திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயில் வசந்தப் பெருவிழா நிறைவு



திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா நிறைவாக தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி குளத்தில் வலம் வந்தார்.

பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை அடுத்து  வசந்தப்பெருவிழா நடந்து வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழா ஏப்.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.  தொடர்ந்து தினசரி இரவில் உற்ஸவ அம்மன் கோயில் குளத்தை பவனி வந்தார். இரண்டாம் நாளில் அம்மன் ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. தொடர்ந்து,  மே3 ல் பால்குடம், மே5 ல் பொங்கல்விழா, மே7 ல் அம்மன் ரத ஊர்வலமும் நடந்தது. பத்தாம் திருநாளில் காலையில் கோயில் குளத்தில் தீர்த்தவாரியும், தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டும் நடந்தது. பின்னர் விநாயகர், பரிவார தெய்வங்கள், மூலவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து, உற்ஸவ அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் தெப்பத்தில் எழுந்தருளி குளத்தில் வலம் வந்தார்.  திரளாக பக்தர்கள் குளத்தைச் சுற்றி நின்று தெப்பத்தில் எழுந்தருளிய அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மன் திருவீதி உலா வந்து கோயில் எழுந்தருளினார். ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழாக்குழுவினர் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்