SS மாரியம்மன் 108 போற்றி! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மாரியம்மன் 108 போற்றி!
மாரியம்மன் 108 போற்றி!
Read in English
மாரியம்மன் 108 போற்றி!

ஓம்  அம்மையே போற்றி
ஓம் அம்பிகையே  போற்றி
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
ஓம்  அல்லல் அறுப்பவளே போற்றி
ஓம்  அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
ஓம்  ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம்  இருள் நீக்குபவளே போற்றி
ஓம்  இதயம் வாழ்பவளே போற்றி
ஓம்  இடரைக் களைவாய் போற்றி
ஓம்  இஷ்ட தேவதையே போற்றி
ஓம்  ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம்  ஈடிணை இலாளே போற்றி
ஓம்  ஈகை மிக்கவளே போற்றி
ஓம்  உமையவளே தாயே போற்றி
ஓம்  உயிர் பிச்சை தருவாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை பிரியாயே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
ஓம்  ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம்  ஏழையர் அன்னையே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
ஓம்  ஓங்கார ரூபினியே போற்றி
ஓம்  ஔடதம் ஆனவளே போற்றி
ஓம் கவுமாரித்தாயே போற்றி
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம்  குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
ஓம்  சக்தி உமையவளே போற்றி
ஓம்  சவுந்தர நாயகியே போற்றி
ஓம்  சித்தி தருபவளே போற்றி
ஓம்  சிம்ம வாகினியே போற்றி
ஓம்  சீரெலாம் தருபவளே போற்றி
ஓம்  சீதளா தேவியே போற்றி
ஓம்  சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம்  செந்தூர நாயகியே போற்றி
ஓம்  செண்பகாதேவியே போற்றி
ஓம்  செந்தமிழ் நாயகியே போற்றி
ஓம்  சொல்லின் செல்வியே போற்றி
ஓம்  சேனைத் தலைவியே போற்றி
ஓம்  சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம்  தத்துவ நாயகியே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம்  தரணி காப்பாய் போற்றி
ஓம்  தத்துவம் கடந்தவளே போற்றி
ஓம்  தாலிபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம்  தூய்மை மிக்கவளே போற்றி
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
ஓம் தேசமுத்து மாரியே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
ஓம்  நலமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் நாக வடிவானவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே  போற்றி
ஓம் நானிலம் காப்பாய் போற்றி
ஓம்  நித்ய கல்யாணியே போற்றி
ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
ஓம்  நெஞ்சம் நிறைபவளே போற்றி
ஓம் நேசம் காப்பவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம்  பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
ஓம்  பிள்ளையைக் காப்பாய் போற்றி
ஓம்  பீடை போக்குபவளே போற்றி
ஓம் பீடோப ஹாரியே போற்றி
ஓம் புத்தி அருள்வாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி
ஓம் பூமாரித்தாயே போற்றி
ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் மழைவளம் தருவாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
ஓம்  மந்திர வடிவானவளே போற்றி
ஓம் மழலை அருள்வாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம்  மாணிக்க வல்லியே போற்றி
ஓம்  மகமாயித் தாயே போற்றி
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
ஓம் முத்தாலம்மையே போற்றி
ஓம் முத்து நாயகியே போற்றி
ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar