கல்வெட்டுகள் மீது சூடம், விளக்கேற்றுவதால் மறையும் தமிழர் வரலாறு



மதுரை : தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கல்வெட்டுகள் மீது சூடம், விளக்கேற்றுவதால் அரிய தகவல்கள் மறைந்து வருகின்றன.

டி.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சியில் அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதில் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள் பல உள்ளன. பக்தர்கள் இக்கல்வெட்டுகள் மீது சூடம், விளக்கு ஏற்றுகின்றனர். புகையால் கல்வெட்டுகளில் உள்ள அரிய தகவல்கள் மங்கி மறைந்து வருகின்றன. மேலும் கோயில் சுற்றுப்புறங்களில் முட்செடிகள் அடர்ந்துள்ளன. இயற்கை நீராதாரமாக விளங்கும் தீர்த்த கிணற்றுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் நிறைந்து கிடப்பதால் புனித நீர் மாசுபட்டுள்ளது. ஸ்ரீபு கலாசார மைய செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவுவது மன்னர் காலத்து கல்வெட்டுகள் தான். இக்கோயில் கல்வெட்டு மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. அரிய தகவல்களைக் கொண்ட கல்வெட்டுகளின் மீது, பக்தர்கள் சூடம், விளக்கேற்றுவதால் கரும்புகை படிந்து குறிப்புகள் அழிகின்றன. கல்வெட்டுகளை நாம் பாதுகாக்க வேண்டும். மேலும் கோயில் நீராதாரமான தீர்த்தகிணறு பிளாஸ்டிக் குப்பையால் நிரம்பி விட்டது. இவையெல்லாம் தேசத்தின் நாகரிகம், தொழில்நுட்பம், வரலாறுகளை தாங்கி நிற்கும் பொக்கிஷங்கள். இவற்றை பாதுகாப்பது நம் அனைவரது கடமை என்றார்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்