Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வேல் விருத்தம்
வேல் விருத்தம்
வேல் விருத்தம்

1. மகரமள றிடைபுரள உரககண பணமவுலி
மதியுமிர வியுமலையவே
வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வுபெறு மறுசிறையவாஞ்

சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு
செநெல்களொடு தரளமிடவே
செகசிரப கிரதிமுத னதிகள்கதி பெறவுததி
திடரடைய நுகரும் வடிவேல்

தகரமிரு கமதமென மணமருவு கடகலு<ழி
தருகவுளு முறுவளெயிறுந்
தழைசெவியு நுதல்விழியு முடையவொரு கடவுள்மகிழ்
தருதுணைவ னமரர் குயிலுங்

குகரமலை யெயினர் குல மடமயிலு மெனவிருவர்
குயமொடமர் புரியுமுருகன்
குமரனறு முகனெதிரும் விருதுநிசி சரரணிகள்
குலையவிடு கொடிய வேலே.

2. வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடராழியும்
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங்கல்லி
வெல்லா வெனக்கருதியே

சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனு நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுட லொருநொடியி லுருவியே
தனியாண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வாராகி யிந்த்ராணி
கௌமாரி கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவியமலை
கௌரிகா மாட்சிசைவ

சிங்காரி யாமளை பவானிகார்த் திகைகொற்றி
த்ரியம்பகி யளித்தசெல்வச்
சிறுவன று முகன்முருக னிருதர்கள்கு லாந்தகன்
செம்பொற் றிருக்கைவேலே.

3. வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்
வெகுளுறு பசாசகணமும்
வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில்
வெம்பசி யொழிக்கவந்தே

ஆதார கமடமுங் கணபண வியாளமும்
அடக்கிய தடக்கிரியெலாம்
அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை
யருந்திப் புரந்த வைவேல்

தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை
தனிப்பரங் குன்றேரகந்
தணிகைசெந் தூரிடைக் கழியாவி னன்குடி
தடங்கட லிலங்கையதனிற்

போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப்
புகழுமவ ரவர்நாவினிற்
புந்தியி லமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
புங்கவன் செங்கைவேலே.

4. அண்டருல குஞ்சுழல வெண்டிசைக ளுஞ்சுழல
அங்கியு முடன்சுழலவே
அலைகடல்க ளுஞ்சுழல அவுணருவி ருஞ்சுழல
அகிலதல முஞ்சுழலவே

தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
சந்தமுட னும்பிறைகள்போற்
றந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
தன்புறம் வருஞ்சமனையான்

கண்டுகுலை யும்பொழுதி லஞ்சலென மென்சரண
கஞ்சமுத வுங்கருணைவேள்
கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவனடல் கொண்ட வேலே.

5. ஆலமா யவுணருக் கமரருக் கமுதமா
யாதவனின் வெம்மையொளிமீ
தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென்
றமைந்தன் பருக்கு முற்றா

மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை
முடித்திந்தி ரர்க்குமெட்டா
முடிவிலா நந்தனல் கும்பத மளித்தெந்த
மூதண்ட மும்புகழும் வேல்

ஏலமாம் யானையின் கோடதிற் சொரிமுத்து
மின்பணைக ளுமிழுமுத்து
மினிவாடை மான்மத மகிலோடு சந்தன
மிலவங்க நறவ மாருந்

தாலமா மரமுதற் பொருள்படைத் திடுமெயினர்
தருவநிதை மகிழந னையன்
தனிநடம் புரிசமர முருகனறு முகன்குகன்
சரவணக் குமரன் வேலே.

6. பந்தாட லிற்கழங் காடலிற் சுடரூசல்
பாடலினொ டாடலி னெலாம்
பழந்தெவ்வர் கட்கந் துணித்திந்தி ரற்கரசு
பாலித்த திறல் புகழ்ந்தே

சந்தாரு நாண்மலர்க் குழலரம் பையர்களுஞ்
சசிமங்கை யனையர் தாமுந்
தன்னையன் பொடுபாடி யாடும்ப்ர தாபமுந்
தலைமையும் பெற்ற வைவேல்

மந்தா கிநித்தரங் கச்சடில ருக்கரிய
மந்த்ரவுப தேச நல்கும்
வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார
வாரணக் கொடியு யர்த்தோன்

கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங்
குவளையுஞ் செங்காந்தளுங்
கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கை வேலே.

7. அண்டங்க ளொருகோடி யாயினுங் குலகிரி
அநந்தமா யினுமேவினா
லடையவுரு விப்புறம் போவதல் லதுதங்க
லறியாது சூரனுடலைக்

கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
கடியகொலை புரியு மதுசெங்
கனகா சலத்தைக் கடந்துமுனை யிட்டுக்
கடக்கின்ற துங்கநெடுவேல்

தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட
தானவாந் தகன் மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்
தமனியச் சுடிகையின் மேல்

வண்டொன்று கமலத்து மங்கையுங் கடலாடை
மங்கையும் பதம்வருடவே
மதுமலர்க் கண்டுயில் முகுந்தன்மரு கன்குகன்
வாகைத் திருக்கை வேலே.

8. மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்
வலியதா னவர்மார் பிடம்
வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு
மகவான் றனைச் சிறைவிடுத்

தோமஇரு டித்தலைவ ராசிபெற் றுயர்வானி
லும்பர்சொற் றுதிபெற்றுநா
வுடையகீ ரன்றனது பாடல்பெற் றுலகுதனி
லொப்பில்புகழ் பெற்றவைவேல்

சோமகல சப்ரபா லங்கார தரஜடா
சூடிகா லாந்தகாலர்
துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல
துரககே சரமாம்பரச்

சேமவட வாம்புயப் பரணசங் காபரண
திகம்பர த்ரியம்பகமகா
தேவநந் தனகஜா நநசகோ தரகுகன்
செம்பொற் றிருக்கை வேலே.

9. தேடுதற் கரிதான நவமணி யழுத்தியிடு
செங்கரனை யமுதம் வாய்கொள்
செயமளித் தருளெனக் கெனவுவப் பொடுவந்து
சேவடி பிடித்த தெனவும்

நீடுமைக் கடல்சுட்ட தற்கடைந் தெழுகடலு
நீயெமைக் காக்க வெனவும்
நிபுட முடி நெடியகிரி யெந்தமைக் காவெனவு
நிகழ்கின்ற துங்க நெடுவேல்

ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற்
றடலெரிக் கொடியவுக்ர
அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக்
கரசினைத் தனியெடுத்தே

சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற்
றாய்மிதித் துடனடிக்குஞ்
சமரமயில் வாகன னமரர்தொழு நாயகன்
சண்முகன் றன்கை வேலே.

10. வலாரியல லாகுலமி லாதகல வேகரிய
மாலறியு நாலு மறைநூல்
வலானலை விலானசி விலான்மலை விலானிவர்
மநோலய வுலாச முறவே

யுலாவரு கலோலமக ராலய சலங்களு
முலோகநிலை நீர்நிலையிலா
வொலாவொலி நிசாசர ருலோகம தெலாமழ
<லுலாவிய நிலாவு கொலைவேல்

சிலாவட கலாவிநொத வாசிலிமு காவிலொச
னாசின சிலாத ணிவிலா
சிலாமல ரெலாமதிய மோதிமதி சேலொழிய
சேவக சராப முகிலாம்

விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை
மேவிய விலாச வகலன்
விலாழியி னிலாழியகல் வானிலன லாரவிடு
வேழமிளை ஞன்கை வேலே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.