இரண்டாம் ராஜராஜ சோழனின் ஜென்ம நட்சத்திர விழா; 41 ஆண்டுக்கு பிறகு நடத்திய வரலாற்று ஆய்வாளர்கள்



தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கி.பி., 12ம் நூற்றாண்டில், இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. 2004ம் ஆண்டு யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது. கோவிலில், விரல் நுனி அளவில் தொடங்கி விரல், கை, முழம், முழங்கை பிறகு எட்டு வகையிலான எட்டு, நவ,தச தாளம் என எல்லா வகை அளவுகளிலும், சோழர் களின் போர் முறை, சிற்பம், ஆடல், கட்டுமானம், பக்தி, கட்டடம், வானவியல், ஐதீ கம், புராணங்கள், சிவதத்து வம் எனவும், அடிக்கு 1000 சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலை, கட்டிய இரண்டாம் ராஜராஜசோழன் பிறந்த சித்திரை மாத உத் திரட்டாதி நட்சத்திரமான நேற்று, கும்பகோணம் வட் டார வரலாற்று ஆய்வு சங் கம் சார்பில் ஐராவதீஸ்வர், அம்பாளுக்கு சிறப்பு அபி ஷேம் செய்யப்பட்டது. பிறகு, கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க நிறுவனர் கோபிநாத் தலைமையில், இரண்டாம் ராஜராஜ சோழனின் நினை வுகள் மற்றும் அவரது வர லாறுகளை, வரலாற்று ஆய் வாளர் அய்யம்பேட்டை செல்வராஜ் மக்களிடம் விளக்கினார். பிறகு, விழா மலர் வெளியிடப்பட்டது.

இது குறித்து வரலாற்று ஆய்வாளர் கோபிநாத் கூறி யதாவது: இரண்டாம் ராஜராஜ சோழன் கி.பி., 1150 73ம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். இவர் சித்திரை உத்திரட்டாதி ஜென்ம  நட்சத்திரத்தில் பிறந்த வர். இவர் பிறந்த நட்சத் திர தின நாளில், 1983ம் ஆண்டு மே 8 மற்றும் 9ம் தேதிகளில் விழா விமர்சை யாக நடந்துள்ளது. அதன் பிறகு விழா தடைப்பட் டது. இதையடுத்து 41 ஆண்டுகளுக்கு பிறகு சிறிய முயற்சியாக விழா நடத்தினோம். ஒவ்வோர் ஆண்டும் தஞ் சாவூர் பெரியகோவிலைக் கட்டிய முதலாம் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி, சதயம், கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டிய முத லாம் ராஜேந்திரன் சோழன் பிறந்த ஆடி திருவாதிரை ஆகிய நாட்களில் வெகு விமர்சையாக விழா நடத் தப்பட்டு வருகிறது. இதே போல் இரண் டாம் ராஜராஜ சோழன் பிறந்த சித்திரை உத் திரட்டாதி நட்சத்திரத் தன்று, தமிழக அரசு விடு முறை அளித்து, விழாவை விமர்சையாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்