Advertisement

கும்பம்: (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நிறைந்த பணவரவு!

எந்த இடத்திலும் செல்வாக்குடன் திகழும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் சூரியன் நற்பலன் தருவார். செவ்வாய் மே 2வரையும், புதன் ஏப். 26க்கு பிறகும் நன்மை தருவர். சுக்கிரன் மே 3ல் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை தருவார் .தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். திட்டங்களை கச்சிதமாக முடிப்பீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஊரில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலம் சிறப்படையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டு. மே 3க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். ஏப். 19,20ம் தேதிகளில் புத்தாடை, நகை வாங்கலாம்.

பணியிடத்தில் நல்ல பெயரும். மதிப்பும் கிட்டும். ஏப். 26க்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேறும். இடமாற்ற பீதி மறையும். சிலர் பதவி உயர்வு காண்பர். தொழில், வியாபாரத்தில் மாதத் தொடக்கத்தில் போட்டியாளர்களால் இடையூறு வரலாம். வீண்விரயம், அனாவசிய செலவு ஏப்ரல் 26க்கு பிறகு இருக்காது. ஏப். 28,29ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று சிறப்பான நிலையை அடைவர். புகழ் பாராட்டு கிடைக்கும்.

அரசியல் வாதிகள் முன்னேற்றம் காண்பர்.

மாணவர்கள் நல்ல நிலையில் இருப்பர். போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் நல்ல வளம் காண்பர். நெல், கோதுமை, சோளம், கேழ்வரகு பயறு, பழ வகைகள் நல்ல வருவாயைக் கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் மே 2க்குள் பயன்படுத்திக் கொள்ளவும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பம் சிறந்த நிலையை அடையும். குழந்தை பாக்கியம் உண்டு.

நல்ல நாள்: ஏப்ரல் 15, 16, 19, 20, 25, 26, 27, 28, 29, மே 5, 6, 7, 8, 9, 12, 13.

கவன நாள்: ஏப். 30, மே 1,2 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 2,3. நிறம்: வெள்ளை, செந்துõரம்.

பரிகாரம்: பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கையை வழிபடுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.

Advertisement
 
Advertisement