SS கமலஜதயிதா அஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கமலஜதயிதா அஷ்டகம்
கமலஜதயிதா அஷ்டகம்
கமலஜதயிதா அஷ்டகம்

ச்ருங்க க்ஷ்மாப் ருந்நிவாஸே சுகமுக முநிபி
ஸேவ்யமாநாங்க் ரிபத் மே

ஸ்வாங்க ச்சா யா விதூ தாம்ருதகர ஸுரராட்
வாஹனே வாக்ஸவித்ரீ

சம்பூ ஸ்ரீநாத முக்யாமரவர நிகரை: மோத த:
பூஜ்யமானே

வித்யாம் சுத்தாம் ச புத்திம் கமலஜதயிதே
ஸத்வரம் தேஹி மஹ்யம்

பொருள் : சிருங்ககிரி தலத்தில் உறைபவள்; சுகர் போன்ற முனிவர்களால் வணங்கப்படும் பாத கமலங்களை உடையவள்; சந்திரன், ஐராவதம் இவற்றின் ஒளியை மிஞ்சும் மேனி ஒளியுடையவள்; சொல்லாற்றல் மிக்கவள்; சிவன், விஷ்ணு மற்றும் தேவர்களால் பூஜிக்கப்படுபவள்; தாமரையில் உதித்த பிரம்மனின் பத்தினியாகிய ஸ்ரீ சாரதாம்பிகையே, எனக்கு நல்லறிவும் தூய புத்தியும் தந்தருள்.

கல்யாதௌ பார்வதீச ப்ரவர ஸுரகண ப்ரார்தித
ச்ரௌத வர்த்ம

ப்ராபல்யம் நேதுகாமோ யதிவர வபுஷாக
த்யயாம் ச்ருங்க சைலே

ஸம்ஸ்தா ப்யார்சாம் ப்ரசக்ரே பஹூவித
நுதிபி: ஸா த்வமிந்த் வர்தசூடா

வித்யாம் சுத்தாம் ச புத்திம் கமலஜதயிதே
ஸத்வரம் தேஹி மஹ்யம்

பொருள் : கலியுகத்தில், பிற மதங்களிலிருந்து ஸ்ருதி பிரமான மதத்தினை உயர்த்திக் காட்டிடுமாறு தேவர்கள் சிவனை வேண்டினார்கள். ஆதலால் பூவுலகில் யதிகளில் சிறந்த சங்கரராக வந்து, தம் வாதத்தினால் பல மதத்தினரை வென்று வேத நெறியை நிலைப்படுத்தினார். தாயே ! அவர் உன்னையும் சிருங்கேரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார், தாமரையில் தோன்றிய பிரம்மனின் துணையே ! எனக்கு நல்லறிவையும் தூயபுத்தியையும் தந்தருள்வாய் !

பாபௌகம் த்வம்ஸயித்வா ப ஹுஜநிரசிதம்
கிஞ்ச புண்யாலிமாராத்

ஸம்பாத் யாஸ்திக்ய புத்திம் ச்ருதிகுருவச
னேஷ்வாதரம் பக்திதார்ட யம்

தேவாசார்யத் விஜாதிஷ்வபி மனுநிவஹே
தாவகீனே நிதாந்தம்

வித்யாம் சுத்தாம் ச புத்திம் கமலஜதயிதே
ஸத்வரம் தேஹி மஹ்யம்

பொருள் : நான் பல பிறவிகளில் செய்த பாவங்களை அழித்து, புண்ணியச் செயல் புரியும் நல்லறிவினைத் தந்தருள். வேதம் மற்றும் குருவின் வார்த்தைகளிலும், தேவர்கள், ஆச்சார்யர்கள் மற்றும் மேலான மனிதர்களிடமும், உன்னைத் துதிப்போரிடமும் எல்லையற்ற பக்தியை எனக்கு வழங்கு. தாமரையில் தோன்றிய பிரம்மனின் துணையே ! எனக்கு ஆஸ்திக புத்தியை ஊட்டி நல்லறிவையும் தூய புத்தியையும் தந்தருள் !

வித்யாம் உத்ராக்ஷமாலாம் அம்ருதகட விலஸத்
பாணிபாதோ ஜஜாலே

வித்யாதான் அப்ரவீணே ஜடபதிரமுகேப்
யோஸபி சீக் ரம் நபேத் ய:

காமாதீன் ஆந்தரான் மத்ஸஹஜ ரிபுவரான் தே
வி நிர்மூல்ய வேகா த்

வித்யாம் சுத்தாம் ச புத்திம் கமலஜத யிதே
ஸத்வரம் தே ஹி மஹ்யம்

பொருள் : புத்தகம், ஞானமுத்திரை, ஜபமாலை, அமுத கலசம் ஆகியவற்றைக் கைகளில் தாங்கியவளே ! உன்னை வணங்குவதால் அறிவற்றவர், செவிடர், ஊமை என யாவருக்கும் கருணையால் ஞானத்தை அருள்பவளே ! என்னுள்ளே எப்போதுமுள்ள காமம் முதலான துர்குணங்களையும் நிர்மூலமாக்கு. ஹே! பிரம்மனின் துணையே ! எனக்கு நல்லறிவையும் புத்தியையும் தருவாய்.

கர்மஸ்வாத்மோசி தேஷு ஸ்திரதரதி ஷணாம்
தே ஹதா ர்ட் யம் தத ர்தம்

தீர்கம் ச ஆயு: ய சச்ச த்ரிபு வந விதி
தம் பாபமார்காத் விரக்திம்

ஸத்ஸங்கம் ஸத்கதா யா: ச்ரவண மபி ஸதா
தே வி த த்த்வா க்ருபாப் தே

வித்யாம் சுத்தாம் ச புத்திம் கமலஜ தயிதே
ஸத்வரம் தேஹி மஹ்யம்

பொருள் : ஹே தேவி, நற்செயல் செய்யும் உறுதியான எண்ணம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மூவுலகிலும் கூறப்பட்டுள்ள பாவச் செயல்களிலிருந்தும் வெறுப்பு, நல்லோரிணக்கம், நல்லவற்றை எப்போதும் கேட்கும் பேறு ஆகியவற்றை கருணையுடன் எனக்கு வழங்கு ! பிரம்மனின் துணையே ! எனக்கு நல்லறிவையும் தூய புத்தியையும் தந்தருள் !

மா த்வத்பாத பத்மம் ந விதி குஸுமை: பூஜிதம் ஜாது

பக்த்யா காதும் நைவாஹமீசே ஜடமதிரலஸஸ்
த்வத் குணாந் திவ்யபத் யை:

மூகே ஸேவாவிஹீநேஸப்யனுபம கருணாம்அர்ப
கேஸம்பேவ க்ருத்வா

வித்யாம் சுத்தாம் ச புத்திம கமலஜதயிதே ஸத்வரம்
தேஹி மஹ்யம்

பொருள் : தாயே ! உன் பாதகமலங்களைப் பலவித மலர்கள் கொண்டு பூஜித்ததில்லை. உன் நற்குணங்களை, நல்ல பாக்களால் துதிக்கும் திறமையற்ற ஊமை நான். பல குறைகள் உள்ளவனாயினும், தாய் போல் கருணை பொழிபவளே, பிரம்மனின் துணையே ! எனக்குத் தூய புத்தியைத் தந்தருள் !

சாந்த் யாத் யா: ஸம்பதோ மே விதர சுப
கரீ: நித்யதத் பின்னபோ தம்

வைராக் யம் மோக்ஷ வாஞ்சாம் அபிலகு
கலய ஸ்ரீசிவா ஸேவ்யமானே

வித்யாதீர்தாதியோகி ப்ரவரகரஸரோஜாத
ஸம்பூஜிதாங்க் ரே

வித்யாம் சுத்தாம் சபுத்திம் கமலஜத
யிதே ஸத்வரம் தேஹி மஹ்யம்

பொருள் : மன அமைதி, நற்பதம் வழங்கி நன்மையையே அருள்பவள். என்றும் நிலையானதை அடைவதற்கான வைராக்கியம் தந்து மோக்ஷமடைவதற்குத் தடையானவற்றை நீக்குபவள். லக்ஷ்மி, பார்வதியால் பூஜிக்கப்பட்டவள் ! ஸ்ரீவித்யாதீர்த்தர் முதலான உன்னத யோகிகள் தாமரை மலர்களால் பூஜித்த பாதங்களை உடையவள். பிரம்மனின் துணையே ! எனக்கு நல்லறிவையும் தூயபுத்தியையும் தந்தருள் !

ஸச்சித ரூபாத்மனோ மே ச்ருதி மனன
நிதித் யாஸனான்யாசு மாத:

ஸம்பாத் ய ஸ்வாந்தமேதத் ருசியுதம்
அனிசம் நிர்விகல்பே ஸமாதௌ

துங்கா தீராங்கராஜத் வரக்ருஹ விலஸத்
சக்ரராஜா ஸனஸ்தே

வித்யாம் சுத்தாம் ச புத்திம்
கமலஜதயிதே ஸத்வரம் தேஹி மஹ்யம்

பொருள் : தாயே ! சத்சித்ரூபமான எனக்கு சிரவணம், மனனம், நிதித்யாசனம் ஆகியவற்றை விரைவில் வழங்கு. என் மனம் நிர்விகல்ப சமாதியில் ருசியுடன் கூடியதாக இருக்க அருள்வாய் ! துங்கா நதிக்கரையிலுள்ள உத்தமமான கோவிலில் ஸ்ரீசக்ராசனத்தில் அமர்ந்து பிரகாசிப்பவளே! தாமரையில் தோன்றிய பிரம்மனின் துணையே ! எனக்கு நல்லறிவையும் தூய புத்தியையும் தந்தருள்வாயாக !


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar