சபரிமலைக்கு வருபவரை தடுக்க கூடாது! ஸ்பாட் முன்பதிவு ரத்து செய்ய எதிர்ப்பு



சென்னை : சபரிமலையில் பக்தர்க:ள் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தி உள்ளது.

அதன் தலைவர் ஜெயச்சந்திரன், பொதுச்செயலர் ஜெயராம் அறிக்கை: திருவிதாங்கூர் தேவசம் போர்டு, வரும் மண்டல காலத்தில் இருந்து, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு நாளைக்கு 80,000 பேர் மட்டும், முன்கூட்டியே பதிவு செய்யும் முறையில் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது. பதிவு செய்வோர் மட்டும் அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாது என்று உத்தரவிட, திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு, எந்த தார்மீக உரிமையும் கிடையாது. அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு, தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தான், அதன் தலையாய பணி. பக்தர்களை கட்டுப்படுத்தும் போக்கை கைவிட்டு, வரக்கூடிய கூட்டத்தை எப்படி சமாளிக்கலாம் என, தேவசம் போர்டும், கேரள அரசும் யோசிக்க வேண்டும். சன்னிதானத்தை சுற்றி, 500 பேர் அமரக்கூடிய காத்திருப்பு கூடங்களை உடனடியாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு கூடங்களிலும், கழிப்பறைகள், மின் விசிறிகள், குடிநீர், டிவி வசதி ஏற்படுத்த வேண்டும். பம்பையிலிருந்து நீலிமலை ஏறி, காத்திருப்பு கூடங்கள் வரும் வரை, பக்தர்களுக்கு எந்த தடையும் இருக்கக் கூடாது. பம்பை மலையேற்றத்தில், பக்தர்களை மணிக்கணக்கில் தடுத்து நிறுத்தி, அவதிக்குள்ளாக்கும் நிலைமை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். பாதயாத்திரையாக சொந்த ஊர்களில் இருந்தும், பெருவழிப்பாதை வழியாகவும் வரும் பக்தர்களுக்கு, கரிமலை உச்சியில் சிறப்பு அனுமதி சீட்டு வழங்கி, அவர்களை நேரடியாக பதினெட்டாம் படி ஏறி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். இப்படி ஆக்கப்பூர்வமான பணிகளை செய்தால், ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முடிவிலிருந்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு பின்வாங்க வேண்டும். இல்லையென்றால், பக்தர்களை திரட்டி அறநெறி வழியிலான போராட்டங்களில், சபரிமலை அய்யப்பா சேவா சமாஜம் ஈடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்