போடியில் குரு பெயர்ச்சி விழா; கோயில்களில் பக்தர்கள் தரிசனம்



போடி; குரு பெயர்ச்சியை முன்னிட்டு போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

போடி சுப்ரமணியர் சுவாமி கோயிலில் குரு பெயர்ச்சி விழா பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஹரிஷ்குமார் முன்னிலை வகித்தார். குரு பெயர்ச்சி நேற்று மாலை 5.22 மணிக்கு மேல் மேஷம் ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி நேற்று காலையில் சிறப்பு யாகமும், மாலையில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள், பரிகார பூஜையும் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானின் தரிசனம் பெற்றனர்.

* போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள், பரிகார பூஜைகளும் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் மாரிமுத்து செய்திருந்தார்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்