கோவில்களில் குரு பெயர்ச்சி ஹோமம்



கோவை கோட்டைமேட்டில் உள்ள ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.

மேட்டுப்பாளையம்; குரு பெயர்ச்சியை அடுத்து கோவில்களில் ஹோமம் பூஜைகள் நடந்தன.

மேஷ ராசியிலிருந்த குரு பகவான், ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சியை ஒட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. கோவை சிவன்புறம் ஆசிரியர் காலனியில் உள்ள, ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவிலில், குரு பெயர்ச்சி வழிபாடுகள் நடைபெற்றன. முதலில் மகா கணபதிக்கு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து புண்ணியாவஜனம், கலச ஆவாகனம், பஞ்ச சுத்த ஜபம் ஆகிய பூஜைகள் நடந்தன. அதன் பின்பு மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், புருஷ சித்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் செய்யப்பட்டது. தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு, 33 திரவியங்களால் ஹோமம் நடந்தது.

இதைத் தொடர்ந்து மகாபூர்ணாகுதி, கலசங்கள் கோவிலில் வலம் வந்து, தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், நவகிரகங்களுக்கு அபிஷேகமும் நடந்தது. இந்த குரு பெயர்ச்சி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் லட்சுமி நாராயணன் தலைமையில் குழுவினர் செய்தனர். இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்