வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

டிசம்பர் 21,2023



ஈரோடு; ஈரோடு, கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்களுக்கு வழங்குவதற்காக, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு, கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும், 23ம் தேதி அதிகாலை, 4:45 முதல் 5:00 மணிக்குள் சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் காண வரும் பக்தர்களுக்கு, கஸ்துாரி அரங்கநாதர் நண்பர்கள் குழு   சார்பில், 20ம் ஆண்டாக லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.‌ இதற்காக, 1,000 கிலோ கடலை மாவு, 1,000 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 1,000 லிட்டர் கடலெண்ணெய், 25 கிலோ முந்திரி, 25 கிலோ திராட்சை மற்றும் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் ஆகியவை, 5 கிலோ உள்ளிட்ட பொருட்களை கொண்டு லட்டு தயாரிக்கும் பணியில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்