Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வித்யாதேவி வழிபாடு!
வித்யாதேவி வழிபாடு!
வித்யாதேவி வழிபாடு!

பிரம்மா, விஷ்ணு, சிவன், சூரியன், கணபதி, முருகன், அகத்தியர், இந்திரன், மன்மதன், சந்திரன், குபேரன், அத்ரி மஹரிஷி, துர்வாஸர், லோபாமுத்ரை, நந்தீச்வரர், வருணன், புதன், யமன், தத்தாத்ரேயர், பரசுராமர், பலதேவர், வாயு, பிரஹஸ்பதி, ரதிதேவி, ஆதிசேஷன் ஆகியோர், உலக மாதாவை வித்யா தேவியாக உபாசித்ததாக தந்திரங்கள் கூறுகின்றன.

லலிதா பரமேஸ்வரியே வித்யா. இவளே மாதா. இவள் வாஸம் செய்யும் பட்டினம் ஸ்ரீபுரம். இது மகாமேருவின் சிகரத்தில் உள்ளது. இவளின் மகா மந்திரம் வித்யை எனப்போற்றப்படுகிறது. இவளின் யந்திரம் ஸ்ரீசக்ரம். இவளது சிம்மாஸனம் ஸ்ரீசிம்மாஸனம் என அறியப்படுகிறது.

செக்கச் சிவந்தத் திருமேனி, சம்பகம், அசோகம் முதலான பூக்கள் சூடிய கூந்தல், பத்மராகக் கற்களால் ஜொலிக்கும் கிரீடம், பிறைச்சந்திரன் போன்ற நெற்றி, கருப்பு நிறக் கஸ்தூரிப் பொட்டு, அழகிய புருவங்கள், மீன் போன்ற கண்கள், சம்பகப் பூப்போன்ற நீண்ட மூக்கு, நட்சத்திரம் போல் ஜொலிக்கும் மூக்குத்தி, கடம்பப் பூங்கொத்து அலங்கரிக்கும் காதுகளில், சந்திர-சூரியரே தோடுகளாக திகழ்கின்றன. பத்ம ராகத்தாலான கண்ணாடி போன்ற கன்னங்கள், பவளத்தை பழிக்கும் உதடுகள் என்று இந்த அன்னையின் அழகை விவரிக்கிறது, லலிதா சகஸ்ரநாமம்.

இவளை வழிபடும் ஸ்ரீசக்ரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவமயமான நான்கு சக்கரங்களும் (அஷ்டதளம், ஷோடச தளம், மேகலாத்ரயம், பூபுரத்ரயம்), சக்திமயமான ஐந்து (த்ரிகோணம், அஷ்டகோணம், பத்து கோணங்கள் இரண்டு, சதுர்தச கோணம்) ஆகிய ஒன்பது சக்கரங்களை உடைய அமைப்பே ஸ்ரீசக்ரம். இதில் காமேஸ்வரருடன் இணைந்து இவ்வுலகங்களை பரிபாலனம் செய்து வரும் தேவியை, நவாவரண பூஜை எனப்படும் ஸ்ரீசக்ர பூஜையினால் மகிழ்விக்கச் செய்தால், உலகம் நன்மையைச் சந்திக்கும்; இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாது.

இந்த அன்னையை வழிபடுவதன் மூலம் உலகில் உள்ள உயர்ந்த பலன்களை அடையலாம் என்கின்றன சாஸ்திரங்கள். நமக்குள் உள்ள வீண் பயமும் அக<லும். இந்த தேவியானவள் தர்ம ஸ்வரூபிணீ. எனவே தர்ம வழியில் சென்று, நம்மால் இயன்ற அளவு இந்த தேவியை ஆராதித்து வந்தால், இவ்வுலகத்திற்கு வேண்டிய நலன்களும், பிறவா முக்தி ஆனந்தத்தையும் தேவியானவள் நமக்கு அருளுவாள்.

எல்லாம் வல்ல அன்னையை, பராசக்தியை தாரா தேவியின் வடிவில் வழிபட்டு அனைத்து காரியங்களிலும் வெற்றி அடைவோமாக.

ஸ்ரீவித்யா காயத்ரி:

ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே ஸர்வ சக்த்யை ச தீமஹி
தன்னோ வித்யா ப்ரசோதயாத்

மூல மந்திரம்:

ஓம் ஸ்ரீவித்யாயை நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.