Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சிவ மானச பூஜை ஸ்லோகம்!
சிவ மானச பூஜை ஸ்லோகம்!
சிவ மானச பூஜை ஸ்லோகம்!

லிங்கம், விக்கிரகம் போன்ற உருவங்கள் இல்லாது, செல்ல முடியாத சமயத்தில் எளிதாக மனதாலேயே சிவனைப் பூஜிக்க மிகச் சிறந்த ஸ்லோகம் இது.

"ஆராதயாமி மணி ஸந்நிபம் ஆத்மலிங்கம்
மாயாபுரி ஹ்ருதய பங்கஜ ஸந்நிவிஷ்டம்
சிரத்தா நதீ விமலசித்த ஜலாபிஷேகை:
நித்யம் ஸமாதிகுஸுமை: அபுநர்பவாய"

மாயாபுரி என்னும் இந்த உடலிலுள்ள ஹ்ருதய கமலத்தில் ஸ்படிகம் போல் வெண்மையாகப் பிரகாசிக்கும் ஆத்ம லிங்கத்தை, ஸ்ரத்தை என்னும் நதியிலிருந்து நிர்மலமான சித்தம் என்னும் ஜலத்தினால் அபிஷேகம் செய்து, ஸமாதி என்னும் புஷ்பங்களால் மீண்டும் பிறவாத வரமருள ஆராதிக்கிறேன்.

"ரத்தை கல்பிதமாஸநம் ஹிமஜலை: ஸ்நாநம்
சதிவ்யாம்பரம்
நாநாரத்ன விபூஷிதம்
ம்ருகமாதா மோதாங்கிதம் சந்தனம்

ஜாதீ
சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் சதூபம்
ததா
தீபம் தேவ தயாநிதே பசுபதே ஹ்ருத்கல்பிதம் க்ருஹ்யதாம்

கருணைக்கடலே! பசுபதே! நவரத்தினங்கள் இழைத்த ஆசனமும், பன்னீரால் திருமஞ்சனமும், திவ்யமான பட்டாடையும், சுந்தராபரணங்களும், கஸ்தூரி கமழும் சந்தனமும், ஜாதீ, சம்பகம், பில்வபத்ரம் போன்ற புஷ்பங்களும், தூப, தீபங்களும் என் மனத்தாலே ஸங்கல்பித்து அளிக்கிறேன். அன்புடன் இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

"ஸெளவர்ணே நவரத்னகண்டரசிதே
பாத்ரேக்ருதம்
பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம்
ரம்பாபலம் பாநகம்
சாகாநாமயுதம் ஜலம்
ருசிகரம் கர்பூரகண்டோஜ்வலம்
தாம்பூலம்
மனஸா மயாவிரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு"

பிரபுவே! உயர்ந்த ரத்னங்கள் இழைத்த ஸுவர்ண பாத்ரத்தில் நெய்யும், பாயசமும், பஞ்ச பக்ஷணங்களும், பால், தயிர், வாழைப்பழம், பானகம், மற்றும் பல காய்கறிகளும், ருசியுள்ள நிர்மலமான ஜலமும், பச்சைக் கர்ப்பூரம் கலந்த தாம்பூலமும் பக்தியுடன் மனத்தால் ஸமர்பிக்கிறேன், அன்புடன் பெற்றுக் கொள்ளுங்கள்.


"சத்ரம் சாமரயோர் யுகம் வ்யஜனகம் சாதர்கம்
நிர்மலம்
வீணா பேரி ம்ருதங்க காஹலகலா
கீதம் சந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதிஸ்துதிர்
பஹுவிதா சைதத் ஸமஸ்தம் மயா
ஸ்ங்கல்பேன
ஸ்மர்ப்பிதம் தவவிபோ பூஜாம் க்ருஹாணாப்ரபோ"

குடையும், சாமரங்களும், விசிறியும், நிர்மலமான கண்ணாடிகளும், வீணை, பேரி, மிருதங்கம், எக்காளம் முதலிய வாத்ய கோஷங்களுடனும், பாடல்களுடனும், பல ஸ்தோத்திரங்களுடன் ஸாஷ்டாங்க நமஸ்காரமும் மனதில் அளிக்கிறேன். பிரபுவே! என் பூஜைகளைப் பெற்றுக் கொள்வீராக.

"ஆத்மா த்வம் கிரிஜா மதி:
ஸஹசரா: ப்ராணா:
சரீரம் க்ருஹம்

பூஜா தே விஷயோபபோக ரசநா நித்ரா ஸ்மாதிஸ்திதி:
 
ஸ்ஞ்சார: பதயோ:
ப்ரதக்ஷிணவிதி:
ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத் யத் கர்ம கரோமி தத்தகிலம் சம்போ தவாராதநம் "

தாங்களே நான், புத்தியே பார்வதி தேவி, பஞ்சப்ராணன்களே பணியாட்கள். என் உடம்பே உமது திருக்கோவில். நான் நுகரும் விஷயாதிகளே உமக்கு அளிக்கும் பூஜை. உறங்குவதே சமாதி நிலை. காலால் நடப்பதே உமக்குப் பிரதக்ஷிணம், பேசுவதெல்லாம் உமது தோத்திரங்கள். சம்போ! என்ன என்ன காரியங்கள் செய்கிறேனோ அவை அனைத்தும் தங்கள் ஆரதனைகளாகும்.

"கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ச்ரவண நயனஜம் வா
மானஸம் வாபராதம்
விதிதம் அவிதிதம்வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
சிவசிவ கருணாப்தே ஸ்ரீமஹாதேவ சம்போ "

மங்கள ஸ்வரூபராண
கருணைக்கடலே! மகாதேவ சம்போ! அடியேன் கைகளாலும், கால்களாலும், வாக்காலும், உடலாலும், காதுகளாலும், கண்களாலும், மனத்தாலும், விதிப்படியும், விதிப்படி இல்லாமலும், பலவித குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் அடியேனை மன்னித்து ஆட்கொள்வீராக என்று தங்களை மிகுந்த பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
திருச்சிற்றம்பலம் (ஆதி சங்கர பகவத்பாதர் அருளியது)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar