Advertisement

மீனம்: எந்த செயலிலும் முன்யோசனையுடன் ஈடுபடுகின்ற மீனராசி அன்பர்களே!

எதிலும் தாமதம்: இந்த மாதம் உங்கள் ராசியில் உள்ள உச்சம் பெற்ற சுக்கிரனும், தினகதி சுழற்சியில் செயல்படுகின்ற சந்திரனும் மட்டுமே நல்ல பலன்களை வழங்குகின்றனர். இருக்கிற வசதியைக் கவனமுடன் பாதுகாத்தாலே போதுமானது. புதிய முயற்சிகள் நிறைவேற காலதாமதம் ஆகும். இளைய சகோதரர்கள் தம்மால் இயன்ற உதவியை உங்களுக்கு தருவர். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனமும் பயணங்களில் மிதவேகமும் பின்பற்றுவது நல்லது. புத்திரர்களின் செயல்பாடுகளில் மந்தகதி இருக்கும். பயிற்சியும் ஊக்கமும் தந்து அவர்களை வழிநடத்துங்கள்.சொத்து தொடர்பான ஆவணம் பிறர் பொறுப்பில் தரவேண்டாம். பயணங்களால் பலன் இருக்காது. உடல்நிலை சுமாராக இருக்கும். எதிரிகள் வம்பு பேசினாலும், நீங்கள் பொறுமையுடன் விலகுவதால் மட்டுமே தேவையற்ற சிரமம் வராமல் தவிர்க்கலாம்.தம்பதியர் குடும்ப கஷ்ட சூழ்நிலையைத் தாங்கிக் கொள்கிற மனதைரியத்துடன் செயல்படுவர். நண்பர்களுடன் சுமூக நட்பு தொடரும். தந்தைவழி உறவினர்களுக்கு உபகாரம் செய்வீர்கள்.தொழிலதிபர்கள் நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்வதால் மட்டுமே உற்பத்தி, பணவரவைத் தக்க வைக்கலாம். வியாபாரிகளுக்கு சுமாரான விற்பனை நடக்கும். நடைமுறை செலவுகளுக்காக கடன் பெற வேண்டி வரும். பணியாளர்கள் அலுவலகம், தொழிற்சாலையில் பொறுமையைப் பின்பற்றுவதால் மட்டுமே வேலையைத் தக்க வைக்கலாம்.குடும்ப பெண்கள் சேமிப்பு பணத்தை எடுத்து செலவழிக்கும் இக்கட்டான நிலைக்கு ஆளாவர். பணிபுரியும் பெண்கள் பணியில் குளறுபடிகளை எதிர்கொள்வதால் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சுயதொழில் புரியும் பெண்கள் ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் மட்டுமே கடன் பெறுகிற நிலை வராமல் தவிர்க்கலாம்.அரசியல்வாதிகள் பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். விவசாயிகளுக்கு அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பு நன்மை தரும். மாணவர்கள் லட்சியத்துடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி சீராகும்.

பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் மனதில் தைரியமும் தொழில் வளர்ச்சியும் உண்டாகும்.

உஷார் நாள்: 28.3.13 இரவு 9.35 முதல் 30.3.13 இரவு 12.54 வரை
வெற்றி நாள்: மார்ச் 17, 18
நிறம்: சிவப்பு, நீலம் எண்: 1, 8

Advertisement
 
Advertisement