SS காயத்திரி ஜபம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> காயத்திரி ஜபம்
காயத்திரி ஜபம்
காயத்திரி ஜபம்

ஆசமனம், பவித்ரம் தரித்துக்கொண்டு ஆஸனத்துக்கு தர்பை போட்டுக்கொண்டு இரண்டு தர்பையை கையில் இடுக்கிக் கொண்டு ப்ராணாயாமம் ஸங்கல்பம் பரமேச்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீமந்நாராய ப்ரீத்யர்த்தம் அஸ்மத் குருப்யோ நம: ஸிம்ம மாஸே க்ருஷ்ணப÷க்ஷ ப்ரதமாயாம் சுபதிதௌ....வாஸர யுக்தாயாம்....நக்ஷத்ர யுக்தாயாம் - விஷ்ணுயோக விஷ்ணுகரண ஏவம்குண விசேஷேண வசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ப்ரதமாயாம் சுபதிதௌ ஸ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீபகவத் ஆக்ஞயா கைங்கர்யம் ப்ரீத்யர்த்தம் மித்யாதீ தப்ராயச் சித்தார்த்தம் ஸம்வத்ஸர தேர்ஷவத் அபதநீய ப்ராயச்சித் தார்த்தம் அஷ்டோத்ர ஸஹஸ்ர ஸங்க்யயா காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து ஆயாத்விதி - ஆவாஹயாமி

ஸாவித்ரியா + தேவதா சொல்லி 1008 காயத்ரீ ஜபம் செய்யவும் பின்பு ஒரு ப்ராணாயாமம் செய்து பிறகு உத்தமே சிகரே தேவி சொல்லி அபிவாதனம் செய்து பவித்ரத்தைக் கழற்றி ஆசமனம் செய்யவும்.

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயப்படி உபாகர்ம பிரயோகம்

காலையில் ஸ்நானம் சுத்தவஸ்த்ரம் தரித்து திருமண் காப்பு தரித்துக் கொண்டு ஸந்தியாவந்தனம் செய்து கால் அலம்பி ஆசமனம் செய்து 2 தர்பை பவித்ரத்தை கையில் போட்டுக்கொண்டு ஆஸனத்திற்கு 2 தர்பை போட்டுக் கொண்டு, கையில் பவித்ரத்தோடு 2 தர்பை இடுக்கிக் கொண்டு ப்ராணாயாமம் செய்து கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி பூணூலைப் போட்டுக் கொள்கிறது.

அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்கிககேஸரீ வேதாந்தாசார்ய வர்யோமே ஸன்னிதத்தாம் ஸதா ஹ்ருதி குருப்ய: தத்குருப்யஸ்சநமோவாக மதீமஹே வ்ருணீமஹே ச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதீ ஸ்வசேஷபூதேனமயா ஸ்வீயைஸ் ஸர்வ பரிச்சதை: விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம் சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே யஸ்யத்விரத வக்த்ராத்யா : பாரிஷத்யா : பரச்சதம் விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே ஹரி : ஓம் தத்ஸத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அஸ்ய ஸ்ரீபகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயயா, ப்ரவர்தமானஸ்ய ஆத்யப்ரஹ்மண : த்விதீய பரார்த்தே ஸ்ரீச்வேத வராஹகல்பே, வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலி யுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானானாம்

வ்யாவஹாரிகாணாம் ப்ரவாதீனாம் ஷஷ்ட்யாஸ் வம்வத்சராணாம் மத்யே.... நாம ஸம்வத்ஸரே..... யநே ......ருதௌ ...... மாஸே ..... ப÷க்ஷ பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ ....... வாஸர யுக்தாயாம் ....... நக்ஷத்ர யுக்தாயாம் ஸ்ரீவிஷ்ணுயோந ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம்... சுபதிதௌ ஸ்ரீ பகவதாஞ்ஞயா கைங்கர்யம் ஸ்ரீமத்நாராயண ப்ரீத்யர்த்தம் ச்ரௌத ஸ்மார்த்த விஹித நித்ய கர்மானுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம் ப்ரஹ்ம தோஜோ பிவ்ருத்யர்த்தம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே தர்பத்தைக் கீழே சேர்த்துவிடுகிறது. அபஉபஸ்ப்ருச்ய யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய பிரம்மரிஷி: த்ருஷ்டுப்சந்த : த்ரயீவித்யா தேவதா யக்ஞோபசீத தாரணே வினியோக : யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே : யத்ஸஹஜம் புரஸ்தாத் - ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: பூணூலைப் போட்டுக் கொண்டு பவித்ரத்தை காதில் வைத்து ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு ப்ராணாயாமம் செய்கிறது. ஸ்ரீபகவதாக்ஞயா கைங்கர்யம் ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் த்விதீய யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.

த்வீதிய யக்ஞோபவீத இத்யஸ்ய மஹாமந்த்ரஸ்ய + பலமஸ்து தேஜ: பூணூலைப் போட்டுக் கொண்டு அசமனம் செய்து (பழைய பூணூலை) உபவீதம் பின்னதந்து ஜிர்ணம் கச்மல தூஷிதம் விஸ்ருஜாமி நஹிப்ரஹ்ம வர்சோ தீர்க்காயு: அஸ்துமே என்று மந்த்ரம் சொல்லி கழற்றி மறுபடியும் ஆசமனம் செய்து பவித்ரத்தைப் போட்டுக் கொண்டு காலுக்கு ஆஸனமும் கைக்குப் புல்லும் இடுக்கிக் கொண்டு ப்ராணாயாமம் செய்கிறது. அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீ பகவதாக்ஞயா கைங்கர்யம் ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோத் ஸர்ஜன அகரண ப்ராயஸ் சித்தாத்தம் அஷ்டோத்தர ஸஹஸ்ர ஸங்க்யயா காமோகார்ஷீத் மந்யுரகார்ஷீத் மந்தர ஜபம் கரிஷ்யே கட்டைப் புல்லை வடக்காகச் சேர்த்துவிட்டு தீர்த்தத்தைத் தொடுகிறது. காமோகார்ஷீத் மந்யுரகர்ஷீத் என்று 1008 தடவை ஜபித்து ப்ராணாயாமம் செய்து ஸேவித்து அபிவாதனம் செய்து பவித்ரத்தை முடிச்சவிழ்த்து விடுகிறது. ஆசமனம்.

மத்தியானம் மாத்யான்ஹிம் செய்து பவித்ரத்தைப் போட்டுக் கொண்டு ஸங்கல்பம் பண்ணுகிறது. அஸ்மத் குருப்யோ நம: + ப்ரீத்யர்தம் ச்ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோபாகர்ம கரிஷ்யே ததங்கம் ஸ்நானம் கரிஷ்யே ததங்கம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே ததங்கம் காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே ஸ்நானம் செய்து பூணூலைப் போட்டுக் கொண்டு பவித்ரக் கையோடு எள்ளு அக்ஷதை கலந்து கொண்டு பூணூலை மாலையாகப் போட்டுக் கொண்டு தர்ப்பிக்கிறது. கைக்கு நடுவில் தீர்த்தத்தை விடுகிறது.

1. ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி

2. ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி

3. அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி

4. விச்வாந் தேவாந் காண்டரிஷிம் தர்ப்பயாமி

5. ஸாம்ஹிதீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி

6. யாக்ஞிகீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி

7. வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி (உள்ளங்கைகளின் அடிவழியாக)

8. ப்ரம்மாணாம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி

9. ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி

இனிமேல் நேராக சேர்க்கிறது

10. ரிக் வேதம் தர்ப்பயாமி
யஜுர் வேதம் தர்ப்பயாமி
ஸாம வேதம் தர்ப்பயாமி
அதர்வண வேதம் தர்ப்பயாமி
இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி
கல்பம் தர்ப்பயாமி

தகப்பனார் இல்லாதவர்கள் ப்ராசீனாவீதம்

ஸோம: பித்ருமான் யமோ அங்கிரஸ்வான் அக்னி கவ்யவாஹநாதாய:

யேபிதரஸ் தாந்பித்ருந் தர்ப்பயாமி
ஸர்வான்பித்ரூண் தர்ப்பயாமி
ஸர்வபித்ரூகணாந் தர்ப்பயாமி
ஸர்வபித்ரூபத்நீஸ் தர்ப்பயாமி
ஸர்வபித்ரு கணபத்நீஸ் தர்ப்பயாமி
ஊர்ஜம் வஹம்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம்
ஸ்வதாஸ்த தர்ப்பயதமே தேவரிஷி பித்ரூந்

உபவீதி பண்ணிக்கொண்டு ஆசமனம் பண்ணி பவித்ரத்தை முடிச்சவிழ்த்து விடுகிறது.

தர்ப்பித்தவுடன் சொல்ல வேண்டியது

ஹரி : ஓம் இதேஷத்வா ஊர்ஜேத்வா வாயவஸ் உபாய வஸ்த தேவோவ: ஸவிதா ப்ரார்பயது ஸ்ரேஷ்டதமாய கர்மணே ஆப்யாயத்வம் அக்நியா : தேவபாகம். ஊஜஸ்வதீ : பயஸ்வதீ: ப்ரஜாவதீ: - அநமீவா: அயக்ஷ்மா: மாவஸ்தேந ஈஸத மாகஸகும்ஸ: ருத்ரஸ்ய ஹேதி: பரீவோவ்ருணக்து - த்ருவா அஸ்மிந் கோபதௌ ஸ்யாதபஹ்வீர் : யஜமாநஸ்ய பஸூந் பாஹி : ஹரி : ஓம் ஹரி: ஓம் அக்னிமீளே, புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம், ஹரி: ஓம் ஹரி : ஓம் அக்ன ஆயாஹி வீதயே, க்ருணானோ ஹவ்ய தாதயே நிஹோதா ஸத்ஸிபர்ஹிஷி ஹரி: ஓம் சந்நோதேவீ ரபீஷ்டயே, ஆபோவந்துபீதயே சம்யோரபிஸ்ர வந்துந, ஹரி : ஓம் ஹரி : ஓம் அ இ உண் ருலுக் ஏ ஓங் ஐ ஒளச் ஹய வரட லண் ஞமஙணநம் ஜபஞ் கடதஷ் ஜபகடதஸ் கப சடத சடதவ் கபய் ஸஷஸர் ஹல் இதி மாஹேஸ்வராணி ஸூத்ர்õணி ஹரி: ஓம் : ஹரி : ஓம்

தலை சிராவணக்காரர்களுக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது.

மறுநாள் காயத்ரீ ஜபம் முதல் நாள் போலவே பவித்ரத்தைப் போட்டுக்கொண்டு சங்கல்பம் செய்கிறது.

அஸ்மத் குருப்யோ நம: ... மசே க்ருஷ்ண ப÷க்ஷ ப்ரதமாயாம் சுபதிதௌ வாசர ... யுக்தாயாம் .... நக்ஷத்ர யுக்தாயாம் ஸ்ரீ விஷ்ணுயோக ... வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் சுபதிதௌ ஸ்ரீ பகவதாக்ஞயா கைங்கர்யம் ப்ரீத்யர்த்தம் மித்யாதீத ப்ராயச்சித்தார்த்தம் ஸம்வத்ஸர ப்ராயச்சித்தார்த்தம் அஷ்டோத்தர ஸஹஸ்ர ஸங்கய்யயா காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே ப்ரணவஸ்ய.... ஆரம்பித்து பத்து ப்ராணாயாமம் செய்து ஆயாத் விதி -

ஆவாஹயாமி சாவித்ரியா : + சவிதா தேவதா சொல்லி 1008 காயத்ரீ ஜபம் செய்கிறது. பிறகு 1 ப்ராணாயாமம் செய்து உத்தமே சிகரேதேவி யதாஸுகம் வரை சொல்லி சேவித்து பவித்ரத்தை கழற்றி ஆசமனம் பண்ணுகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar