அயோத்தி ராம் ஜென்மபூமியில் பிரதமர் மோடி ராமரை தரிசனம் செய்தார்



அயோத்தி :உ.பி., மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ராமர் கோவிலில் பிரார்த்தனை நடத்தினார். தொடர்ந்து நடைபெற்ற ரோடு ஷோவிலும் பங்கேற்றார்.

நாடு முழுவதற்குமான பொது தேர்தல் ஏப்.,19 ம் தேதி துவங்கி ஜூன் 1-ம் தேதி வரையில் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உ.பி., மாநிலத்தை பொறுத்த வரையில் ஏழு கட்டங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வரையில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்து உள்ளது. மூன்றாம் கட்ட தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ( மே.,05-ம் தேதி) அயோத்திக்கு வருகை தந்தார். அங்கு அவர் ராமர் கோவிலில் பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அயோத்தி நகரில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்றார். பேரணியில் முதல்வர் யோகி பங்கேற்றார். அவர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோ சுக்ரிவா கோட்டை முதல் லடா சவுக் வரையில் நடைபெற்றது.

அயோத்திக்கு வருகை தந்த பிரதமருக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அயோத்தி நகர மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் 20-ம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்ட தேர்தலில் அயோத்தி தொகுதிக்கும், ஜூன் 1-ம்தேதி நடைபெறும் ஏழாம் கட்ட தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த 4 மாதங்களில் 2-வது முறையாக ராமர் கோவிலில் வழிபாடு நடத்தினார் பிரதமர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்