வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ; குவியும் பக்தர்கள்



தேனி, தேனி வீரபாண்டி கவு மாரியம்மன் கோயில் சித் திரை திருவிழா கோலா கலமாக துவங்கியது. பக்தர்கள் வருகை அதிகரிக்க துவங்கி உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழாவிற்காக ஏப்., 17 ல் திருக்கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் தினமும் முல்லையாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து திருக் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வந்தனர். திருவிழா நேற்று துவங்கியது. பக்தர்கள் தடுப்பணை, கண்ணீஸ்வர முடையார் கோயிலின் அருகே ஆற்றில் நீராடி அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள் அலகு குத்தி கோயிலை வலம் வந்தனர். பக்தர்கள் குடும்பத்துடன் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். முத்துத்தேவன்பட்டி பிரிவு, சின்னமனுார் ரோடு பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் பயன்பாட்டிற்கு வந்தன. தேனி பஸ் ஸ்டாண்டில் இருந்து தொடர்ந்து பஸ்கள் இயக் கப்பட்டன. கோடை வெயிலை தணிக்க தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் சார் பில் பக்தர்களுக்கு பல இடங்களில் நீர் மோர், குடிநீர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கோயில் வளாகம், ஆற்றங் கரை, பஜார், ராட்டினம் அமைக்கப்பட்டுள்ள பகு திகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் கண்காணிப்பு பணிகளை எஸ்.பி., சிவபி ரசாத், ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் பார்வையிட்டனர். ஆற்றங்கரை, கோயில் வளாகப் பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்