கோடை விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்



ராமேஸ்வரம்; கோடை விடுமுறை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா, ஆன்மிக தலங்களுக்கு மக்கள் குவிகின்றனர். அதன்படி நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனத்தில் வருகை தந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். பின் கோயிலுக்குள் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் திட்டக்குடி, கோயில் மேலவாசல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து ஆபத்தை உணராமல் கடலில் உற்சாகமாக குளித்து விளையாடினார்கள்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்