ஏற்றம் ஏறாமல் சபரிமலை செல்லலாம்

டிசம்பர் 19,2018



சபரிமலை: நீலிமலை, அப்பாச்சிமேடு போன்ற செங்குத்தான மலை ஏற்றம் ஏறாமல், சபரிமலை செல்ல முடியும். கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல, மூன்று முக்கிய பாதைகள் உள்ளன. பெருவழிப்பாதை என அழைக்கப்படும், அழுதை, -கரிமலை பாதை; பம்பை, -நீலிமலை பாதை; குமுளி, புல்மேடு, பாண்டித்தாவளம் பாதை என மூன்று பாதைகள் உள்ளன. இதில் முதல் இரண்டு பாதைகளும், பாரம்பரிய பாதைகள்.

இந்த இரு பாதைகளில், செங்குத்தான மலையில் ஏறி வரவேண்டும். ஆனால், புல்மேடு பாதையில் ஏற்றம் ஏற வேண்டிய அவசியமில்லை. முழுவதும் செங்குத்தான இறக்கமே, இந்த பாதையில் உள்ளது. குமுளியில் இருந்து சத்திரம் வரை, பக்தர்கள் தங்கள் வாகனத்தில் வரலாம். அங்கிருந்து கால்நடையாக, புல்மேடு வழியாக, பாண்டித்தாவளம் வனத்துறை செக்போஸ்ட் கடந்து, சன்னி தானம் வந்தடையலாம். இந்த வழியாக வரும் பக்தர்களுக்கு, சன்னிதானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை குமுளியில் இருந்து முண்டக்கயம், எருமேலி வழியாக நிலக்கல் வரும்படி, டிரைவரிடம் கூறவேண்டும். தரிசனம் முடிந்து பம்பைக்குச் சென்று, அங்கிருந்து பஸ் மூலம் நிலக்கல் சென்று, தங்கள் வாகனங்களில் ஊர் திரும்ப முடியும்.சென்னை, மதுரை, தேனி மாவட்ட பக்தர்களுக்கு, இந்த பாதை வசதியாக இருக்கும்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்