மலர் அலங்காரத்தில் ஜொலிக்கும் கேதார்நாத் கோயில்; வேத மந்திரம் முழங்க நாளை திறப்பு



உத்தரகாண்ட்:  கேதார்நாத் கோயில் நாளை மே 10 ம் தேதி பக்தர்கள் வழிபாட்டிற்கு வேத முழக்கத்துடன் திறக்கப்பட உள்ளன. இதற்காவ ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாகவும், 40 குவிண்டால் மலர்களால் கோயில் அலங்கரிக்கப்பட்டு வருவதாகவும் ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்தார்.

கேதார்நாத் ஆண்டவரின் பஞ்சமுகி டோலி மே 6ம் தேதி காலை 8.30 மணிக்கு கௌரிகுண்டின் மூன்றாவது நிறுத்தத்தில் இருந்து கேதார்நாத் தாமுக்கு புறப்பட்டது. மே 6 ஆம் தேதி, தேவ்டோலி ஸ்ரீ விஸ்வநாத் கோயில் குப்ட்காஷியிலிருந்து ஸ்ரீ ஓம்காரேஷ்வர் கோயில் உகிமத்தை அடைந்து, மே 7 அன்று அதன் இரண்டாவது நிறுத்தமான பாட்டாவை அடைந்தது. பஞ்சமுகி டோலி கவுரமாதா கோயிலை மே 8 அன்று மாலை கேதார்நாத் சென்றடைந்தது. நாளை கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்