Advertisement

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி!

பாசத்துடன் பழகி மகிழும் மேஷ ராசி அன்பர்களே!

ஆவணி மாதம் என்பது சூரியன் 5-ம் இடமான சிம்மத்தில் பிரவேசிக்கும் காலம். இதனால் பகைவர் தொல்லை அதிகரிக்கும். வியாதி தொல்லை வரலாம். ஆனால் சூரியனின் 7ம் பார்வை கும்பத்தில் விழுகிறது. இதனால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். ராகுவால் நன்மை உண்டாகும். புதன் ஆக. 26ல் சிம்மத்தில் இருந்து கன்னிக்கு செல்வதால் நன்மை உருவாகும். சுக்கிரன் செப். 1ல் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மையே. செவ்வாய் செப். 1ல் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுவது நல்லதல்ல. குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை ஆக. 26க்கு பிறகு மறையும். அதன்பின் அன்பு மேலோங்கும்.

தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சி வெற்றி தரும். பணியாளர்களுக்கு ஆக. 26க்கு பிறகு பின்தங்கிய நிலை மாறும். புதிய பதவி கிடைக்கும். செப். 1 முதல் பொருள் வரவு அதிகரிக்கும். சக நண்பர்களின் உதவி கிட்டும். எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கப்பெறுவர்.

அரசியல்வாதிகள் பொது நல சேவகர்கள் சீரான பலனை பெறுவர். மாணவர்கள் தங்களின் முயற்சிக்கு தகுந்த பலன் அடைவர். ஆக. 26க்கு பிறகு பின்தங்கிய நிலை மாறும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகலாம். நெல், கோதுமை, கேழ்வரகு, பழவகைகள், காய்கறிகள் போன்ற பயிர்கள் நல்ல மகசூல் காண்பர்.

பெண்கள் மாத முற்பகுதியில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். ஆக. 26க்கு பிறகு சுப நிகழ்ச்சி நடக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.

நல்ல நாள்: ஆக.17, 20,21,22,28,29,30,31 செப். 6,7,8,9,12,13

கவன நாள்: செப். 1,2,3 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: நீலம், சிவப்பு

வழிபாடு: செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்குச் சென்று வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். சூரியனை தரிசனம் செய்யுங்கள். தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள்.

Advertisement
 
Advertisement