திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா; பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு



திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர்.

இக்கோயிலில் பூச்சொரிதல் விழாவை அடுத்து  வசந்தப்பெருவிழா ஏப்.29 ல் கொடியேற்றப்பட்டு நடந்து வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாப்ப தினசரி இரவில் உற்ஸவ அம்மன் கோயில் குளத்தை பவனி வந்தார். நேற்று காலை 7:00 மணி அளவில் கோயில் வளாகத்தில் பெண்கள் நீண்ட வரிசைகளில் அம்மனை வேண்டி பொங்கல் வைத்தனர். பால் பொங்கிய பின்னர் அம்மனுக்கு பொங்கல் படையலிடப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப் பின் மூலவர் சப்த மாதர்களுக்கும் அபிஷேகம் நடந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து நடந்த அலங்கார தீபாராதனையில் அம்மனை பக்தர்கள் தரிசித்தனர். நாளை அம்மன் ரத ஊர்வலமும், மே 8 காலையில் தீர்த்தவாரி, மஞ்சள் நீராட்டு, இரவில் தெப்பமும் நடைபெறும். ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழாக்குழுவினர் செய்கின்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்