ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் சித்திரை தேர் உற்சவம்; முகூர்த்த கால் நடப்பட்டது



திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழாவிற்காக முகூர்த்த கால் நடப்பட்டது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் சித்திரை தேர் உற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவில் வரும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு, கொடியேற்ற மண்டபம் சேருதல்,
கொடிப்படம் புறப்படுதல் நடைபெற்று துவஜாரோஹணம் எனும் கொடியேற்றம் மேஷ லக்னத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு பல்வேறு வழிபாடுகள், வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 6ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 6.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்