தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்



மார்கழி மாதத்தில் வழிபாடு என்பது வழிவழியாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி மாதத்தில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன்வாழலாம். மேலும் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

மார்கழி மாதத்தின்ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமந்நாராயணனின்கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மதுசூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா,ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பனிரெண்டு நாமங்களும், பனிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன.இதில்முதல் நாமமாக விளங்கும் மந்நாராயணனின் கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது மார்கழியில் அதிகாலை எழுந்து அழகான வண்ணக்கோலம் இட்டு அதில் ஒரு பூசணிப்பூவையும் வைப்பது தான் மரபு. இந்த மாதத்தில் கன்னிப்பெண்கள் பாவை நோன்புஇருந்து வழிபட்டால் அவர்களுக்கு வேண்டியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கண்ணனை கணவனாக மனதில் ஏற்ற ஆண்டாள் தன்னை ஆயர்பாடி பெண்களில் ஒருத்தியாக மனதில் நினைத்துக்கொள்கிறாள். திருவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், வடபெருங் கோயில் நந்தகோபர் மாளிகையாகவும்,அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கிருஷ்ணனாகவும் நினைத்துஇடைப்பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள். அந்நோன்பைப் பற்றித் திருப்பாவையிலும் கூறப்பட்டுள்ளது. இந்த மார்கழியில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் போது விடியும்முன்பே எழுந்து விடுவார்கள். தனது தோழிமார்களான மற்ற கன்னி பெண்களையும் தூக்கம் கலைத்து எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவது தான் பாவை நோன்பின் முக்கிய அம்சம். பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை , நாச்சியார் திருமொழி மற்றும்ஆழ்வார்கள் பாசுரங்களை முழுவதும் அதிகாலையில் பாடி வர வேண்டும் நோன்பு காலத்தில் கன்னிப் பெண்கள் திருப்பாவை பாசுரத்தில் இரண்டாம் பாடலில் உள்ளது போல நெய் மற்றும் பால் உண்ணாமல் ,கண்ணுக்கு மையிடாமல் தலையைச் சீவிமுடித்து மலர்களைச் சூட்டிக் கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தன்னைஅலங்கரித்துக்கொள்ளும் எந்த செயலையும் செய்யாமல் இறைசிந்தனையில் இந்த பாசுரங்களை தான் பாட வேண்டும். பெருமாளையும் ஆண்டாளையும் வழிபட வேண்டும் .இப்படி மார்கழி மாதம் முழுவதும் சரியாக செய்து வந்தால் கன்னிப்பெண்களுக்கு மனதில் நினைத்தது போல அழகான கணவன் அமைவான் என்பது ஆன்மிக நம்பிக்கை.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்