SS கள்ளழகர் போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கள்ளழகர் போற்றி
கள்ளழகர் போற்றி
கள்ளழகர் போற்றி

1. ஓம் அழகர்மலை அழகனே போற்றி
2. ஓம் அன்பருக்கு அன்பனே போற்றி
3. ஓம் அஞ்சிறைப் புள்ளரையனே போற்றி
4. ஓம் அனந்தசயனப்பெருமாளே போற்றி
5. ஓம் அறிதுயிலில் ஆழ்ந்தாய் போற்றி
6. ஓம் அருள் ஈந்த அம்மானே போற்றி
7. ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
8. ஓம் ஆதிமூலம் ஆனவனே போற்றி
9. ஓம் ஆலிலை துயின்றாய் போற்றி
10. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
11. ஓம் ஆயிரந்தலை சேஷசயனா போற்றி
12. ஓம் ஆயிரம் பொன்சப்பரத்தாய் போற்றி
13. ஓம் ஆண்டாள் சூடிய அழகா போற்றி
14. ஓம் ஆராவமுத பெருமானே போற்றி
15. ஓம் ஆனை நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
16. ஓம் ஆழ்வார் தொழும் தேவா போற்றி
17. ஓம் ஆபத்து நீக்கும் அண்ணலே போற்றி
18. ஓம் இமையோர் தலைவா போற்றி
19. ஓம் ஈகையின் இலக்கணமே போற்றி
20. ஓம் ஈரம் மிக்க நெஞ்சினாய் போற்றி
21. ஓம் உலகளந்த உத்தமனே போற்றி
22. ஓம் உள்ளங்கவர் கள்வனே போற்றி
23. ஓம் உத்தமர் தொழும் தேவா போற்றி
24. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
25. ஓம் ஊழிமுதல்வன் ஒருவனே போற்றி
26. ஓம் எழில் தோள் அழகனே போற்றி
27. ஓம் எழில் மேக வண்ணா போற்றி
28. ஓம் ஏழு முனிவர்க்கருளினாய் போற்றி
29. ஓம் ஏழுமலை நின்றாய் போற்றி
30. ஓம் ஐவர்க்கு தூது வந்தாய் போற்றி
31. ஓம் ஒப்பிலி அப்பனே போற்றி
32. ஓம் ஒளிமணிவண்ணனே போற்றி
33. ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
34. ஓம் ஒளடதமாய் வந்தாய் போற்றி
35. ஓம் கண் கண்ட தெய்வமே போற்றி
36. ஓம் கஞ்சனைக் கொன்றாய் போற்றி
37. ஓம் கருட வாகனப் பிரியா போற்றி
38. ஓம் கார் மேக வண்ணனே போற்றி
39. ஓம் கல்மாரி காத்து நின்றாய் போற்றி
40.ஓம் கள்ளர்கோலத்தில் வந்தாய் போற்றி
41. ஓம் கண்ணபுரத்து அமுதே போற்றி
42. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
43. ஓம் காஞ்சி வரதராஜனே போற்றி
44. ஓம் காயாம்பூ மேனிவண்ணா போற்றி
45. ஓம் குவலயம் காப்பாய் போற்றி
46. ஓம் குளிர்மலை மாயவா போற்றி
47. ஓம் கூர்மாவதார கொற்றவா போற்றி
48. ஓம் கொற்றமலை உறை கோனே போற்றி
49. ஓம் கோபாலா கோவிந்தா போற்றி
50. ஓம் கோபியர் வாழ்வே போற்றி
51. ஓம் கோதண்டம் ஏந்தினாய் போற்றி
52. ஓம் கோவர்த்தனம் தாங்கினாய் போற்றி
53. ஓம் கோலமலை கோவிந்தா போற்றி
54. ஓம் சங்கு சக்கரம் உடையாய் போற்றி
55. ஓம் சர்வலோக நாயகனே போற்றி
56. ஓம் சிந்தனைக்கினியானே போற்றி
57. ஓம் சித்ராபவுர்ணமி நாயகனே போற்றி
58. ஓம் சிலம்பாற்றுச் செல்வனே போற்றி
59. ஓம் சீக்கிரம் வந்தருள்வாய் போற்றி
60. ஓம் சீனிவாசப் பெருமாளே போற்றி
61. ஓம் சுகவாழ்வு தரும் சுந்தரா போற்றி
62. ஓம் சுந்தரவல்லி நாதனே போற்றி
63. ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
64. ஓம் சுந்தரராஜப் பெருமாளே போற்றி
65. ஓம் தசரதன் செல்வமே போற்றி
66. ஓம் தசாவதாரம் எடுத்தாய் போற்றி
67. ஓம் தமிழ் பிரபந்தம் கேட்பாய் போற்றி
68. ஓம் திருமாலிருஞ் சோலையனே போற்றி
69. ஒம் திருமகள் கேள்வனே போற்றி
70. ஓம் திருத்துழாய் முடியோனே போற்றி
71. ஓம் துருவன் போற்றும் தூயவா போற்றி
72. ஓம் நந்தகோபன் குமரா போற்றி
73. ஓம் நரசிங்க மூர்த்தியானாய் போற்றி
74. ஒம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
75. ஓம் நாரதர் நாவில் நின்றாய் போற்றி
76. ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
77. ஓம் நல்லமனம் தருவாய் போற்றி
78. ஓம் நிலமலை நின்றாய் போற்றி
79. ஓம் நீண்டமலை நெடியானே போற்றி
80. ஓம் நீலமேக நிறத்தினாய் போற்றி
81. ஓம் நூபுர கங்கையாடினாய் போற்றி
82. ஒம் பக்தியில் நனைந்தாய் போற்றி
83. ஓம் பக்தர்க்கு அருளும் பரமா போற்றி
84. ஓம் பிரகலாதனை காத்தாய் போற்றி
85. ஓம் பின்னை மணாளனே போற்றி
86. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி
87. ஓம் பூமாலை சூடினாய் போற்றி
88. ஒம் பூவைப் பூ வண்ணனே போற்றி
89. ஓம் பையத்துயின்ற பரமனே போற்றி
90. ஓம் பாற்கடல் பரந்தாமனே போற்றி
91. ஓம் மச்சாவதாரம் எடுத்தாய் போற்றி
92. ஓம் மண்டூக மகரிஷி காத்தாய் போற்றி
93. ஓம் மதில்சூழ் மலைக்கரசே போற்றி
94. ஓம் மாலிருங்குன்று மணியே போற்றி
95. ஓம் மாயோன் மணிவண்ணா போற்றி
96. ஓம் யசோதையின் பிள்ளையே போற்றி
97. ஓம் யதுகுலம் செய்த தவமே போற்றி
98. ஓம் யமபயம் ஒழிப்பாய் போற்றி
99. ஓம் ரகு குல ராகவனே போற்றி
100. ஓம் வளமெல்லாம் தருவாய் போற்றி
101. ஓம் வராஹ மூர்த்தியே போற்றி
102. ஓம் வாழ்வருளும் வள்ளலே போற்றி
103. ஓம் வாமனனாய் வந்தாய் போற்றி
104. ஓம் விருஷபகிரியில் அமர்ந்தாய் போற்றி
105. ஓம் வெண்ணெய் உண்ட வாயா போற்றி
106. ஓம் வேணு கோபாலா போற்றி
107. ஓம் வைகுண்ட வாசா போற்றி
108. ஓம் வைகையில் எழுந்தருள்வாய் போற்றி! போற்றி!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar