ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை



திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு பெயர்ச்சி விழா நடந்தது.

குருபகவான் நேற்று மாலை சரியாக 5:19 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். அதனையொட்டி திருவெண்ணெய்நல்லுார் அடுத்துள்ள பையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 12 அடி உயரமுள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு பெயர்ச்சியை யொட்டி நேற்று மாலை 4:00 மணிக்கு கலச பூஜை மற்றும் சங்கு பூஜை நடைபெற்றது. 4:30 மணிக்கு பாலாபிேஷகமும், தொடர்ந்து 5:00 மணிக்கு சங்கு பரிஹார கலச மஹாபிேஷகமும், மாலை சரியாக 5:19 மணிக்கு குரு பகவானுக்கு மகா சிறப்பு தீபாரதனையும் நடந்தது. விழாவில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் டி.எஸ்.பி., கார்த்திகபிரியா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்