Advertisement

கும்பம் : கார்த்திகை ராசி பலன்

அவிட்டம் - 3, 4: அமைதியாக இருக்கும் அதேநேரத்தில் எதிர்ப்புகள் வந்தால் எரிமலையாகி விடும் அவிட்ட நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரவு தாமதப்பட்டாலும் தேவைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். பெண்கள் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் பெறுவர். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு சாதகமான காலகட்டம். எதிர்பாராமல் பல நன்மைகளைப் பெற்று மகிழ்வர். மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: நவ.27, 28
அதிர்ஷ்ட நாள்: டிச.9
பரிகாரம்: வாராகி தேவியை வணங்க மனஅமைதி உண்டாகும்.

சதயம்: வேகமாக செயல்படும் குணம் கொண்ட சதய நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் திருப்தியளிக்கும். மனதில் தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்கால வளர்ச்சிக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த வங்கி கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணியாளர்கள் கடந்த காலத்தில் சந்தித்த வேலைப்பளு இனி இருக்காது. அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: நவ.28, 29
அதிர்ஷ்ட நாள்: டிச.10
பரிகாரம்: முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

பூரட்டாதி - 1, 2, 3
வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைக்கும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் மற்றவர்களுடன் வீண் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்த சஞ்சலம் மறையும். மனதில் தர்ம சிந்தனை உண்டாகும். கடந்த பண நெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். சகோதரர்களிடையே ஒற்றுமை பலப்படும். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவர். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்.
சந்திராஷ்டமம்: நவ.29, 30
அதிர்ஷ்ட நாள்: டிச.11
பரிகாரம்: துர்கை அம்மனை தரிசித்து தீபம் ஏற்ற தொழில் சிறக்கும்.

Advertisement
 
Advertisement