விழா கோலம் பூண்டது வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில்; அலைமோதும் பக்தர்கள்



தேனி; வீரபாண்டி சித்திரை திருவிழாவின் 2வது நாளில் எப்பக்கம் திரும்பினாலும் பக்தர்கள் கூட்டத்தால் கவுமாரியம்மன் கோயில் வளாகம் நிரம்பி வழிந்து, அலைமோதியது. இத்திருவிழா நேற்று முன்தினம் மே 7 ல் துவங் கியது. கோயில் வீட்டிலிருந்து அம்மன் திருவா பரணப் பெட்டி கோயிலுக்கு கொண்டு வரப் பட்டது. நேற்று அதிகாலை அம்மன் மின் ரதத்தில் பவனி வந்தார். அதை தொடர்ந்து மண்டப்படி சிறப்பு அபிஷே கம் நடந்தது. பக்தர்கள் குடும்பத்துடன் திருவி ழாவிற்கு வருவதால் அனைத்து திசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர் கள் அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நேற்றிரவு அம்மன் முத்துப்பல் லக்கில் புறப்பாடு நடந்தது. பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். விழா வின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை (மே 10ல்) நடக்க உள்ளது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்