பூசாரியிடம் முறம், துடைப்பத்தால் அடி வாங்கி ஆசி பெற்ற பக்தர்கள்



ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி கோவில் உள்ளது. அங்கு, 385ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த மாதம், 22ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை, தேரில் உற்சவமூர்த்தி அமர வைக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. டி.கொத்தப்பள்ளி, கூட்டூர், ஒசபுரம், எச்.செட்டிப்பள்ளி, கெலமங்கலம், சின்னட்டி உள்பட, 27க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலையில் தேர் நிலையை அடைந்தது.
பின் கோட்டை சண்டை என்ற முறம், துடைப்பத்தால் பக்தர்களை அடித்து, ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் அருள் வந்து ஆடிய பூசாரி, பக்தர்கள் மீது முறம், துடைப்பத்தால் அடித்தார். பக்தர்கள் முண்டியடித்து அடி வாங்கி ஆசி பெற்றனர். இதனால் பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகும் என்றும், குழந்தை வரம், கடனில்லா வாழ்க்கை அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. இன்று திரவுபதி அம்மன் அக்னி குண்ட பிரவேசம், பூ கரகம், நாளை காலை, 10:00 மணிக்கு  அர்ஜூனன் மாடு திருப்பும் விழா, தர்மராஜ சுவாமிக்கு தாலாட்டு உற்சவம், வசந்தோற்சவம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்