ரங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்



தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் காலை, மாலை இருவேளையும் சிறப்பு சேவைகளும் அதனைத் தொடர்ந்து வீதி உலாவும் நடந்தன. ஐந்தாம் திருநாள் பெருமாள் திருக்கல்யாணம் வைபோகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. எட்டாம் நாள் கன்றுக்குட்டி ஜோடனை அலங்காரம் பூஜைகள் நடந்தன. ஒன்பதாம் நாளான நேற்று மாலை ரங்கநாத பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீற்றிருக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்