கேதார்நாத் கோயில் ஆறு மாதங்களுக்கு பிறகு திறப்பு; ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்



டேராடூன்: கேதார்நாத், கங்கோத்ரி கோயில்கள் இன்று(மே.10) திறக்கப்பட்டன. ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் பக்தர்கள் குவிந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் இமயமலையில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில், ஒவ்வொரு ஆண்டும் பனிப்பொழிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக குளிர்காலத்தில் மூடப்பட்டு, கோடை காலத்தில் திறக்கப்படும். இதன்படி, கடந்த நவம்பரில் மூடப்பட்ட கோவில், ஆறு மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று (மே.10) திறக்கப்பட்டது.  இதையொட்டி கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கேதார்நாத் கோவில் கதவுகள் திறக்கப்பட்டதும், மேலே பறந்த ஹெலிகாப்டர்கள் சன்னதியின் மீது மலர் மழை பொழிந்தன. கேதார்நாத் கோயில் பக்தர்களுக்காக தரிசனத்திற்கு திறந்த நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் அவரது மனைவி கீதா தாமி ஆகியோர் பிரார்த்தனை செய்தனர். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டனர். பத்ரிநாத் கோவில் மே 12ம் தேதி திறக்கப்படுகிறது.மேலும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட உள்ளன.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்