சுருட்டுப்பள்ளி பள்ளிக்கொன்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு



காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள சுருட்டுப் பள்ளியில் வீற்றிருக்கும் சர்வ மங்கள சமேத ஸ்ரீ பள்ளிக்கொன்டேஸ்வர தேவஸ்தானத்தில் சிவ நாம முழக்கங்களுக்கு இடையே (இன்று) பிரதோஷ வழிபாடு வெகுச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோயில்  வளாகத்தில் உள்ள  நந்தீஸ்வர சுவாமி மற்றும் வால்மிகேஸ்வர சுவாமிக்கும்   ஒரே நேரத்தில் (ஏக காலத்தில்) பிரதோஷ அபிஷேகங்கள் ( பால், தயிர் , பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம்) உட்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த பிரதோஷ பூஜைகளில் பிரசாத் உபயதாரராக சென்னையை சேர்ந்த சுந்தர ராமன் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக அவர்களுக்கு  கோவில் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு சாமி படத்தையும் கோயில் பிரசாதங்களையும் வழங்கினர்.  இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்