சபரிமலை தங்க அங்கிக்கு தயாராகும் புதிய பெட்டி

டிசம்பர் 14,2017



சபரிமலை: மண்டலபூஜை நாளில் சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கியை கொண்டு வருவதற்காக புதிய பெட்டி தயாரிக்கப்பட்டு வருகிறது.

மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு தங்க அங்கி காணிக்கையாக வழங்கினர். இது ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக இது பவனியாக எடுத்து வரப்படும். பம்பை வந்த பின்னர் இந்த அங்கி ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, ஐயப்பா சேவா சங்க தொண்டர்கள் தலை சுமடாக எடுத்து வரப்படும். இந்த பெட்டி பழையதாகி விட்டதால் புதிய பெட்டி தயாரிக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் புதிய தங்க கொடி மரத்துக்கு மரவேலை செய்த பத்தியூர் பாபு இந்த பெட்டியை தயாரித்து வருகிறார். பெட்டியின் மேற் பகுதியில் பல்வேறு சிற்பங்களுடன் தயாரித்து வருவதாகவும், 22 அடி நீளமுள்ள தேக்கு பலகை கிடைத்ததால் பலகைகள் இணைக்கப்படாமல் தயாரிக்கப்படுவதாகவும்அவர் கூறினார்.இந்த பெட்டியில் 17 கிலோ பித்தளையும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பணியை கோட்டக்ககம் சுகுமாரன் செய்து வருகிறார். வரும் 22-ம் தேதி தங்க அங்கி பவனி புறப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பாக முடிக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்