மேட்டுப்பாளையம் சடைச்சி மாரியம்மன் கோவில் விழா



மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் சடைச்சி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில், காப்பி ஒர்க்ஸ் அருகே, சடைச்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 53ம் ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூச்சாட்டுடன் துவங்கியது. 30ம் தேதி கம்பம் நடப்பட்டது. இம்மாதம் மூன்றாம் தேதி அன்னூர் ரோட்டில் உள்ள, செல்வ விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் பூவோடு, கரகம், பால்குடம், தீர்த்த குடம் ஆகியவற்றை கோவிலுக்கு எடுத்து வந்தனர். நேற்று காலை பவானி ஆற்றிலிருந்து, சிம்ம வாகனத்தில் அம்மன் சுவாமியை அலங்காரம் செய்து, கோவிலுக்கு அழைத்து வந்தனர். மதியம் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர். இன்று காலை மஞ்சள் நீராட்டும், மறுபூஜையும், அதைத் தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்