Advertisement

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) லாபம் கூடும்!

உயர்ந்த மனப்பான்மை கொண்ட மீன ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன் இருவராலும் நன்மை அதிகரிக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் பாதிப்பு இருக்காது. சுக்கிரனால் பொருளாதார வளம் சிறக்கும். சமுகத்தில் மரியாதை கூடும். அரசு வகையில் சலுகை கிடைக்கும். குடும்பத்தேவை அனைத்தும் நிறைவேறும். ஏப்.6 க்கு பிறகு திருமண விஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மார்ச் 20,21 தேதிகளில் பெண்களால் நன்மை ஏற்படும். உடல்நிலை திருப்தி அளிக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மார்ச் 21 க்கு பிறகு எதிரி தொல்லை மறையும். ஏப். 1,2 தேதிகளில் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. தொழில் ரீதியாகச் செல்லும்
பயணம் வெற்றி பெறும்.

பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணிச்சுமை நீங்கி நிம்மதி உண்டாகும். மார்ச்15, ஏப். 10, 11 தேதிகளில் எதிர்பாராத நன்மை ஏற்படும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். ஏப்.6 க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர்.

கலைஞர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் எளிதாகக் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய பதவியோடு, பொருளாதார வளமும் காண்பர்.

விவசாயிகளுக்கு வருமானம் உயரும். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் பெருகும். புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும்.

மாணவர்கள் தேர்வுக்காக அக்கறையுடன் படிப்பர். குருவால் மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும்.

பெண்களுக்கு அக்கம் பக்கத்தினரின் அன்பை பெறுவர். பிள்ளைகளின் வாழ்வு சிறக்கும். மார்ச்15,16 தேதிகளில் ஆடை, அணிகலன் வாங்கலாம்.

நல்ல நாள்:மார்ச் 15, 16, 17, 20, 21, 25, 26 ஏப். 1, 2, 3, 4, 5, 10, 11, 12, 13

கவன நாள்: ஏப். 6,7 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: மஞ்சள், வெள்ளை

வழிபாடு: சூரிய வழிபாடு நன்மையளிக்கும். செவ்வாயன்று காளி, முருகன் கோயிலுக்குச் செல்லுங்கள். நரசிம்மர் வழிபாட்டால் நன்மை மேலோங்கும்.

Advertisement
 
Advertisement