தாய் – தந்தையே முதல் குரு



திருப்பூர்;தாய் தந்தையரிடம் உபதேசம் பெற்ற குழந்தைகள், சிறந்து விளங்கும் என, ஆன்மிக சொற்பொழிவில் மணி திராவிட் சாஸ்திரிகள் பேசினார்.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாளின் அவதார ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூர், ஓடக்காடு ராமகிருஷ்ண பஜனைமடத்தில், ஆன்மிக சொற்பொழிவு நேற்று நடந்தது. சங்கர விஜயம் என்கிற தலைப்பில், சென்னை சம்ஸ்கிருத கல்லுாரி பேராசிரியர் மணி திராவிட் சாஸ்திரிகள் பேசியதாவது: எப்போதெல்லாம் தர்மத்துக்கு கஷ்டம் வருகிறதோ; அதர்மம் தலை துாக்குகிறதோ அப்போது, தர்மத்தை நிலை நிறுத்த அவதரிப்பேன் என, பகவத் கீதையில் பகவான் சொல்கிறார். பகவானின் அவதாரங்களை பொறுத்தவரை, தான் எப்போது, எங்கே, யாருக்கு மகனாக பிறக்கவேண்டும் என்பதெல்லாம் முன்னரே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது. கேரளாவில், காலடி என்கிற ஊரில், சிவகுரு - ஆர்யாம்பாளுக்கு மகனாக, ஆதிசங்கரர் அவதரித்தார். ஒரு குழந்தைக்கு முதல் குரு, அம்மா; அடுத்ததாக, அப்பா. அதன்பின், ஆசிரியர். அம்மாவிடம் உபதேசம் பெற்ற குழந்தைகள், சிறந்தவர்களாக திகழ்வார்கள். பகவானின் மற்ற அவதாரங்களுக்கும் ஆதி சங்கர அவதாரத்துக்கும் வேறுபாடு உள்ளது. மற்ற அவதாரங்களெல்லாம், அரக்கர்களை வதம் செய்வதற்காக டுக்கப்பட்டவை. ஆதிசங்கர அவதாரமோ, யாருடனும் ஆயுதம் ஏந்தி சண்டையிடுவதற்காகவோ; அரக்கர்களை வதம் செய்வதற்கானதோ அல்ல. வைதீக தர்மம் குறித்து வாதம் செய்வதற்காகவும்; மக்களுக்கு உபதேசம் செய்வதற்காகவுமே ஆதிசங்கரர் அவதரித்தார். இவ்வாறு, அவர் பேசினார்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்