மாகாளியம்மன், மாரியம்மன், விநாயகர் கோவில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்



பாலக்காடு; பாலக்காடு மாவட்டம் நடுப்புணி எருத்தேன்பதியை அடுத்த வில்லூணியில் அமைந்துள்ள மாகாளியம்மன், மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில்களின் புனருத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகள் செஞ்சேரிமலை நடராஜ சிவாச்சாரியர், கல்யாண சுப்பிரமணிய சிவம், ஆகியோர் தலைமையில் மகா கும்பாபிஷே யாகசாலை பூஜைகள் நேற்று நடைபெற்றது. காலை மங்கள இசை வாத்யத்துடன் விக்னேஸ்வர பூஜை, புன்யாகம், பஞ்சகவ்யம், நான்காம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி, நாடி சந்தானம், ஸ்பஸ்சாஹூதி, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம் ஆகிய விஷேச பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீர்த்தகலசங்கள் எடுத்துவரப்பட்டு கோவில் கோபுர விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடந்தன. விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். சிவாச்சாரியர்களிடம் பக்தர்கள் காணிக்கைகள் செலுத்தி அருளாசிப்பெற்று கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. மாலையில் தீபாராதனை விஷேச பூஜைகள் ஆகியவை நடந்தது. தொடர்ந்து பல்லக்கில் அம்மன் வீதியுலாவும் செண்டைவாத்யத்துடன் நடைபெற்றது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்