Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஆராத்ரிகம்
ஆராத்ரிகம்
ஆராத்ரிகம்

ஆரதிப் பாடல்

வங்க மொழியில் அமைந்துள்ளது இந்தப் பாடல். பாடலை இயற்றியதுடன் உரிய ராகத்தையும் சுவாமிஜியே இணைத்தார். இறைவனின் அவதார நோக்கம் அவதார மகிமை, அவர் அருள் புரியும் விதம் இவற்றைக் கவிதை நயத்துடன் இதில் சுவாமிஜி விளக்குகிறார்.

கண்டன பவபந்தன ஜகவந்தன வந்தி தோமாய்
நிரஞ்ஜன நரரூபதர நிர்குண குணமய்
மோசன அகதூஷண ஜகபூஷண சித்கன காய்
ஞானாஞ்ஜன விமலநயன வீக்ஷணே மோஹ ஜாய்

பிறவித் தளையை அறுப்பவனே! உலகத்தால் வணங்கப்படுபவனே! உன்னை வணங்குகிறோம். மாசற்றவனே! மனித வடிவில் அவதரித்த பரம்பொருளே! குணங்களைக் கடந்தவனே! அன்பர்களைக் காப்பதற்காகக் குணங்களைத் தாங்கி அருளியவனே! பாவக் கறையை மாய்ப்பவனே! உலகின் அணியாக விளங்குபவனே! தெய்வீகப் பேருணர்வு வடிவினனே! ஞான மை தீட்டிய உனது அருள் விழிகளின் கடைக்கண் பார்வை ஒன்று போதும், எங்கள் அஞ்ஞான மயக்கம் மறைந்துவிடும்.

பாஸ்வர பாவஸாகர சிர உன்மத ப்ரேம பாதார்
பக்தார்ஜன யுகள சரண தாரண பவபார்
ஜ்ரும்பித யுக ஈச்வர ஜகதீச்வர யோகஸஹாய்
நிரோதன ஸமாஹித மன நிரகி தவ க்ருபாய்

பேரொளி வடிவினனே! ஆன்மீகப் பேருணர்வுப் பெருங்கடலே! எப்போதும் தெய்வீகப் பேரானந்தத்தில் திளைத்திருப்பவனே! எல்லையற்ற அன்பின் உறைவிடமே! பக்தர்களின் இணையற்ற செல்வமான உன்திருப்பாதங்கள் இரண்டும் எங்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்டுவிடும். இந்தக் காலத்திற்கெனத் தோன்றிய இறைவனே! உலகின் நாயகனே! இறை நெறியில் இணையற்ற துணையே! எப்போதும் மிகவுயர்ந்த ஆன்மீக நிலைகளில் திளைத்திருப்பவனே! உன் அருளால் உன் பெருமையை நான் அறிந்து கொண்டேன்.

பஞ்ஜன துக்க கஞ்ஜன கருணாகன கர்ம கடோர்
ப்ராணார்ப்பண ஜகததாரண க்ருந்தன கலிடோர்
வஞ்சன காமகாஞ்சன அதிநிந்தித இந்த்ரியராக்
த்யாகீச்வர ஹே நரவர தேஹபதே அனுராக்

துன்பத் திரளை ஒழிப்பவனே! கருணைக் கடலே! ஓயாத கர்மவீரனே! உலகை உய்விக்க உயிரையே ஈந்தவனே! கோர கலியுகத்தின் தீமைகளை வேரறுப்பவனே! பெண்ணாசை, பொருளாசை துறந்தவனே! புலனின்பங்களை முற்றிலும் விட்டவனே! தியாகிராஜனே! மனிதருள் சிறந்தவனே! உனது திருவடிகளில் நாங்கள் மாறாத அன்பு கொள்ளும்படி அருள்புரிவாய்!

நிர்பய கதஸம்சய த்ருட நிச்சய மானஸவான்
நிஷ்காரண பகதசரண த்யஜி ஜாதி குலமான்
ஸம்பத தவ ஸ்ரீபதபவ கோஷ்பத வாரி யதாய்
ப்ரேமார்ப்பண ஸமதர்சன ஜகஜன துக்கஜாய்

அச்சமற்றவனே! சந்தேகங்கள் எதுவும் இல்லாதவனே! தளராத உறுதிபடைத்தவனே! எவ்விதக் காரணமுமின்றி அடியார்க்கு அருள்பவனே! குல, இன உயர்வால் வரும் அகங்காரத்தை விட்டவனே! உனது பொற்பாதங்களே எங்கள் பெருஞ்செல்வம். அந்தத் திருப்பாதங்களைச் சரணமடைபவர்களுக்கு சம்சாரப் பெருங்கடலைக் கடப்பது என்பது ஒரு பசுவின் குளம்பு பதிந்த இடத்தில் தேங்கி நிற்கும் நீரைத் தாண்டுவது போல எளிதாகி விடுமே! உன் திருமுன்னர் அனைவரும் சமமே அல்லவா! அவ்வாறே, அனைவரிலும் அன்பைப் பொழிபவனே! உனது பேரன்பால் உலக உயிர்களின் துன்பங்கள் எல்லாம் பறந்துவிடுமே!

நமோ நமோ ப்ரபு வாக்ய மனாதீத
மனோவசனைகாதார் ப்ரபு
ஜ்யோதிர ஜ்யோதி உஜ்ஜ்வல ஹ்ருதி கந்தர
துமி தமோ பஞ்ஜன ஹார் ப்ரபு

தே தே தே லங்க ரங்க பங்க பாஜே
அங்க ஸங்க ம்ருதங்க

காஇசே சந்த பக்த வ்ருந்த ஆரதி தோமார்
ஜய ஜய ஆரதி தோமார்
ஹர ஹர ஆரதி தோமார்
சிவ சிவ ஆரதி தோமார்

கண்டன பவபந்தன ஜகவந்தன வந்தி தோமாய்

வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத பரம்பொருளே! வாக்கிற்கும் மனத்திற்கும் ஒரே ஆதாரமாய் நிற்பவனே! உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறோம். ஒளியைத் துலக்கி நிற்கும் பேரொளியே! இதயக்குகையில் ஒளிர்பவனே! எங்கள் இதயங்களில் மண்டிக்கிடக்கும் அஞ்ஞானப் பேரிருளை மாய்த்தருள்வாய்! மத்தளமும் தாளங்களும் இணைந்து இசைக்க பக்தர்களாகிய நாங்கள் கூடிப்பாடி உனக்கு தீபாராதனை செய்து மகிழ்கிறோம். உனக்குச் செய்யப்படுகின்ற இந்தத் தீபாராதனை எங்களுக்கு வெற்றிகளை நல்கட்டும்! மங்களத்தை அருளட்டும்! பாவங்களைப் போக்கட்டும்!

பிரார்த்தனைப் பாடல்

உயிர்க்குலத்தின் மீது கொண்ட கருணையால் எவ்வாறு இறைவன் மனிதனாகத் தோன்றி அருள்புரிகிறான் என்பதை விளக்கிய சுவாமிஜி அந்த அருளைப் பெற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்தப் பாடலில் கூறுகிறார். துன்பப் பிறவிக் கோடையில் துடிக்கின்ற மாந்தர் சம்சாரத்தளையிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? தஸ்மாத் த்வமேவ சரணம் மம தீன பந்தோ, எளியவர்க்கு ஒரே புகலான இறைவனே, நீயே எனது அடைக்கலம் இதுதான் சுவாமிஜி கூறுகின்ற வழி. கடவுளைச் சரணடைவது ஒன்றே அவர் கூறும் வழி.

இந்தப் பாடலுக்கு இன்னும் ஒரு பெருமை உண்டு. இந்தப் பாடல், ஒரு பிரார்த்தனையாக, தோத்திரமாக மட்டுமின்றி ஒரே மந்திரமாகவும் செயல்படுகிறது. ஏனெனில், இந்தப் பாடலில் ஸ்ரீராமகிருஷ்ண மந்திரத்தை அடக்கியுள்ளார் சுவாமிஜி. ஒவ்வொரு வரிகளுடையவும் முதல் எழுத்தையும் சேர்த்துப் படித்தால் ஓம் நமோ பகவதே ராமக்ருஷ்ணாய என்று வரும். எனவே இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் மந்திர ஜபத்தின் பலனையும் நாம் பெற்றவராவோம்.

இந்தப் பாடலை சுவாமிஜி 1898-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எழுதியதாக அவரது சீடர் சரத்சந்திர சக்கரவர்த்தியின் நாட்குறிப்பு கூறுகிறது. இன்று சுவாமிஜி ஓம் ஹ்ரீம் ருதம் என்னும் பாடலை எழுதினார். அதைச் சீடரிடம் கொடுத்து, இந்தப் பாடல்களில் ஏதாவது தவறு இருக்கிறதா பார் என்றார். சீடர் அதை எழுதிக் கொண்டார். சீடர் பாட்டை எழுதிக் கொண்டதும், சுவாமிஜி அவரிடம், இதோ பார். எனது சிந்தனை, பாடலின் கருத்தில் மூழ்கியிருந்தால் இலக்கணப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். அதனால்தான் சரிபார்க்கச் சொல்கிறேன் என்றார்.

சீடர்: ஐயா அவை பிழைகள் அல்ல; அறிவாளிகளுக்கு மொழியில் தரப்படும் அனுமதி.

சுவாமிஜி: நீ அப்படிச் சொல்லலாம். ஆனால் மற்றவர்களும் இதை ஒப்புக் கொள்ள வேண்டுமென்ற கட்டாயம் என்ன இருக்கிறது?

ஓம் ஸ்தாபகாய என்று தொடங்குகின்ற பாடலை 1896, பிப்ரவரி 6-ஆம் நாள் இயற்றினார். சரத்தின் நாட்குறிப்பில் கீழ்வருமாறு காணப்படுகிறது. இன்று ஹௌராவைச் சேர்ந்த நவகோபால் கோஷ் என்பவரின் வீட்டில் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுருவை நிறுவுகின்ற விழா. சுவாமிஜி, திருவுருவை நிறுவப்போகும் வழிபாட்டறையைக் காண மாடிக்குச் சென்றார். அந்த அறையின் நடுவில் ஒரு சிம்மாசனம்! அதன் மேல் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுருவம் வைக்கப்பட்டிருந்தது. சுவாமிஜி திருநீறு அணிந்து பூஜாரியின் இருக்கையில் அமர்ந்து, தாமே வழிபாட்டை நடத்தத் துவங்கினார். வழிபாடு முடிந்தது. பின்னர் அறையில் இருந்தபடியே பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரை வணங்குவதற்குரிய, ஸ்தாபகாய ச என்ற மந்திரத்தை இயற்றினார். எல்லோரும் அந்த மந்திரத்தைக் கூறி ஸ்ரீராமகிருஷ்ணரை வீழ்ந்து வணங்குகினார்கள்.

ஓம் ஹ்ரீம் ருதம் த்வமசலோ குணஜித் குணேட்ய:
நக்தம் திவம் ஸகருணம் தவ பாதபத்மம்
மோஹம் கஷம் பஹுக்ருதம் ந பஜே யதோஸஹம்
தஸ்மாத் த்வமேவ சரணம் மம தீனபந்தோ (1)

பிரணவ மந்திரமான ஓம் ஆகவும் சக்தி பீஜ மந்திரமான ஹ்ரீம் ஆகவும் பிரபஞ்சத்தை நடத்திச் செல்லும் நியதியான ருதம் ஆகவும் நீயே விளங்குகிறாய்! அசைவிலாப் பரம்பொருளே, சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களையும் கடந்தவன் நீ, எனினும் தெய்வீக குணங்களின் இருப்பிடமாக உள்ளாய்! மோகத்தை மாய்க்க வல்ல உனது கருணைத் திருப்பாதத் தாமரைகளை இரவும் பகலும் வழிபடாதொழிந்தேன்! இன்னும் எத்தனையெத்தனைத் தவறுகளை எல்லாம் செய்தேன் நான்! எனவே எளியவர்க்கு ஒரே புகலான இறைவனே, நீயே எனது அடைக்கலம்!

பக்திர் பகச்ச பஜனம் பவ பேதகாரி
கச்சந்த்யலம் ஸுவிபுலம் கமனாய தத்வம்
வக்த்ரோத்ருதந்து ஹ்ருதி மே ந ச பாதி கிஞ்சித்
தஸ்மாத் த்வமேவ சரணம் மம தீனபந்தோ (2)

பக்தி, மனஏக்கம், வழிபாடு-இவை எல்லாம் ஒருவனது சம்சாரத் தளையை அறுத்து, அவனை இறைவனிடம் சேர்க்கப் போதுமானவை இப்படிப் பெரிய பேச்சுக்களைப் பேசுகிறேன். ஆனால் என் இதயத்திலோ இவற்றின் சுவடு கூட இல்லை. எனவே எளியவர்க்கு ஒரே புகலான இறைவனே, நீயே எனது அடைக்கலம்!

(* இந்த வரி வக்த்ரோத்ருதோஸபி ஹ்ருதயே ந மே பாதி கிஞ்சித் என்றும் பாடப்படுகிறது. சுவாமிஜி இவ்வாறுதான் எழுதினார் என்று கூறப்படுகிறது. இந்த வரியின் சந்தத்தில் பிழை உள்ளது. எனினும் எழுதியவர் சுவாமிஜி என்றால் ரிஷிகளுக்குரிய அனுமதி என்ற பின்னணியில் இந்தப் பிழையைப் பொருட்படுத்தாமல் விட்டு விடலாம். டவுட்)

தேஜஸ் தரந்தி தரஸா த்வயி த்ருப்த த்ருஷ்ணா:
ராகே க்ருதே ருதபதே த்வயி ராமக்ருஷ்ணே
மர்த்யாம்ருதம் தவபதம் மரணோர்மிநாசம்
தஸ்மாத் த்வமேவ சரணம் மம தீனபந்தோ (3)

ஓ ராமகிருஷ்ணா, உண்மையாகவும் உண்மையை அடைவதற்கான நெறியாகவும் விளங்குபவனே! உன்னிடம் பக்தி பூண்டவர்கள், தங்கள் ஆசைகளை எல்லாம் உன்னிடம் நிலைநிறுத்தி விரைவில் தங்கள் இதய தாபத்தின் வேகம் அடங்கப் பெறுகின்றனர். உனது திருப்பாதம் சாதாரண மனிதர்களுக்கும் மரணம் என்னும் எதிரியை அழித்து முக்திப் பேற்றை வழங்க வல்லது. எனவே, எளியவர்க்கு ஒரே புகலான இறைவனே, நீயே எனது அடைக்கலம்.

க்ருத்யம் கரோதி கலுஷம் குஹகாந்தகாரி
ஷ்ணாந்தம் சிவம் ஸுவிமலம் தவநாம நாத
யஸ்மாதஹம் த்வசரணோ ஜகதேச கம்ய
தஸ்மாத் த்வமேவ சரணம் மம தீனபந்தோ (4)

ஓ குருதேவா, ஷ்ண என்று முடியும் உனது திருநாமம் மங்களமானது, புனிதமானது, பாவங்களைப் பரிசுத்தமாக்க வல்லது, அறியாமை மயக்கத்தைப் போக்கவல்லது. உலகிற்கு ஒரே புகலிடமான பரம்பொருளே! வேறு எந்த கதியுமற்றவன் நான். எனவே, எளியவர்க்கு ஒரே புகலான இறைவனே, நீயே எனது அடைக்கலம்.

ஓம் ஸ்தாபகாய ச தர்மஸ்ய ஸர்வதர்ம ஸ்வரூபிணே
அவதார வரிஷ்டாய ராமக்ருஷ்ணாய தே நம:

ஓம். அறத்தை நிலைநாட்டியவனே, அனைத்து அறங்களின் வடிவானவனே, அவதாரங்களுள் தலை சிறந்தவனே! உனக்கு வணக்கம்!

ஓம் நம: ஸ்ரீபகவதே ராமக்ருஷ்ணாய நமோ நம:
ஓம் நம: ஸ்ரீபகவதே ராமக்ருஷ்ணாய நமோ நம:
ஓம் நம: ஸ்ரீபகவதே ராமக்ருஷ்ணாய நமோ நம:
ஓம் நம: ஸ்ரீபகவதே ராமக்ருஷ்ணாய நமோ நம:

ஓம். பரம்பொருளான ஸ்ரீராமகிருஷ்ணா உனக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்!

சக்தி துதி

வலிமை, வலிமை அது ஒன்றே இன்றைய வாழ்வில் இன்றியமையாத தேவை. நாம் இன்று பாவம், துன்பம் என்றெல்லாம் கூறி வருந்தும் அனைத்திற்கும் காரணம் பலவீனம் மட்டுமே என்றார் சுவாமி விவேகானந்தர். உலகின் நோய்க்கு விவேகானந்தர் கண்ட ஒரே மருந்து வலிமை, ஆற்றல், சக்தி மட்டுமே. வலிமை என்று அவர் குறிப்பிடும்போது அது உடல் வலிமையை விட மன ஆற்றலையே, ஆன்ம பலத்தையே என்பதை நாம் மறக்கக் கூடாது. நாம் ஆற்றலைப் பெற ஆற்றலின் சுரங்கமான சக்தியன்னையைத் துதிப்பதும் வழிபடுவதும் இன்றியமையாத ஒன்றாகிறது. எனவே இந்தத் துதி, ஸ்ரீராமகிருஷ்ண மடங்களில் ஆரதிப் பாடல்களுடன் சேர்த்துப் பாடப்படுவது இன்றையச் சூழ்நிலையில் மிகவும் இன்றியமையாததும் குறிப்பிடத்தக்கதும் ஆகும்.

இந்தத் துதி, தேவீ மாஹாத்மியம் அல்லது சண்டீ என்று வழங்கப்படுகின்ற அன்னை சக்தியின் பெருமை போற்றுகின்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸஸ்து தே

மங்களம் அனைத்திற்கும் மங்களப் பொருளே! எல்லா நன்மைகளையும் அளிப்பவளே! எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுபவளே! அனைவருக்கும் புகலிடமாக விளங்குபவளே! மூன்று கண்களையுடையவளே! நாராயணீ, உனக்கு வணக்கம்.

ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம் சக்தி பூதே ஸநாதனிக்ஷ
குணாச்ரயே குணமயே நாராயணி நமோஸஸ்து தே

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலுக்கும் காரண சக்தியாக விளங்குபவளே! என்றும் உள்ளவளே! எல்லா குணங்களுக்கும் இருப்பிடமாக விளங்குபவளே! குணங்களையே வடிவாய்க் கொண்டவளே! நாராயணீ, உனக்கு வணக்கம்.

சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே!
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸஸ்து தே

தன்னைச் சரணடைந்த எளியோரையும் துன்புற்றோரையும் காப்பாற்றுவதையே தொழிலாகக் கொண்டவளே! எல்லாருடைய துன்பத்தையும் துடைப்பவளே! நாராயணீ, உனக்கு வணக்கம்.

ஜய நாராயணி நமோஸஸ்து தே
ஜய நாராயணி நமோஸஸ்து தே
ஜய நாராயணி நமோஸஸ்து தே
ஜய நாராயணி நமோஸஸ்து தே

வெற்றி வடிவினளான நாராயணீ உனக்கு வணக்கம்.

ஸ்ரீசாரதாதேவி துதி (சுவாமி அபேதானந்தர்)

ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரான சுவாமி அபேதானந்தர், ஸ்ரீராமகிருஷ்ணரின் தெய்வீகத் துணைவியான அன்னை சாரதாதேவியின் மீது பாடியது இந்தத் துதி. அன்னையின் பெருமைகளைக் கூறி அவளை இறைஞ்சுவதாக அமைந்துள்ளது இந்தப் பிரார்த்தனைப் பாடல். அன்னையே நேரில் கேட்டு வாழ்த்திய பேறு பெற்றது இந்தத் துதி.

கி.பி. 1888 இறுதியில் அல்லது 1889 ஆரம்பத்தில் அன்னை பேலூரில் நீலாம்பர் பாபுவின் தோட்ட மாளிகையில் தங்கியிருந்தார். அந்த நாட்களில் ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்கள் வராகநகர மடத்தில் தவமியற்றி வந்தனர். அப்போது சுவாமி அபேதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணர் மீதும் அன்னையின் மீதும் பல துதிகளை சம்ஸ்கிருதத்தில் இயற்றினார். ஒருநாள் தொடங்குகின்ற இந்தப் பாடலைப் பாடிக் காட்டினார். கனிவுடன் இதனைச் செவியுற்றார் அன்னை. பாடல் நிறைவுற்றதும் மிகவும் நெகிழ்ச்சியுடன், மகனே, உன் நாவில் கலைமகள் வாசம் செய்யட்டும் என்று ஆசீர்வதித்தார்.

இந்தத் துதி ஜெயராம்பாடி, உத்போதன், சென்னை, பெங்களூரு போன்ற ஒருசில இடங்களில் மட்டுமே தினமும் ஆரதிப்பாடல்களுடன் பாடப்படுகிறது.

ப்ரக்ருதிம் பரமாம் அபயாம் வரதாம்
நரரூபதராம் ஜனதாப ஹராம்
சரணாகத ஸேவக தோஷகரீம்
ப்ரணமாமி பராம் ஜனனீம் ஜகதாம் (1)

தெய்வீக அன்னையே, அச்சம் தீர்ப்பவளே, வேண்டிய வரங்களை நல்குபவளே, மனித உருவில் வந்த தேவியே, துன்புறுவோரின் துயர் துடைப்பவளே, சரணடைந்தவர்களின் இதயங்களில் குதூகலத்தை நிறைப்பவளே, உயர்பரம்பொருளே, உலகனைத்திற்கும் அன்னையே, உன்னை வணங்குகிறேன்.

குணஹீன ஸுதான் அபராதயுதான்
க்ருபயாஸத்ய ஸமுத்தர மோஹகதான்
தரணீம் பவஸாகர பாரகரீம்
ப்ரணமாமி பராம் ஜனனீம் ஜகதாம் (2)

அம்மா, நற்குணங்கள் சிறிதுமற்ற, மீண்டும் மீண்டும் தவறுகள் செய்கின்ற, அஞ்ஞானத்தில் உழல்கின்ற உன்பிள்ளைகளாகிய எங்களை அளப்பிலாக் கருணையால் காக்கிறாய். சம்சாரப் பெருங்கடலிலிருந்து எங்களைக் கரையேற்றுகின்ற கப்பல் நீயே! உலகின் பேரன்னையே, உன்னை வணங்குகிறேன்.

விஷயம் குஸுமம் பரிஹ்ருத்ய ஸதா
சரணாம்புருஹாம்ருத சாந்தி ஸுதாம்
பிப ப்ருங்க மனோ பவரோக ஹராம்
ப்ரணமாமி பராம் ஜனனீம் ஜகதாம் (3)

ஓ, என் மன வண்டே, உலக இன்பங்களாகிய மலர்களை நாடாதே. அமைதியும் ஆனந்தமும் நல்குகின்ற அன்னையின் திருப்பாத மலர்த்தேன் பருகுவாய். உலகப்பற்று என்னும் நோய்க்கு உகந்த மருந்து அவளது தாமரைப் பாதங்களே. உலகின் மாட்சிமை மிக்க அன்னையே, உன்னை வணங்குகிறேன்.

க்ருபாம் குரு மஹாதேவி ஸுதேஷு ப்ரணதேஷு ச
சரணாச்ரய தானேன க்ருபாமயி நமோஸஸ்து தே

ஓ மகாதேவீ, உன் பிள்ளைகளாகிய நாங்கள் உன் திருமுன்னர் பணிகிறோம். அருள் புரிவாய்! கருணைப் பேருருவே, உன் திருப்பதங்களில் எங்களுக்கு அடைக்கலம் தந்தருள்வாய்! உனக்கு எங்கள் வணக்கம்!

லஜ்ஜா படாவ்ருதே நித்யம் ஸாரதே ஜ்ஞானதாயிகே
பாபேப்யோ ந: ஸதா ரக்ஷ க்ருபாமயி நமோஸஸ்து தே

நாணத்தையே என்றும், ஆபரணமாகக் கொண்டவளே, சாரதைத் தாயே, ஞானத்தை நல்குபவளே, எங்களைப் பாவங்களிலிருந்து எப்போதும் காப்பாய்! உனக்கு எங்கள் வணக்கம்!

ராமக்ருஷ்ண கதப்ராணாம் தன்னாம ச்ரவண ப்ரியாம்
தத்பாவ ரஞ்ஜிதாகாராம் ப்ரணமாமி முஹுர்முஹு:

அம்மா, உனது வாழ்வு ஸ்ரீராமகிருஷ்ணரின் பெருவாழ்வுடன் ஒன்றிவிட்டது. அவரது திருநாமத்தைக் கேட்பதிலேயே இன்பம் காண்கிறாய் நீ. அவர்மயமாகி அந்தப் பேரானந்தத்திலேயே எப்போதும் திளைக்கிறாய். உனக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்!

பவித்ரம் சரிதம் யஸ்யா:
பவித்ரம் ஜீவனம் ததா
பவித்ரதா ஸ்வரூபிண்யை
தஸ்யை குர்மோ நமோ நம:

அம்மா, புனிதம் உனது பண்பு, புனிதம் உனது வாழ்வு, புனிதமே உருவாக அவதரித்தவளே, மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன்.

தேவீம் ப்ரஸன்னாம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்
யோகீந்த்ர பூஜ்யாம் யுகதர்ம பாத்ரீம்
தாம் ஸாரதாம் பக்தி விஜ்ஞான தாத்ரீம்
தயா ஸ்வரூபாம் ப்ரணமாமி நித்யம்

பேரொளிப் பொருளே, ஆனந்த வடிவினளே, பணிவோரின் துன்பங்களைத் துடைப்பவளே, யோகி ராஜர்களால் வணங்கப்படுபவளே, காலத்திற்கேற்ற அறவழியை வாழ்ந்து காட்டியவளே, சாரதைத் தாயே, பக்தியையும் மேலான ஞானத்தையும் நல்குபவளே, கருணைத் திருவுருவே, என்றென்றும் உன்னை வணங்குகிறேன்.

ஸ்னேஹேன பத்னாஸி மனோஸஸ்மதீயம்
தோஷான் அசேஷான் ஸகுணீ கரோஷி
அஹேதுனா நோ தயஸே ஸதோஷான்
ஸ்வாங்கே க்ருஹீத்வா யதிதம் விசித்ரம்

எங்கள் மனங்களை உன் அன்பென்னும் கயிற்றால் கட்டிவிட்டு, மனங்களில் மலிந்து கிடக்கும் குறைகளை எல்லாம் குணங்களாக மாற்றுகிறாய். எல்லையற்ற பெருங்கருணையால் பிழை நிறைந்தவர்களையும் உன் மடியில் தாங்கிக் கொள்கிறாய்! என்ன விசித்திரம் அம்மா இது!

ப்ரஸீத மாதர்வினயேன யாசே
நித்யம் பவ ஸ்னேஹவதீ ஸுதேஷு
ப்ரேமைக பிந்தும் சிரதக்த சித்தே
விஷிஞ்ச சித்தம் குரு ந: ஸுசாந்தம்

அம்மா, பணிவுடன் உன்னை வேண்டுகிறேன், அருள்வாய்-உன் பிள்ளைகளாகிய எங்களிடம் என்றென்றும் கருணை காட்டுவாய், வறண்டு கிடக்கும் எங்கள் இதயங்களில் உன் அன்பெனும் அமுதத் துளியைப் பெய்து தண்மையும் சாந்தியும் அளிப்பாய்!

ஜனனீம் ஸாரதாம் தேவீம்
ராமக்ருஷ்ணம் ஜகத்குரும்
பாத பத்மே தயோ: ச்ரித்வா
ப்ரணமாமி முஹுர்முஹு:

உலக அன்னையாகிய சாரதாதேவியுடையவும் உலக குருவாகிய ஸ்ரீராமகிருஷ்ணருடையவும் தாமரைப் பாதங்களைச் சரணடைந்து மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.