பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு 450 கிலோ பூக்களால் மலர் வழிபாடு



தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் வழிபாடு நடந்தது.

பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், பேரூர் பட்டீஸ்வரருக்கு மலரும் வழிபாடு நடத்தப்படும். அவகையில் இந்த ஆண்டு சித்திரை மாத மலர் வழிபாடு இன்று நடந்தது. பேரூரில் உள்ள கொங்கு வேளாள கவுண்டர்கள் மடத்தில், பூக்களுக்கு பூஜை செய்து, கைலாய வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக பூக்களை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் எடுத்து வந்தனர். தாமரை, மல்லி, முல்லை, பாரிஜாதம், நாகலிங்கம், வில்வ இலை, அரளி, செண்டுமல்லி, சாமந்தி, செவ்வந்தி, வெள்ளருக்கம், மனோரஞ்சிதம், பன்னீர் ரோஜா என, 48 வகையான, சுமார், 450 கிலோ பூக்களை கொண்டு பேரூர் பட்டீஸ்வரருக்கு மலர் வழிபாடு நேற்று நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்