

நலம்பெற வழங்கும் குங்குமம்
நற்குல மாதர் கற்பினைப் போற்றி
நாட்டினர் வணங்கும் குங்குமம்  (குங்கும)


சித்திரை தேரோடும்...

சித்திரை தேரோடும் மதுரையிலே
ஒரு பத்தரை மாற்று தங்கம் இருக்குதம்மா
இத்தரை மீதினிலே கண்கண்ட தேவியம்மா
முத்திரை தேரோடும் மீனாட்சி தெய்வமம்மா
முத்தமிழும் வளர்ந்துவரும் நகரமம்மா
அங்கே நித்தமும் ஓடிவரும் வைகை நதி வளமம்மா
வித்தாகி விளைவாகி வடிவான அம்பிகையும்
சத்தான பொருள் அனைத்தும் சொத்தாக தந்திடுவாள்
பாண்டிய மண்ணிலே பிட்டுக்கு மண்சுமந்த
முக்கண்ணன் சொற்றீசா புகழோங்கி நிறைந்திருக்கும்
மூக்குத்தி அணிந்திருக்கும் அருளையெல்லாம் அள்ளி தருக
அன்னையாம் மீனாட்சி கருணையும் நிறைந்திருக்கும்


சின்னஞ்சிறு பெண்போலே...

சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை உடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே சீர் துர்க்கை சிரித்திருப்பாள்
பெண்ணிவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகிக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது  (சிவ)

மின்னல்போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாய் எண்ண மெல்லாம் நிறைவாய்
பின்னல் ஜடைபோட்டு பிச்சிபூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்  (சிவ)


காண காண இன்பம்....

காண காண இன்பம் தரும் ராத்திரி
மூன்று கோலங்களில் காட்சி தரும் அன்னையின் (நவராத்திரி)
முதல் மூன்று நாட்களிலே துர்க்கையும் அவளே
அன்பர் குறைகேட்டு தொல்லைகளைத் தீர்ப்பவள் அவளே
மதம் கொண்ட மகிஷன் தனை வதைத்தவள் அவளே
மங்கையரின் குங்குமத்தை காப்பவள் அவளே (காண காண)
அடுத்த மூன்று நாட்களிலே அலைமகளாவாள்
உயர்ந்த அன்பும் அழகும் பெற்றுவாழ ஆசியும் தருவாள்
எடுத்த செயலை முடிக்க உதவும் செல்வமளிப்பாள்
பரம ஏழைதனை செல்வந்தனாய் மாற்றியமைப்பாள் (காண காண)


தீப ஸ்தோத்ரம்...

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஸத்ய சந்தரவதனே
நித்திய ஸ்வரூபாகார ஸாந்நித்ய மங்களே
பாபாந்த கார பவ பஞ்சன ப்ரத்யக்ஷதேவி

மனோ பாவஸம்பூர்ணானந்த ஜாஜ்வல்ய ஜோதிஸ்வரூபே
தேவாஸுர முனிவந்தய பஜயுகளே
அண்டாண்ட புவனங்கள் கொண்டாடும் ஜோதியே
அக்ஞான ரகித சுப விக்ஞான ஜோதியே
சதகோடி பானுப்ரகாச சம ஜோதியே
மனோ பாவஸம்பூர்ணானந்த ஜாஜ்வல்ய ஜோதிஸ்வரூபே

சகல லோகமும் ஏக மெய் ஜோதியே
முக்குணமும் தந்த முடியான ஜோதியே
எக்காலமும் ஒளி வீசும் இன்பமெய் ஜோதியே
தீபமத் யஸ்த துய மய ஜோதியே (மனோ)

பாபஸம் ஹார பரமானந்த ஜோதியே
நாசிமுனை நின்ற திருவான மெய் ஜோதியே
மாசிலா மாதோங்கு வளர் மெய் ஞான ஜோதியே
நீங்காத நடு நிலைமை நின்ற மெய் ஜோதியே
முக்கண முக்கோடி முடிதொழும் ஜோதியே
எப்போதும் என் முன் வந்து நிற்கும் மெய் ஜோதியே
திரோதாக்னியாக திரண்ட மெய்ஞான ஜோதியே
க்ரோதாதி மோகங்கள் கொளுத்தும் மெய் ஜோதியே (மனோ)

ஹேமச் சுடர் வீச எழுந்தோங்கும் ஜோதியே
எந்நாளும் அணையாத அகண்ட மெய் தீபமே
சந்த்யா காலத்தில் செழித்தோங்கும் தீபமே
சகல சௌபாக்யம் தந்தருளும் ஸத்குரு தீபமே  (மனோ)

அந்த காரங்களை அழித்தோங்கும் மெய் தீபமே
காஞ்சிமாபுரி வாழ் காமகோடி நித்ய தீபமே
தில்லையில் வாழுகின்ற சிவகாமி தீபமே
எல்லைப் பிடாரியாய் எங்கு மெரி தீபமே (மனோ)

அண்ணாமலை வளர் அருணகிரி தீபமே
உண்ணாமலையாக ஓங்கும் மெய் தீபமே
மயிலை நகர் தன்னில் மணக்கும் மெய் தீபமே
மதுரையில் விளையாடும் மீனாக்ஷி தீபமே  (மனோ)

காசி ஸ்ரீவிச்வேசர் களிக்கும் மெய் தீபமே
கோமதி கௌரி கௌமாரி தீபமே
திருபுராதியர்கள் துதித்த நெய் தீபமே
கண்ணப்பன் கண்டு களித்த மெய் தீபமே (மனோ)

பெண்களுக்கு அணியான பதிவ்ருதா தீபமே
கண்காக்ஷியான தொரு களித்த மெய் தீபமே
காளஹஸ்தியில் வாழும் ஞானம்பாள் தீபமே
கண்ணப்பன் கண்டு களித்த மெய் தீபமே (மனோ)

பூத தேகத்தை பொசுக்கும் மெய் தீபமே
வேதனைய கற்றும் விஞ்ஞான தீபமே
காலனை காலால் உதைத்த மெய் தீபமே
பாலன் மார்கண்டனை காத்த மெய் தீபமே (மனோ)

லக்ஷ்மி பராசக்தியான மெய் தீபமே
பக்ஷமாய் இக்ஷணம் போற்றினேன் தீபமே  (மனோ)

கஷ்டங்கள் வராமல் காக்கும் தீபமே
இஷ்ட தேவதை என்று நான் ஏற்றினேன் தீபமே (மனோ)

எந்நாளும் அழியா செல்வம் தரும் தீபமே
எமபாதை இல்லாமல் காக்கும் மெய் தீபமே (மனோ)

சகல பாக்யம் தரும் சாச்வத தீபமே
ஸகல சௌபாக்யம் அளித்து ஸத்துக்கள் ஸேவை அளிக்கும் தீபமே

சுந்தரி மனோஹரி சுதந்தரி தீபமே (மனோ)
தக்ஷணம் வந்து காக்கும் தாக்ஷõயணி தீபமே
பக்ஷமாய் என் அகத்தில் வாழும் ஸ்ரீ பரப்ருஹ் மஸ்வரூ பிணி தீபமே
பக்தியுள்ள மன தெனக்குத்தந்த ஸ்ரீபாலதிரிபுரசுந்தரி தீபமே
(மனோபாவ பூர்ணாநந்த ஜாஜ்வல்ய ஜோதி ஸ்வரூபே)

மங்களம் ஜய மங்களம் நித்ய மங்களம் ஜய மங்களம்
நித்ய மங்களம் சுப மங்களம் மங்களம் சுப மங்களம்.

திருவிளக்கு பூஜையிலே....

1. திருவிளக்கு பூஜையிலே
தேவிநாம் பாடுவோம்
திருவிளக்கு ஒளியினிலே
தேவியை நாம் காணுவோம்  (திரு)

2. தேவி தேவி என்று சொல்லி
தினமும் தினமும் பாடுவோம்
தேவி மலர் அள்ளி அள்ளி
திருவிளக்கில் போடுவோம்   (திரு)

3. மல்லிகை மலர்களையும்
மாலையாகச் சூடுவோம்
மரிக்கொழுந்து ரோஜாக்களை
மந்திரம் சொல்லிப் பாடுவோம்  (திரு)

4. மஞ்சள் பூசி மாதரெல்லாம்
மகிழ்ச்சி பொங்க கூடுவோம்
மாதந்தோறும் வெள்ளிக்கிழமை
மனமகிழ்ந்து பாடுவோம்   (திரு)

5. ஜோதியாய் சுடரொழிக்கும்
சுந்தரியை வணங்குவோம்
ஜோதி ஒளியோடு நாங்கள்
சூடதீபம் காட்டுவோம்.  (திரு)


அம்மன் துதி

பூரணி, புராதனி, சுமங்கலை, சுதந்தரி,
புராந்தகி, த்ரியம்பகி, எழிற்
புங்கவி, விளங்குசிவ சங்கரி, சகஸ்ரதள
புட்பமிசை வீற்றிருக்கும்

நாரணி, மனாதீத நாயகி, குணாதீத
நாதாந்த சத்தி, என்றுன்
நாமமே யுச்சரித் திடுமடியர் நாமமே
நானுச்ச ரிக்கவசமோ?

ஆரணி சடைக்கடவு ளாரணி யெனப்புகழ்
அகிலாண்டகோடி யீன்ற
வன்னையே! பின்னையும் கன்னியென மறைபேசு
மானந்த ரூப மயிலே!

வாரணியு மிருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவையரசே!
வரை ராஜனுக்கிருகண் மணியா யுதித்தமலை
வளர்காத லிப்பெணுமையே!

பாகமோ பெறவுனைப் பாடவறியேன்: மல
பரிபாகம் வரவுமனதிற்
பண்புமோ சற்றுமிலை: நியமமோ செய்திடப்
பாவியேன் பாபரூப

தேகமோ திடமில்லை: ஞானமோ கனவிலுஞ்
சிந்தியேன்: பேரின்பமோ
சேரவென்றாற் கள்ள மனதுமோ மெத்தவுஞ்
சிந்திக்கு தென் செய்குவேன்?

மோகமோ? மதமோ? குரோதமோ? லோபமோ?
முற்றுமாற் சரியமோதான்
முறியிட்டெனைக் கொள்ளு(ம்): நிதியமோ தேடவெனின்
மூசுவரி வண்டுபோல

மாகமோ டவும்வல்லன்: எனையாள வல்லையோ?
வளமருவு தேவையரசே!
வரை ராஜனுக்கிருகண் மணியா யுதித்தமலை
வளர்காத லிப்பெணுமையே!

-தாயுமானவர்

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்துக்
கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றியே நிற்பாய்

வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்
கரியதிரி கோட்டுக் கலைமிசை மேல் நின்றாயால்
அரியரன் பூமேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிரந் சோதி விளக்காகியே நிற்பாய்

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
செங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்தவே நிற்பாய்

- சிலப்பதிகாரம்


சாவேரி துதி

பல்லவி

எப்படியாட் கொள்வாயோ தேவி மீனாக்ஷி எந்தனை (எ)

அனுபல்லவி

அற்புதமாமதுரைப்பதி தன்னில் - ஒரு
ஆட்சியாய் விளங்கும் மீனாக்ஷி கருணாகடாக்ஷி - எந்தனை (எ)

சரணம்

ஒருநாளாகிலும் உன்னை திருவனந்தல் வேளைவந்-
துரிமையுடனே பணிந்தறியேனே - பொற்றா
மறையில் வந்தருளிய கருணைவடிவே! உந்தன்
மஹிமை அறியாச் சின்னஞ்சிறியேனே நாளும்
அறிவையர்மயக்கமே திறமென நினைந்துகொண்
டாக்கமுடன் விளக்கை நோக்கி விழும் வண்டுபோல்

முடுகு

ஆசை வளர்ந்ததனால் மிகவேமன
ரோஸமிழந்தையோ - கையிலேயுள
காசு பணம் சிலவானதனால் ப்ரயோசனம்
ஒன்றும் இல்லாதவனாகிய - எந்தனை   (எ)

2

கட்டிக் கரும்பிருக்க எட்டியைப் புசிப்பார்போல்
காடு மலையுஞ்சுற்றி அலைந்தேனே - பொல்லா
துஷ்டத்தனத்துக்கெல்லாம் எட்டாளாயிருந்துநான்
துன்மார்க்கத்தால் மேனி உலர்ந்தேனே - ஒரு
மட்டுக்குள் அடங்காமல் கஷ்டப்படுத்தி வைக்கும்
வயிற்றுக் கொடுமையால் ஹ்ருதயத்தில் தயையில்லாத

முடுகு
மானிடனைக் கருணாகர இந்த்ரன்
ஸமானமெனச் சொல்லியே நிதமும் - கொடி
தானநரஸ்துதி பாடி மெலிந்தவ
மானம் மிகுத்திடு பாதகனாகிய எந்தனை  (எ)

3

ஸ்யாமளியே உன் திருநாம தேயத்தை நன்றாய்
தமிழ் மதுரக்கவியில் பதித்தேனா? - அதி
நேமத்துடனே உந்தன் கோமள வடிவைச் சந் -
நிதியில் நின்றாகிலும் துதித்தேனா?
காமதகனரான ஸோமஸுந்தரேஸர் கண்ட
காட்சிக்குகந்த மீனாட்சி ! பக்த ரக்ஷகி -

முடுகு

கானலை நீரெனவே எண்ணியே
அலைமானதைப் போலவே ஈனர்கள் வாசலில்
நானினிமேல் அலையாமலுமே யருள்
தீனதயாபரியே - க்ருபாநிதியே - எந்தனை (எ)


அம்மன் பாடல்

கோடிக்கண்கள் போதுமோ தாயே உந்தன்
கோலாகல காக்ஷிகாண
பாடிப்பணியும் தொண்டருடன் உந்தன்
பரப்ரம்ம ஸ்வரூபத்தைக் காணக் காணக் காண (கோடி)

தேடித் தெவிட்டாத தேனே உந்தன்
தேஜோமய ஜோதிகாண
வாடி அலையுது என்நெஞ்சம் இனி
வருந்தேல் என வரம்தா தேவீ
நீடித்திருக்கும் செல்வம் நீயே
நித்ய ரூபமதருள்வாயே
ஓடித்திரியும் வேலனுடன் உன்னை
ஒய்யாரமாக எங்கும் காணக் காணக் காண (கோடி)

பீடித்திருக்கும் வினைபோகும்
கொடும்பேதன்ம புத்தி தூரத்தேகும்
ஆடும் மயில்மீது வரும் அந்த
ஆனந்த முருகனைக் காண்பார்க்கு
சூடியமதி முடியாளே
சைதன்ய ரூபி லலிதேஸ்வரி
சுருதிமறையிடும் பாலே உன்னை
சுந்திர முருகனுடன் காணக் காணக் காண (கோடி)


தேவி-தமிழ் மாத வழிபாடு

தேவீ உன் மகிமை தன்னைப் புகழ்ந்திட
எந்தனால் ஆகுமோ
பூலோகம் புகழும் பூலோக கைலாசம்
ஆலவாய் தன்னிலே லீலைகள் செய்திடும்  (தேவி)

சித்திரை திங்களில் சிறப்புற்று விளங்கும்
சிங்கார கல்யாண வைபவமும்
வைகாசித் திங்களில் வஸந்த மண்டபத்தில்
ஈசருடன் கூடி நேசமதாம் அழகும்  (தேவி)

ஆனித்திங்களில் ஆடிடும் ஊஞ்சல்
ஆடித்திங்களில் கனகதண்டிசையும்
ஆவணித் திங்களில் ஹாலாஸ்ய நாதருடன்
வந்தியின் பட்டுக்கு வந்து மண்சுமக்கும் (தேவி)

புரட்டாசித் திங்களில் புண்ணிய நவராத்திரி
கொலுவீற்றிருக்கும் நின்பேரழகும்
ஐப்பசித் திங்களில் அடிக்கும் கோலாட்டமும்
கார்த்திகைத் திங்களில் லக்ஷதீப அழகும் (தேவி)

மார்கழித் திங்களில் எண்ணை காப்பழகும்
தைத்திங்களில் பூசதெப்பத்தின் அழகும்
மாசித்திங்களில் மண்டலோத்ஸவமும்
பங்குனித் திங்களில் வெள்ளி அம்பலமும் (தேவி)

அம்மன் நாமாவளிகள்

1. ஸங்கரி கருணாகரி ஜகதீஸ்வரி

2. பர்வதராஜகுமாரி பவானீ
பஞ்ஜய க்ருபாயா மம துரிதானி
தீனதயாபரி பூர்ண கடாட்சி
தேவித்ரிபுர ஸுந்தரி மீனாக்ஷி

3. அம்ப பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரீ
ஆதிபராசக்தி பாலயமாம்

மங்களம்...

மங்களமே ஜய மங்களமே
ஸ்ரீமீனாட்சி தேவிக்கு மங்களமே

மங்களமே சுப மங்களமே
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரிக்கு மங்களமே

மங்கள நாயகி ஜகஜ்ஜனனி
மதுரித பாஷினி உமையவளே

சங்கரி சாம்பவி சாந்த தயாபரி
ஜெகதீஸ்வரிக்கு ஜெய மங்களமே  (மங்களம்)

ஜெய ஜெய வந்தினி மாம்பாஹி
ஜெய பரமேஸ்வரிக்கு மங்களமே

ஆதி சக்தி பரப்ரம்மஸ்வரூபிணி
ஆனந்த ரூபிணிக்கு மங்களமே

மஹிஷாசுர சம்ஹாரிணியே
மஹேஸ்வரி உமக்கு ஹாரத்தியே

ஹாரத்தியே நித்ய ஹாரத்தியே
குங்கும சந்தன ஹாரத்தியே

ஹாரத்தியே சுப ஹாரத்தியே
ஆனந்த கற்பூர ஹாரத்தியே மங்களமே

உலகாளும் உமையவளே

உலகாளும் உமையவளே உன் பாதம் பணிந்து நின்றேன்
உன் புகழைக் கேட்டு எந்தன் உள்ளமெல்லாம் உருகுதம்மா (உன்)

வெள்ளி மலை வாசலிலே சிவனோடு சேர்ந்து நின்றாய்
விநாயகனும் வேலனும் விளையாட சிரிக்கின்றாய் (உன்)

கன்னியா குமரியில் நீ கன்னியாய் வளர்ந்தாய்
மதுரையிலே மீனாட்சியாய் மனங்களிந்து பேசிடுவாய்
மயிலையிலே கற்பகமாய் மங்கல வாழ்வு தந்திடுவாய்

கருணை வடிவானவளே

கருணை வடிவானவளே கரம்குவித்தோம் அம்மா
கவலையெல்லாம் தீர்த்து ஆளும் கருமாரி அம்மா
அருள்பொழியும் ஆயிரம் கண்ணுடைய தாயே உந்தன்
அடிமைகளைக் காத்தருள்வாய் அனுதினமும் நீயே

புரிந்தும் புரியாது செய்த பெரும் பிழைகள் எல்லாம்
பொறுத்தருள வேண்டும் உந்தன்
பொன்னடியை வணங்குகின்றோம்
மகிமை பல செய்து வரும் மகாசக்தி அன்னை - இந்த

மெய்தலத்தில் அவதரித்தாள் என்ற வார்த்தை உண்மை
தேசமெல்லாம் போற்றிவரும் தேவி எங்கள் கருமாரியம்மா
ஈஸ்வரியே இன்பமெல்லாம் தந்தருள்வாய் கருமாரி
மாசுகளை நீக்கிடுவாய் மங்கள குண மாரி
மனிதர் குல தெய்வமாய் விளங்கும் உபகாரி.

காலமெல்லாம் காத்திருந்தாலும்

காலமெல்லாம் காத்திருந்தாலும்
காணக்கிடைக்காதவள் கருமாரி
கனிந்துருகி உள்ளம் கொதித்தவர்க்கு
கணத்திலே காட்சி தந்திடுவாள் தேவி கருமாரி

காலமெனும் தேரிலேறி கருமாரி நீ வருகையிலே
காணக் கண் கூசுதம்மா கோடி ஜோதி தெரியும்மா
பூரண நிலவினிலே பொன்மேனி ஒளி விடவே
புற்றினிலே தோன்றுவாள் எங்கள் கருமாரியம்மா

புண்பட்ட மனதிலெல்லாம் பூரணமாய் நிறைந்திடவே
பொங்கிடும் செல்வமெல்லாம் தந்திடுவாள் கருமாரி
கருநாகமாய் வந்திடுவாள் கைகுவிகுத்த பேருக்கு
காட்சியும் கொடுத்திடுவாள் எங்கள் கருமாரியம்மா
திரிசூலம் ஏந்திடுவாள் திருநீறு அணிந்திடுவாள் (திரி)

தீராத நோயெல்லாம் தீர்த்திடுவாள் கருமாரி
சரவிளக்கு சுடர்விடவே
சாற்றிய மாலையெல்லாம் உருமறைக்க
கற்பூரம் காட்டியே கை தொழுதால்
கண் திறந்து பார்த்திடுவாள் எங்கள் கருமாரி
கிணிமணி கிலுகிலுக்க கால் சலங்கை சலசலக்க
உடலெங்கும் சிலுசிலுக்க உன் சிரிப்பொலி கேட்குதம்மா
எங்கள் சிந்தையும் குளிருதம்மா (எங்கள்)

கருணை உள்ளம் கொண்டவளே எங்கள் கருமாரி
கண்ணாயிரம் கொண்டவளே எங்கள் கருமாரி
பொன்னாபரணம் பூண்டவளே எங்கள் கருமாரி
பண்ணாயிரம் பாடவந்தோம் எங்கள் கருமாரி

சக்தி வந்தாளடி

சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்கு தந்தாளடி
பக்தி கொண்டாடி உன்னை பெண்ணாக்கி தாயாக்கி
எல்லாமும் பெய்யாக்கி முன்னாலே நின்றாளடி(சக்தி)

அசைந்தால் விண்ணுலகம் அசையும் தன்னாலே
நடந்தால் மண்ணுலகம் நடக்கும் பின்னாலே
காற்றடிப்பதும் மழைபொழிவதும் இடி இடிப்பதும் யாராலே
ஜனனமென்பதும் மரணமென்பதும் உலகில் வந்தது யாராலே

விண்ணிலிருந்து மண்ணில் விழுந்த மெய்ப்பொருள் சக்தியடி
பெண்ணிலிருந்து பெண்ணை நடத்தும் அற்புத சக்தியடி
பிள்ளை வடிவை உள்ளே வைத்தவள் அன்னை சக்தியடி
சாந்தமும் நானே கோபமும் நானே
தேவியும் நானே காளியும் நானே.

வரமளித்து உலகமெல்லாம்

வரமளித்து உலகமெல்லாம் வாழவைக்க வந்தவளே
கரம் குவித்து வேண்டுகின்றோம்
காத்திடுவாள் கருமாரி! காத்திடுவாள் கருமாரி!!
மாரியம்மா எங்கள் மாரியம்மா மாரியம்மா எங்கள் மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா (உன்னை)

நேரினிலே நீ இருக்கும் கோவிலிலே வந்து(நேரினிலே)
நெஞ்சமதில் உன் பாதமே தஞ்சம் எனக்கொண்டு (நெஞ்சம்)

கோரும் வரம் யாவும் தந்திடுவாய் என்று
கூறுதம்மா அன்பர் திருக்கூட்டமெல்லாம் இன்று (கூறுதம்மா)

திருச்சாம்பல் அணிந்துக்கொண்டால் மனமும் மகிழுதாம்
தீராத நோய்களையும் தீர்த்து வைக்குதாம் (தீராத)

வருவார் தம் வாழ்வில் எல்லா வளமும் பெருகுதாம் (வருவார்)
வாழ்த்துகின்ற மனதில் என்றும் இன்பம் தருகுதாம் (மாரி)

ஈஸ்வரியே மகமாயி

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்க
எண்ணி வந்தவரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா - இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா (ஈஸ்வரி)

சமயபுரம் சன்னதியின் வாசலிலே
லோக சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே
கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய்
நாங்க கொண்டாட வந்ததற்கும் பலன் கொடுப்பாய் (ஈஸ்வரி)

வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய்
சிங்க வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்
ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய் - இந்த
உலகத்துக்கே உன் அருளால் குடைபிடிப்பாய் (ஈஸ்வரி)

படவேட்டு எல்லையிலே குடி குருப்பாய்
நல்ல பத்தினிகள் மஞ்சளுக்கு துணை இருப்பாய்
மங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே - அதை
குங்குமமாய் தரவேணும் நெத்தியிலே

கண்ணபுர நாயகியே

கண்ணபுர நாயகியே மாரியம்மா - நாங்க
கரகமேந்தி ஆடவந்தோம் பாருமம்மா
கண்திறந்து பார்த்தாலே போதுமம்மா - எங்க
கவலையெல்லாம் மனச விட்டு நீங்குமம்மா (கண்ண)

உத்தமியே உன் அருளை நாடி வந்தோம்
பம்பை உடுக்கையோடு உன் மகிமை பாடி வந்தோம்
பச்சிலையில் தேரெடுத்து வரவேண்டும் - உன்
பக்தருக்கு வேண்டும் வரம் தரவேண்டும் (கண்ண)

வேப்பிலையால் நோயெல்லாம் தீர்த்திடுவாய்
மனவேதனையை திருநீற்றால் மாற்றிடுவாய்
காப்பாற்ற சூலமதை எந்திடுவாய் தினம்
கற்பூர ஜோதியிலே வாழ்ந்திடுவாய் (கண்ண)

மலையேறும் தாயுனக்கு கும்பமிட்டோம்
அரிசி மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலிட்டோம்
உலகாளப் பிறந்தவளே அருள் தருவாய் - எங்க
வீடெல்லாம் மங்களம் பொங்க வரம் தருவாய்

ஆடி வெள்ளிக் கிழமை

ஆடி வெள்ளிக் கிழமையன்று
அம்மனுக்கு மஞ்சள் காப்பு
ஆதி சக்தி கருமாரி அம்மனுக்கு
அழகிய மஞ்சள்காப்பு அழகிய மஞ்சள்காப்பு
கூடி அவளைக் கும்பிடுவோர்க்கு கோடி நன்மைகள் பாடு
ஆடியில் அவளைக் கொண்டாடி ஆயிரம் நாமங்கள் கூறு(ஆடி)

வேற்காட்டில் குடியிருக்கும் வேப்பிலைக்காரி
கூவும் அன்பர் குறைதீர்க்கும் கோவிந்த மாரி
தரணியின் தாயவளே நாரணி ஓங்காரி
பாரெல்லாம் படியளக்கும் பரமசிவன் பாரி (ஆடி)

குங்குமத்தில் குளித்து நிற்பாள் குங்குமக்காரி
மஞ்சளுடன் நிறைந்திருப்பாள் மங்களமாரி
நெஞ்சார துதித்து நின்றால் அணைத்திடுவாள் வாரீர்
அன்னைபோலக் காத்திடுவாள் ஆனந்த சுகுமாரி (ஆடி)

வேப்பமரத்தடியில் வீற்றிருக்கும்

வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் மாரியம்மா
கேட்ட வரம் அளிப்பாள் கிராமத்து காளியம்மா
மஞ்சளில் குளித்திருப்பா குங்குமத்தில் சிரிச்சிருப்பா
நெஞ்சில் நிறைஞ்சிருப்பா நீலி மகமாயி அம்மா

ஆனந்த ஞான ரதம் ஏறிவந்தாள் மாரி
ஆடிடுவோம் பாடிடுவோம் ஆலயத்தில் கூடி
அம்மன் புகழ் பாடி எங்கள் அம்மன் புகழ்பாடி
ஆவணியில் அவதரிச்சா காளி மகமாயி

வேலப்பன் சாவடியில் வேற்காட்டு மாரி
பாம்பாக உருவெடுத்தா பார்வதியாம் தேவி
பவுர்ணமியில் பால் நிலவில் படமெடுத்து ஆடி (ஆனந்த)

வேலாயுதத் தீர்த்தம் அது நோயாளியை தேத்தும்
வேப்பிலையின் வாசம் பல வியாதிகளை ஓட்டும்
எலும்பிச்சம் பழத்தினி லே இருக்கும் மகமாயி
எமனுக்கும் எமனாவாள் எங்கள் கருமாரி (ஆனந்த)

ஆயிரம் கண் அம்பிகையின் அது ஆராதனை பாரு
ஆலால சுந்தரியின் கோலாகலம் ஜோரு
அங்காள பரமேஸ்வரி சங்க நாதம் கேளு
ஆலயம்மன் கோவிலிலே காவடி நீ ஆடு (ஆனந்த)

மகமாயி மனசு வைச்சா

மகமாயி மனசுவச்சா மங்களமாய் வாழ வைப்பாள்
ஈஸ்வரியே இரக்கம் கொண்டு எல்லோர்க்கும் வாழ்வளிப்பாள்
அந்த கருமாரி கண்பார்த்து காலமெல்லாம் காத்தருள்வாள்
கருமாரி கருணையினால் கவலை பறக்குது - அவள்
கண் திறந்து பார்ப்பதில்லை செல்வம் பெருகுது
எந்நேரம் அவள் நாமம் உரைத்தாலே
எந்த துன்பம் வந்தாலும் சென்று மறையுது (கருமாரி)

ஓம்சக்தி சொல்லுக்குள்ளே உறைந்திருப்பாளாம்
உலகையெல்லாம் காத்து என்றும் அருள் புரிவாளாம்
உயிருக்குள் உயிரை வைத்து காத்து நிற்பாளாம்
வாழ்வுக்கு வளமை எல்லாம் தந்திடுவாளாம்
நெருப்பெல்லாம் அவள்முன்னே பூவாக மாறும்
நெஞ்சுறுக பாடினால் அவள் அருள்மழை பொழியும்
சூலமும் சக்தியும் அவள் கரத்தில் அவள் கரத்தில் ஜொலிக்கும்
சுற்றம் பகை நீக்கி அவை நம்மை வந்து காக்கும் (கருமாரி)

மகமாயி சமயபுரத்தாயே

மகமாயி சமயபுரத்தாயே உன்
மகளெனக்கு எல்லாமும் நீயே
கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்
தரும் குங்குமந்தான் மங்கையர்க்கு காவல் (மகமாயி)

கண்கொடுக்கும் கண்ணபுர தேவி
அருள்தருவாள் இமயமலைச் செல்வி
மூவிலை வேல் கைகொண்ட காளி
பகை முடிக்க வந்த எங்கள் முத்துமாரி (மகமாயி)

வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு - அது
வினைதீர்க்க நீ அமைத்த கூடு
திருநீறே அம்மா உன் மருந்து - அதை
அணிந்தாலே நோய் ஓடும் பறந்து (மகமாயி)

பெற்றவளே நீ அறிவாய் என்னை உன்
பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை
கற்றகலை சிறு துளியே எனக்கு - அதை
கடலாக்கி வைத்த புகழ் உனக்கு (மகமாயி)

ஆடி வெள்ளிக்கிழமையிலே ஆத்தா

ஆடி வெள்ளிக்கிழமையிலே ஆத்தா உன் கோவிலிலே
பாடவந்த எந்தனுக்கு பக்கத்துணை நீ இருப்பாய்
நாடிவரும் தீவினைகள் ஓடிடவே நீ அருள்வாய்
தேடிவந்த அடியேனுக்கு தேவி நீ தயை புரிவாய் (ஆடி)

ஆயிரவல்லி அம்மன் என்று பெயர் உனக்கு உண்டு
எடுத்து பார்த்தனூரில் எழில்மேவும் கோலம் கொண்டு
இணைந்திடும் தூயவளே மாரியம்மா
என்றும் என் துணையாய் வாருமம்மா
பொங்கும் கடலாகி எரியும் அனலாகி
எங்கும் காட்சி தரும் தாயும் நீயம்மா (ஆடி)

ஞாயிற்றுக் கிழமையிலே ராகுகால அர்ச்சனையில்
போற்றி உனை வணங்கிடவோர் பக்தர்பல கோடியுண்டு
ஆயிரமாயிரமாய் அருளை தாருமம்மா
ஆனந்த மழைதூவி நீயும் வாருமம்மா
ஞாயிறின் ஒளியாகி காரிருள் துயர்போக்கி
ஞானமெங்கும் செழித்திடவே நல்லருளைத் தாருமம்மா

பொன்மாரி பொழிகின்ற

பொன்மாரி பொழிகின்ற வாசலிது - எங்கள்
பன்னாரி மாரியம்மன் கோவிலிது
கண்ணேறு படுமழகு தேவிமுகம் எம்மை
காப்பதற்கு இங்கு வந்த தெய்வமுகம் (பொன்)

கொங்கு நாட்டின் பெருமாள்மலை வேதகிரி
உடன் சங்ககிரி பத்மகிரி நாககிரி
அஞ்சுமலை நடுவினிலே பன்னாரு - அங்கு
அமைந்திருக்கும் தாயல்லவோ அருள்மாரி (பொன்)

தீவளர்த்து திருவிழாவில் தீ மிதிப்போம்
தாய் திருமுகத்தை புகழ்ந்து நிதம் பாடி வைப்போம்
மறுபூஜை திருவிழாவும் பின் தொடரும்
நிறைமங்கலமாய் திருவிளக்கு பூஜைவரும் (பொன்)

வேம்பாலே வேலியிட்ட கோட்டையிது
திருவென்னீரை மருந்தாக மாற்றுவது
நாம் வாழ துணையானாள் நாயகியே - என்றும்
நலம்கோடி தரும் இந்த அருள்படியே (பொன்)

கட்டுப்புது மஞ்சள்

கட்டுப்புது மஞ்சள் நிறம் பாதமலர் தங்கநிறம்
வட்டமுகம் சாமந்தி மாரியம்மா - உன்
வண்ண உடல் பொன்னழகு காளியம்மா (கட்டு)
சின்னநகை முல்லைச்சரம் தேன்விழிகள் வெள்ளிச்சரம்
வண்ண முத்து மாலை கொண்ட மாரியம்மா உன் (கட்டு)

அன்னைமுகம் பால்வண்ணம் காளியம்மா
கார்கூந்தல் மேகநிறம் கண்மணிகள் வண்டு நிறம்
மேற்புருவம் கருங்கோடு மாரியம்மா உன் (கட்டு)
பேரும் கருமாரியன்றோ காளியம்மா

குங்குமம் சிவப்பு நிறம் கொவ்வை தங்கஇதழ் நிறம்
மங்கை நகம் செம்பவளம் மாரியம்மா - உன்
பொங்கும் அன்பு என்ன நிறம் காளியம்மா

மாரி வந்தாள் உருமாறி வந்தாள்

மாரி வந்தாள் உருமாறி வந்தாள்
மணலைக்குடமாக்கும் மகிமை கொண்டு ஈஸ்வரியாள் (மாரி)

தேடிவந்தாள் நலம்பாடி வந்தாள்
ஜெகமதக்கினிப் பத்தினி தெய்வீக உத்தமியாள் (மாரி)

நாடி வந்தாள் தஞ்சைநகர் புகுந்தாள்
நல்லவர்க்கு தாயாக தீயவர்க்கு தீயாக
சமயபுரம் அந்த அன்னையகம் பன்னாரியில் அவள் அன்பு முகம்
ஆடிவெள்ளிக் கிழமையிலே அம்மனுக்கு பொங்கல் வைத்தா
தேரினையே விட்டிறங்கி நேரினிலே வந்து நிற்பாள்
கையிலிருக்கும் வேப்பிலையாள் மெய்குளிரச் செய்திடுவாள்
கதியென்று நம்பி விட்டால் வழியொன்று காட்டிடுவாள்
பெற்றவர்க்கு புகழ் கொடுத்தாள்
பிள்ளைகளுக்குத் தலை கொடுத்தாள்
மற்றவர்களுக்கு அருள் கொடுத்தாள் மகமாயி
வற்றாத பொருள் கொடுத்தாள் திரிசூலி
மகமாயி அம்மா அருள்மாரி
படவேடு வாழும் ஓங்காரி அருள்மாரி அம்மா
திரிசூலி அம்மா ஓங்காரி

ஓம் சக்தி பராசக்தி

ஓம் சக்தி பராசக்தி ஆதிசக்தி நீ
ஓங்கார ரூபம் கொண்ட மகாசக்தி நீ
ருத்ரகாளி பத்ரகாளி உக்ரகாளி நீ
கையில் சூலமெடுத்து நீ சங்கு சக்கரமெடுத்து
அக்கினியும் நீ எடுத்து ஆடிவருவாய் - உன்

மக்கள் குறைதீர்க்க இங்கு ஓடி வருவாய்
அகிலமெல்லாம் வணங்கும் மாரியம்மா - உன்

காலடியில் எங்க சரணமம்மா
ஏழுகடல் மூவுலகும் உந்தனாட்சியே (அகிலமெல்லாம்)

உலகம் பிறந்தம்மா உன்விஸ்வருபத்திலே
உயிர்கள் பிறந்ததம்மா சிவசக்திலீலையிலே
தீருதம்மா குறைகள் தீருதம்மா
சேருதம்மா செல்வம் வாழ்வினிலே
மும்மூர்த்தி காட்டிட்ட மூகாம்பிகை
ஓம் எனும் மந்திரத்தின் ஜெகதாம்பிகை

எங்க ஊரு மாரியம்மா

எங்க ஊரு மாரியம்மா முத்துமாரி
ஏழைகளைக் காத்தருளும் மகமாயி
அடைக்கலம் தாயே - நீ அருள் புரிவாயே
சங்கரி நீயே ! சத்தியம் நீயே
சாமுண்டி ஈஸ்வரியாய் சிரிப்பவள் நீயே
எங்களுக்கான தெய்வமும் நீயே
குங்குமத்தில் மங்கலமாய் குடியிருக்கும் உமையவளே
வாரி வாரி அருளை வழங்கும் ஸ்ரீ தேவியே (எங்க)

மாவிளக்கேற்றி உன்னைக் கும்பிடுகிறோம்
மனைவிளக்காக நீ வர வேண்டும்
வேப்பிலையில் சிரிப்பவளே வேண்டும் வரம் தருபவளே
காக்க வேணும் எந்தநாளும் பூவாடைக்காரி (எங்க)

சிலிம்பொலியோடு முழங்குது மேளம்
உன்அழகிய காட்சி அது அற்புதக் கோலம்
தொழுவார்க்கெல்லாம் என்றும் துணைவரும் சூலம்
ஓங்காரி ரீங்காரி உலகையாளும் மாகாளி
நல்லதெல்லாம் நடத்தி வைக்கும் கருமாரியே (எங்க)

ஒருமாரி உலகிற்கே உயர்மாரி திரிசூலி
ஓங்காரி திருவேற்காட்டில் உருவான கருமாரி
கருமாரி உருமாரி கதிமாரி திதிமாரி உழல்கின்ற
எளியோனை கடைத்தேற்றும் மகமாயி (ஒரு மாரி)

திருஞானம் கவிபாட சிவஞான பால்தந்தாய்
திருமுருகன் விளையாட சிவசக்தி வேல் தந்தாய்
அபிராமி தாதருக்கு அந்தாதி தந்தாய் நீ
அடியேனும் இசைபாட சிறிதேனும் அருள்வாயே (ஒரு)

நவகோண நடுமையாய் நவரத்ன மணிபீடம்
சிவகாமி உனைச்சுற்றி நவசக்தி அவதாரம்
நவராத்திரி ஒளியேற்றி நலம்பாடி துதி செய்வோம்
குடிகாக்கும் மீனாட்சி புகழ்சேர்க்க வருவாயே  (கரு)

கருவாகும் உயிர்க்கெல்லாம் கருணைமாரி கருமாரி
கசிந்துருகும் மனத்திலே இசைந்திருக்கும் மகமாயி (கரு)

வேற்காட்டில் வீற்றிருப்பாள் வீரமகள் திரிசூலி
கூற்றினையும் மாற்றிடுவாள் குலதெய்வம் மாகாளி
குலதெய்வம் மாகாளி குலதெய்வம் மாகாளி
தஞ்சமென்றால் தஞ்சை நகர் சரணமென்றால் சமயபுரம்
கண்கொடுக்கும் கண்ணபுரம்
கை கொடுப்பாள் அன்னையவள்
சிரிப்பினிலே முத்து வரும் தேவியென்றால் வாழ்வு தரும்
நெருங்காதார் மேனியெல்லாம்
நெருப்பாக கொதித்து விடும் நெருப்பாக கொதித்து விடும்
வேண்டி நின்றாள் வினை களைவாள்
வேப்பிலையாய் குளிர்ந்திடுவாள்
தாயவளின் தாள் பணிந்தால்
நோய்களெல்லாம் போக்கிடுவாள்
கடலுக்கு நீர் கொடுக்கும் தூயமழை கருமாரி
காலடியில் நின்றார்க்கு கதிகொடுக்கும் அருள்மாரி
கதிகொடுக்கும் அருள்மாரி கதிகொடுக்கும் அருள்மாரி

பூவாடைக்காரி

பூவாடைக்காரி பொன்னழகி உனக்கு
பொங்கலிடக் கிடச்சது பாக்கியம் எனக்கு
மீன்காரன் வீடெங்கும் மீன் வாசம் இருக்கும்
அடி மீனாட்சி நீ வந்தால் நெய்வாசம் அடிக்கும்

ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்
தின்னுப்புட்டு போடியம்மா
பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரலே ஆடிப்
பேச்சுப்படி பொங்கலுண்ண இங்கு வரலே - நான்

மூச்சடக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்
சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வநாயகி புதுச்
சேலைக்காரி பூக்காரி தெய்வநாயகி
பத்ரகாளி ருத்ரகாளி பாரடியம்மா - இந்த
பாவி மகன் வீட்டிலே வை - ஓரடியம்மா

உலகமெல்லாம் படைச்சவளே

உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி
எங்க சிங்காரி - இங்கே
உன்னை நம்பி வந்தோமம்மா வா நீ வா - எங்க
புள்ளே குட்டி வாழவேணும் வா

மங்கள நாயகி ஜகஜ் ஜனனீ
மாது மனோகரி உமையவளே
சங்கரி சாம்பவி சாந்த தயாபரி
நவராத்திரியில் வந்தருளே !

சிவனும் திருமாலும் நீயோ - அருள்
செய்யும் மாகாளி நீயோ
தவஞ்செய்யும் கன்னியாகுமரியும் நீயோ
தாயான விந்தையைச் சொல்வாயோ

சூரிய சந்திர ஜோதியும் நான்
சுந்தர தாண்டவ மூர்த்தியும் நான்
நாராயணன் நான்முகப் பிரமனும் நான்
நாரணி பார்வதி உமைநானே

நான்மறை அறிவாரும் அறியாத நீ
வானில் மழைபோல் மாமலர் மணம்போல்
நீறே நிறைவாக வருவாயம்மா
நீலத்திரைக் கடல் ஓரத்திலே

நித்தம் தவஞ்செய்யும் குமரியும் நான் - ஆதி
காலத்தில் ஆருயிர் படைத்தனால்
கருணை அன்னையென்று பொழிவாரே

எங்கம்மா மகராசி

எங்கம்மா மகராசி எல்லாம் உன் கைராசி
அருள்மாரி தரவேண்டும் கருமாரி மகமாயி (எங்கம்மா)

மஞ்சளுக்கு உரியவளே மண்ணாளும் உமையவளே
மங்கையரின் குங்குமத்திலே
என்றும் குடிகொண்டு வாழ்பவளே
நம்பிக்கை கொண்டார்க்கு துணையாக வருபவளே (எங்கம்மா)

மண்ணெல்லாம் திருநீறு அம்மா உன் வாசலிலே
மாயே மாறிவரும் உலகத்திலே நீ மாறாத மாரி (மண்)

வெள்ளை மனம் உன்னுடைய கோவில்
வேப்பமரம் உன்னுடைய கோவில்
ஆயிமகமாயி உன்னுடைய பிள்ளைகள் நாங்கள்
தாயே ஏ ஆத்தா

நீ கால் கொடுத்து கைகொடுக்கும் ஆத்தா
கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி - தாயே
சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி
பம்பை ஒலி கேட்டு வரும் தாயே

உன் பக்தர்களை காப்பவளும் நீயே
காமாட்சி மீனாட்சி தாயே
உன்னை கைகூப்பி வணங்குகிறோம் நாங்கள்

மாரியம்மன் போற்றி மாலை

1. ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்தே!
மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா!
நாரணன் தங்கையரே ! நாயகியே மாரிமுத்தே!
காரணியே! சங்கரியே! மாரிமுத்தே வாருமம்மா

2. மாரி பகவதியே! மக்கள்முகம் பாருமம்மா!
பார்வதி அம்பிகையே! பாலர்களை பாருமம்மா!
பேரோ பெரியதம்மா! பிள்ளைமுகம் பாருமம்மா!
காளி துரந்தரியே! கண்ணெடுத்துப் பாருமம்மா!

3. மயிலைக் கோலவிழித் தேவிஎமைக் காருமம்மா!
மகிமை படைத்தவளே! ஏழைகளைக் காருமம்மா!
கைவிட்டால் யாருமில்லை! கைகொடுத்துக் காருமம்மா!
கனகமணி சுந்தரியே! மனசுவச்சுக் காருமம்மா!

4. உத்திர மேரூரின் சக்தி! பதம் பாருமம்மா!
ஊரார்க்கு நோயழிக்கும் வேப்பிலையை கொடும்மா
தேடிவரும் ஜனங்களுக்கு திருச்சாம்பல் தாருமம்மா!
மங்கையரை ஆதரித்து குங்குமத்தை தாருமம்மா!

5. சிதம்பரத்து பூமியிலே குடிகொண்ட செல்லியம்மா!
கொண்டுவரும் கரகத்திலே வந்துகுடி கொண்டவளே
வேப்பமர நிழல்தேடி வீடுகண்ட மாரியம்மா!
தீமிதிக்கும் தீயினிலே பூவாக இருக்குமம்மா!

6. ஆணைமலை எல்லைவிட்டு கண்ணகியே வாம்மா!
ஏழுகடல்தாண்டி எங்களிடம் வாருமம்மா!
வடகோடி எல்லைவிட்டு நடுவீடு வாருமம்மா!
வானத்து எல்லைவிட்டு வாருமம்மா எங்கள் தலம்!

7. ஆரல்வாய் மொழிஊரின் அம்மனே! அம்பிகையே!
அஞ்சுதலை நாகம்மா அழகாகக் குடைபிடிக்கும் !
பத்துதலை நாகம்மா பாங்காகக் குடைபிடிக்கும்!
பாம்பும் பயந்திருக்கும் நாகாத்தா சன்னதியில் !

8. கூடலூர் மாரியம்மா! கொடியவிஷம் தீருமம்மா!
பாம்பு கடிச்சவிஷம் பட்டெனவே தீருமம்மா!
நாகம் கடிச்சவிஷம் நாயகியே தீருமம்மா!
கொடியவிஷங்களெல்லாம் குலதேவி நீயிறக்கு!

9. ஊத்துக்காடு எல்லையம்மா உத்தமியே வாருமம்மா!
உடுக்கை பிறந்ததம்மா உத்ராட்ச பூமியிலே!
பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்!
மத்தளம் பறந்ததம்மா மாதா நீ நடக்கையிலே!

10. பாளையங்கோட்டை பதிமேயும் ஆயிரத்தம்மா!
குழலும் பிறந்ததம்மா பூங்காற்று மேடையிலே!
யாழும் பிறந்ததம்மா ஓங்கார ஓசையிலே!
பெருவங்கியம் பிறந்ததம்மா மங்கல சன்னதியில்!

11. கும்மிடிப்பூண்டிநகர் ஏகானுலி வாருமம்மா!
குங்குமம் பிறந்ததம்மா கோமளை உன்சிரிப்பில்!
சாம்பல் பிறந்ததம்மா சதுர்வேத மாளிகையில்!
வேம்பு பிறந்ததம்மா வினைதீர்க்கும் எல்லையிலே!

12. காந்தளூர் மூவழகு அரசியே வாருமம்மா!
கைவாள் பிறந்ததம்மா கனலும் சமர்களத்தில்!
சூலம் பிறந்ததம்மா சுழலும் போர்க்களத்தில்!
மழுவும் பிறந்ததம்மா மாற்றாரின் கோட்டையிலே!

13. திருவெறும்பூர் அரசுகாத்த பிடாரியே வாருமம்மா!
தீச்சட்டி கொண்டுவந்தோம் தேவி பாக்கலையோ!
கரகம் கொண்டுவந்தோம் காளிமுகம் பாக்கலையோ!
திருநீறு பூசிக்கொண்டு தேடிவந்தோம் பாக்கலையோ!

14. விருதுநகர் உச்சி மாகாளி வாருமம்மா!
வேப்பிலை அடித்து வேண்டும் குரல் கேக்கலையோ!
மஞ்சளிலே நீராட்டும் மக்கள்குரல் கேக்கலையோ!
எலுமிச்சங் கனியோடு ஏங்கும் குரல் கேக்கலையோ!

15. மதுரை அங்காள பரமேஸ்வரி வாருமம்மா!
மாவிளக்கு ஏத்திவச்சோம்! மனசு கரையலையோ!
நெய்விளக்கு ஏத்திவச்சோம்! நெஞ்சுகரையலையோ!
உன்மகள் வாட்டங்கண்டு உள்ளங் கரையலையோ!

16. உதக மண்டலத்து மாரியம்மா வாருமம்மா!
ஆடிவிழா எடுத்தோம்! ஆயிமனம் இரங்கலையோ!
காப்புகட்டி கூழ்வார்த்தோம் கன்னிமனம் இரங்கலையோ!
தெருக்கூத்து தான்நடத்தி தேடிவந்தோம் இரங்கலையோ!

17. மேல்மலையனூர் வாழும் அங்காள பரமேஸ்வரி!
மேனியிலே பூத்தமுத்தை ஓங்காரி நீயிறக்கு!
முகத்தினில் முத்தையம்மா முக்கண்ணி - நீயிறக்கு!
கழுத்தினில் முத்தையம்மா கங்காளி நீயிறக்கு !

18. ராமநாதபுரத்துவன சங்கரி வாருமம்மா!
மார்பில் பதித்தமுத்தை மாதங்கி நீயிறக்கு!
வயிற்றில் படர்ந்தமுத்தை வல்லணங்கே நீயிறக்கு !
தோளில் விழுந்தமுத்தை துரந்திரியே நீயிறக்கு !

19. பழனித் தலம் கண்ட மாரியம்மா வாருமம்மா!
பாதத்தில் பாய்ந்த முத்தை பைரவி நீயிறக்கு!
முதுகில் செறிந்த முத்தை மூதணங்கே நீயிறக்கு!
கையில் இணைந்த முத்தை கண்ணகியே நீயிறக்கு!

20. படவேட்டு ரேணுகாம்பா! பக்தர்களைக் காருமம்மா!
பாரமுத்தை நீயிறக்கி பாலர்களைக் காருமம்மா!
ஏறுமுத்தை நீயிறக்கி ஏழைகளைக் காருமம்மா!
வந்த முத்தை நீயிறக்கி வல்லவளே! காருமம்மா!

21. அம்மா பாளையத்து தக்ஷிண காளியம்மா!
ஆலயத்து வேப்பிலையில் தொட்டவிதி மாறுமம்மா!
தோரணத்து வேப்பிலையில் தொட்டவிதி மாறுமம்மா!
தீட்டு தடுப்பெல்லாம் தீர்ப்பது உன் வேப்பிலையாம்!

22. நுங்கம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி வாருமம்மா!
மங்கலமாம் குங்குமத்தால் மனைவாழ வேணுமம்மா!
இட்டுவச்சு பொட்டு உந்தன் எல்லையிலேவாழுமம்மா!
வச்சபில்லி சூனியத்தை ஓட்டும் உந்தன் குங்குமம்மா!

23. நெல்லைநகர் முப்பிடாரி நித்திலமே வாருமம்மா!
நீறெடுத்து பூசிவிட்டால் ஏறெடுத்து பார்ப்பவளே!
திருச்சாம்பல் தானணிந்தால் மாறும் அயன் கையெழுத்து
தோஷம் அணுகாமல் காப்பதுஉன் வெண்ணீறாம்!

24. வடுகப்பட்டி பகவதி அம்மனே மாரியம்மா!
வாளோடு வேலெடுத்து வந்த பகை தீர்த்தவளே!
வில்லெடுத்து அம்மாநீ வீணர்களை சாய்த்தவளே
சங்கோடு சக்கரத்தால் சாரும்பகை மாய்த்தவளே!

25. குலசேகரன் பட்டினத்தில் வாழும் முத்து வீரம்மா
பொங்கலிட்டு வந்தவர்க்கு பொழுதோடு காவல் கொண்டாய்!
அறியாமல் செய்தபிழை அறிந்தும் காவல் கொண்டாய்!
தெரியாமல் செய்தபிழை தெரிந்தும் நீ காவல் கொண்டாய்!

26. பேரூர் ஸ்ரீவைகுண்டம் ! பெயரோ முத்தாரம்மா!
சிங்கத்தின் மேலிருந்து ஜெகத்தைநீ ஆண்டிடுவாய்!
நேர்நடத்தி மாரியம்மா திசைகளை ஆண்டிடுவாய்!
சூலப் படையோடு காலத்தை ஆண்டிடுவாய்

27. முசிறிப் பதிதன்னில் முன்னிற்கும் அங்காளம்மா!
முகத்தில் தீபறக்க முக்கண்ணி வீற்றிருப்பாய்!
தலைமாலை தான் அணிந்து தவத்தில் நீ வீற்றிருப்பாய்!
பாம்புக் குடைநிழலில் பராசக்தி வீற்றிருப்பாய்!

28. கடலூர் காளியம்மா! கனகக் கொலுவிருப்பாய்!
கண்ணாயிரம் மலர்ந்து சபையில் கொலுவிருப்பாய்!
அரியணை மேலமர்ந்து அம்மா நீ கொலுவிருப்பாய்!
ஆதிமுதல் அந்தம் வரை அரசு நடத்திடுவாய்!

29. விருத்தா சலம்பதியின் வித்தகியே மாரியம்மா!
வேதமுதல் ஆனவளே! ஜோதிமணி மாரியம்மா!
ஏதும் அறியார்க்கு எல்லாம் நீ மாரியம்மா!
மாதம் தவறாமல் மழைகொடுக்க வேணுமம்மா!

30. மாரியம்மன் சன்னதியில் மக்கள் நலம்வாழி!
கற்பூர ஜோதியிலே கைகுவித்தார் குலம்வாழி!
ஆதிமகா மாரியம்மன் அடியார்கள் இனம்வாழி!
ஊதுவத்தி ஏற்றிவைத்து உருகார் மனம் வாழி!

31. மாரியம்மன் கோவிலிலே மங்கலங்கள் தான்வாழி!
சந்த நீராடி சார்ந்தார்கள் பேர்வாழி!
தேங்காய் உடைத்துவைத்து கும்பிட்டார் சீர்வாழி!
எண்ணை விளக்கேற்றி மின்னுகின்ற ஊர்வாழி!

32. மாரி மகமாயி மக்களெல்லாம் வாழியவே!
ஆயி மகமாயி அன்பரெல்லாம் வாழியவே
தேவி மகமாயி திருத்தொண்டர் வாழியவே
மாயி மகமாயி மலர்ப்பாதம் வாழியவே!


1. ஓங்காரி மாரியம்மா! - அம்மா
உன்கோவில் வந்தோமம்மா!
ஓம்சக்தி மாரியம்மா! - தாயே
உன்வீடு சேர்ந்தோமம்மா!
உன் அன்பு போற்றி உன்சக்தி போற்றி
உன் நாமம் போற்றி உன்பாதம் போற்றி
ஆயி மக மாயி குரல்
கொடுத்தோம் அழைத்தோம் பயிரவி  (ஓங்காரி)

2. சிங்காரி மாரியம்மா! - அம்மா
சேய்நாங்கள் வந்தோமம்மா!
மங்காத மாரியம்மா! - தாயே
மடிப்பிச்சை தருவாயம்மா!
காளையார் கோவில் வாழ்கின்ற காளி!
கடும்பாடி எல்லை சின்னம்மைத் தாயே!
நாள்தோறும் உன்வாசல் வந்தோமம்மா!
நீலி திரி சூலி வினை
தடுப்பாய் முடிப்பாய் நிரந்தரி (ஓங்காரி)

3. செல்லாயி மாரியம்மா! - அம்மா
சீர்பாட வந்தோமம்மா!
பொன்னாயி மாரியம்மா! -தாயே
பூமாலை தந்தோமம்மா!
குன்னூரில் மேவி திகழ்கன்னி மாரி!
குடியாத்தம் பதியில் நீகங்கை அம்மா!
கண்பார்க்கக் கைகூப்பி வந்தோமம்மா!
சண்டி சா முண்டி உனை
நினைத்தோம் பிடித்தோம் சாம்பவி (செல்லாயி)

4. வல்லாண்மை மாரியம்மா! - அம்மா
வழி தேடி வந்தோமம்மா!
கண்ணான மாரியம்மா! - தாயே
காணிக்கை தந்தோமம்மா!
பண்ணாரித் தேவி அருள் மாரி அம்மா!
பண்ருட்டிப் பதியின் பட வேட்டம் மாவே!
எந்நாளும் உன் எல்லை வந்தோமம்மா!
பாலா சிவ மாதா அருள்
படைப்பாய் வளர்ப்பாய் பகவதி (செல்லாயி)

5. தாலாட்டும் மாரியம்மா! - அம்மா
தாய்வீடு வந்தோமம்மா!
ஆளாக்கும் மாரியம்மா!
அபிஷேகம் செய்தோமம்மா!
அவினாசி மேவும் அங்காளம்மாவே!
சிவகாசி மண்ணில் ஸ்ரீபத்ர காளி!
தவறாமல் எல்லோரும் வந்தோமம்மா!
ஏகி பரந் தேகி பகை
கெடுக்கும் அடக்கும் திரிசதி  (தாலாட்டும்)

6. ஊர்காக்கும் மாரியம்மா! - அம்மா
ஒன்றாக வந்தோமம்மா!
சீர்காக்கும் மாரியம்மா! தாயே!
சிலம்போசை கோட்டோமம்மா!
வேற்காட்டுத் தேவி கருமாரி அம்மா!
ஆத்தூரின் தெய்வம் அங்காளம் மாவே!
மாயி வர தாயிமலர்
தொடுத்தோம் படைத்தோம் நந்தினி (தாலாட்டும்)

7. அலங்காரி மாரியம்மா! - தாயே
அடியார்கள் வந்தோமம்மா!
அரசாளும் மாரியம்மா! - தாயே
குறைதீர்க்க வேணும் அம்மா!
அருள்மேவும் கம்பம் அங்காளம்மாவே!
திருவாலங் காட்டில் நடமாடும் காளி!
கரங்கள் கொண்டாடி வந்தோமம்மா!
சூலி கபாலி துயர் துடைப்பாய் அணைப்பாய் துரந்தரி (அலங்காரி)

9. பெருந்தேவி மாரியம்மா! - அம்மா
உறவென்று வந்தோமம்மா!
அறம்காக்கும் மாரியம்மா! - தாயே
ஆதரிக்க வேணும் அம்மா!
இருகூரின் சக்தி எழில் பொன்னூர் அம்மா
கொருக்குப்பேட்டை ஸ்ரீநாகாத்தம் மாவே!
பொருளோடு புகழசேர வந்தோமம்மா!
குமரி வெஞ்சமரி கொடி
எடுத்தாய் நிலைத்தாய் மாதிரி (பெருந்தேவி)

10. அருள்வாக்கு மாரியம்மா! அம்மா
அதைக்கேட்க வந்தோமம்மா!
இருள் நீக்கும் மாரியம்மா! - தாயே
எண்திசையும் தீபம் அம்மா!
திரிசூலம் கொண்டாய் திண்டுக்கல் காளி!
ஸ்ரீவில்லி புத்தூர் வாழ்பெரிய மாரி!
பிறவிக்குப் பயன்தேடி வந்தோமம்மா!
சூரி பெரும் வீரி சுடர்
ஒளியே மணியே சுந்தரி  (பெருந்தேவி)

11. குலதேவி மாரியம்மா! - அம்மா
கும்பிடவே வந்தோமம்மா!
உலகாளும் மாரியம்மா! - தாயே!
உனக்கீடு இல்லையம்மா!
புதுக்கோட்டை தன்னில் அருள்முத்துமாரி
நிலக்கோட்டை மண்ணில் திகழ்நாச்சியம்மா!
துணைகேட்டு நலம் கூட்ட வந்தோமம்மா!
காளி கை கொடுப்பாய் பரப்பாய் அந்தரி (குலதேவி)

12. கொற்றவையே மாரியம்மா!- அம்மா!
குடும்பத்துடன் வந்தோம்மா!
வெற்றி தரும் மாரியம்மா! - தாயே
வேப்பிலைக்கு நிகரேதம்மா!
ஓட்டேரி சின்ன மொட்டையம்மைநீ!
காட்பாடி ஊரின் அருள் கோட்டை அம்மா!
பொட்டோடு பூவாங்க வந்தோமம்மா!
ஐயை கங் காளி கடை
முதல்நீ நடுநீ யோகினி (குலதேவி)

13. மங்கலம்நீ மாரியம்மா! - அம்மா!
மனைதேடி வந்தோமம்மா!
குங்குமத்தாய் மாரியம்மா!- தாயே!
குற்றங்களைப் பொறுப்பாயம்மா!
ஆமூரின் அன்னை ஆசாலி அம்மா!
அம்மா பேட்டைஸ்ரீ பழபட்டரை மாரி!
தேரோடும் திருவீதி வந்தோம்மா!
மேரிகௌ மாரி செயல்
அனைத்தும் நடத்தும் அயிகிரி (மங்கலம்நீ)

14. முத்தெடுக்கும் மாரியம்மா! - அம்மா!
முகம் பார்க்க வந்தோமம்மா!
சித்தரமே மாரியம்மா! - தாயே!
சிலைமேனி பார்த்தோமம்மா!
புத்தேரி வீர மாகாளித் தாயே!
பொள்ளாச்சி அன்னை அங்காளம் மாவே!
தித்திக்கும் இசைபாடி வந்தோமம்மா!
வலவை எண் தோளிநெறி
வகுக்கும் இயக்கும் யாமளை  (மங்கலம்நீ)

15. வேதாந்த மாரியம்மா! - அம்மா!
வேண்டிடவே வந்தோமம்மா!
நாதாந்த மாரியம்மா! - தாயே!
நல்ல இசை தந்தருளம்மா!
நாமக்கல் மேவும் பலபட்டரை மாரி!
நல்லார்கள் எல்லாம் கொண்டாடும் தேவி!
கோரிக்கைக் கொண்டிங்கு வந்தோமம்மா!
அணங்கே முக் கண்ணி அருள்
நிலவே கதிரே மாலினி (வேதாந்த)

16. மூதணங்கே! மாரியம்மா! - அம்மா!
முன்னிலையில் வந்தோமம்மா!
ஆதியும்நீ மாரியம்மா! - தாயே!
அந்தமும்நீ அறிவோமம்மா!
உலகங்கள் எல்லாம்
தரும் ஜோதி விழிபார்க்க வந்தோமம்மா!
விமலைஸ்ரீ விஜயை பதம்
சரணம் சரணம் பூரணி  (வேதாந்த)

1. ஒன்றாகி நூறாகி ஒவ்வொன்றும் தானாகி ஊர்காக்கும் எங்கள் மாரி!
தொண்டர்க்கு தாயாகி தூயார்க்கு வாழ்வாகும் உன்பாதம் போற்றி! போற்றி!

2. முன்னுக்கும் பின்னுக்கும் முதலாகி முடிவாகி முகம் காட்டும் அன்பு மாரி
அன்புக்கும் தாய்மைக்கும் அடையாளம் நானென்றும் அருளாட்சி போற்றி! போற்றி!

3. நெடுந்தில்லை நகரத்தின் மாகாளி நீயாகி நலமிட்ட அழகு மாரி!
நிலையான கலைவாழ இயலோடு, இசை வாழ நின்பாதம் போற்றி! போற்றி!

4. அறிந்தார்க்கு உறவாகி அறியார்க்கும் துணையாகும் திருமயத்தின் முத்து மாரி!
நெறிவாழ அறம்வாழ நிலம்வாழ குலம்வாழ அருள்மேன்மை போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!

5. அம்பைமா நகர்தன்னில் உச்சிமா காளி என அமைந்தாளும் ஆற்றில் மாரி!
இன்பங்கள் எல்லாமும் எல்லார்க்கும் தரவந்த மகமாயி போற்றி! போற்றி!

6. செங்கையாம் தலம் தன்னில் அங்காளம்மன் என்று சிறப்போடு விளங்கும் மாரி!
மங்கையர்தம் நிலவாழ்வில் மங்கலங்கள் தரவந்த மகமாயி போற்றி! போற்றி!

7. அருள்சார்ந்த பரமக்குடி முத்தாலம்மன் என்று அழகாகத் தோன்றும் மாரி!
கருவான நாள்தொட்டு உயிர்வாழ் அருள்கின்ற கவின் பாதம் போற்றி! போற்றி!

8. வில்லிவாக் கம்தன்னில் தாந்தோணித் தாயாக வீறுபெறத் துலங்கும் மாரி!
நல்லார்கள் நெஞ்சத்தில் எந்நாளும் வாழ்கின்ற பெருந்தன்மை போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!

9. வக்கரையில் காளி என உருவாகி அன்பர் பிணி வந்தவுடன் தீர்க்கும் மாரி!
முக்காலும் நன்மைதர எக்காலும் காத்திருக்கும் நற்பாதம் போற்றி! போற்றி!

10. தலையான சென்னைதனில் காளிகாம்பாள் என்று பெயர்கொண்ட எல்லை மாரி!
உலகோடு உயிர்யாவும் படைத்தேபின் காக்கின்ற பெருந்தேவி போற்றி! போற்றி!

11. புவனகிரித் தலம்தன்னில் பூங்காவனத்தம்மன் வடிவாகி காக்கும் மாரி!
உவமைக்கு வேற்றில்லை அருளுக்கு நிகரில்லை உயிர்பாதம் போற்றி! போற்றி!

12. திண்ணனூர் மன்னில் பிடாரிஎன் றேவந்து திருக்காட்சி அருளும் மாரி!
மண்ணுருக பொன்னுருக மாற்றார்க்கும் நெஞ்சுருகும் அன்புமனம் போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!

13. திருமேவும் உறையூரின் வெஃகாளி வடிவாகி வளம்கோடி பொழியும் மாரி!
இருநான்கு திசையாள தடைபோடும் தாயேநின் இணைப்பாதம் போற்றி! போற்றி!

14. பாகோடு எனும் ஊரில் ஸ்ரீதேவி வடிவாகிப் பரிந்தெம்மைப் பார்க்கும் மாரி!
பகையாகி நின்றார்க்கும் மன்னிப்பைத் தருகின்ற பண்பாடு! போற்றி! போற்றி!

15. ஈரோட்டில் நீ பெரிய மாரிஎன எமை ஆண்டு இணைந்தோங்கும் சின்ன மாரி!
ஆறோடும் நீராக ஊர்செழிக்க நடக்கின்ற அருட்பாதம் போற்றி! போற்றி!

16. ஆம்பூரின் திருக்கோவில் காளிகாம்பாள் என்றுஅமைந்திட்ட அமுதமாரி!
அலைவாணி மலைவாயி கலைவாணி என மாறும் வடிவங்கள் போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!

17. வினைதீர்க்கும் பதியாகும் பல ஊர்க்கு நடுவாகும் விழுப்புரத்தின் முத்து மாரி!
குணமாகும் ஓரெட்டும் நெறிகாண உலவிவரும் மணிப்பாதம் போற்றி! போற்றி!

18. பட்டணத்துப் பட்டாளம் எல்லைஅம்மன் என்று எட்டுத்திசை ஆளும் மாரி!
வெட்டுகின்ற இடி, மின்னல், புயல், மழையும் தென்றலுமுன் விளைவாகும் போற்றி! போற்றி!

19. கொல்லங்கோட் டெல்லைதனில் மாகாளி நீயாகி குலம்காக்கக் கனிந்த மாரி!
அல்லல்கள் தீர்த்தாண்டு நன்மைக்கு துணை நிற்கும் அணிப்பாதம் போற்றி! போற்றி!

20. பல்லடத்துப் பொங்காளி அம்மன் என அன்பர்களின் காணிக்கை ஏற்கும் மாரி!
பசுமைக்கு நிலம்ஏங்க பருவத்தின் ஊற்றாகும் அருள்நெஞ்சம்போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!

21. ஆமாத்தூர் நகர்வட்டப் பாறையம்மன் என்று அணிகொண்ட அன்னை மாரி!
அறத்தோடு பொருள் இன்பம், வீடுதனைப் பரிசாக்கும் புகழ்ப்பாதம் போற்றி! போற்றி!

22. மணச்ச நல் லூர்தன்னில் அங்காளம்மன் என்று மலர்கின்ற காவல்மாரி
அனைத்துலகும் நெறிநிற்க அனைத்துயிரும் தாம் செழிக்க அருள்வெள்ளம் போற்றி! போற்றி!

23. கொங்குமணித் திருநாட்டில் கோவைநகர் ஆலயத்தில் கொலுவிருக்கும் தண்டு மாரி!
சங்கெடுத்த மாயவனின் தங்கை என விளங்கும் நின் மலர்ப்பாதம் போற்றி! போற்றி!

24. அழகுமேல் மருத்தூர் ஆதிப ராசக்தி வடிவான தெய்வ மாரி!
அணிமணிகள் மின்னிவர மணிமுடியும் நின்னொளிரும் திருக்காட்சி போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!

25. அவனியா புரம் தன்னில் காளி என உருக்காட்டி அரசாட்சி நடத்தும் மாரி
ஆன்மீகமும் நல்லறமும் தன்தழைக்க நிழலாகும் சீர்ப்பாதம் போற்றி! போற்றி!

26. காஞ்சிபுர மூதூரில் கடுக்காளி என வந்து கலைகண்ட நல்ல மாரி!
கண்காக்கும் இமைபோல் மண்காக்கும் சிலையான திருமேனி போற்றி! போற்றி!

27. மலைசூழும் சேலத்தில் நடுவாக இடம் கொண்ட மலைத்தேவி கோட்டை மாரி
படியேறி வந்தார்க்கு கடலாக வளம் சேர்க்கும் பொற்பாதம் போற்றி! போற்றி!

28. நஞ்சையுடன் புஞ்சை நன்றாக விளையும் நாடாகும் தஞ்சை மாரி!
அஞ்சேல் என் றே எம்மைக் கண்பார்க்க மண்வந்த திருத்தோற்றம் போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!

29. வேலூரில் ஸ்ரீகனக துர்க்கைஎனப் பகைமுடிக்க வீடுபெறு வீரமாரி!
பாலாற்று நீராக ஊற்றாக உயர்புரக்கும் திருப்பாதம் போற்றி! போற்றி!

30. நாள்தோறும் நல்லாரின் துயர்நீக்கும் கடன்ஏற்றி காப்பாற்றும் வெற்றி மாரி!
வாளோடு படைக்கலங்கள் தோளேந்தி வருகின்ற வல்லமையும் போற்றி! போற்றி!

31. தணந்தார்க்கும் பணிந்தார்க்கும் துணையாகி அருள்செய்யத் தலம் கண்ட தேவி மாரி!
தவறாமல் எளியோர்க்கு உறவாகி வாழ்வுதரும் தாய்ப்பாதம் போற்றி! போற்றி!

32. ஓம்கார ஒலியாக உயிரில் மூச்சாக உறைகின்ற சக்தி மாரி! நீர், நெருப்பு, காற்று, வெளி, நிலம் யாவும் தீயாகும்
ஓம்சக்தி! போற்றி! போற்றி! ஓம்சக்தி! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!

ஓம்...ஓம்...ஓம்....ஓம்...ஓம்

ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம்
அதை ஆமென உரைப்பது நால்வகை வேதம்
தாமென நினைக்கும் செருக்கை அடக்கும்
தோமென குதிக்கும் தேவியுடன் பாதம்
ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம்
பன்னீரபிஷேகம் செய்த பேருக்கு
வாழ்வில் தண்ணீரை மாற்றி வைக்கும்
கருமாரி

நல்ல பாலாபிஷேகம் செய்த பேருக்கு
இன்பம் பாலாட்டம் பொங்க வைக்கும் கருமாரி
திருநீறால் அபிஷேகம் செய்த பேருக்கு
துன்பம் நீராகப் போக வைக்கும் கருமாரி
வண்ணக் குங்குமத்தால் அபிஷேகம் செய்த
பேருக்கு நெற்றி குங்குமத்தை நிலைக்க
வைக்கும் கருமாரி

நல்ல சந்தனத்தால் அபிஷேகம் செய்த
பேருக்கு நெஞ்சம் சந்தனம் போல் மணக்க
வைக்கும் கருமாரி

தூய மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்த பேருக்கு
தாலி மஞ்சளுக்கு காவல்நிற்கும் கருமாரி

என்றும் பக்தியோடு அபிஷேகம் செய்தபேருக்கு
தெய்வ சக்தி வந்து சேரவைக்கும் கருமாரி

நாக்கோடு பல பொய்கள் நம்மைவிட்டு போக
நோக்காடு தீர்த்துள்ளம் நலமென்பதாக

நீக்காடு போல் பற்றும் தீமைகள் அழிய
வேக்காடு போல் வாட்டும் வினைமுற்றும் ஒழிய
சாக்காடு போற் சூழும் சாபங்கள் தொலைய
பூக்காடு போலின்பம் பொழுதோடு விளைய

வேற்காடுதனைமேவி வாழ்கின்ற தேவி
வெண்டாமரைப் பாதம் வண்டாக மொய்ப்போம்
ஓம்சக்தி! ஓம்சக்தி! ஓம்சக்தி! ஓம்


சக்தி தன்னாடு தென்னாடு பொன்னாடு
பக்தி பண்பாடு கொண்டாடுவோம்
வெற்றி வேலோடு சூலோடு தாயாட சுற்றி நடமாடுவோம்
சக்தி சங்கரி! காளி! கண்ணகி
குங்குமத்துக்காரி கருமாரி ! - அவள்

பூவாடைக்காரி குலக்காளி குலக்காளி
சங்கரி என்தேவி வரவேண்டும்
தங்கமணி ஹாரம் தரவேண்டும் ஆஹா தரவேண்டும்
மூன்று மழை பெய்யும் அவளாலே - நல்
அருளாலே கண் அசைவாலே
அண்ட பகிரண்டம் எங்கும் ஆடும்
கடல் வானமெங்கும் தத்தித்தா திரிகிட என்று
ஆடும் காளி சாமுண்டி கங்காளி (சக்தி)

குற்றங்களை கண்டு கொதித்தாளோ
அவள் கோர வடிவாக உதித்தாளோ
தத்துவத்தை காக்க ஜனித்தாளோ - ஒரு
சம்பந்தமில்லாமல் தனித்தாளோ
மங்கையரைக் காக்க அமர்ந்தாளோ
மண் மடிமேலே செங்கடல் போலே
கொட்டும் மழை மின்னலென்ன
வெட்டும் இடி தாளமென்ன தத்தித்தாக ததிகிட என்று
ஆடும் காளி சாமுண்டி கங்காளி (சக்தி)

மாரியம்மன் கும்மிப் பாடல்கள்

எங்க முத்து மாரி அவதங்கமுத்து மாரி
ஏழைகளை காக்கவந்த சமயபுரத்து மாரி
சிகப்பு சேலை கட்டிவந்தா எங்கமுத்து மாரி
சிங்கமீது ஏறிவந்தா சமயபுரத்து மாரி

பச்சசேலை கட்டிவந்தா எங்கமுத்து மாரி
பாவமெல்லாம் தீர்க்கவந்தா சமயபுரத்து மாரி
மஞ்சசேலை கட்டிவந்தா எங்கமுத்து மாரி
மழையை கூட கொண்டு வந்தா சமயபுரத்து மாரி

நீலச்சேலை கட்டிவந்தா எங்கமுத்து மாரி
நினைச்சவரம் கொடுக்கவந்தா சமயபுரத்து மாரி
மல்லிகைப்பூ வைச்சுவந்தா எங்கமுத்து மாரி
மனக்குறைகளை தீர்க்கவந்தா சமயபுரத்து மாரி

முல்லைப்பூவும் வைச்சுவந்தா எங்கமுத்து மாரி
மூவுலகை காக்கவந்தா சமயபுரத்து மாரி
பிச்சிப்பூவும் வைச்சுவந்தா எங்கமுத்து மாரி
பிணிகள் எல்லாம் தீர்க்கவந்தா சமயபுரத்து மாரி

அபிஷேகம் ஏற்கவந்தா எங்கமுத்து மாரி
அவனியெல்லாம் காக்கவந்தா சமயபுரத்து மாரி
அலங்காரம் ஏற்கவந்தா எங்கமுத்து மாரி
அன்பர்குறை தீர்க்கவந்தா எங்கமுத்து மாரி

சக்திரதம் ஏறிவந்தா எங்கமுத்து மாரி
சங்கடங்கள் தீர்க்கவந்தா சமயபுரத்து மாரி

மாரி வருகிறாள் முத்துமாரி வருகிறாள்
மாரி வருகிறாள் சக்திமாரி வருகிறாள்

மஞ்சள்நீரை ஏற்றிக்கொள்ள மாரி வருகிறாள்
நெஞ்சம் குளிரவைக்க மாரி வருகிறாள்
இந்தவையமெல்லாம் காப்பதற்கு மாரி வருகிறாள் (மாரி)

உடுக்கையினை கையில் ஏந்தி மாரி வருகிறாள்
ஊழ்வினைகள் தீர்ப்பதற்கு மாரி வருகிறாள்
வேதனையை தீர்ப்பதற்கு மாரி வருகிறாள். (மாரி)

பாசாங்குசம் கையில் ஏந்த மாரி வருகிறாள்
பாவமெல்லாம் தீர்ப்பதற்கு மாரி வருகிறாள்
அக்னிசட்டி கையில் ஏந்தி மாரி வருகிறாள்
அவனிஎல்லாம் காப்பதற்கு மாரி வருகிறாள். (மாரி)

குங்குமபொட்டு வைச்சுகொண்டு மாரி வருகிறாள்
குறைகள் எல்லாம் தீர்த்துவைக்க மாரி வருகிறாள்
இன்பமாக தேரில்ஏறி மாரி வருகிறாள்
இந்து தர்மம் காப்பதற்கு மாரி வருகிறாள். (மாரி)


அம்பா பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி
ஆதிபராசக்தி பாலயமாம்
வீணாபாணி விமல சரஸ்வதி
வேதாந்தரூபிணி பாலயமாம்  (அம்ப)

தீனதயாபரி பூரண கடாட்சி
திரிபுரசுந்தரி தேவீ மீனாட்சி  (அம்ப)

ராஜ ராஜேஸ்வரி ராஜப்ரதாயினி
ஸ்ரீபுவனேஸ்வரி பாலயமாம் (அம்ப)

காஞ்சி காமாட்சி காசிவிசாலாட்சி
மதுரை மீனாட்சி பாலயமாம் (அம்ப)

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் (அம்ப)


சமயத்தில் வருவாள் மகமாயி
சங்கடம் தீர்ப்பாள் மகமாயி
அபயமளிப்பவள் மகமாயி
சமயபுரம் வாழ் மகமாயி  (ச)

அருள்மழை பொழிபவள் மகமாயி
ஆறுதல் அருள்பவள் மகமாயி
இன்னல் அறுப்பவள் மகமாயி
ஈஸ்வரன் துணையவள் மகமாயி  (ச)

உலகினை காப்பவள் மகமாயி
ஊழ்வினை அறுப்பவள் மகமாயி
எளிமையின் வடிவம் மகமாயி
ஏற்றம் தருபவள் மகமாயி  (ச)

ஐங்கரன் தாயவள் மகமாயி
ஐயம் தவிர்ப்பவள் மகமாயி
ஒப்புயர் அற்றவள் மகமாயி
ஓதும் மறையவள் மகமாயி

ஒளஷதம் ஆனவள் மகமாயி
ஃக்கண்ணன் சோதரி மகமாயி
கருணைகடலாம் மகமாயி
காத்தருள் செய்வாள் மகமாயி  (ச)


...............................................................
பூசனைக்குகந்த மலர்கள்

அம்பாளை அர்ச்சிப்பதற்கு வாசனையுள்ள நறுமலர்கள் அனைத்தும் ஏற்றதே. முல்லை, மல்லி, தாழம்பூ, மரிக்கொழுந்து, பச்சை, செவ்வரளி, செம்பருத்தி, தாமரை ஆகியவை மிக விசேடமானவை. சிவப்பு நிற புஷ்பங்கள் விசேடம்.

நல்ல மஞ்சளால் தயாரிக்கப்பட்ட குங்குமமே அம்பாள் பாதங்களை அர்ச்சனை செய்ய ஏற்றது.

குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்
கோடி கோடி பொன்னைக் கொடுப்பவளாம்
சந்தனத்தால் அலங்காரம் செய்தவர்க்கு
அம்பாள் சர்வாபீஷ்டங்களும் கொடுப்பவளாம்

தேனால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
திவ்ய தரிசனம் கொடுப்பவளாம்
பாலால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
பலஜன்ம பாபத்தைப் போக்குபவளாம்

கனியால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
கண்முன்னே வந்து நிற்பவளாம்
தீராத வினைகளைத் தீர்ப்பவளாம் தேவி
திருவடி சரணம் சரணம் அம்மா

பவபய ஹாரிணி அம்பா பவானியே
துக்க நிவாரணி துர்க்கே ஜெய ஜெய
கால பினாகினி காளீ ஜெய ஜெய
சக்தி ஸ்வரூபிணி மாதா ஜெய ஜெய

கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணவதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுஹ சரணம் சரணம்

சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவரு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்.

முளைப்பாரி கும்மிப் பாடல்கள்

அரி ஓம் நன்றாக குரு வாழ்க குரு வாழ்க
குருவே துணையாமே
நரியைப் பரியாக செய்த சொக்கலிங்கம்
நாதன் விநாயகர் காப்பதாமே

பித்தன் மகனே பெரியப்பனே முக
பிரணவர்க்குச் சொந்த மூத்தவனே
பத்திரகாளி பராசக்திமேல் கும்மிப்
பாடவரமருள் கணபதியே

ஒரு தணைப்பானம் தொடுத்தவராம்
உயிர்விட மோட்சம் கொடுத்தவராம்
இரணியன் மார்பை பிளந்த நரசிம்மம்
எம்பெருமாளே துணைபுரிவாய்

கோடாலி கொண்டு விறகு வெட்டியே
விலை கூறி வந்தவரே நீ வருவாய்
கடவுளைக் காலாலே உதைத்திட்ட
கண்ணப்பரே இங்கு முன்நடவாய்

எலும்பு சுடலை இடுகாடு நல்ல
இருண்ட வனமாம் சுடுகாடு
சுடலையிலே வந்து காவல் கொள்ளும்
சுந்தரலிங்கமே துணைபுரிவாய்

ஆச்சி விசாலாட்சி மீனாட்சி
பம்பை அடுத்து பிறந்தவள் காமாட்சி
பேச்சி வனப்பேச்சி லட்சுமி தங்கை
பேருசொல்லி கும்மி கொடுங்கம்மா

இந்த வருசம் கலரியிலே நம்ம
ஈஸ்வரியாள் தலைவாசலிலே
மிஞ்சி கொலுசு களராமலே தாளம்
மெட்டுப்படி கும்மி கொட்டுங்கம்மா

கொட்டுங்கம்மா கும்மி கொட்டுங்கம்மா
இந்த கூட்டத்தை வணங்கி கொட்டுங்கம்மா
வட்டமாய் சுற்றி வரிசையாக நின்று
வந்தனம் சொல்லியே கொட்டுங்கம்மா

காளியுடைய வாசலிலே நம்ம
கைவீசி தாளமும் போடயிலே
வாழை குலைகளும் தான் அசைந்து நல்ல
வாசகமும் தமிழ் பாடயிலே

வடக்கு முகமுள்ள காளியம்மா இவள்
வாலையுட தங்கை நீலியம்மா
கோசுகுண்டில் வாழும் சக்கம்மாதேவி
கூடப்பிறந்தவள் காளியம்மா

கிழக்கு முகமுள்ள காளியம்மா மாயன்
கிருஷ்ணனுடைய தங்கை நீலியம்மா
கலக்கமில்லா மனசுடையா இவள்
காஞ்சிபுரம் வாழும் சுருளியம்மா

நாதனை எதிர்த்து நின்றவளாம் இவள்
சிவ நடனங்களுமே புரிந்தவளாம்
பாத சிலம்புடனே பிறந்த இவள்
பாண்டிய நாட்டையே எறித்தவளாம்

கம்சனை வதைத்துக் கொன்றவளாம்
பத்திரகாளியாகவே பிறந்தவளாம்
அம்சத்திலேயும் சிறந்தவளாம் இவள்
ஆயிரம் கண்கள் உடையவளாம்

அண்ட புவனமும் மெச்சவளாம் இவள்
ஆதி முதலில் பிறந்தவளாம்
வண்டியூர் தெப்பக்குளத்தருகே இவள்
வாழுகின்ற நம்ம மாரியாத்தா

வேப்பிலைக்காரியாம் வீரசூரி இவள்
வெயிலுவந்தாளாம் மாரியம்மா
காப்பதிலே மிகக் கெட்டிக்காரி
கண்ணபுரம் வாழும் மாரியம்மா

எடையர் குடிகளைக் காத்தவளாம் இவள்
ஏழை மாரியாத்தாள் என்பவளாம்
சடையும் முடியும் தறித்தவளாம்
சமயபுரம் வாழும் மாரியம்மா

குற்றம் குறைகளை பொருப்பவளாம்
குழந்தைகளை போலவே காப்பவளாம்
எட்டு திசைகளிலும் பேர் விளங்கும் இவள்
இருக்கங்குடி வாழும் மாரியம்மா

நல்லவருக்கெல்லாம் நல்லவளாம் இவள்
நம்பின பேர்களையும் காப்பவளாம் இவள்
பொல்லாத கோபம் உடையவளாம் இவள்
கொல்லங்குடி வாழும் மாரியம்மா

நாட்டரசன் கோட்டை கண்ணாத்தா இவள்
நாடும் புகழ்ந்திடும் பொன்னாத்தாள்
வெட்டி வேடிக்கை செய்தவளாம் வெளி
வெட்டங்காளி யென்பவளாம்

வயது நிரம்பாத பாலகியாம் சொல்லி
வரம் கொடுக்கும் நல்ல நாயகியாம்
தாயமங்கலத்தில் வாழுகின்ற இவள்
தாயான முத்துமாரியம்மா

கடம்பவனாம் இடும்பவனமாம் நல்ல
காட்சி கொடுக்கும் திருப்புவனம்
வடகரையாம் தென்னந்தோப்பாம் இங்கு
வாழும் மடப்புரம் காளியம்மா

சிங்கமுகத்தின் பல்லழகி இவள்
சிங்காரப் பேச்சின் சொல்லழகி
வெங்கலத் தொண்டை குரல் அழகி இவள்
விருதுநகர் வாழும் மாரியம்மா

நல்ல பொறுமை மிகவும் படைத்தவளாம்
பொன்னும் மணியும் அணிந்தவளாம்
அருமைக் குணம் படைத்தவளாம் இவள்
அருப்புக்கோட்டை வாழும் மாரியம்மா

நீதி நேர்மையும் உள்ளவளாம் இவள்
நினைத்த வரங்களைக்கொடுப்பவளாம்
சாதிமத பேதம் ஏதுமில்லை இவள்
சந்தன மாரி என்பவளாம்

தண்ணீர் நடுவினில் தானும் நின்னு இவள்
தவசுகள் மெத்த செய்தவளாம்
கன்னியாகுமரியில் வாழுகின்ற இவள்
கன்னிபகவதி மாரியம்மா

தோகை நல்ல மயிலழகி இவள்
தொட்டிய கம்பளம் காத்தவளாம்
நாகர்கோவிலிலே வாழுகின்ற இவள்
நாககன்னி என்னும் மாரியம்மா

மஞ்சள் அழகி மகமாயி இவள்
மாராப்புகாரியாம் வீராயி
பஞ்சப்பிணிகளைத் தீர்ப்பவளாம் இவள்
பண்ணாரியில் வாழும் மாரியம்மா

பச்சைக்குழந்தை போலயல்லோ இவள்
பாவாடை தாவணி மேலுடுத்தி
புச்சிமலர் சுடர் போழகி இவள்
உச்சிமா காளியும் என்பவளாம்

ஆத்துக்குள்ளே சிறு ஊத்துத்தோண்டி அங்கே
அஞ்சாறு மாதமாச் செங்கலறுத்து
செங்கலடுக்கியே கோவிலும் கட்டியே
சிரித்து இருப்பாளாம் மாரியம்மா !

கட்டப்புளிய மரத்தை வெட்டி
சிறுகாணி நிலத்திலே செங்கல் சுட்டு
கோபம் பொறுக்காக நம்ம மாரிக்குத்தான்
கோபுரங்களும் உண்டுபண்ணி

ஆண்டாண்டுதோறும் வழக்கம் போல நம்ம
ஆத்தாளுடைய மனசு போல
கொண்டாடி கும்பிடவேணுமென்று நல்ல
குறித்த கிழமையும் நாளும் பார்த்து

வேப்பிலையாலே சரம் தொடுத்து தெரு
வீதிக்கு வீதி கொடியும் கட்டி
அப்புரம் ஏழு நாள் தான் கழித்து நம்ம
அம்மனையே நல்லா அலங்கரித்து

ஆத்துக்கரையிலே மண்ணெடுத்து நம்ம
அம்மாளுக்குக் கும்பம் சிங்காரித்து
நேர்த்தியாய் குளித்து நீராடி நல்ல
நேரங்காலம் பார்த்து பூஜை செய்து

குலவைகள் இட்டுமே கும்பங்கள் தூக்கியே
நல்ல கொட்டுமேள தாளம் போட்டுமே தான்
வலம் சுத்தி வாராளம் மாரியவள் சிங்க
வாகனத்து மேலே தானும் ஏறி

ஆட்டகரகமாம் கோவிலிலே நம்ம
ஆத்தாள் கரகமாம் வாசலிலே
சீரிவருகுது சிங்காரம் தோணுது
சித்திரக்கால் சாவடிப் பந்தலிலே

வெங்கலக்கரகம் கோவிலிலே நல்ல
விளையாடும் கரகம் வாசலிலே
வீதி வருகுது வினோதம் தோணுது
வேப்பிலை அலங்கார பந்தலிலே

பனிரெண்டு மாதமாம் உச்சவம்மா நல்ல
பாவவிமோச்சன் பட்டணமாம்
தனிஅரசு செய்த மீனாட்சி அம்மன்
சக்தி வளர்த்திட்ட கூடாரமாம்

புண்ணிய மிகுந்த மாமதுரை யெங்கும்
புகழும் விளங்கும் விசித்திரமாம்
கண்ணியமானதோர் கங்கை நதி தீர்த்தம்
கருமங்கள் போற்றிடு சித்திரமாம்

அறுபத்திநான்கு பாண்டியர்கள் நல்ல
ஆண்ட மதுரையம்பகுதியிலே
தெய்வமாய் விளங்கும் மீனாட்சிதாயை
போற்றி பாடுவோம் வாருங்கம்மா

மஞ்சலுன்னா மஞ்சள் அது மலையாளத்துங்
கொச்சி மஞ்சள் அது
நாழிநறுக்கு மஞ்சள் நன்னாழிப்
பச்சை மஞ்சள் அரச்ச எடுப்பாளாம்.

நம்ம ஊருக் காந்தாரி
அஞ்சு வகைக் கின்னியிலே அவள்
தேச்சுக் குளிப்பாளாம் அவள் தேகமெல்லாம் மணக்க
காசியிலே நீராடி கங்கையிலே தலை உலர்த்தி

ஊசியிலே முனையிலே உக்காந்து தவம் இருந்து
விரித்த தலையோடு வேப்பிலையக் கையில் ஏந்தி
வீதியெங்கும் விளையாட வீரநடை போட்டு
வாராளாம் காந்தாரி

ஊர்ஜனத்தை வாழ வைக்க வேணுமென்று
போடுங்கம்மா தாயே உங்க பொன்னான முதல் குலவை
மஞ்சளுன்னா மஞ்சளு அது மைசூரு அரக்கு மஞ்சளு
நாழி நறுக்கு மச்சள் நன்னாளி பச்சை மஞ்சள்

அவள் அரச்சு எடுப்பாளாம் நம்ம தெரு காந்தாரி
அவ அஞ்சு வகைக் கின்னியிலே
அவள் தேச்சிக் குளிப்பாளாம் தெருவெல்லாம் மணக்க

குற்றால அருவியிலே குளித்து அவள் நீராடி
ஈரத்தலையோட இந்திரவர்ணப் பட்டுடித்தி
தென்காசி வீதியிலே தெருவெல்லாம் விளையாடி
செண்பகப் பூ பறித்து சிவ பூஜை பண்ணி

தேடியள்ள வாராளாம் நம்ம தெரு காந்தாரி
போடுங்கம்மா தாயே உங்கள் பொன்னான மறுகுலவை
மஞ்சலுன்னாமஞ்சள் நன்னாழி பச்சை மஞ்சள்
அரச்சு எடுப்பாளாம் நம்ம தெரு காந்தாரி
அஞ்சு வகைக் கின்னியிலே தேய்த்துக் குளிப்பாளாம்

இந்த தேசமெங்கும் தான் மணக்க
ஆத்திலே நீராடி அவசரமாய் தலை உலர்த்தி
தீர்த்தக்கரையும் சென்று தீர்த்தங்கள் கொண்டு

அழகரோட பாதத்துக்கு அபிஷேகம் தான்செய்து
பதினெட்டாம் படி பாதத்துக்கு பூஜை பண்ணி
தேரடியை விட்டு தெற்கு முகமாய் நோக்கி
வெள்ளிப்பிரம்பு எடுத்து வெளிக் கோட்டை

வாசலிலே வரும் போது அங்கே வழிமரித்து
மாரியை தங்கிப் போக தடுத்து நிறுத்திடவே
அப்போது நம்ம காந்தாரி அருமையுடன் வாய் திறந்து
சொன்னாளாம் காந்தாரி சூழ்ந்திருந்தபேருக்கு

என்னுடைய மக்கள் எதிர்பார்த்திருப்பார்கள்
நான் பெற்ற மக்கள் நம்பி இருப்பார்கள்
வம்புகள் செய்யாதே வழியை மறிக்காதே
போய்வாரென்று சொல்லி புறப்பட்டு

அங்கே இருந்து ஓடோடி வாராளாம் காந்தாரி
நம்ப ஊரை உறுதியுடன் காப்பதற்கு
போடுங்கம்மா தாயே உங்கள் பொன்னான முக்குலவை

கும்மி பாட்டு

தன்னன தானன தன்னான - தன
தன்னன தானன தன்னான
தன்னன தானன தன்னான - தன
தன்னன தானன தன்னானே

ஆயன் சகோதரியே! ஆஸ்தான மாரிமுத்தே!
மாயன் சகோதரியே! மாரிமுத்தே வாருமம்மா!
நாரணன் தங்கையாரே! நாயகியே மாரிமுத்தே!
காரணியே! சங்கரியே! மாரிமுத்தே வாருமம்மா!  (தன்)

மாரி பகவதியே! மக்கள் முகம் பாருமம்மா!
பார்வதி அம்பிகையே! பாலர்களை பாருமம்மா!
பேரோ பெரியதம்மா! பிள்ளைமுகம் பாருமம்மா!
காளி துரந்தரியே! கண்ணெடுத்து பாருமம்மா! (தன்)

உத்திர மேரூரின் சக்தி! பதம் தாருமம்மா!
ஊரார்க்கு நோயளிக்கும் வேப்பிலையை தாருமம்மா!
தேடிவரும் பக்தர்களுக்கு திருமுகத்தை காட்டுமம்மா!
மங்கையரை ஆதரித்து குங்குமத்தை தாருமம்மா! (தன்)

சிதம்பரத்து பூமியிலே குடிகொண்ட செல்லியம்மா!
கொண்டுவரும் கரகத்திலே வந்துகுடி கொண்டவளே!
வேப்பமர நிழல்தேடி வீடுகண்ட மாரியம்மா!
தீமிதிக்கும் தீயினிலே பூவாக இருக்குமம்மா!  (தன்)

ஆரல்வாய் மொழிஊரின் அம்மனே அம்பிகையே!
அஞ்சுதலை நாகம்மா அழகாக குடைபிடிக்கும்!
பத்துதலை நாகம்மா பாங்காக குடைபிடிக்கும்!
பாம்பும் பயந்திருக்கும் எங்காத்தா சன்னதியில்! (தன்)

வடலூர் மாரியம்மா கொடிய விஷம் தீருமம்மா!
பாம்பு கடித்தவிஷம் பட்டெனவே தீருமம்மா!
நாகம் கடித்தவிஷம் நாயகியே தீருமம்மா!
கொடிய விஷங்களெல்லாம் குலதேவி நீயிறக்கு! (தன்)

ஊத்துக்காடு எல்லையம்மா உத்தமியே வாருமம்மா!
உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலே!
பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்!
மத்தளம் பிறந்ததம்மா மாரி நீ நடக்கையிலே! (தன்)

பாளையங் கோட்டை எனும் பதிமேயும் ஆயிரத்தம்மா!
குழலும் பிறந்ததம்மா பூங்காற்று மேடையிலே!
வாழ்வும் பிறந்ததம்மா ஓங்கார ஓசையிலே!
பெருவங்கியம் பிறந்ததம்மா மங்கல சன்னதியில்! (தன்)

கும்மிடிப் பூண்டிநகர் ஏகானுலி வாருமம்மா!
குங்குமம் பிறந்ததம்மா கோமளை உன்சிரிப்பில்!
சாம்பல் பிறந்ததம்மா சதுர்வேத மாளிகையில்!
வேம்பு பிறந்ததம்மா வினைதீர்க்கும் எல்லையிலே! (தன்)

திருவெறும்பூர் அரசுகாத்த பிடாரியே வாருமம்மா!
தீச்சட்டி கொண்டுவந்தோம் தேவிமுகம் பார்க்கலையோ!
கரகம் கொண்டுவந்தோம் காளிமுகம் பார்க்கலையோ!
திருநீறு பூசிக்கொண்டு தேடிவந்தோம் பார்க்கலையோ! (தன்)

விருதுநகர் உச்சிமாகாளி வாருமம்மா!
வேப்பிலை தானடித்து வேண்டும் குரல் கேக்கலையோ!
மஞ்சளிலே நீராட்டும் மக்கள் குரல் கேக்கலையோ!
எலுமிச்சங்கனியோடு ஏங்கும் குரல் கேக்கலையோ (தன்)

மதுரை அங்காள பரமேஸ்வரி வாருமம்மா!
மாவிளக்கு ஏத்திவச்சோம் மனசு கரையலையோ!
நெய்விளக்கு ஏத்திவச்சோம் நெஞ்சங் கரையலையோ!
உன்மக்கள் வாட்டங்கண்டு மனம் கரையலையோ! (தன்)

உதக மண்டலத்து மாரியம்மா வாருமம்மா!
ஆடிவிழா தானெடுத்தோம் ஆயிமனம் இரங்கலையோ!
காப்புகட்டி கூழ்வார்த்தோம் கன்னி இரங்கலையோ!
தெருகூத்து தான்நடத்தி தேவிவந்தோம் இரங்கலையோ! (தன்)

படவெட்டு ரேணுகாம்மா பக்தர்களை காருமம்மா!
பாரமுத்தை நீயிறக்கி பாலர்களைக் காருமம்மா!
ஏறுமுத்தை நீயிறக்கி ஏழைகளைக் காருமம்மா!
வந்தமுத்தை நீயிறக்கி வல்லவளே காருமம்மா! (தன்)

அம்மா பாளையத்து தக்ஷிண காளியம்மா!
ஆலயத்து வேப்பிலையில் நிழல்கொடுக்க வேணுமம்மா!
தோரணத்து வேப்பிலையில் தொட்டவீதி மாறுமம்மா!
தீட்டு தடுப்பெலாம் தீர்ப்பது உன் வேப்பிலையாம்! (தன்)

அன்னூரின் அங்காள பரமேஸ்வரி வாருமம்மா!
மங்களமாய் குங்குமத்தால் மனைவாழ வேண்டுமம்மா!
இட்டுவச்சு பொட்டு உந்தன் எல்லையிலே வாழுமம்மா!
வச்சுபில்லி சூனியத்தை ஓட்டும் உந்தன் குங்குமமாமே! (தன்)

நெல்லைநகர் முப்பிடாரி நித்திலமே வாருமம்மா!
நீறெடுத்து பூசிவிட்டால் ஏறெடுத்து பார்ப்பவளே!
திருச்சாம்பல் தானணிந்தால் மாறும் அயன் கையெழுத்து
தோஷம் அணுகாமல் காப்பது உன் வெண்ணீறாம்! (தன்)

வடுகப்பட்டி பகவதி அம்மனே மாரியம்மா!
வாளோடு வேளெடுத்து வந்த பகை தீர்த்தவளே!
வில்லெடுத்து அம்மாநீ வீணர்களை சாய்த்தவளே!
சங்கோடு சக்கரத்தால் சாரும்பகை மாய்த்தவளே! (தன்)

குலசேகரன் பட்டணத்தில் வாழும்முத்து வீரம்மா!
பொங்கலிட்டவர்க்கு பொழுதோடு காவல் கொண்டாய்!
அறியாமல் செய்தபிழை அறிந்தும் காவல் கொண்டாய்!
தெரியாமல் செய்த பிழை தெரிந்தும்நீ காவல் கொண்டாய்! (தன்)

பேரூர் ஸ்ரீவைகுண்டம் பெயரோ முத்தாரம்மா!
சிங்கத்தின் மேலிருந்து ஜெகத்தை நீ ஆண்டிடுவாய்!
தேர்நடத்தி மாரியம்மா திசைகளை ஆண்டிடுவாய்!
சூலப் படையோடு காலத்தை ஆண்டிடுவாய்!  (தன்)

முசிறிப் பதிதன்னில் முன்னிற்கும் அங்காளம்மா!
முகத்தில் தீ பறக்க முக்கண்ணி வீற்றிருப்பாய்!
தலைமாலை தான் அணிந்து தவத்தில் நீ வீற்றிருப்பாய்!
பாம்புக் குடைநிழலில் பராசக்தி வீற்றிருப்பாய்! (தன்)

கடலூர் காளியம்மா கனகக் கொலுவிருப்பாய்!
கண்ணாயிரம் மலர்ந்து அம்மா நீ கொலுவிருப்பாய்!
அரியணை மேலமர்ந்து அம்மாநீ கொலுவிருப்பாய்!
ஆதிமுதல் அந்தம் வரை அரசு நடத்திடுவாய்! (தன்)

விருத்தா சலம்பதியின் வித்தகியே மாரியம்மா!
வேதமுதல் ஆனவளே ஜோதிமணி மாரியம்மா!
ஏதும் அறியார்க்கு எல்லாம் நீ மாரியம்மா!
மாதம் தவறாமல் மழை கொடுக்க வேணுமம்மா! (தன்)

மாரியம்மன் சன்னதியில் மக்கள் நலம் வாழி!
கற்பூர ஜோதியிலே கைகுவித்தார் குலம் வாழி!
ஆதிமகா மாரியம்மன் அடியார்கள் இனம் வாழி!
ஊதுவத்தி ஏத்திவைத்து உருகுவார் மனம் வாழி! (தன்)

மாரியம்மன் கோவிலிலே மங்களங்கள் தான் வாழி!
சந்தன நீராடி சார்ந்தார்கள் பேர் வாழி!
தேங்காய் உடைத்துவைத்து கும்பிட்டார் சீர் வாழி!
எண்ணை விளக்கேற்றி மின்னுகின்ற ஊர் வாழி! (தன்)

மாரி மகமாயி மக்கள் எல்லாம் வாழியவே!
ஆயி மகமாயி அன்பரெல்லாம் வாழியவே!
தேவி மகமாயி திருத்தொண்டர் வாழியவே!
மாயி மகமாயி மலர்ப்பாதம் வாழியவே! ( தன்)
.............................................................
மாரியம்மன் தாலாட்டு
விநாயகர் துதி-காப்பு
கொச்சக்கலிப்பா

பூதலத்தில் யாவருக்கு பேராதரவாய் எந்நாளும்
மாதரசி என்று வாழ்த்துகின்ற மாரியம்மன்
சிரீதரனார் தங்கை சிறப்பான தாலாட்டைக்
காதலுட னோதக் கணபதியும் காப்பாமே.

வெண் செந்துரை

முந்தி முந்தி விநாயகரே முக்கண்ணார் தன்மகனே
கந்தருக்கு முன் பிறந்த கற்பகமே முன்னடவாய்
வேலவருக்கு முன் பிறந்த விநாயகரே முன்னடவாய்
வேம்படியிற் பிள்ளையாரே விக்கினரே முன்னடவாய்

பேழை வயிற்றோனே பெருச்சாளி வாகனரே
காரண மால்மருகா செல்வக் கணபதியே
சீரான நல் மருகா செல்வக் கணபதியே
ஒற்றைக் கொம்போனே உமையாள் திருமகனே

கற்றைச் சடையணிந்த கங்காதரன் மகனே
வித்தைக்கு விநாயகனே வெண்ணையுண்டோன் மருகா
மத்தகக்கரி முகவர் மாயோன் மருகோனே
தந்தமத வாரணனே தற்பரனே முன்னடவாய்

நெஞ்சிற் குடியிருந்து நீயெனக்கு முன்னடவாய்
பஞ்சஞ்சு மெல்லடியாள் பார்வதியாள் புத்திரனே
வேழ்முகத்தோனே விநாயகரே முன்னடவாய்
தாழ்விலாச் சங்கரனார் சற்புத்திரா வாருமையா

முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே
கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே
முத்தாலே தண்டை கொஞ்ச முன்னடவாய் பிள்ளையாரே
செல்வக் கணபதியுன் சீர்பாதம் நான் மறவேன்
................................................................
நவராத்திரி நாயகி - மீனாட்சி தோத்திர மாலை

ஜெய ஜெயதேவி ஜெய ஜெயதேவி ஜெய ஜெயதேவி சரணம் (ஜெய)

அரிஅரன் போற்றும் அழகிய வடிவே!
அங்கயற் கண்ணி ஆன வளே!
குருபரன் பிள்ளைத் தமிழனைக் கேட்டுக்
குழந்தை வடிவில் வந்த வளே!
மகிடனை வெல்ல மாதவம் செய்த
மாதருள் மூத்த மலை மகளே!
விகடனாய்த் திரியும் என்னையும் காத்து
வித்தகம் அருள்வாய் கலைமகளே! (ஜெய)

பாண்டியன் செய்த வேள்வியின் பயனாய்ப்
பாரினில் வந்த பைங்கிளியே
வேண்டிடும் பக்தர் வேண்டிடும் யாவும்
விரைந்தே அளிக்கும் அருள்நி தியே!
தூண்டிலில் மீனாய்த் துடித்திடும் மைந்தன்
துயரம் தீர்ப்பாய் தூயவளே!
மாண்பினைத் தந்தும் மாட்சிமை தந்தும்
மைந்தனைக் காப்பாய் திருமகளே! (ஜெய)

திரைகடல் அலையாய்க் கார்குழல் அலையத்
திவ்விய வடிவம் கொண்ட வளே!
கரைதனை அறியா வினைகளை வெல்லக்
கருணை புரிவாய் என் தாயே!
திருமலை ராயன் மடிதனில் அமர்ந்து
தீந்தமிழ் கேட்ட தாரகை யே!
ஒருதரம் வந்தென் கவிதனைக் கேட்பாய்!
உன்னத மான மலைம களே! (ஜெய)

கொலுவினில் வைத்த பொம்மையைப் போலக்
குழந்தை நானும் வாழு வதோ!
அழுதிடும் சவலைப் பிள்ளையைப் போல்
அடியவன் வாடிக் கலங்குவதோ!
பழுதுகள் ஆயிரம் நான்கொண்ட போதிலும்
பாவி நானுன் மகனன் றோ!
தொழுகிறேன் தாயே! அழுகிறேன் தாயே!
துயர்களைக் களைய வரு வாயே! (ஜெய)

அறுபடைக் குமரன் சரவண முருகன்
அசுரரை வெற்றி கொள்ளுதற்கே
திறமிகு சக்தி வேலதைத் தந்து
தேவரைக் காத்த நாயகி யே!
குறையுடை மகனாய்க் குவலவயந் தன்னில்
மகனெனைப் படைத்தது ஏனம் மா?
நிறைவினைத் தருவாய் ! நிர்மல வடிவே!
நீள்விழி நயனம் கொண்ட வளே! (ஜெய)

கடைவழி செல்லும் ஒருசிறு மழலை
காண்பது யாவும் கேட் டழுதும்,
தடைபல கூறித் தக்கதை மட்டும்
தாயவள் தந்து காத்திடு வாள்!
இடைவெளி இன்றிப் பலப்பல வேண்டும்
எளியவனுன்றன் மகன் நானும்
திடமுடன் வாழத் தக்கதை மட்டும்
தந்தெனைக் காப்பாய் என் தாயே! (ஜெய)

மலரின் மணமாய் மனதுள் மலர்வாய்
மங்கை உமையவள் என் தாயே!
புலரும் காலைப் பொழுதின் சுடராய்
புத்தொளி தருவாய் என் தாயே!
வளரும் தமிழாய் வாழ்வின் சுவையாய்
வளங்கள் வழங்கி அருள் தாயே!
பலரும் போற்றிப் புகழும் வாழ்வைப்
பாலன் எனக்கும் அருள் வாயே! (ஜெய)

கோவிலின் நடுவே கொலுவென நின்று
குவலயம் காக்கும் திருமகளே!
ஆவுடை நாதன் ஆவியிற் கலந்து
அன்பினைச் சொரியும் பூ மகளே!
பூவிழி மலரப் புன்னகை புரியும்
புண்ணிய வடிவே என் தாயே!
பாவியாம் நானும் பரகதி அடையப்
பரிவுடன் அருளைப் பொழி வாயே! (ஜெய)

மதுரையாம் பதியை மகிழ்வுடன் ஆளும்
மரகத வடிவாம் மீனா ளே!
சதுர் மறை போற்றும் சங்கரி உமையே!
சத்திய வடிவம் கொண்டவளே!
விடுகதை போலும் வாழ்வியற் புதிரின்
விடைகளாய் ஆன கார ணியே!
தொடர்கதை ஆகும் இடர்களும் தீரத்
தொடர்ந்த தெனைக் காப்பாய் பூரணியே! (ஜெய)

அமரரும் மீள அசுரரும் சாய
அற்புதம் அன்று புரிந்த வளே!
நவநா ளிரவு விரதமி ருந்து
நானிலம் குமரி முனைதனில் நின்று
தர்மம் காக்கும் பகவ தியே!
சிவமாய்ச் சுடராய் என்னுள் விளங்கிச்
சிந்தையில் நிறைவாய் தூய வளே! (ஜெய)

வந்தது யாவும் உன்னருள் என்று
வணங்கி யே நானும் வாழ்கின்றேன்!
சென்றது யாவும் உன்செயல் என்று
சிந்தை யில் எண்ணிச் செல்கின்றேன்!
நன்றென என்னை நாயகி காப்பாய்
என்றே நம்பி வாழ்கின்றேன்!
கன்றென உந்தன் காலடி வீழ்ந்தேன்
கருணை புரிவாய் என் தாயே! (ஜெய)

சேரென வினைகள் சூழுமென் மனதில்
செந்தா மரையாய் நீ மலர்வாய்!
காரிருள் மறையத் தோன்றிடும் கதிராய்க்
கனலாய் என்னுள் நீஒளிர் வாய்!
கூரென விழிகள் வேலென மின்னக்
குற்றம் குறைகள் நீ களைவாய்!
பாரினில் உந்தன் மகன்படும் துயரம்
யாவையும் போக்கி நீ அருள் வாய்! (ஜெய)

தந்தை தாயைப் பிரிந்த பிள்ளை
தன்னந் தனியே தவிப்பது போல்,
சந்தை உலகில், மந்தை உறவில்
சலித்துச் சோர்ந்து நான்நின் றேன்!
கந்தன் வேலன் இவர்கள் உடனே
காளை நானுன் மகனன் றோ!
விந்தை இதனை அறிந்த பின்னும்
வாரா திருத்தல் முறைதானோ! (ஜெய)

சொந்தச் சுமையைத் தோளில் ஏற்றிச்
சோர்ந்து நானும் நடக் கின்றேன்!
பந்தச் சுமையை நெஞ்சில் ஏற்றிப்
பாலன் நானும் சுமக்கின்றேன்!
எந்தச் சுமைகள் ஆன போதும்
எல்லாம் சுமக்கும் இன மானேன்!
எந்தன் தாயே என்னை மட்டும்
என்றும் சுமையாய் எண் ணாதே! (ஜெய)

சலசல வென்று சலங்கைகள் கொஞ்சச்
சங்கரி உமையே வந்தருள் வாய்!
கலகல வென்று கைவளை சிணுங்கக்
கயல்விழி மாதே நீவரு வாய்!
பளபள வென்றுன் இருவிழி மின்னப்
பாவை நீயும் எதிர் வருவாய்!
மளமள வென்று மங்கலம் பொங்க
மாதா நீயும் எமக் கருள்வாய் ! (ஜெய)

மானுட வடிவில் மதுரை வந்து
மனையறம் காத்த மலைமகளே!
நானுமுன் அருளை நலமுடன் வேண்ட
நற்கதி தருவாய் பூமகளே!
ஊனமில் மனமும் உறுதியா முடலும்
உன்னடி பணியும் உயர்குணமும்
வேணும் என்னாளும் என்றே பணிந்தேன்
விரைந்து அருள்வாய் என்தாயே! (ஜெய)

டமருக நாதம் தாளம் போடத்
தாண்டவம் புரிவோன் காதலியே!
பகரும் புலவர் பைந்தமிழ்ச் சொல்லில்
பண்பாய் ஒளிரும் பூங்கொடியே!
நகரம் மகரம் சிகரம் வகரம்
யகரம் யாவும் ஆனவளே!
நிகரில் லாத சிவமய மாகி
நெஞ்சில் மலரும் நிர்மலமே! (ஜெய)

பாலன் இராம நாதன் உன்மேல்ப்
பாடல் பாடிப் பணிகின்றேன்!
ஆவல் தீர அன்னை உந்தன்
அன்பில் நானும் கனிகின்றேன்!
மேவும் அன்புப் பாசச் சுடரில்
மெல்ல மெல்லக் கரைகின்றேன்!
பாவம் இந்தப் பாலன் என்று
பரிவு காட்டி அருள்வாயே! (ஜெய)

 

அருள் வேண்டற் பதிகம்

கூடல் மாநகராளும் கொற்றவை புகழ்பாடக்
குழந்தை நானோடி வந்தேன்!
குறைவிலா அருளோடு குணமிகு கற்பகம்
கூர்மதி தந்து அருள்க!
ஆடல்புரி சிவனாரின் அகமாளும் என்தாயை
அன்புடன் பாட வந்தேன்!
அற்பனென் கவிதையை அற்புதம் என்றாக்கி
அருள்புரிய வேணு மைய்யா!
தேடுமுயர் ஞானமும் தெவிட்டாத யோகமும்
தேவியுன் அருளே என்று
தெளிந்திடும் சித்தமும் தேர்ந்திடும் புத்தியும்
தேவி நீ தந்து அருள்க!
பாடுமென் பாடலைப் பாமாலை ஆக்கியுன்
பாதமலர் சூடு கின்றேன்!
பரிவோடு உன்மகன் பாடலைக் கேட்டுஎன்
பாடுகள் போக்கி அருள்க!

சிறுமடல் மல்லிகை அதன் மணம்போல என்
சித்தத்தில் மணக்கும் தாயே!
ஒருமடல் வரைகிறேன் எனதிடர் யாவையும்
ஒருகணம் கேளு நீயே!
ஒருவழிப் பாதையில் நெடுவழிப் பயணமாய்
ஓய்வின்றி உழலு கின்றேன்!
நடுவழிப் பாதையில் நான்சோர்ந்து போயில்
நலமுடன் வந்து காப்பாய்!
அறிவிலா மூடனாய் அன்பிலா மூர்க்கனாய்
அவனியில் வாழு கின்றேன்!
தெளிவிலா வேதாந்தம் பலபேசி என்வாழ்வைத்
தேய்பிறை ஆக்கி விட்டேன்!
பலதுயர் பட்டபின் அவைபோக்கும் மருந்து உன்
பாதமலர் என்று கண்டேன்!
பரிவோடு உன்பாதம் என்நெஞ்சில் வைத்துஎன்
பாவங்கள் போக்கு தாயே!

மடிதனில் உதைத்தாலும் மாரிலே மிதித்தாலும்
மகிழ்வோடு கொஞ்சும் தாயாய்
மனதிலே நினைத்தாலும் மகிழ்வோடு துதித்தாலும்
மகிமைகள் அருளும் தாயே!
கொடிதான ஊழ்வினைத் தொடராலே உலகினில்
குமுறியே வாடுகின் றேன்!
கொற்றவை உன்பாதம் பற்றியே அழுகிறேன்
குறைகளைப் போக்கி அருள்க!
மடிகின்ற காயத்துள் மாøயாயாம் ஆசைகள்
மலைபோல வளரு தம்மா!
மமதையாம் ஆணவப் பேய்களும் மனதுள்ளே
மகிழ்வோடு ஆடுதம்மா!
தொடர்கின்ற பிறவியும் தொலையாத வினைகளும்
தொடர்ந்துமே பின்னுதம்மா!
தூயநின் பாதத்தைச் சேய்நானும் பற்றினேன்
துலங்கிட அருளு மம்மா!

இதயமும் கசிந்தோடி இருவிழி நதியாகி,
இவைகூடும் சங்கமத்தில்
உதயத்தின் ஒளிபோல் வினையிருள் நீக்கிடு
ஒப்பிலா எந்தன் தாயே!
அழுதிடும் பிள்ளையின் அழுகையின் தரங்கொண்டு
அதுபோக்கும் அன்னை போலத்
தொழுதிடும் உன்மகன் தொழுகையின் தரங்கண்டு
துயரங்கள் போக்கு தாயே!
வேரின்றி மரமில்லை! விலையின்றிப் பொருளில்லை!
விதிவென்ற மனிதரில்லை!
நீரின்றி உலகில்லை! நிலவின்றி வானில்லை!
நின்னருட் கிணை யுமில்லை!
நினைவின்றி மனமில்லை! நீயின்றி நானில்லை!
நேரிலே வருவ தென்று?
தாயின்றித் தவிக்கின்ற சேயாக அழுகின்றேன்!
தயவோடு வந்து காப்பாய்!

கருவளர் நிலையிலும் மடிவளர் நிலையிலும்
குழவிதன் தாயை உணரும்!
தரைதவழ் நிலையிலும் தளிர்நடை அசைவிலும்
பிறசுற்றம் கண்டு அறியும்!
மதிவளர் நிலையிலும் மனைமாட்சி வரவிலும்
உலகியல் மோகம் வளரும்!
விதிவளர் நிலையிலும் வினைபடு நிலையிலும்
உனதருள் தேடி அலையும்!
கடைவழி திரியுமோர் தெருவழி நாயெனக்
கடையனும் அலையு முன்னர் (உன்)
கடைவிழி அசைவினால் எனக்கருள் வழங்குவாய்
கடையூரில் வாழும் தாயே!
விடைவழி அறியாத துயர்நிலை ஒழியவும்
விரைவினில் வருக தாயே!
விடைதனில் ஏறிடும் சிவனுடன் கூடிநீ
விரைவுடன் அருள்க தாயே!

வலைகளாய் உறவுகள் - அலைகளாய்ப் பிறவிகள்
முடிவுநான் காண்ப தென்று?
மலைகளாய் ஆசைகள் - தளைகளாய் என்வினை
இவைகளை வெல்வ தென்று?
நிலையிலா மனத்துடன் துணிவிலா குணத்துடன்
எனைநீயும் படைத்த தேனோ?
அழிவிலா உன்பதம் அடையநான் சம்மதம்
அதற்கொரு வழியு மென்ன?
அறிவிலா உன்மகன் படும்துயர் கண்டுநீ
அசைவிலா திருக்கலாமோ?
ஒருசிறு நொடியேனும் உன் மகன் எனை நினை
என்நொடி யாவும் தீரும்!
இருவினை மும்மலம் இவையெலாம் ஒழிந்திட
உனதருள் ஒன்று போதும்!
இருகரம் கூப்பியே அழுகிறேன் உன்மகன்
இறைவி நீ அருள வருக!

நிதிகேட்டு வந்தாலும் கதிகேட்டு வந்தாலும்
நிறைவோடு அருளும் தாயே!
மதிகெட்டுப் போனவன் மனம்விட்டு அழுகிறேன்
மனம்கனிய வேணும் தாயே!
கதிகெட்டுப் போனாலும் லயம் கெட்டுப் போனாலும்
இசைகெட்டுப் போகும் தாயே!
விதிவிட்ட வழியென்று வினைமுற்ற வாழ்வதால்
விளையுமோ நன்மை தாயே?
பரிவட்டம் பல்லக்கு பகட்டான பெருவாழ்வு
பாரினில் மாயை அம்மா!
இளவட்டம் மாறியும் நரைவட்டம் கூடியும்
மனமாற்றம் இல்லை அம்மா!
தொடரட்டும் உன்னருள் ! தொலையட்டும் என்வினை!
துரிதமாய்ச் செயல்படு அம்மா!
மலரட்டும் என்மனம் ! படரட்டும் பேரொளி!
மகனெனக் கருள்புரி அம்மா!

ஒருமாரில் அமுதுண்டு மறுமாரில் கால்வைத்து
மகிழ்வோடு உதைத்தபோதும்
இருபாதம் தளிர்தொட்டு இதழாலே முத்தாரம்
தருகின்ற அன்னை போலப்
பலவாறு நான்கெட்டுப் பண்பாடு இல்லாமல்
பதராக அலைந்த போதும்
பரிவோடு எனைவாழ்த்திப் பாங்கோடு எனைக்காத்துப்
பாசத்தைப் பொழியும் தாயே!
திருவோடு கையேந்தும் ஈசற்கு அருள்கின்ற
திருவான அன்னை உமையே!
திருஏடு வைகையில் எதிர்நீச்சல் போடவும்
திறமோடு அருளும் தாயே!
மருளோடு மாயையில் மயங்கிடும் உன்மகன்
மனதிலே வந்து நீயும்
அருளோடு நலந்தந்து அன்போடு வளந்தந்து
அகந்தனை ஆளு வாயே!

காதோரம் நரைவிழும் காலங்கள் தாண்டியும்
கசடனாய் வாழ்ந்த போதும்
கருத்தினில் ஒன்றையும் வாக்கினில் ஒன்றையும்
கள்ளமாய்க் கொண்ட போதும்
வேதாளம் மரமேறும் கதைபோல வாழ்வினை
வீணாகக் கழித்த போதும்
விளையாட்டு போலவே வாழ்வினை நானெண்ணி
விதிவழி சென்ற போதும்
ஏதேனும் காரணம் பலசொல்லித் தோல்வியை
இயல்பாகக் கொண்ட போதும்
துணையாக வருகின்ற நட்பையும் உறவையும்
துச்சமாய மதித்தபோதும்
மாதாவுன் திருவடி மகிமையை உணர்ந்துநான்
மனதாரத் துதித்த போது
மகிழ்வான உன்பார்வை என்மீதில் படர்ந்திட
மங்களம் பெற்று உய்வேன்!

அன்பான அகந்தனை ஆலயம் ஆக்குவேன்!
அன்னையை அங்கு வைப்பேன்!
ஆதாரப் பூக்களை நாடியால் கட்டுவேன்!
அன்னையுன் பாதம் வைப்பேன்!
பண்பான கோசங்கள் ஐந்தையும் திருத்துவேன்!
பஞ்சமுக தீபம் செய்வேன்!
பாதார விந்தங்கள் போற்றியே உருகுவேன்!
புலன்களைப் பூட்டி வைப்பேன்!
நன்றான காயத்தை திரியாக ஆக்குவேன்!
நல்லன்பை நெய் ஆக்குவேன்!
நாவார மனதார என்தாயைப் போற்றுவேன்!
நற்றமிழ்க கவி பாடுவேன்!
ஒன்றான ஆன்மாவை ஒளியாக ஏற்றுவேன்!
உருகியே நானும் பணிவேன்!
உயிரான என்தாயை உணர்வாலே கண்டுநான்
ஒன்றாகித் கலந் திருப்பேன்!

உயிர்மூச்சு எனைவிட்டு ஓடிடும் வேளையில்
உன்நாமம் கூற வேண்டும்!
உடல்விட்டு உணர்வுகள் ஒடுங்கிடும் வேளையில்
உன்னருள் நாட வேண்டும்!
உறவெனும் வலைகளில் சிக்கியே தவிக்கையில்
உன்பாதம் பற்ற வேண்டும்!
உத்தமப் பத்தினி மனையாளின் கூட்டிலும்
உன்அருள் எண்ண வேண்டும்!
உலகியல் வாழ்வினில் ஒவ்வொரு நிலையிலும்
உன்புகழ் பாட வேண்டும்!
உன்மத்தம் கொண்டாலும் ஊழ்வினை வந்தாலும்
உன்னையே போற்ற வேண்டும்!
உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் செயலாலும்
உன்னையே கதியாய் எண்ணி,
உருகிடும் நிலைதந்து ஒளியாக நீ வந்து
உளமெலாம் நிறைய வேண்டும் !

உடலென்ற கூட்டுக்குள் உயிரென்ற ஒருபறவை
ஓயாது வந்து போகும்!
உணர்வென்ற காட்டுக்குள் உளமென்ற ஒருயானை
ஓயாது நொந்து வாழும்!
கடலென்ற பிறவிக்குள் கணக்கின்றி வீழ்ந்துமே
காயமும் நைந்து சாகும்!
கன்மமாம் வினைகளும் கவனமாய்ச் சூழ்ந்துமே
கடைசிவரை சிந்துபாடும்!
கடமைகள் மறந்துமே கானலில் உழன்றுமே
கவலையில் மனமும் வாழும்!
கனிவான உன்னருள் அதைமட்டும் நாடாமல்
காலங்கள் பறந்து போகும்!
தடம்மாற வைக்கின்ற ஆணவச் சிந்தனை
தடையாக வந்து சேரும்!
தயவோடு உன்பாதம் அதைமட்டும் நாடினால்
இவையாவும் மாய்ந்து போகும்!

மழைவளம் செழிக்கவும் மனையறம் நிலைக்கவும்
மாதரசி அருள வேண்டும்!
மொழிவளம் சிறக்கவும் முயற்சிகள் பலிக்கவும்
முக்கண்ணி அருள வேண்டும்!
வழிவழி வருகின்ற வாழ்வியல் மேன்மைகள்
வற்றாது பெருக வேண்டும்!
வருந்துயர் போகவும் வளமைகள் பெருகவும்
வடிவரசி அருள வேண்டும்!
மதவெறி இனவெறி மொழிவெறி இவையெலாம்
மடிந்துமே போக வேண்டும்!
மானுடம் உயரவும் மாநிலம் செழிக்கவும்
மங்கைநீ அருள வேண்டும்!
வேணுமுன் திருவடி என்னெஞ்சில் என்றுநான்
வேண்டியே வாழ வேண்டும்!
வேணுகோபாலனின் சோதரி வந்துநல்
வெற்றிகள் அருள வேண்டும்!

 

மீனாட்சி தோத்திரமாலை

நடை: ஜெய ஜெய தேவி! ஜெய ஜெய தேவி!
ஜெய ஜெய ஜெய ! சரணம்! (ஜெய)
ஜெய ஜெய ஜெய ! ஜெய ஜெய ஜெய !
ஜெய ஜெய தேவி! சரணம்! (ஜெய)

ஆதி சக்தி! அன்பே சக்தி!
அகிலம் யாவும் சிவசக்தி!
சோதிசக்தி! சூட்சுமி சக்தி!
சொக்கன் மயங்கும் எழில்சக்தி!
வேதசக்தி! யோகசக்தி!
வினைகள் மாய்க்கும் ஜெயசக்தி!
நாதசக்தி! ஞானசக்தி!
நர்த்தனம் புரிவோன் உயிர்சக்தி! (ஜெய)

ஓதும் தமிழின் உயிராய் விளங்கும்
உன்னதமான உயர்சக்தி!
யாதும் இறைவன் அருளே என்போர்
மனதுள் வாழும் மாசக்தி!
பாடும் புலவர் நாடும் மேன்மை
பாங்கா யருளும் ஓம்சக்தி!
தேடும் மேன்மை யாவும் அருளும்
தேவியுந்தன் அருட்சக்தி! (ஜெய)

சோதி ஆனாய்! சுடரும் ஆனாய்!
சூட்சுமம் கடந்த வடிவானாய்!
ஆதிஇறையின் துணையும் ஆனாய்!
அன்பில் தாய்மை நிலைகொண்டாய்!
வேதம் நான்கின் முடிவும் ஆனாய்!
விதியை மாற்றும் திறம் கொண்டாய்!
நாதம் ஆனாய்! கீதம் ஆனாய்!
நற்றமிழ் கவியின் சுவை ஆனாய்! (ஜெய)

விண்ணகந்தன்னில் மின்னிடும் விண்மீன்
எத்தனைகோடி யாரறிவார்?
என்னகந்தன்னில் மின்னிடும் ஆசை
அத்தனை கோடியும் நீயறிவாய்!
உன்னகந்தன்னில் உன்மகனென்னை
ஒருபொழுதேனும் நீ நினைவாய்!
மண்ணகந்தன்னில் வாடிடும் மைந்தன்
மனக்குறையாவும் நீ களைவாய்! (ஜெய)

இருவிழி நனைய ஒருமனதாகவுன்
திருவடி பணிந்து தொழுகின்றேன் !
ஒருதரமேனும் ஒருகணமேனும்
ஒருமுறையேனும் கண்பாராய்!
கருவறை தன்னில் கனலென மின்னும்
கயல்விழி கொண்ட என்தாயே!
சிறுவனின் கவியில் மனமது இரங்கிச்
சீக்கிரம் அருள் வருவாயே! (ஜெய)

அலையும் கடலில் விளையும் நுரைபோல்
அடியேன் பிறந்து உழல்கின்றேன்!
நிலையாம் உந்தன் கருணை வேண்டி
நித்தம் புலம்பித் தவிக்கின்றேன்!
தொடரும் பிறவி, படரும் துயரம்,
இடரும் உறவு, இவைதாண்டி
நெகிழும் பக்தி நிலையாம் ஞானம்
நிர்மலயோகம் இவை அருள்வாய்! (ஜெய)

கருவில் வளரும் மழலை சலனம்
கருத்தில் உணரும் தாய் போல,
அருளை வேண்டித் தவிக்கும் மைந்தன்
துயரம் போக்க இசைதாயே!
பொருளும், வளமும், புகழும் நலமும்
பொருந்த அருளும் என்தாயே!
அருளை வரவாய் எந்தன் வாழ்வில்
என்றும் வழங்கி அருள்வாயே! (ஜெய)

 

அம்மா அருள்புரியே!

விளங்கும் மதுரை நகரினிலே
துலங்கும் ஞான அருள்வடிவே!
கலங்கும் பக்தர் துயரிடரைக்
களைந்து போக்குந் தெய்வமே!
கூடல் மாநகர் ஆளும் பேரொளி!
ஆடல் நாயகன் காதல் நாயகி!
பாடும் பாவலர் நாடும் மாநிதி!
அருள்வடிவானவளே!

வளங்கள் அருளும் பெருநிதியே!
நலங்கள் நல்கும் அருள்நிதியே!
வரங்கள் தந்து எங்களையே!
விரைந்து காக்க வந்திடுவாய்!
சந்தம் கொஞ்சும் எந்தன் பாக்கள்!
உந்தன் பாதம் சேரும் பூக்கள்!
வந்தென் துயரம் அம்மா களைவாய்!
ஒளிவடிவானவளே !

புலன்கள் வித்தை புரிந்திடுமோ!
விலங்கு மனமும் வீழ்ந்திடுமோ!
அரங்கம் துயில்வோன் சோதரியே!
பதங்கள் பணிந்தேன் ஆதரியே!
நோயும் நொடியும் உடலின் பாரம்!
வாழ்வும் தாழ்வும் மனதின் சாரம்!
யாவும் உந்தன் அருளால் மாறும்!
கனிவுடன் அருள் புரியே!

குழந்தை வடிவாய் வேள்வியிலே
மலர்ந்த ஞானப் பூங்கொடியே!
சிறந்த யோகப் பேரமுதே!
நிறைந்த வாழ்வை அருள்பவளே!
ஆசைக் கடலில் அலைந்தேன் சோர்ந்தேன்!
பாசச் சிறையில் வீழ்ந்தேன் புரண்டேன்!
நேசக் கரங்கள் தருவாய் அருள்வாய்!
மகனெனக் கருள்புரியே!

உலர்ந்த தஞ்சை நிலம் மகிழ
விரைந்து மழையாய் வருபவளே!
கசிந்து உன்தாள் பணிகின்றோம்!
கனிந்து எம்மைக் காத்திடுவாய்!
வல்லமை வேண்டி வந்தேன் தாயே!
அல்லவை போக்கி அருள்புரிவாயே!
நல்லவை தந்து வாழ்த்திடு வாயே!
திருவடி சரணடைந்தேன்!

 

அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

நடை : ஓம் நமச்சிவாய ஓம்
ஓம் நமச்சிவாய (ஓம்)
(ஓதி)

1. அங்கயற் கண் அம்மையே!
அழகு மதுரைத் தென்றலே!
பொங்கும் கருணை வெள்ளமே!
புலவர் நாடும் அமுதமே!
சங்கம் வைத்த மதுரையில்
என்றும் ஆளும் தெய்வமே!
சங்கரனார் துணைவியே!
சாம்ப சிவன் தலைவியே!

2. கங்கை சூடும் நாதன்மேல்
காதல் கொண்ட தேவியே!
மங்களங் கள் அருளுகின்ற
மாலவனின் தங்கையே!
எங்கள் குலம் காத்திடும்
ஏரகனின் அன்னையே!
தங்கி யெந்தன் நாவிலே
தமிழைத் தீட்டு சோதியே!

3. வெள்ளியம் பலத்திலே
வித்தை காட்டும் நாதனைத்
தில்லையம் பலத்திலே
தினமும் ஆடும் ஈசனை
உள்ள மென்ற கோவிலில்
ஒளிர வைத்த சக்தியே!
பிள்ளை என்றன் பாடலைக்
கேட்டு அருள் முக்தியே!

(பிறப்பு)

4. பாண்டி மன்னன் செல்வியாய்
பைந்தமிழின் செல்வமாய்
வேண்டி நின்ற வேள்வியில்
விளைந்தாள் தேவி ஜோதியாய்!
காஞ்சனையாள் அன்பிலே
கனிந்தாள் தேவி ஞானமாய்!
வாஞ்சை யுடன் பணிந்தனர்
வானவரும் யாவரும்!

5. மூன்று தனம் மேனியில்!
முறுவல் அவள் இதழ்களில்!
கண்ட மன்னன் திகைத்தனன்!
கடவுள் வானில் செப்பினன்!
என்று இவள் கணவனை
எதிரில் இவள் காண்பளோ!
அன்று இவள் ஒரு தனம்
மறையும் என்று கூறினன்!

6. நன்று நன்று என்றுமே
நாட்டோர் யாவும் மகிழ்ந்தனர்!
கன்றைக் கையில் அள்ளியே
காஞ்சனை யும் நெகிழ்ந்தனள்!
ஆயகலைகள் யாவையும்
அழகு மீனாள் கற்றனள்!
மாயவனின் அருளினால்
மங்கைப் பருவம் அடைந்தனள்!

7. பாண்டி மன்னன் செல்வியும்
பலரும் போற்றும் வண்ணமாய்ப்
பாண்டி நாட்டின் அரசியாய்ப்
பட்டம் சூட்டிக் கொண்டனள்!
தாண்டித் தடைகள் யாவையும்
தகர்க்க முடிவு செய்தனள்!
பாண்டி மறவர் சூழவே
பகை முறிக்கச் சென்றனள்!

(பகை வெல்லல்)

8. திசைகள் எட்டும் வென்றனள்!
தேசம் யாவும் வென்றனள்!
வசைகள் பாடும் ஈனரின்
வாழ் வொழித்துக் கொன்றனள்!
இசைவு சொல்லிப் பணிந்தவர்
ஏற்றம் காண அருளினள்!
அசையும் தென்றல் வடிவமாய்!
அன்னை இமயம் சென்றனள்!

(ஈசனைக் காணுதல்)

9. கண்கள் நடுவே கண்ணினைக்
கொண்ட காந்த வடிவினைக்
கண்ட மீனாள் கண்களில்
காதல் பொங்கப் பணிந்தனள்!
வெல்ல வந்த தேவியை
வென்று விட்ட ஈசனும்
மெல்ல இதழ் மலரவே
தனம் ஒன்று மறைந்ததே!

(மணம் பேசுதல்)

10. அண்ணன் மாலும் பிரம்மனும்
அருமைத் தேவர் முனிவரும்
இந்த நிகழ்வு கண்டதால்
இன்பம் பொங்க மகிழ்ந்தனர்!
பின்னர் மதுரை மண்ணிலே
பெருமை பொங்கத் திருமணம்
நல்லபடி முடித்திட
நாட்டம் கொண்டு விரைந்தனர்!

(சிவனின்கோலம்)

11. சுடலைப் பூமிக் காவலன்!
சுட்ட சாம்பல் மேனியன்!
உடலில் நாகம் அணிபவன்!
உடுக்கை அவன் இசைக்கலன்!
நீல வானின் பிறைதனை
நித்தம் சூடும் நிர்மலன்!
சூல பாணி ஆயுதன்!
சுத்த சக்தி நாயகன்!

12. புலியின் தோலை அணிபவன்!
புத்தி சித்தம் கடந்தவன்!
கலியை ஒத்த அசுரரைக்
காலால் எத்தி உதைப்பவன்!
கங்கை அணி நாயகன்!
காசி வாசி ஆனவன்!
எங்கும் நாத ரூபமாய்
என்றும் வாழும் தூயவன்!

13. கயல் விழியின் அழகினைக்
கண்ட ஈசன் மயங்கினன்!
மயில் அவளைக் கவரவே!
எழில் வடிவம் கொண்டனன்!
சுந்தர னாய் மாறினன்!
சொக்க லிங்கம் ஆகினன்!
கண்ட தேவி மயங்கினள்!
காஞ்சனையும் மகிழ்ந்தனள்!

(மீனாளின் அழகு)

14. பச்சை மீனாள் அழகினைப்
பாடத் தமிழை நாடினேன்!
இச்சை யுடன் தேடினேன்!
எழுத வார்த்தை இல்லையே!
உச்சித் திலகம் ஞாயிறு!
உதிரும் பூக்கள் புன்னகை!
மெச்சும் எழில் முகமதி!
மேனி ஒரு பூவனம்!

15. கண்ணிரண்டும் கயல்களாம்!
காது மடல் மலர்களாம்!
பெண்ணரசி நாசியும்
பேரழகு வடிவமாம் !
கன்ன மிரு செங்கனி!
கனிந்த இதழ் கோவையாம்!
என்ன அழகு இவளென
ஈசன் தன்னை மறந்தனன்!

16. செங் கழுத்து சங்குதான்!
சிவந்த தோள்கள் தந்தம்தான்!
கொங்கை இரு கோபுரம்!
குறுகும் இடை சிறுகொடி!
தங்கக் கைகள் செம்மலர்!
தாயின் பாதம் தாமரை!
மங்கை மீனாள் அழகினில்
மனதை இழந்தான் ஈசனே!

17. அலையும் கூந்தல் அருவியாம்!
அவளே அழகு வடிவமாம்!
வளையும் வில்லே புருவமாம்!
வஞ்சி இமை விசிறியாம்!
அழகில் சொக்கி ஈசனும்
அன்றே சொக்கன் ஆகினான்!
உலகோர் கண்ட தில்லையே!
இவளைப் போன்ற அழகியை!

(திருமணக் காட்சி)

18. தாரை வார்த்துத் திருமணம்
தக்கபடி செய்திட
நாரணனும் வந்தனன்!
நந்தி உதவி செய்தனன்!
புரோகித மும் செய்திடப்
பிரம்ம தேவன் வந்தனன்!
பாரில் மக்கள் யாவரும்
பக்தியோடு கூடினர்!

19. தஞ்சை பூமிக் கீற்றினால்,
தரணி எங்கும் பந்தலாம்!
மஞ்சள் வாழை மாவிலை
மதுரை எங்கும் ஒளிருதாம்!
விஞ்சும் எழில் வண்ணமாய்
வீதி யாவும் விளங்குதாம்!
கொஞ்சும் அழகு வடிவுடன்
கூடல் நகர் துலங்குதாம்!

20. இந்திராதி தேவரும்
என்றும் வாழும் முனிவரும்,
சந்திராதி ஞாயிறும்
சகல கோள்கள் யாவையும்
கிம்புருவர் கூட்டமும்
அங்கு வந்து சேர்ந்தனர்!
வம்பு செய்யும் நாரதன்
தானும் அங்கு வந்தனன் !

21. செல்வி எழுவர் பாடிடத்
தேவமாதர் ஆடிட
வள்ளி தெய்வ யானையும்
வண்ணவடி வேலனும்
பிள்ளைக் கண நாதனும்
பெருமை பொங்க வந்தனர்!
நல்லமணம் கண்டிட
நாழிகையைப் பார்த்தனர்!

22. உரிய நேரம் வந்தது!
உன்னதங்கள் நிகழ்ந்தது!
அரியாம் மாலும் தங்கையின்
அழகுக் கையைப் பற்றியே
பெரிய தெய்வம் ஈசனின்
பிரியக் கையில் சேர்த்தனன்!
உரியபடி தாரையும்
வார்த்து மணம் முடித்தனன்!

23. எங்கும் வாழ்த்து முழங்கிட,
எங்கும் வேதம் ஓதிட
எங்கும் மலர்கள் சொரிந்திட
எங்கும் மகிழ்வு பொங்கிட
எங்கும் நிறைவு பூத்திட
எங்கும் அன்பு மலர்ந்திட
மங்கை மீனாள் திருமணம்
மதுரை மண்ணில் நிகழ்ந்தது!

(விருந்து)

24. செட்டி நாட்டுச் சமையலாம்!
சிறப்பு மிக்க வகைகளாம்!
பட்டி தொட்டி யாவிலும்
பந்தி போட்டு வரிசையாம்!
குன்றுகளாய்ச் சாதமாம்!
குளம் குளமாய் கறிகளாம்!
கூடல் மதுரை நகரிலே
குறை விலாத அன்னமாம்!

(வைகை வரவு)

25. செய்த உணவு மிகுதியாய்ச்
சேர்ந்து விட்ட தன்மையால்,
உய்ய வழிகள் சிவனிடம்
உரிமை யோடு கேட்டனர்!
சிவகணத் தில் ஒருவனைச்
சிவனும் அங்கு அனுப்பிட
ஒரு கணத் தில் யாவையும்
உண்டு ஏப்பம் போட்டனன்!

26. தண்ணித் தாகம் எடுக்கவே
தவித்து அவன் அலைகையில்,
எண்ணம் நிறை வேற்றிட
ஈசன் மனம் வைத்தனன்!
கையை வைக்கச் சொல்லியே
வைகை வரச் செய்தனன்!
வைகை பெருகி வந்ததால்
மதுரை மண்ணும் மகிழ்ந்தது!

(விடை பெறுதல்)

27. மொய் எழுதும் வரிசையில்
வையம் யாவும் நின்றது!
கையில் பெற்ற தாம்பூலம்
கடவுள் தந்த பெருவரம்!
அய்யன் அம்மை திருமணம்,
அதனைக் கேட்ட யாவரும்,
மெய்யாய் மேன்மை பெறுவரே!
மேலும் நன்மை அடைவரே!

மங்களம்

28. அம்மை அப்பன் திருமணம்
அகிலம் போற்றும் திருமணம்!
இம்மை மறுமை நலன்களை
என்றும் அருளும் திருமணம்!
உண்மையோடு கேட்டவர்
ஊழை வெல்வர் நிச்சயம்!
நன்மை அவர் வாழ்விலே
நாளும் சேரும் சத்தியம்!


முத்துமாரி திருப்பதிகம்

நடை: ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

காரைநகர் மாரியின் மீதில் கவி பாடிடக்
கற்பகம் அருள வேண்டும்!
மாரியவள் புகழ்பாட மாலவன் மருகனும்
மகிழ்வோ டருள வேண்டும்!
வேராக விளங்கியிவ் வூராளும் சக்தியை
வித்தகக் கவியில் பாடத்
தாராள மாகவே தமிழ்தந்து சரஸ்வதி
தயவோடு அருள வேண்டும்!
ஊருணிக் கரைவாழும் முத்தாள அம்மனும்
உவந்துமே அருள வேண்டும்!
ஊருக்கு நடுவிலே உலகாளும் கொப்புடை
அம்மனும் அருள வேண்டும்
பாருக்கு வளம்தந்து பயிருக்கு மழைதந்து
பலவாறு அருளும் தாயே!
ஊருக்கு அருள்கின்றஉத்தமி என்னுள்ளும்
உள்ளொளி அருளு வாயே!

பச்சிளம் பாவையாய் பருவத்து மங்கையாய்ப்
பரிவோடு காரை வந்தாய்!
மெச்சியே ஊர்காக்க மேலான தெய்வமாய்
மேன்மையா யாளு கின்றாய்!
கச்சையாய் மஞ்சளைக் கட்டியே பக்தர்கள்
கடுமையாய் விரதம் பூண்டு
இச்சையாம் இல்லறக் கடலினைக் கடந்திட (உன்)
இணையடி நாடு கின்றார்!
எத்தனை உறவுகள் வந்திட்ட போதிலும்
அவையாவும் நீ யாகுமா?
முத்தான மாரியே! முழுதான சோதியே ! (என்)
முகம்பார்த்துச் சிரிக்கும் சேயே!
சித்தத்தில் உனைப்போற்றிச் சித்திரத் தமிழாலே
சிலிர்ப்போடு பாடு கின்றேன்!
மொத்தத்தில் உன் பாதம் முழுமையாய்ப் பணிகின்றேன்!
முக்தியை அருளு வாயே!

கையிலே கங்கணம்! கருத்திலே உன் முகம்!
கடல்போல பக்தர் வெள்ளம்!
காரையம் பதியிலே மாரிக்குப் பாற்குடம்
காட்டாறு போல வெள்ளம்!
மெய்யிலே சந்தனம் பூசியே பக்தர்கள்
மெல்லவே வந்த போதும்,
மேலான உன்பாதம் காண்கின்றபோதினில்
புயலாக வந்து மோதும்!
பொய்யிலை - புளுகிலை - புதிருக்கு விடையிலை
புதுமைகள் அங்கு பாரீர்!
பூரித்த அழகுடன் புன்னகை எழிலுடன்
பூ மகள் வடிவம் பாரீர்!
கையறு நிலைகொண்டு கலங்கிடும் பக்தரின்
கலங்கரை விளக்கம் நீயே!
கையேந்தி உன் பாதம் கண்ணீரால் நனைக்கின்றேன் (என்)
காயத்தை ஆற்று தாயே!

பத்தினிப் பெண்டிரின் பாற்குடம் பலகோடி
பாங்குடன் வந்து சேரும்!
பறவையாய் மாறிய காவடிகள் கண்டுமே
பரவசம் எங்கும் சேரும்!
அக்கினிப் பூவிலே அன்னையுன் பிள்ளைகள்
ஆவேசம் கொண்டு ஆடும்!
அலங்காரக் காவடி அழகான முளைப்பாரி
அன்னையுன் பாதம் நாடும்!
மத்தள வாத்தியம் மங்கள நாயனம்
மகிழ்வோடு சிந்து பாடும்!
மாதரசி உன்னாமம் மகிழ்வோடு கூவிட
மங்களம் எங்கும் சேரும்!
சித்திரப் பூவிழி சிரித்திட ஒருகணம்
சிறுவனைப் பாரு தாயே!
சித்தத்தில் மலர்கின்றசிங்கார மாரியே
சிவகதி அருளு வாயே!

அந்தணப் பெண்ணாக அன்றைக்கு வந்தவள்
அனைவர்க்கும் தாயும் ஆனாய்!
அற்பர்க்கும் அற்பராய் வாழ்பவர் வந்தாலும்
அவர்கட்கும் அருளை ஈந்தாய்!
சந்தனச் சாந்தினில் மணமாக வந்துநீ
சந்ததி தழைக்க வைத்தாய்!
சவ்வாது குங்குமம் சாற்றிட்ட பெண்மைக்குச்
சரியான துணையும் தந்தாய்!
வந்தனம் செய்திட்ட வாலிபப் பிள்ளைக்கு
வளமான வாழ்வு தந்தாய்!
வருகின்றபக்தரின் நோய்களைத் தீர்த்து நீ
வலிமையை வழங்கு கின்றாய்!
சந்ததம் உன்பாதம் பணிகிறேன் பணிகிறேன்
சாயுச்ய பதவி தந்து,
எந்தனைக் காத்திடு! எந்தனைக் காத்திடு
என்னுளே வாழும் தாயே!

காற்றாக உடல்மாறும் ! கனலாக அருளேறும்
காயமும் மறந்து போகும்!
கனவான உலகிலே மனம்சென்று விளையாடும்!
கவலைகள் மாய்ந்து போகும்!
தோற்றத்தில் உன்எழில் ஒருகணம் தோன்றிடும்
துரியத்தில் ஜோதி ஒளிரும்!
துயரங்கள் இல்லாத தூயதோர் மனநிலை
தொடர்ந்து மேஎன்னை ஆளும்!
மாற்றத்தை வேண்டாமல் மனமதில் லயித்திட
மாதரசி உன்னை வேண்ட
மறுமையை ஒளியாக்கும் வாழ்வினைத் தருவதாய்
மகிழ்வோடு சொல்லி அருள்வாய்!
சீற்றமிகு விதிவசம் சிக்கியே சுழல்கிறேன்
சீக்கிரம் வந்து காப்பாய்!
செஞ்சுடர் வடிவான சிவகாளித் தென்றலே
சிறுவனை என்று மீட்பாய்?

செல்வங்கள் பலவாறு சேர்க்கின்றபோதிலே
சிலருக்கும் மகிழ்வு தோன்றும்!
சிறப்பான பதவிகள் வருகின்றபோதிலே
சிலருக்கு மகிழ்வு தோன்றும்!
பிள்ளைகள் உறவுகள் பலப்படும் போதிலே
பலருக்கு மகிழ்வு தோன்றும்!
பெருமைகள் விருதுகள் பெருகின்றபோதிலே
பலருக்கு மகிழ்வு தோன்றும்!
இருவிழி மூடியே உன் பாதம் நினைப்போர்க்கு
எப்போதும் மகிழ்வு தோன்றும்!
ஒருமுறைஉன்முகம் மனதிலே காண்போர்க்கு
உத்தம வாழ்வு தோன்றும்!
மறுமுறைமறுமுறை உன்னையே மனதிலே
மகிழ்வோடு துதிப்ப வர்க்கு
மறுமையைக் கடக்கின்றமகத்தான பேராற்றல்
மனதிலே என்றும் தோன்றும்!

காற்றான பிராணனும் காற்றோடு கலந்திடும்
காயமும் மண்ணில் சேரும்!
கனவுகள் காண்கின்றசித்தமும் வானிலே
காணாமல் கரைந்து போகும்!
நேற்றுவரை உடன்வந்த உறவுகள் அப்போது
நீர்த்துமே ஓய்ந்து போகும்!
நெகிழ்கின்றஎன்பக்தி அதுமட்டும் நெருப்பாகி
நின்பாதம் வந்து சேரும்!
காற்றுளே உயிராகிக் காயத்துள் உணர்வாகிக்
காக்கின்றஎன்றன் தாயே!
கருத்திலே தெளிவினைத் தந்தெனைக் காத்திடு
கனலாக வாழும் தாயே!
மாற்றாளின் பிள்ளையாய் மகனெனை எண்ணிநீ
மதிப்பதும் முறையும் தானோ?
மடிதனில் இடந்தரும் தாயாக நீ மாறி
மகனெனைக் காரும் தாயே!

இல்லறம் காக்கின்றஎன்போன்றஏழைக்கு
எப்போதும் அருளு கின்றாய்!
சொல்லறம் காக்கின்றதூயவர் வாக்கினில்
சோதியாய்ச் சுடரு கின்றாய்!
நல்லறம் பேணிடும் யாவரும் வாழ்ந்திட
நலமோடு அருளு கின்றாய்!
கள்ளமில் லாதவர் மனத்திலே சென்றுநீ
களிப்போடு துயிலு கின்றாய்!
நல்லவர் படுதுயர் போக்கிடும் நாயகி
நானிலம் போற்றும் உன்னை!
வல்லவர் மனத்திலே வந்து நீ நிற்பதால்
வறுமைகள் தீரும் உண்மை!
அல்லது போகவும் நல்லது சேரவும்
அன்னை நீ அருள வேண்டும்!
மல்லிகைச் சோலையின் தென்றலாய் வந்து நீ
மாநிலம் காக்க வேண்டும் !

பொருளுக்கு ஏங்கியும், புகழுக்கு ஏங்கியும்
போகத்தில் வாழ்ந்து விட்டேன்!
அருளுக்கு ஏங்கியும் அன்புக்கு ஏங்கியும்
அன்னையுன் பாதம் தொட்டேன்!
கருவுக்குள் வாழ்ந்திடும் மழலைக்கும் அன்னத்தைக்
கருத்துடன் ஊட்டும் தாயே!
உறவுக்கு ஏங்கிடும் உன்பிள்ளை என்னையும்
உணர்வோடு காரும் தாயே!
அறிவுக்கு விளங்காத அவலங்கள் எனைச்சூழ்ந்து
அல்லலில் ஆழ்த்தும் போது
அன்னைக்கும் மேலாக வந்தெனைக் காக்கின்ற
அன்பான சக்தி வடிவே!
பிரிவுக்கு அழுதிடும் பெண்ணிடம், மணநாளில்
பெற்றவள் புத்தி சொல்வாள் (உன்)
அருளுக்கு அழுதிடும் பிள்ளையென் துயருக்கு
அன்னை நீ என்ன சொல்வாய்?

குருபரன் தமிழுக்கு உருகிடும் கொற்றவை (என்)
குலம்காக்க வந்த ஜோதி!
குன்றுதோ அடிடும் குமரப்பன் என்மகன்
குலம்காத்து நின்றஜோதி!
கருவளர் காலங்கள் தொட்டெமைக் காத்திடும்
கற்பகம் உற்றஜோதி!
கடனென்று எண்ணாமல் எமையாளும் ஐயனார்
கலங்கரை விளக்க ஜோதி!
திருவரங் கத்திலே துயில்கின்றதேசிகன்
திருவருள் கின்றஜோதி!
தில்லையம் பதியிலே தினமாடும் நடராசன்
திகழ்கின்றயோக ஜோதி!
அருளோடு வழிகாட்டி எமையாளும் சற்குரு
அன்பான ஞான ஜோதி!
அதுபோல நீயெந்தன் அகந்தனில் விளக்காகி
அன்புடன் ஆளு தாயி!

கடல்சூழும் இம்மண்ணில் கருமேகம் சூழட்டும்
கனமழை பொழிய அருள்வாய்!
அருள்சூழும் இம்மண்ணில் இருள்சூழ வொட்டாமல்
அவலங்கள் போக்கி அருள்வாய்!
மடல்சூழும் நீர்நிலை மலர்ந்திடும் ஞாயிறால்
மனம்மலரும் உந்தன் அருளால்!
மருள்சூழும் மானுடம் மமதைகள் நீங்கிடும்
மாதரசி உந்தன் அருளால்!
கடைசென்று வாங்கிடும் பொருளல்ல நிம்மதி!
கருத்தினில் விளங்க வைப்பாய்!
கடனென்று வாழ்வது வாழ்வல்ல என்பதைக்
கடையர்க்கும் புரிய வைப்பாய்!
நடைபோட்டு வருகிறபக்தர்கள் யாவர்க்கும்
நற்கதி தந்து காப்பாய்!
நம்பியுன் திருவடி பணிகின்றயாவர்க்கும்
நலமோடு வளமும் சேர்ப்பாய்!

கொங்கு நாச்சி அம்மன்

கொங்கு நாச்சி அம்மன் புகழ் பாடிடுவோம்! - நம்
குலம் விளங்க அவளருளை நாடிடுவோம்!
மங்களங்கள் அருளுகின்ற நாச்சியம்மா! எங்கள்
மனைவிளங்க வந்துபுரி ஆட்சியம்மா! (கொங்கு)

பிள்ளையார் பட்டிஊரின் எல்லையிலே-வெகு
பெருமையோடு காவல் செய்யும் நல்லவளே!
பிள்ளை நாங்கள் உந்தனடி சரணடைந்தோம்! நீ
நல்லபடி வந்ததெமக்கு நலமருள்வாய்! (கொங்கு)

சுயம்புவாக வடிவம் கொண்ட நாயகியே! நல்ல
சுந்தரமாய் பவனிவரும் பேரொளியே!
இயம்புகின்றேன் உந்தன் புகழ் தமிழினிலே! நீ
எழுந்து வந்து நடம்புரிவாய் மனதினிலே! (கொங்கு)

கொங்குநாடு விட்டுப்பாண்டி நாடு வந்தாய்! எங்கள்
குலம்விளங்கக் கோயில் கொண்டு ஆளுகின்றாய்!
தஞ்சமென்று உந்தன்தாள்கள் சரண்புகுந்தோம்! எங்கள்
நெஞ்சில் என்றும் நிலையாக விளங்கிடுவாய்! (கொங்கு)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar