அயோத்தி : அயோத்தி ராமர் கோவிலில், கேரள கவர்னர் ஆரிப் முஹமது கான் நேற்று சாமி தரிசனம் ..." />

அயோத்தி ராமரை தரிசனம் செய்த கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்



அயோத்தி : அயோத்தி ராமர் கோவிலில், கேரள கவர்னர் ஆரிப் முஹமது கான் நேற்று சாமி தரிசனம் செய்தார்.


உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு, கடந்த ஜனவரி 22ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலில் கேரள கவர்னர் ஆரிப் முஹமது கான் நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, ராமர் சிலை முன் கீழே மண்டியிட்டு அவர் வணங்கினார்.

அதன்பின் கவர்னர் ஆரிப் முஹமது கான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஜனவரி மாதம், இங்கு நான் இரு முறை வந்தேன். அப்போது ஏற்பட்ட அதே அனுபவம் இன்றும் எனக்கு கிடைத்தது. பலமுறை இங்கு வந்தாலும் இதே அனுபவத்தை நான் உணர்வேன். அயோத்தியில் ராமரை வழிபடுவது, நமக்கு மகிழ்ச்சியை மட்டுமின்றி, பெருமைக்குரிய விஷயமாகவும் கருதுகிறேன்,” என்றார்.





தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்