திருத்தணி திரவுபதியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்



திருத்தணி: திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த மாதம், 25ம் தேதி கொடியேற்றத்துடன், துவங்கியது. தினமும் காலையில் மூலவர் அம்மனுக்கு சந்தனகாப்பு, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து
வருகிறது. மே லும், தினமும் மதியம் 1:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு 10:30 மணிக்கு மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது. வரும் 12ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி விழாவும் நடக்கிறது. இந்நிலையில், நேற்று காலை கோவில் வளாகத்தில் திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து உற்சவர் அர்ச்சுனன், திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்