சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு

ஜனவரி 18,2018



சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,18) நெய்யபிஷேகமும், நாளை தரிசனமும் நிறைவு பெறுகிறது. சபரிமலையில் டிச.30-ம் தேதி மாலையில் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. 31-ம் தேதி அதிகாலையில் தொடங்கிய நெய்யபிஷேகம் இன்று (ஜன.,18) காலை 10:30 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் நெய்யபிஷேகம் கிடையாது. தொடர்ந்து தேவசம்போர்டு சார்பில் களபாபிஷேகம் நடைபெறும். ஜன.19-ம் தேதிஅதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். இரவு 10:00மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டதும் பக்தர்களுக்கான மகரவிளக்கு கால தரிசனம் நிறைவு பெறும். 20-ம் தேதி காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 7:00 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படும். அதன் பின் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.,12-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்